இயற்கை டிராகன் பழ உற்பத்தி


பஞ்சாபை சேர்ந்த ஹாபந்த் சிங், டிராகன் பழம் மற்றும் சந்தன மரங்களுக்கு வழக்கமான பயிர்களை விட குறைவான தண்ணீர் தேவைப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு மாறினார்.


பின் துலேவால் கிராமத்தைச் சேர்ந்த ஹர்பந்த் சிங், 70 களில் தனது குடும்பத் தொழிலிலான விவசாயத்தில் சேர்ந்தபோது, நிலத்தடி நீர் 15 அடியில் கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு பிறகு அவரது மகன் சத்னாம் விவசாயம் செய்யத் தொடங்கியபோது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக 150 அடியாக குறைந்தது. இது சிங் குடும்பத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியது. தண்ணீர், குழாய் கிணறு, இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல் போன்றவற்றால் மோட்டார்கள் அதிக இடுபொருள் செலவுகள் காரணமாக கடனில் தத்தளித்து வந்தனர். ஐந்து நதிகள் (பியாஸ், ஜீலம், செனாப், ரவி மற்றும் சட்லெஜ்) நிலத்தில், தந்தை-மகன் இரட்டையர்கள், மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை  போலவே தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கினர்.

இந்த துரதிர்ஷ்டவசமான அவல நிலையை புள்ளி விவரங்கள் ஆதாிக்கின்றன. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (சி.ஜீ.டபுள்யு.பி) 2019 அறிக்கையின்படி இன்று நெல் வயல்கள் செழித்து வளரும் பஞ்சாப், நிலத்தடிநீர் எடுப்பது தொடர்ந்தால் 25 ஆண்டுகளுக்குள் பாலைவனமாக மாறிவிடும். இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, ஹர்பன்ட் தனது விவசாய உத்திகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து,விவசாயிகளின் மோசமான நிலைமைகளையும் கூட கணித்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு வரை அவரது பண்ணையில் சுற்றுச்சூழல் சார்பு மாற்றங்களை செயல்படுத்த அவருக்கு வழிகள் மற்றும் ஆதாரங்கள் இல்லை.

அந்த ஆண்டில், விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற உதவும் தொண்டு அறக்கட்டளையான கேத்தி விர்சாட் மிஷன் (கே.வி.என்) ஏற்பாடு செய்த பயிலரங்கில், ஹர்பன்ட் மற்றும் சத்னாம் கலந்துகொண்டனர். அவர்கள் விவசாயிகளுடன் உரையாடி, முறைகளை கற்றுக்கொண்டனர் மற்றும் இரசாயன உரங்களுக்கு மாற்றான சுற்றுச்சூழல் நட்புகளை அடையாளம் கண்டனர்.

கே.வி.என் – இன் நிறுவன உறுப்பினரும், நிர்வாக இயக்குநருமான உமெந்திரா தத் கூறுகையில், “ஒற்றைப்பயிர் சாகுபடி முறையானது மண் வளத்தைக் குறைக்கிறது. இதனால் விவசாயிகள் விளைச்சலை அதிகாிக்க ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது இயற்கையான தோட்ட சுழற்சியை சீர்குலைக்கிறது. முடிந்தவரை பருவகால பயிர்கள் அல்லது காய்கறிகளை வளர்ப்பது நல்லது. இது பூச்சி தாக்குதல்களையும் குறைக்கிறது.
ஒவ்வொரு பூச்சிகளையும் கொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சில நன்மை பயக்கும் பூச்சிகள் வேர்களுக்கு முக்கியமான மண்ணின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

இறுதியாக, விவசாயி தாவரங்களின் இயற்கை சுழற்சியை பிரதிபலிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால்,பண்ணை இயற்கையை பிரதிபலிக்க வேண்டும் மேலும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வெளிப்புற உள்ளீடுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று உமேந்திதா மேலும் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.

பசுக்கள் மற்றும் கோழிகள் போன்ற விலங்குகளை உங்கள் பண்ணையில் வைக்கவும், அவை மண் தயாரிப்பதற்கு உதவுகின்றன. அவற்றின் எச்சம் ஊட்டச்சத்து நிறைந்த உரமாக செயல்படுகிறது. இலைகள்  போன்ற விவசாயக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக, மண்ணில் தழைக்கூளம் போட பயன்படுத்தவும் உங்கள் பயிரை சேதப்படுத்தக்கூடிய பூச்சிகளை உண்பதால், பறவைகளை பண்ணையில் செழிக்க அழைக்கவும் ஒவ்வொரு விவசாயப் பிரச்சினைக்கும் இயற்கையில் பதில் இருக்கிறது. அதை தேட வேண்டும்’ என்று உமேந்திரா மேலும் கூறுகிறார்.

“தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதும், நீர்நிலைகளை சுரண்டுவதும் எங்கள் பிராந்தியத்தில் ஒரு போதை போன்றது. மேலும் பல விவசாயிகள் இந்த தீய சுழற்சியில் இருந்து வெளியே வர விரும்புகிறார்கள். ஆனால் யாரும் ஆபத்துக்களை எடுக்க விரும்பவில்லை. இதனால் நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவரும் அறிந்ததே. எனவே, இயற்கைக்கு மாறுவது சாத்தியம் என்று ஒரு விவசாயி சமூகத்திடமிருந்து எனக்கு ஒரு வாய்ப்பும் உறுதியும் கிடைத்தபோது, நான் அதைப் பிடித்தேன்” என்கிறார் ஹர்பன்ட்;.

நடைமுறையில் வைப்பது
பட்டறையில் கலந்துகொண்ட பிறகு 60 வயதான அவர், தனது பல வருட அனுபவத்தையும் அறிவையும் ஒரு பொிய நன்மைக்காக ஒதுக்கி வைக்க முடிவு செய்து டிராகன் பழம், எலுமிச்சை மற்றும் சந்தனம் ஆகியவற்றை வளர்க்க தொடங்கினர்.

இந்த அசாதாரண தோட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை விளக்கும் சத்னாம், “எட்டு ஏக்காில் 1.55 ஏக்கரை ரசாயனமற்ற விவசாயத்திற்காக அர்ப்பணித்துள்ளோம். பாரம்பாிய பயிர்களான கோதுமை அல்லது அரிசியை விட டிராகன் பழங்கள் மற்றும் சந்தன மரங்கள் 90 சதவீதம் குறைவான தண்ணீரையே பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு குறைந்த பராமாிப்பு மற்றும் உள்ளீடு செலவு தேவை. ஆனால் அவை அதிக வருமானத்தை தருகின்றன.

கட்சைத் சேர்ந்த டிராகன் பழ விவசாய நிபுணரான ஹரேஷ் தாக்கா, சத்னாமின் கருத்தை ஏற்றுக்கொண்டு, “டிராகன் பழம் ஒரு வெப்ப மண்டல தாவரமாகும். இது குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது வளர அதிக தண்ணீர் தேவையில்லை மற்றும் வறண்ட பகுதிகளில் செழித்து வளரும்.

தண்ணீர் தேவைகள் மற்றும் விவசாய இடுபொருட்கள் குறைவாக இருந்தாலும், டிராகன் பழம் விவசாயத்தை முறையாக பராமாித்தால் மகசூல் அடிப்படையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உதாரணமாக ஒரு ஏக்கர் டிராகன் பழ மரங்கள் சிங் குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 40 குவிண்டால் (4000 கிலோ) மற்றும் ஒரு கிலோ ரூ. 200 வரை கிடைக்கும். “எங்களிடம் 2500 டிராகன் பழங்கள் உள்ளன. அவை ஆண்டுக்கு “ஏக்கருக்கு சுமார் ரூ.8,00,000 தருகின்றன.சத்னாத்தைப் பொறுத்தவரை, மரங்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பலனைத் தரும். மேலும், ஒவ்வொரு மரமும் ரூ. 3,00,000 வரை கிடைக்கும். எங்களிடம் கிட்டத்தட்ட 200 சந்தன மரங்கள் உள்ளன.” என்று அவர் மேலும் கூறுகிறார்.

டிராகன் பழத்தை வளர்ப்பதற்கான வியட்நாம் முறை
கடந்த தசாப்தத்தில் குஜராத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள கட்ச் மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஹைலோசொியஸ் உண்டடஸ் என்ற காிம டிராகன் பழப் புரட்சியைக் கண்டுள்ளனர். இது வெளியில் இளஞ்சிவப்பு நிறத்திலும், கருப்பு விதைகள் கலந்த வெள்ளை சதைப்பகுதி உட்புறத்திலும் உள்ளது.

15 ஏக்காில் டிராகன் பழ விவசாயம் செய்துவரும் கட்சைச் சேர்ந்த நண்பரான விஷால் தோடாவை, சத்னாம் சந்திக்க நேர்ந்தது. பழங்களை வளர்ப்பதற்கான வியட்நாம் நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட சத்னாம் அதைக் கற்றுக்கொண்டார் மற்றும் அவரது நாற்றங்காலிலிருந்து 500 நாற்றுகளை வாங்கினார்.
சிமென்ட் கம்பங்கள்,நீர்ப்பாசன வசதிகள், தொழிலாளர் செலவுகள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் 4 லட்சம் (ஏக்கருக்கு) முதலீடு செய்தார். ஹர்பன்ட் நிறுவனம் 1.25 ஏக்காில் 500 கம்புகளை நடபட்டுள்ளது. “முதல் வருடத்தில் ஒரு கம்பம் சுமார் 4-5 கிலோ காய்களைக் கொடுக்கும். பின்னர் ஐந்தாம் ஆண்டில் 20 கிலோவாக அதிகாிக்கும்”. இரண்டு வருடங்களில் செலவை மீட்டார்.

சந்தனம் மற்றும் எலுமிச்சை தோட்டங்கள்
ஒரு ஒட்டுண்ணி தாவரமாக இருப்பதால், “ஹஸ்டோரியா” எனப்படும் சந்தனத்தின் வேர்கள் அவற்றின் ஊட்டச்சத்தை மற்ற புரவலன் தாவரங்களிலிருந்து பெறுகின்றன. மேலும், அவற்றின் புரவலர்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்று தற்போதைய அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தொிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹர்பன்ட் பெங்களூரில் இருந்து சாண்டலம் ஆல்பம் ரகத்தை வாங்கி அரை ஏக்காில் 200 மரங்களை நட்டார். ஒவ்வொரு மரத்துக்கும் 12 அடி இடைவெளி விட்டு, அந்த இடத்தில் எலுமிச்சை நட்டார்.
அதிக வணிக மதிப்பைத் தவிர,சந்தன மர சாகுபடியில் பல நன்மைகள் உள்ளன. முதல் ஐந்து வருடங்களில் மிதமான தண்ணீர் தேவை. அதன் பிறகு அதுதானாகவே வரும் மற்றும் சந்தன மரம் அறுவடைக்கு தயாராக 15 ஆண்டுகள் ஆகும். சந்தன செடி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விதைகளைத் தருகிறது. ஓவ்வொரு கிலோவும் ரூ. 1000 வரை பெறலாம். பஞ்சாப்பில் சந்தன மரங்களை நடுவதற்கு சட்டப்பூர்வ தடை இல்லை என்றாலும், அதை வெட்டும்போது ஒரு விவசாயி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும், “ என்று சத்னாம் விளக்குகிறார்.

பெட்டி செய்தி 1: சாகுபடி முறை

  • 7 க்கு 12 அடி சிமென்ட் கம்பத்தை செங்குத்தாக அமைக்க மண்ணில் 2 அடி ஆழமான பள்ளம் தோண்டவும்.
  • கம்பத்தை வெற்று சிமெண்ட் வளையத்துடன் மூடவும்.
  • சூரிய ஒளியைப் பெறும் வகையில் ஒவ்வொரு துருவத்திற்கும் இடையே ஒரு அடி இடைவெளியை பராமாிக்கவும்.
  • ஏறும் தாவரமான நான்கு டிராகன் பழ மரங்கள்,ஒரு கம்பத்தில் செழித்து வளரும்.
  • கம்பத்தின் உட்பகுதியில் மண் மற்றும் ஜீவாமிருதம் (மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரின் கலவை) மூலம் செடிகளுகக்கு ஊட்டச்சத்தை அளிக்கவும்.
  • வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்ச சொட்டுநீர் பாசன நுட்பத்தைப் பயன்படுத்தவும். ஹார்பன்ட் நீர்க்குழாயில் பூச்சிகளைத் தடுக்க திரவ காிம உரத்தை சேர்க்கிறது.

கோபி கரேலியா


This is an edited version of the original published at https://www.thebetterindia.com/237963/
punjabfarmer-earns-lakhs-how-to-organic-farmingdragon- fruit-sandalwood-india-gop94/

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...