இயற்கை காய்கறி சாகுபடி


தும்கூரில் உள்ள காய்கறி விவசாயிகள் , உயிர்ச்சூழல் முறை மாற்று தொழில்நுட்பங்களுக்கு மாறியதால் பல பயன்கள் கிடைக்கின்றது. அவர்கள், பண்ணையில் பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள் வளர்ப்பதால், பண்ணை நிலைத்தத்தன்மையும் உயர்ந்துள்ளது .

தும்கூர் மாவட்டம் கொரட்டகிரி மற்றும் தும்கூர் தாலுக்கா உள்ள ஊர்டிகிரி மற்றும் கோலாலா ஹோப்ளி ஆகிய இடங்களில் பாரம்பாியமாக காய்கறி உற்பத்திக்கு பெயர்போனது. சுமார் 76 சதவிகித விவசாய சமூகத்தினர் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரிவின் கீழ் நிலப் பரப்பளவு 1 முதல் 2 ஏக்கர் கொண்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள்  தங்களது வாழ்வாதாரத்திற்கு காய்கறி சாகுபடியை நம்பியுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் பணப்பயிராக காய்கறியை வளர்க்கின்றனர். பொதுவாக தக்காளி, பீன்ஸ், கத்தாி, வெண்டை, உருளைக்கிழங்கு, மிளகாய், காளிப்ளவர் மற்றும் கீரைகள் ஆகியவற்றை வளர்க்கின்றனர். சந்தையில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் வளர்ப்பதால், அதிக இரசாயன உரப்பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தி, அதிக உற்பத்தி செலவை பெறுகின்றனர். இயற்கை தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லை. மேலும் மண் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு போன்ற எந்த ஆதார பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் பின்பற்றவில்லை. மேலும் அவர்களுக்கு சாியான நேரத்தில் உயர்த்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதல் இல்லை. ஒருவருக்கொருவர் தாங்கள் பெற்றுள்ள அறிவு மற்றும் கற்ற பாடங்களை பாிமாறி கொள்வற்கான தளம் இல்லை.
அவிஷ்கார், என்ற வளர்ச்சி நிறுவனம்  2011 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் பணிசெய்து வருகிறது. இதன் செயல்பாடுகளின் பார்வை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கிராம அளவிலான நிறுவனங்கள் மற்றும் வேளாண்மை வளர்ச்சி செயல்பாடுகள் குறித்தே அமைந்துள்ளது. அவிஷ்கார் தும்கூர் மற்றும் கொராட்டாகிரி தாலுக்காக்களில் சுமார் 157 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 20 விவசாயக் குழுக்களை உருவாக்கியது. 2017 ஆம் ஆண்டு, அவிஷ்கார் நிறுவனம், இந்திய விவசாயிகளை பாதுகாப்போம், அமொிக்கா அமைப்பின் உதவியுடன் , ஸிப்- இயற்கை சாகுபடி திட்டம் பாிந்துரைத்து, இந்தப் பகுதியில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இது 2017-2018 ஆம் ஆண்டு 15 விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டது. 2018 -19 ஆம் ஆண்டு 17 விவசாயிகளுக்கு பல்வேறு செயல்பாடுகள் மூலம் உதவி செய்யப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலிருந்து  இயற்கை வேளாண்மையில் ஆர்வமுடைய இரண்டு முதல் மூன்று விவசாயிகள் கிராம கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகாித்தனர். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. விவசாயிகள் ஸ்ரீ நாராயணரெட்டி பண்ணை, தொட்டபல்லாபுரா மற்றும் ஸ்ரீகோடிபாபண்ணா பண்ணை, ஹூன்சூர் மைசூர் மாவட்டம் மற்றும் பைப், திப்தூர் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
பல்வேறு இயற்கை தொழில்நுட்பங்களான மண்புழுஉரம் மற்றும் மர அடிப்படையிலான சாகுபடி முறை குறித்த செய்முறை விளக்கம் ஏற்பாடு செய்து, அதன் மூலம் பாிந்துரைத்தது. துவக்கத்தில் இயற்கை வேளாண்மை 10 – 15 குண்டாவில் பீன்ஸ், கத்தாி, தக்காளி மற்றும் கீரைகளில் செயல் விளக்கம் செய்யப்பட்டது. ஊட்டமேற்றிய மக்குஉரம், ஜீவாமிர்தா இடுதல், மண் புழு உரச்சாறு, வேப்பம் புண்ணாக்கு மற்றும் அர்கா நுண்ணுயிர் கூட்டமைப்பை அடித்தல், ட்ரைகோடெர்மா, வேப்பம் சோப்பு, வேப்பம் எண்ணெய் மற்றும் தாஸாபர்ணி ஆகியவற்றின் பயன்பாட்டை பாிந்துரைக்கிறது. ஜீவாமிர்தா, தஸாபர்ணி மற்றும் ஊட்டமேற்றிய மக்கு உரம் ஆகியவற்றின் தயாரிக்கும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி ஏற்பாடு செய்தனர்.
அந்தந்த கிராம கூட்டங்களில் இயற்கை வேளாண்மை சார்ந்த பல புதிய தொழில்நுட்பங்களும் , விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கே.வி.கே, ஹிரேஹள்ளி, மற்றும் இதர தோட்டகலை நிபுணர்கள் தொழில்நுட்ப உதவிகள் அளித்தனர்.
மண்புழு உர கிடங்கை உருவாக்க, தாவர அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு ட்ரம், சூரிய  பொறி, கல்விச் சுற்றுலா மற்றும் பயிற்சி போன்றவைகளை விவசாயிகள் உதவி பெறுகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40-50 பழ தாவரங்கள் மற்றும் 70-80 வனத்தாவரங்களும் வழங்கப்பட்டது. தீவன சிற்றினங்களான  செஸ்பேணியா மற்றும் ஹெமெட்டா அனைத்து வயல்களின் வரப்புகளில் பாிந்துரைக்கப்பட்டது. பழ மரங்கள் மற்றும் காட்டு சிற்றினம், அனைத்து வயல் வரப்புகளிலும் மற்றும் சாகுபடி நிலத்திலும் நடப்படுகிறது. பங்கேற்பாளரின் சாகுபடி நிலங்களில் பல பயிர் சாகுபடி மற்றும் பயிர் சுழற்சி ஆகியவையும் செயல்படுத்துகின்றனர்.
முடிவுகள்
ஓவ்வொரு விவசாயியும் காய்கறிகளை ஒரு ஏக்காில் சாகுபடி செய்தனர். விவசாயிகள் கத்தாி, பீர்க்கன், பாகல், தக்காளி மற்றும் பீன்ஸ்.
ஊட்டமேற்றிய மக்கு உரம் ,திரவ உரம் (ஜீவாமிர்தா), பசுந்தாள் உரங்கள் மற்றும் மண்புழுஉரம்  ஆகியவற்றை பயன்படுத்துவது மூலம் மண் வள விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகள் உணர்ந்தனர். அவர்கள் விதை உற்பத்தி, விதை நேர்த்தி மண்புழுஉரம், ஜீவாமிர்தா இடுதல், மூடாக்கு மற்றும் இயற்கை காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்களை சாியாக பின்பற்றினர்.
ஐந்து விவசாயிகள் மண்புழுஉரத்தை உற்பத்தி செய்கின்றனர். விவசாய வயல்களில் மண்புழுஉரம் இடுவதால் மண்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகாித்துள்ளது.
கொள்ளு, தட்டைப்பயிர் விதைகளை பசுந்தாள் உரமாக பயன்படுத்துவது, வேப்பம்புண்ணாக்கு மற்றும் ஜீவாமிர்தா இடுதல் ஆகியவற்றை அனைத்து திட்ட விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். இது மண்வளம் மற்றும் மண் இயற்கை கனிமபொருளை உயர்த்துகிறது.
மண்ணின் தரம் உயர்ந்துள்ளது என்று விவசாயிகள் வெளிப்படுத்தினர். மண்ணின் தரம் உயர்ந்துள்ளது – மண் மிருதுவாக மாறிவிட்டது மேலும், தண்ணீர் பிடிப்புத் தன்மையும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
விவசாயிகள், ஒரு பயிர் சாகுபடிக்கு பதிலாக, பல்வேறு கலப்புபயிர் சாகுபடி குறித்த அறிவை அடைந்துள்ளனர். இந்தத் திட்டப் பகுதியில் பயிர் சுழற்சி பயன்பாட்டில் உள்ளது. சுற்றுச்சூழல் ஒத்த உற்பத்தி தொழில்நுட்பங்களான, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், உற்பத்தி செலவு குறைந்துள்ளது. உயிர்ச்சூழல் வேளாண்மைக்கு மாறியதால், இரசாயன பயன்பாடு குறைந்துள்ளது . இதன் விளைவாக பூமிவெப்பமாவதற்கு பசுமைகுடில் வாயுக்களின் ஒன்றான நைட்ரேட் காற்று மண்டலத்தில் வெளியிடுவது குறைந்துள்ளது.
தற்போதுள்ள வேளாண் அமைப்பு நிலைத்திருக்க மரங்களும் ஒருங்கிணைத்து விரிவாக்கம் செய்வது, மரஅடிப்படையிலான சாகுபடி முறையாகும். வன சிற்றினங்கள், பழ சிற்றினங்கள் மற்றும் தீவன சாகுபடியும் , தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் தாவர பல்வகைமையை அதிகாித்துள்ளனர். வரும் நாட்களில் மற்ற விவசாயிகளுக்கு செயல் விளக்கம் பயிற்சி அளிப்பர்.
புருத்வி இயற்கை குழு ஒன்று உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மாதம் ஒரு முறை சந்தித்து இயற்கை சாகுபடி பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுவர். வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்படுவர். தற்போது, இந்த குழு, இயற்கை விவசாயிகள் உற்பத்தி நிறுவனமாக மாற்றும் திட்டம் உள்ளது, அதற்காக பதிவு செய்யும் செயல்பாடுகளும் நடந்து வருகிறது. விவசாய உற்பத்தி நிறுவனம்  சந்தைப்படுத்துவது உறுதிபடுத்தும். தற்போது உற்பத்தி பொருட்கள் தும்கூர் இயற்கை அங்காடியில் விற்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் தும்கூருவில் உள்ள விவசாயிகள் இயற்கை காய்கறி சந்தையிலும்  விற்கப்படுகிறது. தும்கூரில் இயற்கை அங்காடி திறப்பதற்கான திட்டமும் உள்ளது. இதனால் இயற்கை காய்கறிகள் மற்றும் இதர விளைபொருட்களை விற்கலாம்.
சில விவசாயிகளுக்கு இயற்கை சாகுபடி தோல்வியடைந்த உதாரணங்கள் இருந்தாலும், தொடர் கலந்துரையாடல், ஊக்கம் மற்றும் வேளாண் நிறுவனத்தின் வழிகாட்டியுடன் அவர்களின் ஆர்வம் குறையாமல் இருக்கிறது. இன்னும் 4-5 வருடத்தில், திட்ட கிராமங்களின் கீழுள்ள மானாவாரி நிலங்கள் பல்வகைமை பண்ணையாக மாறும். இது உணவு உத்திரவாதம், தீவனம் கிடைக்க செய்வது மற்றும் சீதோஷன மாற்றங்களினால் ஏற்படும் தாக்கத்திற்கு உகந்தமாற்று வழி ஆகியவை அதிகாித்துள்ளது.
சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயிகள் பின்பற்றிய தொழில்நுட்பம்
மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு, மண் மற்றும் தண்ணீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்
மரம் அடிப்படையிலான சாகுபடி விவசாயிகள் நிதானமாக மரம் அடிப்படையிலான சாகுபடி முறையின் முக்கியத்துவத்தை புரிந்துள்ளனர். கலப்பு வன மரங்கள் மற்றும் பழமரங்கள் வளர்க்கின்றனர்.
விதை நேர்த்தி ஆர்கா நுண்ணுயிர் கூட்டமைப்பு, ட்ரைகோடர்மா விரிடி மற்றும் பீஜமிர்தம் ஆகியவற்றுடன் நேர்த்தி செய்யப்படுகிறது.
விதைப்பு மற்றும் நடவு, இளம் நாற்றங்கால் பயன்படுத்துதல், அதிக இடைவெளி, இயந்திர முறைகளின் கட்டுபாடு
மண் வளம் விரிவாக்கம்  மண் புழு உரம், தொழுஉரம், ஊட்டமேற்றிய மக்கு உரம், வேப்பம் புண்ணாக்கு, ஜீவாமிர்தம், உயிர் உரம் மற்றும் இயற்கை உரம்.
பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை
எதிர் உயிரி மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துதல்
பெட்டிசெய்தி
சிக்க நாகையா என்ற சிறு விவசாயி தும்கூர் மாவட்டம் , துர்காடஹள்ளி கிராமத்தில் வசிக்கிறார். இவர் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். இவர் காய்கறிகள் மற்றும் இதர பயிர்களை வளர்க்கிறார். இவரது நிலம் மானாவாரி நிலம் என்பதால், தொடர் வறட்சியினால் அவருக்கு அதிக மகசூல் கிடைக்கவில்லை. அவர் நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மொத்த வயலுக்கும் பாய்ச்சுவதற்கு போதுமானதாக இல்லை. ஏனென்றால் நிலத்தடி நீர் சமீபகாலமாக குறைந்துள்ளது.
ஸிப் – இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் அவிஷ்கார் என்ற அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி மற்றும் கல்விச் சுற்றுலா ஆகியவற்றில், சிக்க நாகையா தீவிரமாக கலந்துகொண்டார் . இவர் கீரைகள், பீன்ஸ், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு  இதர காய்கறிகளையும் சாகுபடி செய்கிறார். இவர் பீன்ஸ், தக்காளி மற்றும் கத்தாியை இயற்கை தொழில்நுட்பங்களை பின்பற்றி சந்தைப்படுத்துவதற்காகவும் வளர்க்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  விவசாயிகள் இயற்கை காய்கறிகள் சந்தையில், காய்கறிகளை விற்கிறார். சராசாியாக இந்த குடும்பம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 25000 முதல் 30000 வரை நிகர இலாபம் கிடைக்கிறது. ஒவ்வொரு வாரமும் நான் ரூ.1000 ஈட்டுகிறேன் என்று சந்தோஷமாக சிக்க நாகையா கூறுகிறார்.  இவர் 60 எலுமிச்சை, 30 முருங்கை மற்றும் 50 மேலிடூபியா தாவரங்களை அவரது பண்ணையில் வளர்க்கிறார்.அனைத்து தாவரங்களும் நன்கு வளர்ந்துள்ளது. இவர் ஊக்குவிக்கப்பட்டு மேலும் 50 எலுமிச்சை தாவரங்களை சொந்தமாக வாங்கினார். மேலும் 15 அடி இடைவெளியில் நடப்பட்டது. தற்போது அகத்தி தீவன செடிகள் மூலம் அதிகமாக தீவனம் கிடைக்கிறது, இது கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது . அவரது நிலத்தில் தீவனச் செடியை  இன்னும் சிறப்பாக பயன்படுத்துவதற்கு, இரண்டு ஆடுகள் வாங்கினார். அருகாமையில் இருக்கும் கிராமங்களில் தினக்கூலி வேலைக்கு சென்றிருந்த இவரது மனைவி, தற்போது வேலை விட்டுவிட்டு முழுநேரமும் விவசாய பெண்ணாக வேளாண்மையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
ஏ ஆனந்தகுமார்

A Anandakumar
Project Director
AVISHKAR, Tumkur
Karnataka
E-mail: avishkar2004@gmail.com

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...