இந்தியாவில் உள்ள பாரம்பாிய வேளாண்மை-விவசாய புற்கள் அமைப்புகளின் வழியாக பயணிப்பது


மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு இடையேயான தொடர்புகள் பசுமையான, சுற்றுச்சூழல் நிலையான மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு மாறுவதில் முக்கிய பங்குவகிக்கும் திறனைக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல் அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள், இயற்கை வளங்களை நிர்வகித்தல், உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் மற்றும் மண் வளத்தை அதிகாிப்பதில் கால்நடைகளின் எருவிலிருந்து உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் சூழலியல் மதிப்பைப் பற்றிய புரிதலை வழங்குகிறது.


காலங்காலமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாய மேய்ச்சல் முறைகள் சூழலியலுடன் தங்கள் ஒன்றோடொன்று இருக்கும் தொடர்பைக் காட்டியுள்ளன. கால்நடை இனமானது பொருளாதார ஏற்பாட்டின் வாழ்வாதார வடிவமாக வெளிப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நாடோடி கால்நடை வளர்ப்பாளர்கள் விவசாயம் மற்றும் பாரம்பாிய மேய்ச்சல் தொழிலை நிலைநிறுத்துவதற்காக விவசாயிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளனர். கால்நடை வளர்ப்பவர் மற்றும் விவசாயிகளின் பரஸ்பர உறவு, உள்ளூர் பொருளாதாரம், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதார வாய்ப்புகளுக்கு பயனளிக்கும் வகையில் உருவாகியுள்ளது மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையானது.

பரஸ்பர உறவின் காட்சிகள்
மேய்ச்சல் வளங்களின் இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிகமாகக் கிடைக்கும் தன்மை மற்றும் ஒழுங்கற்ற வானிலை நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களிடையே நடமாட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பல இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள காலத்திற்கேற்றவாறு மேய்ச்சல் நிலத்தை மாற்ற செய்யும் வளர்ப்பு முறையானது விவசாயிகள் மத்தியில் பரஸ்பர உறவைக் காட்டுகிறது. இருப்பினும், நாடு முழுவதும் விவசாயம் வணிக மயமாக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை மறைந்து வருகிறது.

ஒரு பொதுவான பிணைப்பை பகிர்தல்:

மேற்கத்திய இந்தியாவில் இருந்து நிகழ்வுகள் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள மேய்ச்சல்காரர்கள் மல்தாரிஸ் – பர்வாட்ஸ், ரபாிஸ் என்று அழைக்கப்படுவர் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளை தக்கவைக்க தீவனத்தைத் தேடி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார்கள். மேய்ச்சல் வளங்களுக்கு அவர்கள் தீவனத்திற்காக விவசாயிகளின் நிலத்தை நம்பியிருக்கிறார்கள். ராஜா பாய், 37, ஒரு ஆடு மற்றும் ஹலாரி கழுதை வளர்ப்பவர், கம்பாலியா பிளாக்கில் உள்ள தனது சொந்த கிராமமான தேவ் பூமி துவாரகாவிலிருந்து தீபாவளிக்கு பிறகு ராஜ்கோட்டின் உப்லேட்டா பிளாக்கிற்குச் செல்கிறார். அவர் விளக்குகையில், “பெரும்பாலும் காரிப் பயிர் சீசன் முடிவடையும்போது, விவசாயிகள் பருத்தி அறுவடை செய்த பிறகு பண்ணைகளை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேநேரத்தில் எங்கள் கால்நடைகளுக்கு தீவனம் தேவைப்படுகிறது. எனவே, புதிய பயிர் பருவத்தில் தொடங்குவதற்கு நிலத்தை சுத்தப்படுத்தி அவர்களுக்கு தாிசு நிலத்தை வழங்குவதற்கு விவசாயிகளுடன் இந்த ஒப்பந்தம் செய்துள்ளோம்.

பூபத் பாய் பூண்டியா, துவாரிகாவின் ராஜ்பரா கிராமத்தில் இருந்து மற்றொரு மல்தாரி அக்டோபர் இறுதி முதல் ஜூன் வரை 200 கி.மீ. இந்த உறவின் பின்னணியில் உள்ள பொருளாதாரத்தை அவர் விளக்குகிறார் – பொதுவாக பருத்தி செடிகளை அகற்றும் எந்தவொரு தொழிலாளியும் ஒரு நாளைக்கு 350 ரூபாய் வசூலிக்கிறார்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் எந்தவொரு விவசாயியும், அடுத்த பருவத்திற்கு பண்ணையை சுத்தம் செய்து தயார்படுத்த 10 நாட்கள் முயற்சியுடன் சுமார் 3500 ரூபாய் செலவாகும். எங்கள் ஆடுகள் நாள் முழுவதும் மேய்கின்றன. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் செடி மேய்ந்தவுடன் அதை மூட்டையாக கட்டிவிடுவார்கள். இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

புலம் பெயர்ந்த ஆயர் சமூகம் பொருளாதாரா ரீதியில் நிலைத்திருக்க அத்தகைய உறவின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்துகொள்வது மட்டுமல்ல,சுற்றுச்சூழலுக்கு சாத்தியமான ஒரு கலாச்சார உறவைப் பேணுவதற்கு பிணைப்பு உதவும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஜாம்நகர்,சேத் வடலா கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாயி பீமாபாய், “அத்தகைய 5 மல்தாரி குடும்பங்களை எனது விவசாய நிலத்தில் தங்க அனுமதிக்கிறேன். இதை எனது குடும்பத்தினர் எப்போதும் பின்பற்றிவருகின்றனர்” என்று உறுதியாக கூறுகிறார். “ஆ ஜமீன் கோபால் கி” (நிலம் கிருஷ்ணருக்கு சொந்தமானது) என்ற சொற்றொடரை பயன்படுத்தி இந்த நிலம் அனைவருக்கும் சொந்தமானது என்று அவர் கருத்துரைத்தார். ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் பண்ணைகளை மேய்வது மட்டுமல்லாமல், மண்ணின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு உரம் வழங்குகின்றன என்றும் பீமா பாய் கூறுகிறார். மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப மல்தாரி உறுப்பினர்கள் ஆட்டுப்பாலை வழங்குகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.

விவசாயிகள் மற்றும் பாஸ்ட்ரோல் சமூகங்களின் தனித்துவமான பிணைப்புக்கு முன்பைவிட அதிக அங்கீகாரம் தேவைப்படுகிறது.ஆந்திராவில் இருந்து ஒரு நம்பிக்கை வழக்கு
பரஸ்பர நம்பிக்கைகளின் இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் ராப்தாடு மண்டல விவசாயிகளால் பகிர்ந்துகொள்ளப்பட்டன. குருமாசமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆடு வளர்ப்போர், தீவனம் தேடி விவசாயிகளின் நிலத்துக்குச் செல்கின்றனர். அதற்கு பதிலாக,விவசாயிகள் அவர்களுக்கு உணவு, தங்குமிடம், மற்றும் ஆடைகளை வழங்குகிறார்கள். இதுபோன்ற வருகைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தில் தங்குவதை வழக்கமாக விவசாயிகள் மற்றொரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள். அங்கு அவர்கள் ஒரு நாளில் ஆயர்களுக்கு வழங்கப்படும் கொற்றலு (திணை) பாயசத்தை தயார் செய்கிறார்கள். தீவிர தட்பவெப்ப நிலைகளுக்கு உட்பட்ட அனந்தபூர் போன்ற இடங்களில், இத்தகைய உறவுகள் சிறுபண்ணை வைத்திருப்பவர்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பின் வாழ்வாதாரத்தையும் ஒரு தொழிலாக பாதுகாக்கின்றன.

இமயமலையில் இருந்து கதைகள்
ஜான்சர்- பவாரின் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளுக்காக கோடை மற்றும் குளிர்கால மேய்ச்சல் நிலங்களைத் தேடி செங்குத்தாக பயணிக்கின்றனர். இது விவசாயிகளுடன் மட்டுமல்லாமல் பிராந்தியங்களின் கைவினைஞர்களுடனும் ஒரு தனித்துவமான பிணைப்பைக் காட்டுகிறது. மேற்கு இமயமலை மாநிலமான உத்தரகாண்டின் ஜான்சர்-பவாரின் காஸ் மேய்ப்பாளர்கள் பெரும்பாலும் செம்மறி ஆடுகளை வளர்ப்பவர்கள் செப்டம்பர்;-அக்டோபர் அறுவடைக் காலத்தில் அவை ஆப்பிள் மற்றும் பாதாமி பழத்தோட்டங்களைச் சார்ந்திருக்கும். பெரும்பாலும் இந்த வளர்ப்பாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்குச் சென்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பார்கள். நிலத்தில் இருக்கும்போது, குளிர்காலத்திற்கு தயார் செய்வதற்காக விலங்குகளையும் வெட்டுகிறார்கள். இதற்கிடையில், காஸ் (மேய்ப்பாளர்கள்) சில கத்தாிக்கப்பட்ட கம்பளிகளை வைத்திருப்பார்கள். சிலவற்றை கொல்டாக்களுக்கு (கைவினைஞர்களுக்கு) தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், சந்தையில் விற்கவும் கொடுக்கிறார்கள்.

ஜான்சாில் உள்ள கோர்ச்சா கிராமத்தில் வசிக்கும் பூரன் சிங் சௌஹான் மேலும் கூறுகிறார். “இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் இன்னும் கால்நடை வளர்ப்பில் உள்ளனர். ஆனால், பண அடிப்படையிலான பொருளாதாரத்தின் அதிகாிப்பு மற்றும் டேராடூன்-விகாஸ் நகர் வளர்ச்சியால், பெரும்பாலான இளைஞர்கள் நகரங்களுக்கு மாறிவிட்டனர். மேலும் தற்போதைய தொழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து வருகிறது. மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மட்டும் இந்த முறை குறைந்துவிட்டது என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் பாரம்பாிய மேய்ச்சல் பொருட்களான சௌரா (ஆட்டு கம்பளியில் இருந்து மேலங்கி) குர்சா (ஆடு கம்பளியில் இருந்து சூடான காலணிகள்) கர்சா (ஆடு கம்பளியில் இருந்து பாய்) போன்ற பாரம்பாிய மேய்ச்சல் பொருட்கள் கூட இப்போது பயன்படுத்துவதில்லை.

இத்தகைய மாற்றங்கள் விவசாயத்தைச் சுற்றியுள்ள பாரம்பாிய கலாச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இது உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புடன் மிகவும் நெருக்கமாக ஒத்திசைக்கப்பட்டது. நிலப்பரப்பில் உள்ள விவசாயிகள் தற்போது காிம உரத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுகிறார்கள். மேலும் தங்கள் பண்ணைகள் மற்றும் தோட்டங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது இப்பகுதியின் உடையக்கூடிய இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துகிறது.

அங்கீகாரம் மற்றும் இணைப்புகளின் தேவை
ஒரு சில மாநிலங்களில் இயற்கை வேளாண்மைக்கான வேகம் அதிகாித்துள்ளதை காணும்போது, ஆயர் சமூகங்களை விவசாயிகளுடன் இணைப்பது பொருளாதாரா ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். இந்த இணைப்பு விவசாயிகளுக்கு உள்ளூர் அளவில் காிம உரத்தை அணுக உதவுவதோடு, கால்நடை வளர்ப்பாளர்களின் வருமானத்தை விவசாயிகளுடன் உரம் பாிமாறிக் கொள்வதற்கும் துணைபுரிகிறது. நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல் அமைப்புகளின் இந்த எடுத்துக்காட்டுகள், இயற்கை வளங்களை நிர்வகித்தல், உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு, மண் வளத்தை அதிகாிப்பதில் கால்நடைகளின் உரத்திலிருந்து உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பை பற்றிய புரிதலை வழங்குகிறது.

மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு இடையேயான தொடர்புகள் பசுமையான,சுற்றுச்சூழல் நிலையான மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு மாறுவதில் முக்கிய பங்கு வகிக்கும் திறனைக் கொண்டுள்ளன. எப்போதும் பலவீனமான நிலையிலும்,தீவிர நிச்சயமற்ற நிலையிலும் இருக்கும் ஆயர் சமூகத்தை வலுப்படுத்தக்கூடிய அமைப்புகளையும் கொள்கைகளையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ரிதுஜா மித்ராமற்றும் சாஹித் கோவர்தனம்


Rituja Mitra
Research Associate at Sahjeevan
E-mail: rituja@sahjeevan.org

Sahith Goverdhanam
Consultant at Economics Centre of World Resource
Institute, India. E-mail: g.sahith17_mad@apu.edu.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2021, வால்யூம் 23, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...