அறிவை கூட்டாக ஒன்றிணைந்து மறுஉருவெடுத்தல்


கடந்த 25 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அந்த்ரா என்ற அமைப்பு, கால்நடை வளர்ப்பு குறித்த உள்ளூர் அறிவினை பாதுகாக்கும் நோக்கத்தோடும், சாியான சூழ்நிலையில் சீதோஷன நிலை அமையும்போது இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நம்பிக்கையிலும், சமூகங்களில், பெண்கள், தீவன பாதுகாவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் நம்பிக்கையை ஆவணம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.


இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1990-களில், இந்தியாவின் 70 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் தொகையின் வாழ்வாதாரமாக, வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இருந்தது. பல லட்சக்கணக்கான சிறுவிவசாயிகளால் சொந்தமாக வளர்க்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள், இந்திய துணை-கண்டத்தில் பரவலாக காணப்பட்டது. ஆனால் கால்நடை மையங்கள் மிக குறைவாகவே இருந்தன. இதனால் கால்நடை உரிமையாளர்களிடம் அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்ல இயலவில்லை. குறிப்பாக, சாலைகள் இல்லாத நிலையில், பல மணி நேரம் நடைபயணமாகவோ அல்லது படகில் சென்றோ அணுகும் கிராமங்கள், அடிப்படை தடுப்பூசிகள் சேமிப்பதற்கு வேண்டிய குளிர்சாதனப்பெட்டியை மேம்படுத்துவதற்கான மின்சாரம் இல்லாத கிராமங்கள், புதிய மருந்துகள் வாங்குவதற்கு பல கி.மீ. தொலைவிலும் மருந்து கடைகள் இல்லாத கிராமங்கள், கிருமி நாசினி கருவிகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாகுறையாக இருக்கும் கிராமங்களுக்கு செல்வது மிகவும் கடினமாக இருந்தது.

இந்த குறைபாடுகளை தாண்டியும், நாங்கள் எதிர்பார்த்ததுபோல் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் இறக்கவில்லை என்பதை நாங்கள் காண்டோம். சந்தேகமில்லாமல், வேகமாக பரவும் ரிண்டர்பெஸ்ட் என்ற பூச்சி மற்றும் அம்மை நோய் ஆகியவற்றினால் அதிக எண்ணிக்கையில் கால்நடை பலியாயின. ஆனால் மொத்தத்தில், பல கிராமங்களில் உள்ள கால்நடைகள் உயிருடனும், ஆரோக்கியமாகவும் இருந்து, விவசாயிகளின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் அரிய பங்கு வகிக்கின்றன. பொது மற்றும் தனியாரில் உள்ள பிரிவுகளில் பரவலாக மறைந்திருக்கும் அறிவை தாங்கள் எதிர்பாராத விதமாக மீண்டும் வெளிகொணரப்பட்டது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா ஆகியவற்றில் எழுதப்பட்ட மற்றும் முக்கிய குறியீடுகளிலிருந்து பெறப்பட்டதை, முதலில் மருத்துவர்களுக்கு சிறந்த அறிவாகவும், இறுதியாக, பழங்குடியின மற்றும் மேய்ச்சல் நில பாதுகாவலர்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் இந்த தொழில்நுட்பங்களை அன்றாடம் தங்களின் கால்நடைகளுக்கு மிகுந்த அக்கறையுடன் பயன்படுத்துகின்றனர். கால்நடை பராமாிப்பு குறித்து அதிகப்படியான அறிவு தடிமனான புத்தகங்களில், குளிர் சாதன வசதியுள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல், அதைவிட அதிகம் மற்றும் தினந்தோறும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளை வளர்க்கும் சமூகங்கள் மத்தியிலும் இந்த அறிவு கிடப்பில் இருக்கிறது.

முக்கிய கால்நடை இரகங்கள் மற்றும் சிறந்த கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி? போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அனுபவமுள்ள விவசாயி மற்றும் மேய்ச்சல்காரர்கள் பல்வேறு இரகங்களின் சிறந்த கால்நடைகளை கண்டறிவர். தீவனப்பயிர்களின் இரகங்கள், மேய்ச்சல் பகுதிகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்த அறிவு குவிந்துள்ளன. கால்நடை ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய மிகுதியான அறிவு இங்கு புதைந்து கிடக்கிறது. தாவரங்களின் அறுவடை மற்றும் பதப்படுத்துதல் குறித்து குறைவான விவரங்களே மருத்துவர்கள் அறிவர். கால்நடை இருப்பிட தொழில்நுட்பங்கள், பகுதிக்கு பகுதி, இரகங்கள் மத்தியில் பரவலாக வேறுபடுகிறது. ஊண்உண்ணிகள் மோசமான வானிலை, வெப்ப அலைகள் மற்றும் சுழல்காற்று ஆகிய சவால்களை உண்மை மற்றும் கடின வழிகளில் பல்வேறு சமூகங்கள் சந்திப்பதை நாங்கள் கண்டோம். உள்ளூர் சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை கவனமாக கருத்தில் கொண்டு, மேற்கூரை, சுவர் மற்றும் தரை ஆகியவற்றிற்கு தேவையான பொருளை தேர்வு செய்கின்றனர். கால்நடை சந்தைகள் பல தொழில்நுட்பத்துடன் குழப்பத்திலும், பல்வகையான பாரம்பாிய விளைப்பொருளுடனும் வெளிவருகிறது.

சமூகங்களின் அறிவு மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்றுத்தரப்படும் அறிவும் இணைக்கப்படாமல் உள்ளதனால் ஏற்பட்டதன் விளைவே, கால்நடை ஆரோக்கியம் குறித்த பாரம்பாிய அறிவு திட்டம் உருவாவதற்கான காரணமாக அமைந்தது. கால்நடை ஆரோக்கிய பாதுகாப்பு குறித்த அறிவை ஆவணம் செய்தல், மதிப்பிடுதல் மற்றும் பரப்புதல் ஒருபுறமும், மற்றொருபுறத்தில் மக்களின் அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தின் மூலம் பல வருடங்களாக செயல்படுத்தினர். உயிர் பல்வகைமை செயல்படுத்தும் திட்டம் உருவாக்கியவுடன், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் பல குழுக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள உயிர் பல்வகைமை குறித்து ஆவணம் செய்யும் ஆர்வம் கொண்டனர்.

அடிப்படை உண்மை
புதிய கால்நடை பட்டதாரிகள் என்பதால், நாங்கள் அந்த்ரா என்ற ஆதார அமைப்பின் மூலம் கால்நடை, உயிர் பல்வகைமை மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு உப தொழிலாளர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்கப்பட்டது. பழங்குடியின மக்கள் மற்றும் மேய்ச்சல் பாதுகாவலர்கள், நிலமற்ற சமூகங்கள் மற்றும் அணை அருகே வசிப்பவர்கள் மத்தியில் நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். மிக முக்கியமாக, இந்த சமூகங்களின் பெண்களுக்கு, நாங்கள் புதிதாக பெற்ற அறிவு மற்றும் திறன்களை கொண்டு செல்ல வேண்டும்.

குழு உறுப்பினர்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆய்வுகூடங்களில் கற்ற அறிவு, களத்தில் சிறிது தொடர்பும், உபயோகமும் இருப்பதை விரைவில் உணர்ந்தனர். பணி ஆரம்பித்த சில நாட்களிலேயே பட்டதாரியாக இருக்கும் புதிய உறுப்பினர், நம்பிக்கையை இழப்பது பொதுவான விஷயம்தான். இதே உணர்வை கிராம இந்தியாவில் கால்நடை வளர்க்கும் சமூகங்களுடன் பணிபுரிய ஆரம்பிக்கும்போது நாம் எத்தனை பேர் உணர்ந்தோம்.
நவீன அறிவு அமைப்பிலிருந்து வந்த நாம் துவக்கத்தில் பாரம்பாிய அறிவை, மதிப்பில்லாத சகுனங்கள் மற்றும் நம்பிக்கைகளை போலவே காணப்படுகின்றன. நாம் கவனத்தோடு பார்த்து, இந்த அமைப்புகளின் தொழில்நுட்பங்களை செய்து பார்த்தால் மட்டுமே, ஏன் பின்பற்றுகின்றனர், என்ன தொடர்பு இதில் உள்ளது என தொிந்துகொள்ளலாம்.

துவக்கத்தில், மாவட்டத்திற்கு மூன்று என்ற ரீதியில் ஆறு மாவட்டங்களுக்கு 18 கிராம் இளைஞர்கள், கால்நடை ஆரோக்கிய பணியாளர்களாக பணியமர்த்தி, அவர்களுக்கு பல்வேறு பாடங்களில் தொழிற்நுட்பத்தை ஆவணம் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும், அந்த்ரா அமைப்பின் மூலம் ஆவணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கேட்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆவணம் செய்வது அவர்களுக்கு எப்பொழுது சுலபமாக இருந்ததில்லை, எனினும் மற்ற குழு உறுப்பினர்களின் தொடர் வருகை மற்றும் தொடர்ந்து மருத்துவர்களின் கூட்டம் நடத்துவது, மேலும் குழு கலந்துரையாடல்கள் ஆகியவை இவர்களுக்கு உதவியது.

எங்கள் குழு கவனமாக பார்த்து கற்று, விரிவாக ஆவணம் செய்தது, மேலும் நவீன அறிவு அமைப்பின் மீது அவர்கள் வைத்திருந்த சாதகமான ஏற்றத்தாழ்வை அவர்கள் கற்கவில்லை, மேலும் மற்ற அமைப்புகள் அவர்கள் அதிகளவில் ஏற்றுகொண்டனர்.

பாரம்பாிய அறிவை ஆவணம் செய்தல்
இந்த அறிவு தொழில்நுட்பங்களாக நடைமுறையில் இருந்தாலும், எழுத்து வடிவில் இல்லாததை நாம் உணர்ந்து அதனை நிலைக்க செய்ய வேண்டும். நாங்கள் மருத்துவ கூட்டம் ஏற்பாடு செய்து அதன் அறிவை பாிமாறி, பகிர்ந்துகொண்டனர். சிறப்பான புரிதலுக்கு எதிராக இருந்தாலும், மருத்துவர்கள் தங்களின் அறிவை இந்த கூட்டத்தில் பகிர்ந்துகொள்வதற்கு மகிழ்ச்சியடைந்தனர். மேலும் மற்றவர்களின் புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளை கற்றுகொள்வதற்கான மேடையாக அமைந்தது. தங்களின் அறிவு, முன்னோர் காலத்தில் பெற்ற மதிப்பும், மாியாதையும், இப்பொழுது கிடையாது என்று அனைத்து மருத்துவர்களும் பகிர்ந்துகொண்ட பொதுவான விஷயமாகும். தங்களின் மறைவுக்குப்பின் இந்த அறிவு நிரந்தரமாக தொலைந்து போகுமோ என்ற பயம் இருந்தது, அதனால் மற்றவர்களுடன் இதனை பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தோம். மேலும் இவர்கள் இந்த அறிவை யாரும் தவறுதலாக பயன்படுத்தக்கூடாது என்பதால் நம்பிக்கையுடைய குழுவிடம் இதனை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை உணர்த்தினர். ஆகையால் எல்லா நிலைகளிலும் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் மருத்துவர்களிடமும், மற்றவர்களிடமும், இந்த அறிவை தனி மனித சுய லாபத்திற்காகவோ அல்லது தனி மனிதர்களின் லாபத்திற்காகவோ ஆவணம் செய்யபடுவதில்லை. ஆனால் பொியக்குழு அல்லது சமூகத்தினாின் பயனுக்காக ஆவணம் செய்யப்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தினோம். கிராம இளைஞர்கள் அவர்களாகவே மருத்துவர்களின் பயிற்சியாளராக ஊக்கப்படுத்தி கொண்டதனால் அவர்கள் தொழிற்நுட்ப செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க முடிகிறது.

கால்நடை இரகங்களை கவனமாக ஆவணம் செய்து, முக்கிய பண்புகள் பதிவு செய்யப்பட்டது. தீவன இரகங்கள் அதன் பயன்பாடு மற்றும் மேய்ச்சல் அணுகுமுறைகளையும் ஆவணம் செய்யப்பட்டது. கால்நடைகளை தாக்கும் சுமார் 100 சூழ்நிலைகளுக்கு தேவையான 500 மூலிகை தாவரங்களை ஆவணம் செய்தோம். மருத்துவர்கள், சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த இடம் அளித்து மதிப்பிடும்போது, சில நோய்களை தீர்க்கும் நம்பிக்கை ஏற்படுகிறது. எனினும் சில நோய்களை தீர்க்க இயலாது என்ற நம்பிக்கையின்மையை எங்கள் குழுவிடம் நேர்மையாக ஒப்புக்கொண்டனர். தடுப்பூசிகள் மற்றும் காக்கும் திட்டங்கள் குறித்து தகவல் மற்றும் அறிவு இவர்களிடம் கிடையாது. ஆனால் மருத்துவர்கள் எங்கள் குழுவிடமிருந்து இவற்றை கற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைந்தனர். கால்நடை மருத்துவர் தாவரவியல் நிபுணர், ஆயுர்வேத மருத்துவர், எலும்பியல் மற்றும் சமூகவியல் நிபுணர் ஆகியோர் அடங்கிய பல துறை தொழில்நுட்ப குழுமத்தின் ஒப்புதலின் அடிப்படையிலேயே பெரும்பாலான தொழிற்நுட்பங்கள் கவனமாக தேர்வு செய்யப்படுகிறது. ஆய்வுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையை பயன்படுத்தி இந்த தொழில்நுட்பங்களை பின்னர் மதிப்பிடப்படுகிறது. இருப்பிட தொழிற்நுட்பங்களை புகைப்படத்தை கொண்டு கவனமாக ஆவணம் செய்து ஆய்வு செய்யப்பட்டது. நாங்கள் கால்நடை சந்தைகளை பார்வையிட்டு அங்கு நடக்கும் செயல்பாடுகளையும் ஆவணம் செய்தோம்.

எங்கும் எழுதப்படாத மற்றும் ஆவணம் செய்யப்படாத அறிவைதான், அனைவராலும் ஆவணம் செய்யப்பட்டது. இளம் தலைமுறையினர், அவர்களின் பொியோர் செயல்படுத்தியதையும் கவனமாக பார்த்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு தலைமுறையினாிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அறிவை நாம் ஆவணம் செய்தாலும், நகரமயமாக்குதல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்றவற்றினால் நிலம் வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், பல முக்கிய இனங்கள் அழிந்து வருகிறது. சுற்றுச்சூழல், கொள்கை மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்களின் மாற்றங்கள் மற்றும் பாரம்பாிய மருத்துவர்கள் இறப்பு பல முக்கிய அறிவு அழிந்துவருவதை நாங்கள் வேகமாகவே உணர்ந்தோம். பொது இடங்களில் சுலபமாகவும், வெளிப்படையாகவும் கிடைக்கச் செய்வதற்கு அனைத்து அறிவும் மொத்தமாக ஒன்று திரட்டுவது இப்போதைய அவசர தேவையாக இருக்கிறது. சிறப்பான பாரம்பாிய முறை மற்றும் நவீன முறையும் இணைந்துள்ள அறிவின் முறை பாதுகாப்பாக, சுலபமாக கிடைக்கக்கூடிய மற்றும் பயன்படுத்தம் வகையில் அமைய வேண்டும். கால்நடை மருத்துவர், விவசாயி, வைத்தியர், தாவரவியல் நிபுணர், விஞ்ஞானிகள், சமூகவியல் நிபுணர், கணினி தொகுப்பாளர்கள், வளர்ச்சிப் பணியாளர்கள், அந்த்ராவில் குழுவாக சேர்ந்து பணிபுரிந்து, கால்நடை ஆரோக்கியம், உணவு சத்துக்கள், இருப்பிடம், மேலாண்மை மற்றும் இனப்பெருக்கம் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த அறிவு ஒருங்கிணைக்கப்பட்டது

அதனால், உலகை ஆளும், அசாதாரண உரிமை சட்டங்கள் மற்றும் சுய இலாபத்திற்காக இயங்கும் முகமைகள் மத்தியில், இந்த குழுக்களுக்கு சம்மந்தமற்ற அறிவை தேர்வு செய்வதில் தனி ஒருவர் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக, எங்கள் வெளியீடுகளை உள்ளூர் மொழிகளில் வெளியிட்டனர்.இதனால் கிராம சமூகங்களுக்கு சுலபமாக பயன்படுத்த முடிகிறது . பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலையாக இந்த அறிவை பகிர்ந்துகொள்ள சமூக அடிப்படையில் உள்ள நிறுவனங்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டது. மேலும் இந்த அறிவை டிஜிட்டல் முறையில் உருவாக்கும் பணியை செய்து வருகிறோம்.

கடந்த 25 வருடங்களாக, கால்நடை வளர்க்கும் தொழிற்நுட்பங்கள் பொியளவில் மாற்றமடைந்துள்ளன. கால்நடை வளர்ப்பில் தொழில்மயமான முறைகள் நுழைந்தப்பின், சிறு விவசாயிகள் மற்றும் கொள்ளைபுற முறைகள் அச்சுறுத்தும் வகையில், அழிந்து வருகின்றன. கால்நடை உற்பத்தி முறைகள், இந்த முறைகளோடு இணைந்திருந்த உயிர்பல்வகைமை,கால்நடை விளைபொருட்கள் மற்றும் உப-பொருட்கள், மூலிகைத் தாவரங்கள் மற்றும் தீவன இரகங்கள் படிப்படியாக அழிந்து வருகிறது. வைத்தியர்கள் இறந்தால் அவர்களோடு இந்த அறிவும் நின்றுவிடுகிறது. மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளால் ஆக்ரமிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் நிறைந்திருந்த அறிவை ஒன்று சேர்த்து, புத்தகமாகவும், புகைப்படம், வெளியீடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் அனைத்தும் ஞாபகப்படுத்துவதற்கு உதவுகிறது. ஒரு நாள் உகந்த சூழ்நிலையின்போது இந்த முறைகளிலிருந்து சிலவற்றை மீண்டும் சமூகத்திலும், சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தலாம்.

பெட்டி செய்தி
ஒரு நாள் இரவில், கால்நடை மருத்துவ பணியாளரான , நத்துவல்குடியின், எருமை உடல்நலம் குன்றியது. பொதுவாக, இந்த இனத்தில் காணும் வீக்கம் இருந்தது. இரவு நேரமானதால் கால்நடை மருத்துவரை அழைத்து வர இயலவில்லை. இந்நிலையில் கால்நடையை இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை என்றால் காலையில் பால் கறக்க முடியாது. மேலும் இரவு நேரமானதால், வெளியில் சென்று மூலிகையை கொண்டுவர முடியாத நிலை இருந்தது. நத்து, பல்வேறு நோய்களுக்கு காய்ந்த மூலிகை பொடிகளை தயாரித்து சோதனை செய்யும் குழுவில் ஒரு அங்கமாவார். இவர் எருமையின் நோயை தீர்க்க கருப்புத்தேன் செடியின் உலர்ந்த தழைகளிலிருந்து செய்த பொடியை பயன்படுத்த முடிவு செய்தார். அதனை பயன்படுத்தியதால் வெகு சீக்கிரமாக எருமை சாியானதை கண்டு அவர் மகிழ்ந்தார். காலையில், அவரால் நன்றாக பால் கறக்க முடிந்தது. இந்த நோயினால் பல்வேறு எருமைகள் பல மணிநேரங்களுக்கு கஷ்டப்படுவதை கண்டிருக்கும், மிக அனுபவ விவசாயியான அவரது தந்தை, இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நித்யா சாம்பமூர்த்தி கட்டே


References
Ghotge N.S., Ramdas S.R et al., “A Social Approach to the Validation of Traditional Veterinary 
Remedies – The Anthra Project”, 2002, Tropical Animal Health and Production 34 (2002), 
p. 121-143
ANTHRA, “Indigenous Knowledge Applications for livestock care”, 2004, Proceedings of a National 
Workshop, 14-17 Sep 2004.

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2016, வால்யூம் 18, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான...

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்

சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான...