சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ திட்டத்தின் ஆதரவுடன், வேளாண் இயந்திர சேவை வழங்குநராக வெற்றி பெற்றுள்ள பிரமிலாவின் பயணம், அவரது சமூகத்தில் உள்ள மேலும் பல பெண்களை விவசாயம் மற்றும் நாற்று வளர்ப்பு சேவைகளில் ஈடுபட ஊக்குவித்து வருகிறது.
முப்பத்து மூன்று வயதான பிரமிலா ராணி மொண்டோல், பங்களாதேஷின் பாலியாகாண்டி உரஜிலாவில் தனது கணவர், நான்கு மகள்கள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். அவர்களது குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயமாகும். யு.எஸ்.எய்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தென் ஆசியாவிற்கான எதிர்காலத்திற்கான உணவுத் தானிய அமைப்புகள் முன்முயற்சி – இயந்திரமயமாக்கல் விரிவாக்கத் திட்டம் என்கிற திட்டத்தின் கீழ், பிரமிலா ஒரு வெற்றிகரமான வேளாண் இயந்திர சேவை வழங்குநராக உருவாகியுள்ளார். தற்போது, குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டும் உறுப்பினா;களாக பிரமிலாவும் அவரது கணவரும் உள்ளனர்.
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள ராஜ்பாரி மாவட்டத்தில், வேளாண்மையே அங்குள்ள மக்களின் முதன்மை வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயிகள் ஆண்டின் மூன்று வெவ்வேறு பருவங்களில் நெல், கோதுமை, மக்காச்சோளம், சணல், கடுகு, மசாலாப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனா;. 2014 ஆம் ஆண்டில், பிரமிலாவின் குடும்பத்திடம் சுமார் இரண்டு ஏக்கா; மட்டுமே சாகுபடி செய்யக்கூடிய நிலம் இருந்தது. அவரது கணவர் மட்டுமே குடும்பத்தின் ஓரே வருமானம் ஈட்டுபவராக இருந்தார். அவர்களின் சராசாி மாத வருமானம் 91 அமொிக்க டாலர்கள் மட்டுமே இருந்ததால், அன்றாடச்; செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. குடும்ப வருமானத்தை அதிகாிக்கும் நோக்கில், அவர் தனது கணவருக்கு பயிர் உற்பத்திப் பணிகளில் உதவத் தொடங்கினார். சணல், மக்காச்சோளம், கோதுமை, கடுகு மற்றும் மசாலாப் பயிர்களின் விதைகளை விதைப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டார்.
2014 ஆம் ஆண்டு, அந்தக் குடும்பம் சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.ஐ திட்டத்துடன் இணைந்தது. ஆரம்பத்தில், அவர்களிடம் ஒரு பவர் டில்லர் இருந்தது. நிலத்தை உழவு செய்வதற்கும் வரிசை விதைப்பு மேற்கொள்வதற்கும் பவர் டில்லரில் பொருத்தக்கூடிய விதைப்பான் இணைப்பை வாங்குவதற்கு இந்தத் திட்டம் அவர்களுக்கு உதவியது. 2018 ஆம் ஆண்டு, பிரமிலா வரிசை விதைப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்றார். இதில், தொடக்க உபகரணத் தொகுப்புடன் பொருத்தப்பட்ட பவர் டில்லர் இயக்கும் விதைப்பான் இயந்திரத்தைப் பயன்படுத்தி விதை அளவுத்திருத்தம் செய்வதும் அடங்கும். அதன் பின்னா;, ரபி பருவத்தில் கோதுமை, பாசிப்பயறு, எள் மற்றும் கடுகு போன்ற பயிர்களை வரிசை விதைப்பு முறையில் சாகுபடி செய்யத் தொடங்கினார். காPப் பருவத்தில் அவர் சணல் பயிரையும் வரிசை விதைப்பு முறையில் சாகுபடி செய்தார்.
2019 ஆம் ஆண்டில் சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, தனது சேவைத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் பிரமிலா பல்வேறு திறன் மேம்பாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றார். அவற்றில் நெல் நடவு இயந்திரத்தை இயக்குவதற்கான செய்முறை பயிற்சி, சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ சார்பில் ஒரு ஏக்காில் நடத்தப்பட்ட இயந்திரமய நெல் நடவு செயல்விளக்கப் பண்ணை, பாய் நாற்று (சிறப்பு தட்டு அல்லது நாற்றுத் தட்டில் வளர்க்கப்படும் நாற்றுகள்) தயாரிப்பு பயிற்சி. வேளாண் இயந்திரங்களின் இயக்கம், பராமாிப்பு மற்றும் பழுதறிதல் குறித்த இரண்டு நாள் பயிற்சி, மேலும் நெல் நடவு இயந்திர சேவைத் தொழில் மாதிரிகளை அறிமுகப்படுத்தும் இரண்டு பட்டறிவு பயணங்கள் ஆகியவை அடங்;கும். சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ- வின் உதவியுடன், மேட் நாற்;று தயாரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் இயந்திரமயமாக்கல் சேவை வழங்குநர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் பல்வேறு கூட்டங்களை அவர் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் அவரது தொழில் வாய்ப்புகள் மேலும் விரிவடைந்தன. மேலும், சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ அவரை வேளாண்மை விரிவாக்கத் துறையுடன் இணைத்தது. அதன் மூலம் பாய் நாற்று தயாரிப்பிற்காக 1750 நாற்றுத் தட்டுகள் மற்றும் 750 கிலோ விதைகள் உதவியாக வழங்கப்பட்டன. இந்த ஆதரவு அவரது தொழில் வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவில் ஊக்குவித்தது.
2023 ஆம் ஆண்டு, அமன் நெல் சாகுபடி பருவம் (ஜூலை நடுப்பகுதி முதல் நவம்பா;-டிசம்பர் வரை) தொடங்குவதற்கு முன், பிரமிலா அரசு வழங்;கிய 50 சதவீத மானியத்தின் உதவியுடன் ஒரு நெல் நாற்று நடும் இயந்திரத்தை வாங்கினார். சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ, அரசின் மானியத்தை பெற அவருக்கு உதவியதுடன் வி.பி.கே.ஏ அறக்கட்டளையுடனும் அவரை இணைத்தது. அந்த அறக்கட்டளை, 4 சதவீத என்ற குறைந்த வட்டியில் கடனையும், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் வழங்கியது.
அமன் பருவத்தில், அவர் 20 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு சேவைகளை வழங்கினார். இதன் மூலம் சுமார் 150 விவசாயிகள் பயனடைந்தனர். அந்த பருவத்தில், அவரது மொத்த வருமானம் 1640 அமொிக்க டாலராக இருந்தது. மேலும் 2023 ஆம் ஆண்டில், ஆஸ் நெல் மற்றும் சணல் பயிர்களுக்கு வரிசை விதைப்பு முறையையும், ரபி பருவத்தில் கோதுமை, எள் மற்றும் கடுகு பயிர்களுக்கு பவர் டில்லர் கொண்டு இயங்கும் விதைப்பான் மூலம் வரிசை விதைப்பு முறையையும் பயன்படுத்தி சுமார் 1047 அமொிக்க டாலர் வருமானம் ஈட்டினார். ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளான ஷால்மாரா, பாலியாகண்டி மற்றும் நொபாபூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுடனான தனது தொடர்பு வலையமைப்பின் மூலம், நாற்றுகளைப் பயன்படுத்தி இயந்திர நெல் நடவு சேவைகளை அவர் வழங்குகிறார்.
அவரை தனித்துவமாக்குவது ஒரு இயந்திர சேவை வழங்குநராக அவர் பெற்றுள்ள வெற்றி மட்டுமல்ல, பாலினம் சார்ந்த பாரம்பாியக் கட்டுப்பாடுகளை உடைத்து, தனது சமூகத்தில் உள்ள பிற பெண்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது அர்ப்பணிப்பும் ஆகும். தற்போது, ஆண்டுக்கு 2,276 அமொிக்க டாலர் வருமானமும், 1,184 அமொிக்க டாலர் லாப வரம்பும் பெறும் அவர், சமூகத் தலைவராக உருவெடுத்து, மேலும் 15 பெண்களை விவசாயம் மற்றும் நாற்று வளர்ப்பு சேவைகளில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்.
“ஒரே ஒரு நாள் சாகுபடி மற்றும் விதைப்பு சேவை வழங்குவதன் மூலம், என் மகளின் ஒரு மாதம் முழுவதற்குமான பயிற்சி வகுப்பு செலவுகளை நான் சமாளிக்க முடிகிறது. சி.எஸ்.ஐ.எஸ்.ஏ-எம்.இ.ஏ, வழங்கிய ஆதரவு, இயந்திர சேவை வழங்குநராக நான் மேலும் தன்னிறைவு பெற உதவியுள்ளது. மேலும், குடும்பச் செலவுகளை சமாளிக்கும் என் நம்பிக்கையும் அதிகாித்துள்ளது” என்கிறார் ப்ரோமிலா.
தற்போது, அவரது சமூகத்தில் 15 பெண்கள் விவசாயம் மற்றும் விதை நடவு சேவைகளை வழங்கி வருகின்றனர். சுனிதா ராணி, நிபா ராய், ரகோலி, தீப்தி, மீதா மற்றும் அங்கோலி போன்ற மற்ற பெண்களும் அவரால் ஊக்கமடைந்துள்ளனா;. தற்போது ஏழு பெண்கள் வயல்களில் நெல் நடவு இயந்;திரத்தை இயக்க முடிகிறது. மேலும், பல பெண்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ப்ரோமிலா தொடங்கிய இந்த மாற்றம், சமூகத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறையான முன்னேற்றமாகும்.
அவருடைய தாக்கம் அவரது சொந்த வெற்றியைத் தாண்டியும் விரிகிறது. விவசாயத்தில் பெண்களைப் பற்றிய தனது சமூகத்தின் பார்வையில் அவர் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ராஜ்பாரி மாவட்டத்தின் இயந்திர சேவை வழங்குநர் கூட்டமைப்பு குழுவின் துணைத் தலைவராக, அவர் தொடர்ந்து பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நலனுக்காக மட்டுமல்லாமல், வங்கதேசத்தில் பெண்கள் அதிகாரமளிப்பின் பரந்த கதைநடையிலும் அவர் பங்களித்து வருகிறார்.
அஸ்மாவுல் ஹூஸ்னா மற்றும் நூர் ஏ மஹாஜபின் கான்
Note: This article was originally published at https://www.cimmyt.org/news/a-community-leader-in-baliakandiinspires-women-empowerment-in-agriculture-promilarani-mondol
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 4



