மாற்றப்பட்ட விதைகளின் விதைப்பு


கலப்பு சாகுபடி, பாரம்பாிய விதைகள் மற்றும் சமூக-தலைமையிலான வேளாண்உயிர்ச்சூழல் ஆகியவை நிலைத்த எதிர்காலத்திற்கான முக்கிய அங்கங்களாக அமைக்கப்பட்டது. ஆனந்தா வின் பயணம்  இப்படிப்பட்ட ஒரு முன்னுதாரமாகும்.


ஓடிசா, ராயகுடா மாவட்டத்தில், காஷிபூர் வட்டத்தை சேர்ந்த கோடிகூடா என்ற சிறிய ஆதிவாசி கிராமம் அதிக பசுமை நிறைந்த குன்றாக அமைந்துள்ளது. முன்னோர்களின் அறிவின் நினைவை அமைதியாக மாற்றி வடிவமைத்து வேரூண்றி வருக்கிறது. பசுமை புரட்சியின் தாக்கத்தில் பல ஆண்டுகள் பாரம்பாிய சமூகங்களை மீள்திறன் கொண்ட உயிர்பலவகைமை வேளாண் அமைப்புகளிலிருந்து விலகி நேரடியாக அரிசி மற்றும் இதர பயிர்களின் தனிபயிர் சாகுபடி முறையை நோக்கி சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பயறுவகைகள், மற்றும் இதர பாரம்பாிய பயிர்கள் வயல்களிலிருந்து மறைந்து, நினைவுகளிலிருந்து கானாமல் போய்விட்டது.

இங்கு, ஒரு சிறு விவசாயியான, அனந்தா மாஜ்ஜி, நிலத்தில் மீண்டும் அவருடைய வாழ்க்கை சுவாசத்தை அனுபவித்தார், நவீன தொழில்நுட்பங்களை அல்ல, ஆனால் பழமை வாய்ந்த ஞானம், மறக்கப்பட்ட விதைகளை மீண்டும் சாகுபடி செய்வது, மற்றும் சமூகங்களின் உணவு இறையாண்மையை மீண்டும் கொண்டுவருவதற்கு அசையாத குறிகோளும் பெற்றார்.

இது வெறும் வேளாண்மையின் கதையல்ல, இது அடையாளத்தை மீட்டெடுக்கவும், இயற்கையோடு மீண்டும் சமன்படுத்துவதை பாதுகாக்கவும், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு பசிநிலை வராமலோ அல்லது அவர்கள் யாரெண்று மறந்துவிடக்குடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

காணமுடியாத விலைகளின் மாற்றங்கள்
கடந்த 40 ஆண்டுகளில், இந்தியாவின் வேளாண் நிலஅமைப்பு மாற்றம் பொிதும் மாறியுள்ளது. பசுமை புரட்சி தொழில்நுட்பங்களை பரப்பியதில், பாரம்பாிய பயிர்களான சிறுதானியங்கள் மற்றும் உள்ளூர் நெல் இரகங்களுக்கு பதிலாக, அதிக மகசூல் மற்றும் ஹைபிரிட் நெல் இரகங்கள் மற்றும் இதர பணப்பயிர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் பயன்பெற்றாலும், ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த ஆனந்தா போன்றவர்களில் தாக்கம் மிக தடங்கலாக இருக்கிறது.
கோடிகுடா மற்றும் இதர சுற்றுவட்டார கிராமங்கள், முன்பு விவசாயம் பாதுகாப்பாகவும், வாழ்க்கையின் சுழற்சியாக இருந்தது. ஆனால் வணிக ஆர்வம் வந்தவுடன், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் யாவும் பாரம்பாிய சாகுபடி முறை மற்றும் கலப்புப்பயிர் சாகுபடிக்கு பதிலாக, தனிப்பயிர் சாகுபடியை பின்பற்றத் தொடங்கினர் . ஊட்டச்சத்துமிக்க உணவு தேவைகள், உள்ளூர் நிலை மற்றும் உயிர்ச்சூழல் சமன்பாடுகளுக்கு சம்மந்தமில்லாத குறிப்பாக அரிசியை கொண்டு தனிப்பயிரை பாிந்துரைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்பட்டது. அதேசமயத்தில் காலநிலை மாற்றம் மிக மோசமாக அதிகாித்து பூச்சி தாக்கத்தினால், பயிர் நஷ்டமடைவது சகஜமானது.

‘நிலம் முன்பு இருப்பதுபோல் வராது “ என்று வெளிப்படுத்தினார். ‘வேளாண்மை அதிக விலையுயர்ந்ததாக உள்ளது. பயிர் பல்வகைமை அழிந்தது. வனங்கள் குறைந்தன. மேலும் பழைய விதைகள் போயின” என்றார்.
ஆனந்தா, தன்னுடைய குடும்பத் தேவைக்கு அன்றாட கூலியாளாக பணி செய்து வருகிறார். அவருடைய சிறிய நிலம் ஒரு காலத்தில் பல்வகைமை மற்றும் நிலைத்த உயிர்சூழல் அமைப்பு இருந்தது, தற்போது அப்படியில்லாமல் பண்ணை வருமானத்தை பெறிதும் பாதிக்கப்பட்டுள்ளது.’நாங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து சமூக நிகழ்வுகள் வரை அனைத்திற்கும் பணத்தை கடன் வாங்குவோம். அரசு வழங்கும் ரேஷன் பொருட்களைத் தாண்டி, எங்களுக்கு வருடத்திற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் உணவு பற்றாகுறை இருந்தது” என்று அவர் கூறுகிறார்.

சொத்துக்கள் நிறைந்த வேளாண் நினைவுகள்
2023 ஆம் ஆண்டு ஆனந்தாவின் வாழ்க்கை திருப்புமுனையாக இருந்தது. இது புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் அல்ல. உயிர் பண்ணைகளிலிருந்து சிறிய உதவியுடன்பழைய நினைவுகளை உயிர்ப்பிப்பதன் மூலம் நிகழ்ந்தது. உயிர் பண்ணைகள் அமைப்போடு பேசியபோது, ஆனந்தா தனது தந்தை அபாயகரமாக – கிராமத்து குன்றின் மேட்டுநிலத்தில் சாகுபடி செய்துவந்த விதத்தை நினைவு கூறுகிறார். ‘ சுமார் 30 வருடங்களுக்கு முன், நான்கு வகையான கேழ்வரகு, மூன்று வகையான திணை, குதிரைவாலி, பனிவரகு, இரண்டு வகையான மக்காச்சோளம், இரண்டு வகையான சோளம், கம்பு, துவரை, உளுந்து’’.. என பட்டியல் சென்றுக்கொண்டே இருக்கும்.” என்று இவர் பெருமையுடன் நினைவு கூறுகிறார். இந்த பயிர்கள் வெறும் உணவல்ல – இவை உத்திரவாதம்.

இவர்களின் தொடர் விதைப்பு மற்றும் அறுவடை நேரங்கள், குடும்பத்தை எந்த பட்டமும் வெறுங்கையோடு விடாத நிலையை குறிக்கிறது. வறட்சி காலத்தின்போதுகூட என் அப்பா ஒருமுறை ஆகஸ்ட் மாதத்தில், விதைத்தார், அதில் நல்ல இலாபத்தை ஈட்டினோம் என்றார் அவர். நிலம் மற்றும் வனத்திலிருந்து வருடமுழுக்க எங்களுக்கு உணவு, கிடைத்தது.” ஆனால் அந்த பல்வகைமை அமைப்பு அழிந்து விட்டது. கோடிகுடாவில், கேழ்வரகு, மக்காச்சோளம், மற்றும் திணை போன்ற பயிர்களின் ஒரே ஒரு இரகம்தான் இருக்கிறது. ‘தற்போது மழை பெய்யவில்லையென்றால், அனைத்து பயிர்களும் அழிந்துவிடும்,” என்று அனந்தா கூறுகிறார். நம் உணவின் சுவை முன்பு மாதிரி சுவையாக இருப்பதில்லை. தற்போது நமது பண்ணையின் அமைப்பு நம் கட்டுபாட்டில் இல்லை. அது மெதுவாக நம்மைவிட்டு சென்றது.

திருப்பு முணை: விதைகளின் மறுஉயிர்ப்பு
2022 மற்றும் 2023 ஆரம்பக்காலத்தின் இடையில், உயிர் பண்ணைகள் அமைப்பு கோடிகுடாவில் பிரதிபலிப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்த சமயம், உண்மையான பொறி ஏற்பட்டது. முதிய மற்றும் இளைய விவசாயிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சுமார், 30 முதல் 40 விவசாயிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட அனைவரும் இந்த பிரதிபலிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். முதிய மற்றும் அனுபவமுள்ள விவசாயிகள், அவர்களின் பாரம்பாிய வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர் பல்வகைமை, விதை பாரம்பாியம், பாரம்பாிய பயிர் மற்றும் ஆதிவாசி கலாச்சாரத்திற்கும் இடையில் உள்ள உறவு போன்றவைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இளம் விவசாயிகள் பொறுத்தவரையில் இந்த கதைகள் ஒட்டுமொத்தமாக புதிதாகவும் இதுவரை கேள்விபடாத ஒன்றாகவும் இருந்தன. இரண்டு மணிநேர கிராம அளவிலான பிரதிபலிப்பு நகழ்ச்சியில், முதிய விவசாயிகள் தங்களுடைய வெற்றிகரமான காலத்தை ஞாபகபடுத்தியதில், இளம் விவசாயிகள் சிலவற்றை சந்தேகித்தனர், சிலவற்றை ஏற்றுக்கொண்டனர். பின்னர் இந்த கல்நதுரையாடல்கள் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆதிவாசி தற்சார்பு வேளாண்மையில், அவற்றின் எதிர்மறை தாக்கங்கள் என்ற கோணத்தை நோக்கி இருந்தது. மூன்று முதல் நான்கு நகழ்ச்சிகளுக்கு பிறகு, அனந்தா மட்டுமில்லாமல், கிராமத்தில் உள்ள மற்ற இளம் விவசாயிகள் , இவர்களின் பாரம்பாிய, நிலைத்த வேளாண் தொழில்நுட்பங்களின் பயன்களை உணர்ந்தனர். இந்த பகிர்வு நிகழ்ச்சி இளம் விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சந்தித்து வரும் சவால்களில் பிரதிபலித்து. அவர்களின் பாரம்பாிய சாகுபடி அமைப்புகளை புதுப்பிக்க முடிவெடுத்துளளனர். இவர்களில் அனந்தாவும் ஒருவர்.

பாரம்பாிய விதை இரகங்களை, கிடைக்க செய்வதே முக்கிய பணியாகும் என்று உணரப்பட்டது. வேளாண்உயிர்ச்சூழல் குறித்த பயிற்சியை ஏற்பாடு செய்தபோது, உயிர் பண்ணைகள் அமைப்பு கோடிகுடா பெண் உறுப்பினர்களுக்கு, கிராமத்தில் விதை வங்கி அமைக்க உதவியது. துவக்கத்தில் விதை வங்கியை அமைக்க, 2023 ஆம் ஆண்டில், கிராமத்தின் 10 பெண் விவசாயிகள் முன் வந்தனர். அவர்களுடைய சொந்த கிராமங்களில் விதைகள் இல்லாததால், சிந்தூர்கட்டி, சங்கெர்,கோடிபலி போன்ற அருகேயுள்ள கிராம பஞ்சாயத்துகளிலிருந்து, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சோளம் ஆகியவற்றின் சில இரகங்களை சேகாித்தனர். இவற்றை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மண்பானைகளில் வைத்து சேமித்தனர். அருகேயுள்ள வட்டங்களான பிஸ்ஸம் கட்டக், மனிகுடா மற்றும் சந்திராபூரிலிருந்து கேழ்வரகு, சாமை, திணை, குதிரைவாலி மற்றும் பாரம்பாிய நெல் மற்றும் வாசனை நெல்லின் சில இரகங்கள் சேகாிக்க உயிர் பண்ணைகள் அமைப்பு உதவி புரிந்தது. இவர்கள் விதைகள் மட்டும் அளிக்கவில்லை. இயற்கை வழி சாகுபடி, விதை பாதுகாப்பு, மற்றும் மண்ணின் மறுஉயிர்ப்பு குறித்து சமூகங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. விவசாய தலைவர்கள் அடங்கிய இரண்டு குழுவிற்கான பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய தலைவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராம அளவிலான பயிற்சி மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு, கலப்பு சாகுபடி முறை குறித்த செய்முறை விளக்கங்கள், மற்றும் விவசாய பகிர்வு கருத்தரங்கங்களும் காசிபூர் வட்டத்தில் கோடிகுடா உட்பட 60 கிராமங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சிகளில் பங்கேற்றவர்களில் அனந்தாவும் ஒருவர். முதன்முதலில் இவர் முன்வந்தார். விதை வங்கியிலிருந்து குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு மற்றும் இரண்டு திணை இரகங்கள் பெற்றார். இந்த இரகங்கள் யாவும் ஒரு காலத்தில் அதாவது குழந்தை பருவத்தில் முக்கிய உணவாக கருதப்பட்டது. ஒவ்வொரு இரகத்திலும் 500 கிராம் முதல் ஒரு கிலோ கடன்வாங்கி, இரண்டு ஏக்கர் மேட்டு நிலத்தில் சாகுபடி செய்தார். அனந்தாவோடு சேர்ந்து 17 விவசாயிகள் 2023 ஆம் ஆண்டு விதைகள் பெற்றனர்.’அறுவடைக்குப்பின் விதை வங்கிக்கு 1.5 மடங்கு அதிகம் திருப்பி தருவேன் என்று உறுதியளித்தேன்” என கூறினார். இது நம்முடைய பழைய முறை வாழ்க்கையை மீண்டும் கொண்டுவருவதை போன்றது.

உள்ளூரில் இருக்கும் பொருட்களை கொண்டு, அனந்தா ஹண்டி கட்டா (இயற்கை மக்குஉரத்தை) மற்றும் திரவ உரம் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டார். இவர் பசுஞ்சாணம், பசுங்கோமியம், வேப்ப இலை, நிர்கண்டி தழைகள், பயறுவகை தழைகள், அரக்கு இலைகள் யாவும் இவருடைய பகுதியிலிருந்து சேகாித்து, இயற்கை உரத்தை தயாரித்தோம். இவை மக்காச்சோள வயலில் இட்டார். மேலும் ஊட்டச்சத்து தோட்டத்திற்கும் உரத்தை பயன்படுத்தியதால் சிறந்த முடிவுகள் பெற்றார்

‘இந்த உரம், யுரியாவைவிட நன்றாக வேலை செய்கிறது.” இது மேலும் மண் வாழ்விற்கான இடமாக மாற்றியது”. என கூறினார்.

ஒரு தோட்டத்தின் நம்பிக்கை
காரீப் பட்டத்தின்போது. ஆனந்தா மற்றும் அவரது மனைவியும் , 14 வகையான பாரம்பாிய விதை காய்கறிகளான பூசனி, தக்காளி, கீரை, ஸ்பினாச், வெண்டை, கத்திரி, துளசி, பீன்ஸ், பாகல், பீர்க்கன் மற்றும் பலவற்றை வைத்து ஊட்டச்சத்து தோட்டத்தை உருவாக்கினர். பல வருடங்களுக்கு பின்னர், முதல்முறையாக, கூடை முழுவதும் பசுமையான மற்றும் இரசாயன இல்லாத காள்கறிகள் விட்டிலேயே கிடைக்கின்றன. இவர் இயற்கை உரத்தை தோட்டத்திற்கு இட்டு, நல்ல அறுவடையை ஈட்டியுள்ளார். ஒவ்வொரு காய்கறி இரகங்களும் எவ்வளவு அறுவடை செய்தனர் என்று சாியாக கூற இயலவில்லை என்றாலும் அவர் ‘ இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு வீட்டிலேயே தேவைக்கு அதிகமாகவே எங்களுக்கு காய்கறிகள் கிடைக்கிறது. நாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை அருகிலுள்ள வீட்டிற்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்கின்றோம். ஏன்னுடைய குழந்தைகளுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான காய்கறிகள் நானே வளர்த்து கொடுப்பது எனக்கு உண்மையாக சந்தோஷமளிக்கிறது.,” என்று அனந்தாவின் மனைவி கூறும்போது பெருமையோடு முகம் பிரகாசமாக இருந்தது.

ஒரு சமூகம் விழித்தது
இந்த பயணத்தில் அனந்தா மட்டுமல்ல. இந்த வருடம் (2024),கோடிகுடாவிலிருந்து 35 விவசாயிகள் கைகள் கோர்த்து11-12 பாரம்பாிய பயிர்கள் கலப்பு சாகுபடி மூலம், தானியங்கள், பயறுவகைகள். எண்ணெய் வித்து பயிர்கள், மற்றும் கிழங்குகள் உட்படுத்தப்பட்டது. இது முன்பு வளர்க்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று பயிர்களிலிருந்து பெருமளவில் உயர்ந்துள்ளது. காரீப் 2025 பட்டத்தின்போது, பல விவசாயிகள் இந்த இயக்கத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

மிக முக்கியமாக, பாரம்பாிய அறிவு மற்றும் பாரம்பாிய விதைகளின் பாதுகாவலர்களாக இருக்கும் பெண்கள், ஒரு படி முன்னேறி விதை வங்கிகள், கூலியாட்கள் மாற்றம், பரஸ்பர உதவியுடன் பழைய முறைகள் புதுப்பிப்பதில் தலைமை வகிக்கின்றன. ஒரு காலத்தில் கனவாக இருந்ததை, அவர்களின் ஊக்கம் மற்றும் தலைமைப்பண்பினால் தற்போது இயக்கமாக மாறியுள்ளது

எதிர்காலத்தை வளர்த்தல்
பாரம்பாிய சாகுபடியை புதுபிப்பது, கோடிகுடாவின் உள்ளூர் வெற்றிக் கதையாக மட்டுமில்லாமல், இந்தியா சந்தித்துவரும் சீதோஷன மாற்றம் மற்றும் உணவு உத்திரவாதமின்மை ஆகிய இரண்டு சவால்களுக்கு சமூகங்களுக்கான மாதிரியாக திகழ்கிறது. பாரம்பாிய பயிர்கள் மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை ஏற்றுகொண்டதால். அனந்தா மற்றும் அவரது சக விவசாயிகள் சீதோஷனத்தை தாங்கும், ஊட்டச்சத்து நிறைந்த சாகுபடி முறைகளை உருவாக்கி, கலாச்சார அறிவு வேரூண்றுகிறது.

நமது உணவு அமைப்பில் மாற்றத்தை எப்படி கொண்டுவருவது என்று நான் ஆலோசித்ததுண்டு, எங்கு தொடங்குவது என்பதுதான் எனக்கு தொியவில்லை,” என்று அனந்தா கூறுகிறார்.’தற்போது நாங்கள் தொடங்கிவிட்டோம், ஆனால் நாங்கள் நிறுத்தமாட்டோம். நாங்கள் ஒவ்வொரு விதையையும் மீண்டும் கொண்டு வருகின்றோம், ஒவ்வொரு தொழில்நுட்பமும் எங்களை திடமாக வைக்கிறது,”. தற்போது இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்துள்ளோம், உணவு அமைப்பு, நிலம் குறித்து கலந்துரையாடி, மற்றும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்கிறது,” என்பது குறித்து அனந்தா நம்பிக்கையுடன் பகிர்கிறார். ‘இப்பொழுது தொடங்கினால், அவர்கள் முன்னோக்கி செல்ல முடியும்.
கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் வேளாண் நிறுவனங்கள் உணவு மற்றும் சாகுபடியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அனந்தாவின் தௌிவான, அடிப்படை மற்றும் முழு அறிவு அளிக்கும் குரல்கள் போன்றவற்றை நன்றாக கேட்கும் எண்ணம் உடையவர்களாக இருக்கின்றனர். கலப்பு சாகுபடி, பாரம்பாிய விதைகள், மற்றும் சமூக தலைமையிலான வேளாண் உயிர்ச்சூழல், ஆகியவை சிறந்த நிலைத்த எதிர்காலத்திற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.

பெட்டி செய்தி
உயிர் பண்ணைகள் அமைப்பு என்பது தன்னார்வ தொண்டு நிறுவனம். 2008 ஆம் ஆண்டிலிருந்து ஒடிசாவின் தெற்குப்பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களில், 150 க்கும் மேலான கிராமங்களில் உணவு இறையாண்மையை மையமாக வைத்து பணிப்புரிகின்றனர். உயிர் பண்ணைகள் அமைப்பு சமூத்தினருடன் பங்குதாரர்களாக ஈடுபடுவதற்கு ஊக்குவித்தனர். இதன் மூலம் தீவிர சுயத்தன்மை இல்லாமல் சாகுபடி செய்வது. ஆதிவாசி விவசாயிகளின் திறன்களை வளர்த்து, பிரச்சனைகளுக்கு உடனே தீர்வுகாண்பது, சவால்களுக்கு தக்க பணியை செய்யமுனைவது ஆகிய முயற்சிகளுக்கு உருதுணையாய் இருக்கிறது. உயிர் பண்ணைகள் உள்ளூர் சமூகங்ளின் திறன்கள் மற்றும் ஞானத்தை அதிகளவில், குறிப்பாக பெண்கள் பற்றிக்கொண்டனர்.

உயிர் பண்ணைகள் அமைப்பு, இணைப்புகள் மற்றும் பல்வேறு உள்ளூர் அடிமட்ட முயற்சிகளிலும், பல்வேறு வல்லுனர்களும், திடமான இணைப்புகள் உருவாக்குகின்றனர். இது புதிய முறையில் , கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகம், மற்றும் அரசு ஆகியவற்றின் மத்தியில் கலந்துரையாடல்களை ஊக்குவித்தது. அதன்மூலம் உள்ளூர் மற்றும் பாரம்பாிய அறிவை மதிக்க வேண்டிய தேவையை மேற்கோள்காட்டி, உயிர்ச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் மற்றும் சமூக நலனுக்கான தூய்மையான செயல்பாடுகளை வளர்க்கும்.

பிசித்ரா பிஸ்வால் மற்றும் அனில் லிமா


Bichitra Biswal and Anil Lima
Living Farms
Ratnakar baug-2, Tankapani Road
Bhubaneswar, Odisha-751018
E-mail: livingfarmsoffice@gmail.com

 

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...