ஓடிசா இந்தியா : பூசணி சாகுபடிக்கான ஒரு புதிய மையம்


கண்கள் காணும் தூரம் வரை பூசணி வயல்கள்தான் தொிகிறது. இதுதான் கரன்ஜியா வட்டத்தில் காண முடிகிறது – மயூர்பஞ்சில் உள்ள ஒரு பொிய பழங்குடியின பகுதி, கிழக்கு ஒடிசாவில் உள்ளது.
கடந்த வளர்ச்சி பட்டத்தில், விவசாயிகள் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு விதைகளை கரன்ஜியா மற்றும் அருகில் கியோன்ஜர் மாவட்டத்தில் கிட்டதட்ட 2000 ஏக்காில் உள்ள பூசணி கொடிகளில் ஏற்றினர். இந்த உயர் ஊட்டச்சத்து காய்கறி, விவசாயிகளுக்கு சராசாி நிகர இலாபம் டாலர் 830 முதல் 870 ஒரு ஏக்கருக்கு வருமானம் பெருகின்றனர். இது அபார வளர்ச்சியை தூண்டுகிறது.


சில வருடங்களுக்கு முன்னால், கதையே வேறுமாதிரி இருந்தது. மணல்கலந்த செம்மன் வகையாக இருந்தாலும், இந்தப்பகுதியில் உள்ள சிதோஷனம் பூசணி சாகுபடிக்கு உகந்தது. சிறு விவசாயிகள் பாரம்பாிய வளர்ச்சி முறைகளை பயன்படுத்தி உள்ளூர் பூசணி இரகங்களைக் கொண்டு போராடி குறைந்த மகசூல் மற்றும் மோசமான விற்பனை பண்பே நிலவியிருந்தது. பொிய பூசணிக்கே நல்ல தேவையிருந்தது.மேலும் உள்ளூர் இரகங்கள் வைரஸ் நோய்களுக்கு பலியாவதால் அதிக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது, இதனால் தரம் குறைவான பழங்கள் கிடைக்கிறது

கிழக்கு-மேற்கு விதை அறிவு பகிரும் நிறுவனம் (இ.டபிள்யு.எஸ் – கே.டி), 2021 லிருந்து, இந்த சூழ்நிலை மாற்றத்தை துவக்கியது. இந்த நிறுவனம் மயூர்பஞ் மற்றும் கியோஞ்சாில் உள்ள சிறு விவசாயிகள் பணிபுரிய ஆரம்பித்தனர். இ.டபிள்யு.எஸ் – கே.டி நிறுவனம் உள்ளூர் விவசாயிகளுக்கு, காய்கறி உற்பத்தி செயல்முறை வளக்க நிலங்கள் அமைத்துள்ளது. இது உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் ஏற்பாடு செய்திருந்தது. உயர் படுக்கை, சாியான இடைவெளி, தேவையான இரங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் விவசாயிகளுக்கு அதிக மற்றும் நல்ல தரமான மகசூல் கிடைக்கிறது. இன்னும் சந்தை சவால்கள், உள்ளூர் பூசணி இரகங்களுக்கு நிலவுகிறது.
2022 ஆம் ஆண்டு, இ.டபிள்யு.எஸ் – கே.டி நிறுவனம் காய்கறி உற்பத்தி கற்றலுக்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்கியது. இங்கு விவசாயிகளுக்கு நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி மற்றும் இலாபம் அதிகாிக்கும். சிறப்பு மையம், மற்றும் இ.டபிள்யு.எஸ் – கே.டி நிறுவன விவசாயிகள் பூசணித் செயல்பாட்டுத் திடல்களில், விவசாயிகள் ஒரே அளவுடைய பொிய பூசணியை கண்டனர். இந்த பூசணி இரகத்தோடு அவர்கள் கற்ற உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் சந்தை தேவையை அடையலாம் என்று அவர்கள் உணர்ந்தனர். இந்த பூசணிகள் வளர்ப்பதால், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. மேலும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைவிட புதிதாக கற்ற பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களான இனக்கவர்ச்சிப் பொறி போன்றவற்றை நம்பியே விவசாயிகள் இருக்கின்றனர். பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறிப்பட்ட அளவு குறைவதோடு அனைத்து பூசணி வயல்களிலும் விவசாயிகள் எதுவுமே இடுவதில்லை. இது விவசாயிகளின் நேரம் மற்றும் செலவை குறைக்கிறது, அதேபோல் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோரும் பயனடைகின்றனர்.

பெரும்பாலும் பூசணி விளையும் பகுதிகளில் வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது மற்றும் கொல்கத்தா மேற்கு வங்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது ( 4 மணி நேரம் தூரம்), மேலும் விவசாயிகள் சந்தை சாதகங்களான புதிய இரகத்தின் நீண்ட வாழ்நாள் கொண்டுள்ளது, நீண்ட தூர பயணத்தை தாங்குகிறது, மேல் மற்றும் கீழ்ப் பகுதி தட்டையாக இருப்பது பூசணிகளை அடுக்கி வைப்பதற்கு சுலபமாக இருக்கிறது.
இன்று கரன்ஜியாவை தாண்டி மற்ற இடங்களிலும் அதிக தரமுடைய விதைகள் மற்றும் சிறந்த சாகுபடி முறைகள் கற்று – பூசணி சாகுபடியை முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவி, குத்தகைக்கு அதிகளவில் நிலத்தை வாங்கி சாகுபடி செய்கின்றனர். அறுவடை சமயத்தின்போது மேற்கு வங்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் அதிக தரம் வாய்ந்த பூசணிகளை கொள்முதல் செய்வதற்கு முன்பு இல்லாத வகையில் ஆராயப்படாத சந்தையாக மாறியது. விவசாயிகளுக்கு இரட்டிப்பு அல்லது மும்மடங்கு இலாபம் கிடைக்கிறது.

இ.டபிள்யு.எஸ் – கே.டி யின் தலையீடு பூசணி சந்தை மட்டும் மாற்றம் ஏற்படவில்லை, பூசணி விதைகள் உட்பட அதிக தரமுடைய இடுபொருட்களுக்கான புதிய சந்தை உருவாகியுள்ளது. ஏனென்றால் குறைந்த பாரம்பாிய இரகங்களிலிருந்து அதிக மகசூல் இரகங்களுக்கு விவசாயிகளுக்கு மாறியதால் ஏற்பட்டது. இது விவசாயிகளுக்கு, வேளாண் இடுபொருள் டீலர்களுக்கு மற்றும் காய்கறி மதிப்பு சங்கிலி ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கு ஆச்சாியமூட்டும் விரிவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இ.டபிள்யு.எஸ் – கே.டி வின் செயல் இயக்குநர் ஸ்டுவட் மோரிஸ், கிழக்கு ஒடிசாவின் பூசணி வயல்களை சமீபத்திய வருகையின்போது எங்கு சந்தை மற்றும் நிலம் இருக்கிறதோ, அங்கு அதிக ஊட்டச்சத்து பூசணி ஒரு அதிசய பயிராகும்” என்று அவர் கூறினார். இ.டபிள்யு.எஸ் – கே.டி யின் பூசணிகள் ஆப்பிரிக்கா திட்டத்தின் பிரதிபலிப்புக் காரணமாக ‘கிழக்கு-மேற்கு விதை கண்டுபிடிப்பாளர் மற்றும் உலக உணவு பரிசு பெற்ற சைமன் க்ரூட்ஸ் தொலைநோக்கு பார்வை ஒரு மில்லியன் ஏக்கர் பூசணி ஆப்பிரிக்காவில் கொண்டுவருவதற்கு முன்னுதாரணமாக ஒடிசா, இந்தியாவில் இந்த சுலபமான ஆனால் அதிக இலாபம் தரும் பூசணி வயல்கள் இருக்கிறது”.

பெட்டி 1: நல்ல வாழ்வதாரத்திற்கு உயர் பூசணி சாகுபடி
ராய்பாி பெஹெரா ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம் உள்ள கரஞ்சியா வட்டத்தில் உள்ள சாரங்ககட் என்ற கிராமத்தை சோ;ந்த ஒரு இளம் காய்கறி விவசாயி. இவருக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது.இவர் தன்னுடைய கணவருக்கு உதவியாக இருக்கிறார். இவர் மா தாினி என்ற பெண்கள் சுய உதவிக்குழுவின் ஒரு அங்கமாக இருந்து பயிர்களை வளர்க்கிறார். ஜூலை 2023 ஆம் ஆண்டு ராப்ரி 800 சதுர மீட்டர் செயல்முறை விளக்க திடலில் பூசணியை சாகுபடி செய்தார். கிழக்கு – மேற்கு விதை அறிவு மாற்று நிறுவனத்தின் தொழில்நுட்ப கள அலுவலரான சானு குமார் பெஹெராவின் மதிப்பிடமுடியாத வழிநடத்துதல் துணையுடன் பயிர் செய்தார். இந்த அனுபவம் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்களான உயர் படுக்கை, தரமான விதைகள், மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கற்றுக்கொண்டார். இதில் தடுக்கும் மற்றும் இயற்கை பூச்சி கட்டுபாட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த செய்முறை அவர்களுக்கு அதிக மகசூல் மற்றும் 286% ஆச்சாியமூட்டும் செலவுக்கு உகந்த வருமானத்தை பெற்றனர்.

சாியான சாகுபடி தொழில்நுட்பங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். நான் உயிர்த்தபட்ட முறைகளை பின்பற்றுவதால் உற்பத்தி செலவு குறிப்பிட்ட அளவு குறையும் அதே சமயத்தில் என்னுடைய பயிர்களின் தரமும் உயர்த்துகிறது” என்று பெருமையாக கூறுகிறார் ராய்பாி.
ராய்பாி 2 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தக்காளி, மிளகாய், காளிபிளவர், மற்றும் பாகற்காய் போன்ற காய்கறிகள் வளர்த்துவருகிறார். எனினும், பூசணி விளக்கத் திடலில் கண்ட வெற்றி முடிவுகள் பார்த்த பிறகு, அவர் சமீப கால கரீப் பருவத்தின்போது (ஜூலை முதல் அக்டோபா; 2024) பொிய அளவில் அவர் சாகுபடி செய்ய முடிவு செய்தார். 30 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து , 5,481 டன் பூசணிகள் உற்பத்தி செய்து, நிகர இலாபமாக ரூ.1,819, 800, ரூ.738, 000 முதலீடு செய்து பெற்றார்.
ராய்பாி இ.டபிள்யு.எஸ் – கே.டி தொழில் கள அலுவலர், சானு குமார் பெஹெரா, ஒடிசா பூசணி விரிவாக்கத்திற்கு கருவியாக இருந்தார்.

இவருடைய சொந்த நிலத்திற்கும் கூடுதலாக, ராய்பொி ஒன்றிணைந்த பூசணி நிறுவனம், மா தாினி சுய உதவிக் குழு. இந்த சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் இ.டபிள்யு.எஸ் – கே.டி நடத்தும் பயிற்சி, ராய்பாி பூசணி விளக்கத் திடலில் பெற்றனர். இவர்களில் சிலர் தங்களின் சாகுபடி தொழில்நுட்பத்தை வளர்க்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பூசணி சாகுபடியை செய்ய ஆர்வமுற்றனர்.
பூசணி, பெண் விவசாயிகளை ஈர்க்கும் பயிராகும், ஏனென்றால் இதற்கு குறைந்த முதலீடும், குறைந்த மேம்பாட்டுத் தேவையேயாகும்.ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு, சுய உதவிக்குழுவிலிருந்து ராய்பாி மற்றும் 4 இதர உறுப்பினர்கள் 30 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை தேர்ந்தெடுத்து உயர்த்தபட்ட சாகுபடி தொழில்நுட்பங்களை செயல்படுத்தி, பூசணியை சாகுபடி செய்கின்றனர்.

பல பெண்களுக்கு வேளாண்மைக்கான நிதி தடங்குகள் குவிந்து இருக்கிறது. குழுவாக சாகுபடி செய்தால் நிதி ஆதாரங்களை கிடைப்பது விரிவடைந்துள்ளது. மேலும் இந்த சவால்களை கட்டுபடுத்துகிறது. அவர்களின் பூசணி பண்ணைக்கு நிதியை சேர்க்க, பெண்கள் சுய உதவிக் குழுவிலிருந்து கடன் பெற்றனர். வங்கி கடன் அரசு திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வாறு ஒன்று சேர்த்த அவர்களின் சொந்த நிதியாக ரூ.7,38,000 முதலீடும் செய்தனர்.

இது ஒரு இலாபமான முதலீடு: அவர்களின் ஒருங்கிணைந்த பூசணி பண்ணைக்கு ரூ1,750,200 இலாபமாக பெற்றனர். அதை அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொண்டனர். இந்த லாபத்தோடு பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவமளித்து, மீதமுள்ள பணத்தை விவசாயித்திற்கு குறிப்பாக வினிகோகமும் அடுத்த பருவ பயிரின் கூலியும் பயன்படுத்தியுள்ளனர்.

பூசணி கரீப் பருவத்திற்கு உகுந்த பயிராகும்.இதனால் ரபி பருவத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல்) ராய்பாி தர்பூசணியை வளர்க்க திட்டமிட்டுள்ளார். இவர் 8 ஏக்கர் குத்தகை நிலத்தில் தர்பூசணியை தன்னுடைய கணவருடன் சேர்ந்து சாகுபடி செய்தார்.மேலும் 10 ஏக்கர் நிலம் சுய உதவிக்குழுவிடம் இருக்கிறது.
சாியான உதவி மற்றும் அறிவோடு, பெண்கள் எந்த பண்ணை தொழில்நுட்பங்களையும் தலைமைதாங்க முடியும் என்று ராய்பாி காட்டியுள்ளார்.


Note: This article was originally published at https:// www.ews-kt.com/odisha-india-a-new-hub-
for-pumpkinfarming/

 

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...