புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல் நிலைத்தத்தன்மை வரை, ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை, தேவையிவிருந்து அதிகளவு வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள் எப்படி அறிவு, புதிய கண்டுபிடிப்பு, மற்றும் ஒண்றிணைந்த உதவி மூலம் முறையாக சவால்களை எதிர்கொள்கிறது என்பதற்கு இவரின் கதை, ஒரு உதாரணம்.
ஓடிசாவில், நயகார் மாவட்டத்தில் உள்ள அமைதியான கிராமம், பௌஜூ தகேராவாகும். சிறு விவசாயியான புஷ்பாஞ்சலியின் தலைமையில், தொடர்ந்து ஆச்சாியமூட்டும் மாற்றங்கள் வேரூண்ற தொடங்கியுள்ளது.
புஷ்பாஞ்சலி தனது ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில், முன்பு நெல் மற்றும் கத்தாி பயிர்களை இரசாயன உரத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தார்.
அவருடைய சமூகத்தில் உள்ள மற்ற விவசாயிகள் போல், இவர் தனிப்பயிர் சாகுபடி பின்பற்றி குறைந்த வருமானமே பெறும் அதே சமயத்தில், மண் ஆரோக்கியம் மெதுவாக அழிந்து வருகிறது. இவருடைய குடும்பத்தின் ஊட்டச்சத்து தேவை முழுமையடையாமலேயே இருக்கிறது. மேலும் இவரது ஆண்டு குடும்ப வருமானம் சுமார் ரூ.48,000 மட்டுமே. இது தேவைக்கு குறைவாகவே கிடைக்கிறது.
கலப்பு காய்கறி சாகுபடிக்கு மாறியது
நிர்மான் நிறுவனம் வந்த பிறகு, நிலைத்த உதவி மற்றும் கண்டுபடிப்புகளோடு விவசாயிகளுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது, திறன் வளர்ப்பு பயிற்சி. புஷ்பாஞ்சலி இயற்கை வேளாண்மை பயிற்சி, நிதி மேலாண்மை கருத்தரங்கங்கள் மற்றும் குழு மேலாண்மை பயிற்சி ஆகியவற்றில் சிறப்பாக கலந்துகொண்டார். கலப்பு காய்கறி சாகுபடி மற்றும் இயற்கை முறைகள் மூலம் மண் வளம், பூச்சிகள் தாக்கம் குறையும் மற்றும் ஆண்டு முழுவதும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் எப்படி உயா;வை ஏற்படுத்தலாம் என்று கற்றுகொண்டார்.
ஊக்கத்தினால், இவர் தனிப்பயிர் சாகுபடியிலிருந்து பல்வகைமை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு மாறினார். ஊதாரணமாக, தானியப்பயிர்களான உளுந்து, பச்சை பயறு, கொள்ளு, பாரம்பாிய நெல், மக்காச் சோளம் போன்றவை, காய்கறிகளான கத்திரி, பாகல், தட்டைப்பயிர், வெள்ளரி, பீர்க்கன், பூசனி, தக்காளி, மிளகாய், மேலும் பழப் பயிர்கள், மற்றும் பல ஆண்டுப் பயிர்களான பப்பாளி மற்றும் முருங்கை ஆகியவை பயிரிட்டார். மேலும், ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் அசோலா போன்ற இதர தொழில்களையும் பின்பற்றினார்.
புதிய அறிவினால் ஊக்கம்பெற்று, புஷ்பாஞ்சலி இயற்கை வேளாண்மை முறைகள் மற்றும் கொடி காய்கறிகளான பாகல் மற்றும் பீன்ஸ் வளர்ப்பதற்கு ட்ரெல்லிஸ் தொழில்நுட்பமும் பின்பற்றினார். இந்த சுலபமான கண்டுபிடிப்புகள் ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட அளவு மகசூல் அதிகாித்தது. தனிப்பயிர் சாகுபடியிலிருந்து மாறி 4-5 வகை காய்கறிகள் வருடத்திற்கு சாகுபடி செய்து, தற்போது பல அறுவடைகள் செய்து மகிழ்கிறார். இதன்மூலம் வீட்டின் சத்து தேவைகள் நிறைவடைவதோடு, உள்ளூர் சந்தைக்கு பசுமையான விளைபெருட்களை விநியோகிப்பதில் பெறும் பங்கு வகிக்கிறார். இந்த முடிவு மாற்றத்தை காட்டுகிறது. இன்று புஷ்பாஞ்சலி காரீப் மற்றும் ரபி பட்டங்களில் வருடத்திற்கு 12-13 க்விண்டால் விளைபொருட்கள் உற்பத்தி செய்கிறார். இவருடைய வீட்டு வருமானம் வருடத்திற்கு 20 சதவிகிதம் அதிகாித்து ரூ. 48,000 லிருந்து ரூ. 64,000 மாக உயர்ந்துள்ளது. இவரது குடும்பம் வருடம் முழுவதும் ஊட்டச்சத்து பல்வகைமையின் மூலம் தற்போது மகிழ்கின்றனர். அதிக காய்கறிகளை உள்ளூர் அங்காடிகளுக்கு, விவசாய உற்பத்தி நிறுவனங்களின் மூலமும் மற்றும் உள்ளூர் ஆர்வலர்களுக்கு விற்கிறார். இந்த வருமானத்தை வைத்து இவர் ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார். இது ஒரு மீள்திறன் மற்றும் உயர்வின் அறிகுறியாகும்.
அவர் கீழ்வரும் தனது சவால்களை பகிர்ந்துகொண்டார்
- தனிப்பட்ட இயற்கை சந்தைகள் இல்லாததால் குறைந்த விலையில் விளைபொருட்களைவிற்பனை செய்யும் சூழ்நிலைக்கு பெறும்பாலும் தள்ள படுகின்றோம்.
- குறைந்த சேமிப்பு வசதிகளே கொண்டிருப்பதால், சந்தை விலை சாதகமாக இல்லாத நிலையில் உடனடியாக விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
முன்னேற்றத்தை தாண்டி
புஷ்பாஞ்சலியின் மாற்றம் யாரும் கவனிக்காமல் செல்லவில்லை. அவருடைய சுய உதவிக்குழுவான அனந்தகோல மகிள சுய உதவிக்குழுவை சோ;ந்த 10 பெண்களிடம் கலப்பு காய்கறி சாகுபடி பின்பற்றுவதில், தாக்கம் ஏற்படுத்தினார். ஊக்கத்தை தாண்டி இந்த பெண்களுக்கு பயிற்சி மற்றும் செயல்பாட்டு உதவிகளை வழங்கினார். இது அவர்களை ஊக்கப்படுத்தி இவரை பின்பற்றுவதற்கு வழிவகுத்தது. இவரின் சுய உதவிக்குழு வட்ட வேளாண் துறையிலிருந்து முதலீடாக ரூ.10,000 பெற்றனர். இது அவர்களுக்கு உயர்த்தப்பட்ட விதைகள், பண்ணை கருவிகள் வாங்குவதற்கு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிதி உதவியோடு, நிர்மான நிறுவனத்திலிருந்து கிடைத்த பயிற்சியின் மூலம் பெற்ற அறிவு, தேவைக்கு சாகுபடி செய்யும் நாட்களை தாண்டி அதிகளவு சாகுபடி செய்யும் அளவிற்கு மாற்றம் பெற உதவியது.
“எங்கள் சூய உதவிக் குழுவிலிருந்து பெற்ற உதவி மற்றும் வேளாண்மை துறையிலிருந்து பெற்ற விதை நிதி எங்களுக்கு ட்ரெல்லி முறை போன்ற புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான நம்பிக்கை அளித்தது. என் குடும்பத்திற்கும் , சமூகத்திற்கும் நான் தற்போது பெறும்பங்கு வகிப்பதில் பெறுமையடைகிறேன்.” என்றார் புஷ்பாஞ்சலி
சித்தார்த் குமார் ரௌத்
Siddharth Kumar Rout State Program Coordinator NIRMAN, Plot: S-2/15, 1st Floor, Niladri Vihar Bhubaneswar, Odisha - 751021 E-mail: kksdfnirman@gmail.com
மூலம்:
லீசா இந்தியா, செப்டம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 3



