மீனவர்களின் திறமையை வளர்த்தல் – விரிவடையும் வாழ்வாதாரங்கள்

 


நிலைத்த மீன்வளர்ப்பு, உயிர்ச்சூழல் சமன்பாட்டை உறுதிசெய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீண்டும் அழுத்தம் தருதல் ஆகியவற்றை உறுதிபடுத்தும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, மேலும் சமூக வழிநடத்தும் நிலைத்த வேளாண் மாற்றங்களை கொண்டுவருதல். சவல் என்ற நிறுவனம், நிலைத்த மீனவளர்ப்பை முக்கிய முயற்சியாக கொண்டு அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 7000 மீனவர்களின் திறனை வளர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தியுள்ளது.


கிராம இந்தியாவில், மீன்வளர்ப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்ததையும், விவசாய வருமானத்தை அதிகாிக்கும் நிலைத்த வழியாக விரிவடைந்து வளர்ந்து வருகிறது.
சிறு மீன் விவசாயிகளின் அறிவு மற்றும் திறன்களை வலுபடுத்தவும், ஆதாரத்தை சிறப்பாக பயன்படுத்தும் மீன்வளர்ப்பு முறைகளை பின்பற்றவும் ஓருங்கிணைந்த மீன் வளர்ப்பு திட்டம் மூலம், உணவு உத்திரவாதம் என்று உள்ளூரில் அறியப்பட்ட உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிலைத்த மீன் வளர்ப்பு திட்டம் (SAFAL-சபல்)செயல்படுத்தப்பட்டது. பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஜெர்மன் கூட்டமைப்பு அமைச்சகத்தின் நிதியுதவியில், டட்ஷே கிசெல்ச்சாவட் பர் இன்டர்நேஷனேல் சுசாமெனர்பீட் (GIZ) என்ற அமைப்பினால், சபல் திட்டம், இந்திய அரசின் மீன்கள் வளர்ப்பு, கால்நடை மற்றும் பால் பண்ணைகள் அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டது. அஸ்ஸாம் மற்றும் ஒடிசா, மீன் வளர்ப்புத்துரைகளோடு ஒன்று சேர்ந்து நெருக்கமாக பனிப்புரிந்து, இந்தத் திட்டம் அஸ்ஸாமில் 12 மாவட்டங்கள், ஒடிசாவில் 5 மாவட்டங்களை சேர்ந்த 7000 மீன் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதன் மூலம் கிராமப் பொருளாதாரம் வலுவடைந்தும், நிலைத்த மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களை பரவியுள்ளது.

மீன் வளர்க்கும் சமூகத்தை வலுபடுத்தும் சபல் (ளுயுகுயுடு) திட்டத்தின் அணுகுமுறை
இந்த முயற்சிகள் நிலைக்க, சபல், நிலைத்த மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்களோடு அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது. மீன் உற்பத்தியை விரிவாக்கம் செய்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம், மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகாித்தல் ஆகியவை குறிகோளாக கருதப்படுகிறது.இந்தத் திட்டம் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி. உள்ளூர் நிறுவனங்களான அஸ்ஸாம் மாநில கிராம வாழ்வாதார குழுமம், உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் கல்வியாளர்கள் மற்றும் இதர வல்லுனர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிகின்றனர்.

140 சமூக ஆதார உறுப்பின – பயிற்சியாளர்களின் உதவியுடன், சுமார் 500 சமூக ஆதார உறுப்பினர்களுக்கு பயற்சியளித்து அவர்களை செயல்பட செய்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
சமூக ஆதார உறுப்பினர்கள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், உற்பத்தி குழுக்கள், மற்றும் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றில் அங்கமாக வகித்து சமூகம் வழிநடத்தும், நிலைத்த அறிவு பாிமாற்றத்தை உறுதிசெய்கிறது. விவசாய உற்பத்தி நிறுவனம், விவசாயிகளுக்காக பயிற்சி மற்றும் அறிவுரை சேவைகள் வழங்கும் உள்ளூர் அமைப்புகளாக திகழ்கிறது. அதேநேரத்தில் கூட்டாக கற்பதை பெருக்குவதும் மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார வலிமையை உயர்த்துகிறது.

திறன் வளர்ப்பது சபல் – லின் மைய அணுகுமுறையாக இருக்கிறது. செயலபாட்டை உள்ளடக்கிய பயிற்சி முறையில் கள செயல்பாட்டு விளக்கமுறையோடு பள்ளியறை வகுப்பு பயிற்சிகளும் இணைந்து இந்தத் திட்டத்தில் பின்பற்ற படுகிறது. சமூக ஆதார உறுப்பினர்கள் மீன் வளர்ப்பு வல்லுனர்களோடு சிறப்பு பயிற்சியில் மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் சிறந்த முறையில் கற்பித்து மூத்த விவசாயிகளை ஈடுபட செய்தனர். ஒவ்வொரு சமூக ஆதார உறுப்பினர்களும் , சாகுபடி பருவத்தில் ஏதேனும் ஒரு நாளை திட்டமிட்டு, 25 விவசாயிகளுக்கு இரண்டு மணி நேர பயிற்சியை அளிப்பார். பண்ணை மற்றும் வீட்டு பொறுப்புகளுக்கு தகுந்தார்போல், சுலபத்தன்மையை உறுதிபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்காக வஎவமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மீன் வளர்ப்பின் முக்கிய அம்சங்களான, மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் குளத்தை தயாரித்தல், இயற்கை தீவனம், தண்ணீர் தர மேலாண்மை, குஞ்சுகளை குளத்தில் விட்டபின் செயல்படுத்தும் முறைகள் மற்றும் பண்ணை பொருளாதாரத்தின் அடிப்படை போன்றவைகள் இந்தப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கற்றல் பொருட்களான விவசாய கையேடுகள், சிறுப்புத்தகங்கள், போஸ்டர்கள் மற்றும் பண்ணை ஆவணப் புத்தகங்கள் போன்ற வல்லுனர்கள், அனுபவம் பெற்றவர்கள், மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து ஒன்றாக உருவாக்கி, அதன் மூலம் தக்கவைத்த அறிவு மற்றும் செயல்பாட்டு பயனை விரிவாக்க செய்கிறது.
தனிப்பட்ட பயிற்சியை தாண்டி, விவசாய உற்பத்திக் குழுக்கள்/ நிறுவனஙகள், சுய உதவி குழுக்கள், இவர்களின் செயல்பாட்டு மற்றும் தொழில் முனையும் திறன்கள் விரிவடைந்து வலுவடைந்தது. இந்த நிறுவனங்கள், ஒருங்கிணைந்து முடிவெடுக்கவும், சந்தை வசதிகளை உயர்த்தவும், சிறந்த செயல்பாடுகளை பகிர்வதற்கு இந்த அமைப்புகள் பயன்படுகின்றன. இந்த விவசாய அமைப்புகள் மூலம் விவசாயிகளின் பேரம்பேசும் சக்தியை விரிவடைய செய்கிறது, தரமான இடுபொருட்கள் கிடைப்பதை உயர்த்துதல் மற்றும் அறிவு பாிமாற்றத்திற்கான வடிவமைக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகாிப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறது.

விவசாய உற்பத்தி குழுக்கள்/விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஆதார உறுப்பினர்கள் செயல்படுத்தும், புதிதாக ஒருங்கிணைந்த தகவல் மையம் மற்றும் செயற்கைகோள் மையங்கள் கிராம பகுதிகளின் வேளாண்உயிர்ச்சூழல் சேவை மையங்களாக செயல்படுகிறது. இவர்களுக்கு கணிண அல்லது ஸ்மார்ட் போன்களோடு தொழில்நுட்ப வசதிகளை ஏற்று அரசுத்திட்டங்கள் மூலம் நிதியுதவி பெறுவதற்கான தகவல் மற்றும் நிலைத்த மீன் வளர்ப்பு, சிறந்த செயல்பாடுகள் மற்றும் பயிற்சி ஆவணங்கள் குறித்த அறிவு கிடைக்க செய்கிறது. இந்த மையங்கள் உள்ளூர் அறிவு பரப்புதல், அறிவிக்கப்பட்ட முடிவை எடுக்க விவசாயிகளுக்கு உதவுதல், கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு சமூக இடத்திற்கான சேவையளிக்கிறது.

நிலைத்த மீன் வளர்ப்பை பாிந்துரைப்பது சபல்லின் மைய பார்வையாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் உயிர்ச்சூழல் சமன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறுஅழுத்தம் தறுதல் மற்றும் சமூகம் வழிநடத்தும் நிலைத்த வேளாண் மாற்றங்களை உறுதிப்படுத்துகிறது. இது இந்தியா மற்றும் ஜெர்மனி மத்தியில் பசுமை மற்றும் நிலைத்த வளர்ச்சி பங்கீட்டின் நோக்கமாகும்.

தாக்கம் மற்றும் முன்னேறி வழி
இன்றுவரை, சுமார் 7000 விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சி 500 க்கும்மேற்பட்ட சமூக ஆதார உறுப்பினர்கள் மூலம் அவர்களின் சமூகங்களுக்கு வீட்டுவாசலுக்கே சென்று சிறப்பாக உதவி வழங்குகின்றனர்.
சோன்மனி தேவி போன்ற விவசாயிகள் (பெட்டி செய்தி 1), சமூக ஆதார உறுப்பினராக, அவரே சபல் திட்டத்தின் மூலம் வருமானம் அதிகாிக்கும் வாய்ப்பையும் தாண்டி, மீட்கும் தன்மை மற்றும் சுய சார்பை நோக்கி செல்லும் வழி வகுக்கிறது. ‘சமூக ஆதார உறுப்பினர் பயிற்சி பெறுவது தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாகும், இது எனது சமூகத்தில், பெற்ற அறிவை பகிர்வதன்மூலம் அங்கீகாரம் பெற்றதோடு பெண்களின் சக்தியை மேலோங்குகிறது” என்று கூறினார்.

மீன் வளர்ப்பு சமூகங்களின் மீட்கும்தன்மைளை வலுவடையும், சபல் மாதிரியை போல், இதர இந்திய மாநிலங்களில் பிரதிபலிக்கலாம். எப்படி திட்டமிடப்பட்ட வேரூண்றும் திறன்வளர்ப்பு முயற்சிகள் நெடுங்கால மாற்றத்தை உருவாக்கி, உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம் மற்றும் வரும் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை உயா;த்தி காட்டி சிறப்பாக செயல்படுத்தியுள்ளது இந்தத் திட்டம்.

பெட்டி செய்தி 1
சோமனி தேவியின் வெற்றிக் கதை
சோமனி தேவி, அஸ்ஸாமில் உள்ள பரம்மப்புத்திரா நதிக்கரையின் தெற்கு திசையில் தோரங்கி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி. இவர் ஒரு வருடத்திற்குள்ளே மீன்களை அறுவடை செய்து அதிக இலாபம் பெற்றார். இது சபல் திட்டத்தின் கீழ் விஞ்ஞான மீன் வளர்ப்புத் தொழில்நுட்ப பயிற்சியில் கற்று பின்பற்றியதனால் இந்த வளர்ச்சி அடைய முடிந்தது.
2022 ஆம் ஆண்டிற்கு முன், திருமதி. சோன்மனி முதலில் பாரம்பாிய மீன் வளர்ப்பு முறையை பின்பற்றி வந்தார். இது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்பட்டது. விஞ்ஞான அறிவு இல்லாமல் மற்றும் ஆதாரங்கள்பிடைக்காமல், உற்பத்தி குறைவாக இருந்தது. எனினும் நிலைத்த மீன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்ற பின்னர், இவர் குஞ்சுகளின் அடர்த்தியை மேம்படுத்துதல், தீவன தரத்தை உயர்த்தி மேலும் குளத்தின் உயிர்ச்சூழல் அமைப்பை சிறப்பாக மேம்படுத்துவதை கற்றுக்கொண்டார்.

பயிற்சிக்கு முன் 0.06 ஹெக்டர் குளத்தில் நான் 2000 குஞ்சுகள் விட்டேன், ஆனால் அதிக குஞ்சுகள் இருந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் 400 குஞ்சுகள் இறந்துவிடும். நான் அரிசி தவிடையும், மீதமுள்ள உணவையே தீவனமாக பயன்படுத்தினேன். இது குறைவான வளர்ச்சியையே பெற்றது. தற்போது குளத்தின் உயிர்ச்சூழல் அமைப்பு, தாவர வளர்ச்சியை உறுதிபடுத்துதல், சமமான ஊட்டச்சத்தை பயன்படுத்துதல் போன்ற மேம்பாட்டின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டேன்.

அவருடைய புதிய கண்டுபடிப்பான நிலைத்த குஞ்சுகள் மற்றும் தீவன தொழில்நுட்ப ங்களோடு, தொழில் ரீதியான மீன் வளர்ப்பை கூடுதலாக ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்து அவருடைய செயல்பாட்டை விரிவுபடுத்தினார். 2023 – 2024 ஆம் ஆண்டின் போது, அவருடைய மீன் உற்பத்தி 150 கிலோவிலிருந்து 200 கிலோவிற்கு அதிகாித்தது. மேலும் அவருடைய வருமானமும் இரட்டிப்பானது.

பெட்டினா ரென்னர் மற்றும் பிரதாப் சின்ஹா


Bettina Renner
Monitoring and Evaluation,
Public Relations Jr. Specialist
E-mail: E bettina.renner@giz.de

Pratap Sinha
Project Leader, SAFAL
GIZ Regional Office, Guwahati
House no-54(a), Bonful Path
Guwahati-781038, Assam
http://www.giz.de


மூலம்:  லீசா இந்தியா, மார்ச் 2025, வால்யூம் 27, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...

இயற்கை வேளாண்மை மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிதோஷன மீள்திறன் அணுகுமுறை 

இயற்கை வேளாண்மை மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிதோஷன மீள்திறன் அணுகுமுறை 

இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண்...