கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்


மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை, மாற்று பண்ணை அடிப்படையிலான தொழில்கள் குறித்து தேவையான உதவிகள் அளித்து விவசாயத்திலேயே இருக்க நிண்ட காலம் செல்ல வேண்டும். கொல்லைப்புற விட்டுத் தோட்டம் என்பது இதுபோன்ற ஒரு தொழில்நுட்பமே. இது பெண்களின் சக்தியை தாண்டி பலதரப்பட்ட தேவைகளான உணவு, வருமானம் மற்றும் ஊட்டசத்து உத்திரவாதம்.


சன்னாபூர் மற்றும் சௌரகுட்டா கிராமங்கள் கர்நாடகா, தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் சிறியளவு நிலத்தையே வைத்திருக்கின்றனா; மற்றும் மானாவாரி வேளாண்மையை பின்பற்றுவது, பாசனத்திற்கு வருடத்தில் பருவமழையையே முழுவதுமாக நம்பியிருக்கின்றனர். குறைந்த தரமான மண் மற்றும் அளவுக்கு அதிகமாக உரம் மற்றும் பு+ச்சிக்கொல்லிகள் உற்பத்தி செலவு அதிகாிப்பது மட்டுமில்லாமல் வெளியிடு பொருட்களை நம்பியிருப்பது,குறைந்த மகசூல், எற்றஇரக்க வருமானங்கள், மற்றும் இரசாயனங்கள் அதிகமுள்ள உணவு உற்பத்தி போன்ற நிலை ஏற்படுகிறது. மோசமான காலநிலை வடிவம், சீதோஷன மாற்றத்தினால் வாழ்வாதாரங்கள் அபாயகரமாக மாறுகிறது. வீட்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்களின் உயிர்ச்சூழல் சாகுபடி குறித்த எந்த தீவிர வழிநடத்துதல் அல்லாமல் விவசாயிகள் குறிப்பாக இளைஞர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு, ஏ.எம்.இ நிறுவனம் ரோட்டாி கிலப், இந்திரா நகருடன் இணைந்து நிலைத்த வேளாண்மை ஊக்குவிக்கும் திட்டத்தை விவசாய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக செயல்படுத்தியுள்ளது. முறையாக மற்றும் பின்பற்றக்கூடிய சாகுபடி தொழில்நுட்பங்கள் செய்யக் மானாவாரி சாகுபடி குழுக்களுக்கு உதவிபுரியும் வண்ணம் இந்தத் திட்டம் எடுத்துகொள்ளப்பட்டது. முக்காசோளம், சோயாபீன் மற்றும் சோளம் போன்ற பயிர்களின் நிலைத்த சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகளுக்கு வழிநடத்துவதை தாண்டி, வீட்டு உறுப்பினா;களுக்கு உத்திரவாதத்தை உறுதிப்படுத்த மற்றும் வருமானமும் பெற, விட்டுத்தோட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.
கொல்லைப்புற வீட்டுத் தோட்டம்

முக்கியத் தலையீடு பண்ணை பெண்களை கொல்லைப்புரத்தில வீட்டுத்தோட்டங்கள் அமைக்க உதவிப்புரிகின்றனர். வீட்டுத்தோட்டங்கள் பங்குபெற்ற குடும்பங்களின் உணவுமுறையில் உணவு பல்வகைமை அதிகாிப்பதற்காகவும், அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு சந்தையை சார்ந்திருக்கும் நிலை குறைவதற்கும் விட்டுத்தோட்டங்கள் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு 10-13 வகை காய்கறி விதைகள் கொண்ட வீட்டுத்தோட்ட கிட் வழங்கப்பட்டது. வீட்டுத்தோட்டம் வளர்ப்பதால் பெண்கள் பலவகையான பருவ காய்கறிகளை அறுவடை செய்யமுடிகிறது.

2023-2024, வீட்டுத்தோட்ட கிட்டோடு 13 பல்வேறு இரக காய்கறிகள் 70 குழு உறுப்பினர்களுக்கு அளிக்கபட்டது. பருவத்தின் முற்காலத்தில் விதைத்தவர்களின் விதைகள் அதிக மழை காரணமாக முளைக்கவில்லை. ஆனால் 40% பெண்கள், பருவத்தின் பிற்காலத்தில் வதைத்தால் தோட்டத்திலிருந்து நல்ல காய்கறிகளை அறுவடை செய்ய முடிந்தது. பெண்கள் மக்கு உரத்தில், சமையலரை கழிவு, தோட்ட கழிவுகள் மற்றும் உலர் இலைகள் கொண்டு தயாரிப்பது அங்கக தன்மை நிறைந்த மக்குஉரத்தை தயாரிக்கலாம். இந்த மக்குஉரம் தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்புக்சக்தி மற்றும் தாவர வளர்ச்சியை அதிகாிப்பதற்கு, இவர்கள் இயற்கை திரவ உரங்களான பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தம் தயாரிக்கின்றனர். பூச்சி மற்றும் நோய்கள் மேம்படுத்துவதற்கு, இவர்கள் வேப்ப எண்ணெய் தௌிப்பை இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர். இயற்கை மூடாக்கு, வைக்கோல் மற்றும் உலர் இலைகளை தாவரத்தை சுற்றி இடலாம்.இதனால் மண் ஈரப்பதம் மேம்படுத்துகிறது, களைகள் குறைந்தது, மற்றும் மண் ஆரோக்கியம் உயர்ந்தது. ஒவ்வொரு குடும்பமும் கத்திரி, வெண்டை, தக்காளி, கொடிக்காய்கள், முள்ளங்கி, வெள்ளரி, மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர். சராசாியாக ஒவ்வொரு வீட்டிலும் ரூ. 2500-3500 மதிப்புள்ள காய்கறிகள் ஒரு பருவத்தில் உற்பத்தி செய்கின்றனர்.

மீண்டும், 2024 ஆம்ஆண்டு தார்வாட் மாவட்டத்தில் அதிக மழை பொழிந்தது. நேரம் தவறிய மழை பயிர்கள் பாதிக்கிறது. விவசாயிகள் இந்த பயிர் நஷ்டத்தை சந்திக்க வேண்டும். மேலும் இந்தமாதிரியான சூழ்நிலையில் சுமார் 25 பெண் விவசாயிகள் ஊட்டச்சத்து தோட்டத்தை கொல்லைப்புறத்தில் அமைத்தனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.3000-4000 மதிப்புள்ள காய்கறிகள் இந்த பருவத்தில் உற்பத்தி செய்தனர் பயிர் நஷ்டத்தால் குடும்பங்கள் சந்தித்த உணவு குறைபாட்டின்போது வீட்டுத்தோட்டங்கள் வரமாய் கருதப்பட்டது.

பெட்டி செய்தி 1: சாய்நாசாவின் வெற்றிக்கதை
திருமதி.சாய்நாசா எம். ஷேதாசனடி தார்வாட், ஹப்பள்ளி தாலுக்கா, சன்னாபு+ர் கிராமத்தில் 4 குடும்ப உறுப்பினர்களோடு வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்பம் விவசாயத்தையே வாழ்வாதாரத்தையே நம்பியிருக்கின்றனர். அவர்கள் 2 ஏக்கர் பண்ணை நிலத்தை பெற்றுருக்கின்றனர். கொல்லைப்புரத்தில் சிறிய நிலத்தை வைத்திருக்கும் இவர், குடும்பத்திற்கு இயற்கை மற்றும் பசுமை விளைப்பொருளை வளர்க்க ஆசைப்பட்டு, நிலைத்த தோட்ட தொழிலநுட்பங்களை பின்பற்றினார். இந்த நிலைத்த தொழில்நுட்பங்கள் எப்படி பணிசெய்கிறது என்று ஆர்வத்தில் இருக்கும் இவருக்கு, சிறிய இடமும் உற்பத்தி மற்றும் உயிர்ச்சூழல் தோட்டங்களாக மாற்றமுடியும்.

வீட்டுத்தோட்ட பயிற்சி பெற்று பலகாய்கறிகள் விதைகளை கொண்ட வீட்டுத் தோட்ட கிட்டுகளை பெற்ற பல பெண்களில் சாய்நாசாவும் ஒருவர். வீட்டில் தயாரித்த மக்குகள் மற்றும் இயற்கை உரம் சேர்த்தார். இவர் தோட்டத்தை வடிவமைத்து, செங்குத்து தோட்ட வடிவமைப்பு, மற்றும் இடத்தை சிறப்பாக செயல்படுத்த பாத்திரங்கள் பயன்படுத்த திட்டமிட்டார்.

இவர் சமையலரை கழிவுகள், தோட்டக் கழிவுகள், மற்றும் உலர் இலைகளை வைத்து இயற்கை மக்குஉரத்தை தயாரிக்கிறார். இந்த மக்கு தோட்ட படுக்கையை வளமாக்குகிறது. இவர் பஞசகவ்யா, ஜீவாமிர்தத்தை இயற்கை திரவ உரமாக பயன்படுத்தி, எதிர்ப்பு சக்தியும் மற்றும் பயிர் வளர்ச்சி அதிகாிப்பதை கண்டார். பூச்சி மற்றும் நோய்கள் மேம்படுத்துவதற்கு, இவர் வேப்ப எண்ணெய் தௌிப்பை இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர். இயற்கை மூடாக்கு, வைக்கோல் மற்றும் உலர் இலைகளை தாவரத்தை சுற்றி இடலாம்.இதனால் மண் ஈரப்பதம் மேம்படுத்துகிறது, களைகள் குறைந்தது, மற்றும் மண் ஆரோக்கியம் உயர்ந்தது.

வீட்டிற்கு தேவையான காய்கறிகளுக்கு மாதம் ரூ800 – 1000 வரை செலவாகும், மேலும் என்னால் என் வீட்டு கொல்லைப்புரத்திலேயே வளர்க்க முடிகிறது என்றார், சாய்நாசா . அவரே சொந்தமாக தயாரிப்பதால் அவரால் ரூ.3800 மதிப்புள்ள காய்கறிகள் அறுவடை செய்ய முடிகிறது.
அவருடைய அணுகுமுறை குடும்பத்திற்கு பசமையான, ஆரோக்கிய உணவு மட்டும் வழங்கவில்லை, மேலும் சுற்றுச்சூழல் நிலைத்தத்தன்மை மற்றும் சமூக ஈடுபாடும் ஊக்குவிக்கிறது.அவர் தன்னுடைய தோட்ட அறிவை அருகாமையில் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். அவருடைய அனுபவம் மற்றும் அறிவை பகிர்வதுமூலம், நிலைத்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு மற்றவர்களை தொடா;ந்து ஊக்கபடுத்துகிறார். இது மேலும் பசுைமான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கிறது. இவரது வீட்டுத் தோட்டம் பல சமூக உறுப்பினர்களை ஆச்சாியப்படுத்தியது மட்டுமில்லாமல் சொந்த தோட்டத்தை துவங்குவதற்கு ஊக்கபடுத்தியுள்ளது.இதனால் நிலைத்த காலாச்சார வாழ்வை விரிவாக்குகிறது.

ஏ.எம்.இ நிறுவனம்


AME Foundation
No. 204, 100 Feet Ring Road,
3rd Phase, Banashankari 2nd Block, 3rd Stage
Bangalore - 560 085, India
www.amefound.org
E-mail: leisaindia@yahoo.co.in

மூலம்:
லீசா இந்தியா, டிசம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 4.

அண்மைய இடுகைகள்
தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...

இயற்கை வேளாண்மை மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிதோஷன மீள்திறன் அணுகுமுறை 

இயற்கை வேளாண்மை மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிதோஷன மீள்திறன் அணுகுமுறை 

இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண்...