இந்தியாவின் வேளாண் வளர்ச்சியில், கிராம இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், இடம்பெயர்தலை தலைகீழாக மாற்றவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆர்யா திட்டத்தை செயல்படுத்தியது.
நாட்டின் மக்கள் தொகையில் மிக முக்கிய அங்கமாக இருப்பது இளைஞர்களே. தங்களிடமுள்ள அதிக ஊக்கம் மற்றும் கற்பனைத்திறன்கள் ஆகிய பண்புகள் பணிஆற்றலை திடப்படுத்தும் திறன் இலைஞா;களுக்கு இருக்கிறது. யு.என்.டி.ஈ.எஸ்.எ (2011) என்ற அமைப்பின்படி, 2050 ல் உலக மக்கள் தொகை 9 பில்லியனை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அதில் இளைஞர்களின் (15 முதல் 24 வயது) மக்கள் தொகை 2050 ல் 1.3 பில்லியனாக அதிகாிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மதிப்பிடப்பட்ட மொத்த மக்கள்தொகையில் 14 சதவிகிதமாகும். இவ்வாறு இளைஞர்களின் ஆதாரத்தை பெற்றுள்ள இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. எனினும் வேளாண்மையில் இவர்களது ஆர்வம் குறைந்து வருகிறது.
வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தோடு, வேளாண் சீர்திருத்தத்தில் இளைஞர்களின் ஈடுபாடு முக்கியமாகும். நாட்டின் நிலையான உணவு உத்திரவாதத்திற்கு வேளாண்மையில் அதிக வளர்ச்சி தேவை.மேலும் இது உணவு தானியங்களின் தேவையையும் அதிகாிக்கும். இவற்றின் பல்வகைத் தேவைகளை ஈடுசெய்ய, வேளாண்மையை நவீனப்படுத்தவும், பல்வகைமைபடுத்துவதும் அவசியமானது.
கொடுக்கப்பட்ட தேவையான வாய்ப்புகளை கொண்டு, நாட்டில் தற்போது உள்ள வேளாண்மை நிலையை அதிகப்படுத்துவதற்கு இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். பல இளைய விவசாயிகள் அதிக தொழில்நுட்பம், அதிக சவால், அதிக இலாபம் இருக்கும் வேளாண்தொழில்களான பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, துள்ளிய வேளாண்மை, இயற்கை வேளாண்மை, பூக்கள் சாகுபடி, மருத்துவ மற்றும் வாசனைப் பயிர்களை சாகுபடி செய்வது போன்றவைகள் பெரும்பாலும் வயதான விவசாயிகள் தவிர்க்கின்றனர்.
கிராம இளைஞர்களில் 45 சதவிகிதத்தினர் நகரங்களுக்கு இடம்பெயர்வது எச்சாிப்பதாக இருக்கிறது. இளைஞர்கள் நகரத்திற்கு செல்வதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால் அடிப்படை வசதிகள் இல்லாதது, வேலையின்மை மற்றும் விவசாயத்தில் ஆர்வமில்லாததே ஆகும். ஏனென்றால் இயற்கை சீரழிவுகள் (வறட்சி, புயல்) , சிறிய நிலப்பரப்பை பெற்றிருப்பவர்கள் (அதிக பரப்பளவு கொண்ட விவசாயிகள் தொழில் நோக்கத்தோடு செய்யும் வேளாண்மைக்கு எதிராக போட்டிபோட இயலாமல்), வேளான் விளைபொருட்களுக்கு உகந்த சந்தை விலை கிடைக்காதது ஆகிய பல்வேறு காரணங்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கிய காரணமாகும். பெரும்பாலான உலக பொருளாதார எச்சாிக்கைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை மிக முக்கியமானது. இந்த தாக்கத்தின் முக்கிய விளைவு பணவீக்கம். இது மேலும் உணவு விலைகள், விளைபொருட்கள் மற்றும் எரிபொருள்கள் ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படுகிறது.
இளைஞர்களை வேளாண்மையில் ஈர்க்க மற்றும் நிலைத்திருக்க செய்வது
இந்தியாவின் வேளாண் வளர்ச்சியில், கிராம இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், இடம்பெயர்தலை தலைகீழாக மாற்றவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், ‘இளைஞர்களை வேளாண்மையில் ஈர்க்க மற்றும் நிலைத்திருக்க செய்யும்” (ஆர்யா) திட்டத்தை செயல்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் 35 வயதிற்கு கீழ் உள்ள கிராம இளைஞர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துவதும், நகரத்திலிருந்து கிராமப் பகுதிக்கு இடம்பெயர்தலை தலைகீழாக மாற்றுவதேயாகும். சமூக ஈடுபாடு, பாலின சமானம், மற்றும் கிராம வளர்ச்சி போன்ற கோட்பாடுகளை நிலையானதாக்க உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். இது கீழுள்ள நோக்கங்களை கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிலையான வருமானம் மற்றும் இலாபம் நிறைந்த வேலையை பெற, பல்வேறு வேளாண், இதரத் தொழில்கள் மற்றும் சேவை பிரிவுத் தொழில்கள் மூலம், கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஈர்த்து, அவர்கள் எடுத்து செயல்படுத்துவதற்கான ஆற்றலை அளிக்கிறது.
கிராம இளைஞர்களை ஒருங்கிணைத்து குழுவாக உருவாக்கி, ஆதாரம் மற்றும் முதலீடு அதிகம் கொண்ட செயல்பாடுகளான பதப்படுத்துவது, மதிப்பு கூட்டுவது, மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்தலாம்.
ஆர்யாத் திட்டத்தை 25 மாநிலத்தில் விவசாய பயிற்சி மையத்தின் மூலம் செயல்படுத்துகிறது. தற்போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட 25 மையங்கள் உட்பட,100 ஆர்யா மையங்களை செயல்படுத்திவருகிறது. விவசாய பயிற்சி மையங்கள் வேளாண் பல்கலைகழகங்கள் மற்றும் ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்களையும் தொழில்நுட்ப பங்குதாரர்களாக ஈடுபடுத்துகின்றனர்.
கிராமத் தொழில்முனையும் வகைகள்
கிராமத் தொழில்முனைவது, வருமை, இடம்பெயர்தல், லேலையின்மையை குறைப்பதற்கும், கிராமப்பகுதிகளை வளர்ப்பதற்கும் இது ஒரு தீர்வாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த தொழிலும் வெற்றி வளர்ச்சிக்கு அடிப்படை, சாியானத் தொழிலைத் தேர்வு செய்வதேயாகும். முக்கியமாக, இதற்கு தேவையான ஆதாரங்கள், பொருட்கள், கூலி, மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் நிலைத்தத்தன்மை ஆகிய அனைத்தும் தொழில் வெற்றி பெறுவதற்கான காரணிகள் ஆகும். ஆர்யாத் திட்டத்தின் கீழ், மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளின் அடிப்படையில், வெவ்வேறு மையங்களில், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆறுவடைக்குப்பின் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், மீன் உற்பத்தி, விதை உற்பத்தி, மண்புழு உரம், ஆடு வளர்ப்பு மற்றும் கொள்ளைப்புர கோழி வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்களை தேர்வு செய்யப்படுகிறது.
தொழில் வளர்ச்சி செய்முறை
பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் விவசாய பயிற்சி மையம், பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சி செயல்பாடுகளை கீழ்காணும் முறைகளில் செயல்படுத்தலாம்.
கையேட்டின் அடிப்படையில், ஒவ்வொரு ஆர்யா மையத்தினால்,தேவை மற்றும் ஆதாரங்கள் கிடைக்கும் நிலையை பொறுத்து, 18-35 வயது நிரம்பிய 200 இளைஞர்களை தேர்வு செய்யப்பட்டனர்.கிராம இளைஞர்களை, குறியீட்டு அளவீட்டை கொண்டு ஆய்வு செய்து பின்னர் பாலினம் மற்றும் சமூக-பொருளாதார நிலையையும் ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்டனர். திறமையான இளைஞர்களை தோ;வு செய்யும் முறையில் உதவி செய்வதற்கு மாவட்ட அளவிலான குழுவை அமைக்கபட்டது.
பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் சவால் (ளுறுழுவு) என்ற ஆய்வின் அடிப்படையில் உகந்த தொழிலை தேர்வு செய்யப்படுகிறது. கிராம இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான திறன்வாய்ந்த தொழிலை அடையாளம் காணப்பட்டது.
கிராம இளைஞர்களை தேர்வு செய்தப்பின், தேவையின் அடிப்படையில் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறனை மையமாக வைத்து பயிற்சிகளை, விவசாய பயிற்சி மையங்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திறன் பயிற்சியை அளித்தப்பின், அந்தப்பகுதிக்குள் உள்ள விற்பனை திறன் அடிப்படையில் விவசாய பயிற்சி மையங்கள் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார மாதிரியை அமைப்பதற்கு உதவிப்புரிகிறது.
தொழில்நுட்பம், உற்பத்திக்கு முன் மற்றும் உற்பத்திக்கு பின் தேவைப்படும் இணைப்புகள் சார்ந்த உதவிகள், விவசாய பயிற்சி மையங்கள், மாநில வேளாண்மை பல்கலைகழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம், இளைஞா;கள் உதவி பெறுகின்றனா;.
ஒரே மாதிரியான கண்காணிப்புகள், ஆய்வுகள் மற்றும் மத்திய கால சாிப்பார்ப்புகள் ஆகியவை திட்டம் செயல்படும்போது நிகழும் விரிவான ஆய்வு முறைகளோடு பல்வேறு நிலையில் குழுக்கள் உதவிப்புரிகிறது. முறையான ஆய்வுகளின் அடிப்படையில், தொழிலை மாற்றி, நிலையான மற்றும் இலாபகரமான முறையில் கையாளப்படுகிறது.
கிராம இளைஞர்கள்/தொழில்முனைவோரை மையப்படுத்தி, இணைப்புகளை உருவாக்கி, அதிக முதலீடு தேவைப்படும் மதிப்பு சங்கிலி மேலாண்மை உட்பட பல தொழில்களுக்கு உதவி பெறுதல்.
தொழில் சார்ந்த ஊக்கப் பயிற்சிகளை, சக பயிற்சியாளர்களின் வழிபாட்டுதல் மூலம் ஏற்பாடு செய்து, வேளாண் தொழில்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு குறித்து தொிந்துகொள்ளுதல்.
ஐ.சி.ஏ.ஆர்-அட்டாரி, பூனேவின் கீழ் ஸோன் 8 இன் செயல்பாடுகள் மற்றும் வெற்றிகளும்
ஸோன் 8, புனே வில், இரண்டு விவசாய பயிற்சி மையங்கள் துவக்கத்தில் செயல்படுத்தப்பட்டது (மஹராஷ்டிராவில் நாக்பூர் – ஐ மற்றும் குஜராத்தில், ராஜ்கோட் – ஐ. இந்த ஸோனில் 73 பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 2015-16 முதல் 2018-19 வரை, மொத்தம் 1894 கிராம இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 2019-20 ல் மொத்தம் 83 பயிற்சி பாடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர். 2526 இளைஞர்கள் ஆர்யா விவசாய பயிற்சி மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டனர். மொத்தம் 87 இளைஞர்கள் தொழில் மையங்களை அமைத்துள்ளனர். 2019-20 ஆம் ஆண்டு கூடுதலாக பத்து மையங்களை அடையாளம் கண்டு, பணியையும் ஆரம்பித்து விட்டனர் (மஹாராஷடிராவில் – நாசிக் 1, ஒஸ்மனாபாத், புனே – II, வாசிம், சோலாபூர். குஜராத்தில் – பாவ்நகர், கேதா, நவ்சாி, ஆனந்த் மற்றும் அம்ரேளி).தற்போது, 12 விவசாய பயிற்சி மையங்கள் ஆர்யாத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
ஐ.சி.ஏ.ஆர் – அட்டாரி ஸோன் சோன் 8 ல், 13 சிறப்புவாய்ந்த தொழில்களான நாற்றங்கால் மேலாண்மை, பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்துதல், இயற்கை உர உற்பத்தி, சிறியளவு தொழில்கள், பால் மாடுகள், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மேலும் பல. ஆர்வமுள்ள கிராம இளைஞர்கள் பதிவு செய்து, அவர்களின் சிறு தொழில்களை வளர்த்து கிராமத்தில் தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வண்ணம் இருக்கிறது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களிலும் இளைஞர்களை ஈடுபடுத்தியதில், விவசாய பயிற்சி மையங்கள் சிறந்த உதாரணமாக இருந்துவருகிறது.
பதினோரு இளைஞர்கள் செஞ்சோளப் பயிரில் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழிலை தேர்வுசெய்தனர். இவர்களின் மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருட்களை, உமெத் உருவாக்கிய நியுட்ரி என்ற பிராண்ட் பெயாில், கஞ்சன் உணவுகள், சாண்டோஷிம்மதா, ஜிஜோ உணவு ஆகியவை உள்ளூர் மற்றும் மெட்ரோபொலிட்டன் சந்தைகளில் விற்கப்படுகிறது. (கே.வி.கே சோலாபூர் – ஐ). பல்வேறு தொழில்களான காய்கறி மற்றும் பழ நாற்றங்கால் அமைத்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், இயற்கை உர உற்பத்தி, ஆடு வளர்ப்பு மற்றும் கொள்ளைப்புர கோழி வளர்ப்பு ஆகியவற்றை கிராம இளைஞர்கள் செய்கின்றனர். இந்த தொழில்கள் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளன. இவர்கள் வணிக ரீதியாக துவங்கவும் முயற்சிக்கின்றனர். (கே.வி.கே பூனே- II மற்றும் கே.வி.கே வாஷிம்) மதிப்பு கூட்டுதல் மற்றும் சிறிய எண்ணெய் இயந்திர தொழில் மாதிரியோடு கூடிய பதப்படுத்துதல் அமைப்பு நல்ல உதாரணமாக இருந்து பரவும் அதே சமயத்தில் மற்ற தொழில்களான பால்கோவா தயாரிக்கும் இயந்திரம், வாசனைப்பொருட்கள் பதப்படுத்தும் அமைப்பு, மற்றும் மிக்ஸ்சர்; தயாரிக்கும் அமைப்பு ஆகியவை அனைத்தும் நிலையாக வருமானம் கிடைக்கும், அதிக தொழில் செய்யும் தேர்வு வாய்ப்புகளை உருவாக்குகிறது. (கே.வி.கே ராஜ்கோட் ஐ). பழங்கள் மற்றும் காய்கறிகள் கிராம தொழில்முனைவோரின் கற்பனைக்கு ஏற்ப நோயற்ற எலுமிச்சை நாற்றங்காலை உருவாக்குதல், மற்றும் பல கே.வி.கே க்களின் வழிகாட்டுதலில் மாம்பழங்களை மதிப்பு கூட்டுதல் ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது. மற்றொரு தொழிலான மீன் விதை வளர்ப்பு கே.வி.கே ஆனந்த் உதவிப்புரிகிறது.
பல்வேறு தொழில்களுக்கு உதவிப்புரிந்தாலும், கே.வி.கே வின் வருடாந்திர செயல் திட்டத்தை வழங்கி அவற்றை துல்லியமாக ஆய்வு செய்யப்படுகிறது. செயல் திட்டம் மற்றும் ஆய்விற்கான ஸோனல் மற்றும் தேசிய அளவில் பல்வேறு கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுருக்கமாக, சிறியத் தொழில்களை இளைஞர்களின் ஈடுபாட்டுடன் ஆரம்பிக்கும் முயற்சியின் அந்த தருணம், மிக வெற்றிகரமாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.
பெட்டி 1
வெற்றிக்கதை 1: மண்புழு உரம் உற்பத்தி
மண்புழுஉரம், சத்துக்கள் நிறைந்த, இயற்கை உரம் மற்றும் மண் பாங்குபடுத்தும் பொருள். மண்புழு உரம் மிக மெல்லிய அமைப்பைக்கொண்டு, ஓரே சீரில், நிலையாக மற்றும் ஒன்றுசேர்ந்த மண் கட்டிகளான அங்கக பொருட்களோடு சிறந்த இடைவெளி, காற்றோட்டம், மற்றும் தண்ணீர் படிப்புத் தன்மை கொண்டவையாகும். மண்புழுஉர தயாரிப்பு ஏற்கனவே உலகம் முழுவதும், பண்ணையிலேயே இருக்கும் இயற்கை கழிவுகளை, மனிதக்கழிவுகள், தொழுவ கழிவுகள், சமயலறை கழிவுகள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.
இதனை தொழிலாக செயல்படுத்த, கே.வி.கே, சோலாபூர் – 1, மஹாராஷ்டிராவில் 25 கிராம இளைஞர்களுக்கு மண்புழு உர உற்பத்தியை சிறப்பு தலைப்பாக வைத்து பயிற்சியளிக்கப்பட்டது. இவர்களில் 21 பேர் 2019-20 ஆம் ஆண்டில் தங்களின் தொழிலை தொடங்கிவிட்டனர். மீதமுள்ள 4 பேர் இந்தத் தொழிலை பொியளவில் அதாவது வருடத்திற்கு 50 முதல் 80 டன் உற்பத்தித் திறன் கொண்ட அமைப்பை உருவாக்கினர்.பிற இளைஞர்கள் வருடத்திற்கு 4 முதல் 5 டன் உற்பத்தித் திறன் கொண்ட சிறிய அமைப்பை பெற்றுள்ளனர்.
பொிய உற்பத்தி அமைப்பிலிருந்து, வருடத்திற்கு ரூ. 5.60 லட்சம் மதிப்புள்ள சராசாியாக 70 டன் மண்புழு உரத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. சிறிய உற்பத்தி அமைப்பிலிருந்து வருடத்திற்கு ரூ.40,000 மதிப்புள்ள 5 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம், ஒரு இளைஞர் வருடத்திற்கு பொிய திடலிலிருந்து ரூ.5 முதல் 5.5 லட்சமும், சிறிய திடலிலிருந்து ரூ.40,000 மும் வருமானம் ஈட்டுகின்றனர்.
மண்புழு உற்பத்தியிலிருந்து ஈட்டுவதைத் தாண்டி மூன்று இளைஞர்கள் இதர உபபொருட்களான மண்புழு உரம் மற்றும் மண்புழு திரவம் அகியவற்றிலிருந்தும் வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம், மூன்று இளைஞர்கள், வருடத்திற்கு ரூ.0.80 முதல் ரூ.1.2 லட்சம் ஈட்டுகின்றனர். பொருட்களை கோலாபூர் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மண்புழு உரத்தை தங்களின் வயல்களுக்கே பயன்படத்துகின்றனர், இதனால் இரசாயன உரத்தின் செலவு குறையும் அதே சமயத்தில் பொருட்களின் தரமும் அதிகாிக்கிறது. சில இளைஞர்கள் சொந்தமாக பொட்டலம் போடும் கருவியும் கூடுதலாக பெற்றனர். சுமார் 39 கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஒரு தொழில் கலனில் ஒரு வருடத்தில், ஒரு நபருக்கு சராசாியாக 75 நாட்கள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
அட்டவணை 1 : அடையாளம் காணப்பட்ட தொழில்கள் மற்றும் செயல்படுத்தும் கே.வி.கே. க்கள்
தொழில்களின் பெயர் | செயல்படுத்திய கே.வி.கே |
| பழங்கள் மற்றும் காய்கறிகளின் நாற்றங்கால் வளர்ப்பு | வாஷிம், பூனே II, ஒஸமனாபாத், நாக்பூர், பாவ்நகர், நவ்சாரி |
| பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல் | வாஷிம், பூனே II, ஒஸமனாபாத், நாக்பூர், பாவ்நகர், கேதா, நவ்சாரி |
இயற்கை உர உற்பத்தி | சோலாபூர்-I, பூனே II, ஒஸ்மனாபாத், பாவ்நகர் |
ஆடு வளர்ப்பு | சோலாபூர்-I, பூனே II, ஒஸ்மனாபாத், |
| வீட்டிற்கு தேவையான பருப்புகள்/தானியங்கள் பதப்படுத்தும் கலன் அமைத்தல் | கேதா |
| மீன் விதை வளர்ப்பு | வாஷிம்,ஆனந்த் |
| கொண்டை கடலை விதை உற்பத்தி | சோலாபூர் |
| கொள்ளைபுர கோழி வளர்ப்பு | வாஷிம், |
| சிறிய எண்ணெய் செக்கு கலன் | ராஜ்கோட் I |
| பால்கோவா உற்பத்தி கலன் | ராஜ்கோட் I |
| வாசனைப்பொருட்கள் உற்பத்திக் கலன் | ராஜ்கோட் I |
| மிக்சர் உற்பத்திக் கலன் | ராஜ்கோட் I |
வெற்றிக்கதை 2: பால்கோவா தயாரிக்கும் தொழில்
ஜஸ்தான் தாலுக்கா, அம்பர்தி கிராமத்தை சேர்ந்த 8 கிராம இளைஞர்களின் குழுக்கள் ஆர்யா திட்டம் மூலம் பயன்பெற்றனர். குஜராத்தில் உள்ள ராஜ்கோட் -1 கே.வி.கே செயல்படுத்தியது. பால பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் விற்பனை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு, தொழில்நுட்ப பயிற்சி திட்டங்கள் மற்றும் கல்வி சுற்றுலா ஏற்பாடுசெய்தனர்.
பால்கோவா செய்யும் கருவி அமைக்கப்பட்டு உயர்தர பால்கோவா மற்றும் பால் அடிப்படையிலான பெண்டா என்று சொல்லப்படும் இனிப்பு தயாரிக்கப்படுகிறது. வேளாண்மையோடு கால்நடையும் இணைத்து, அவற்றிலிருந்து அதிக வருமானம் பெறுவதே இதன் நோக்கம். எட்டு பயிற்சி பெற்ற கிராம
இளைஞர்களுக்கு ரூ.63,000 மதிப்புள்ள பால்கோவா தயாரிக்கும் கருவி வழங்கப்பட்டது.
பால்கோவா தயாரிக்கும் கருவி 2017 ஆம் ஆண்டு அம்பர்தி கிராமத்தில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சராசாியாக 1800 லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. தோராயமாக,ஒரு மாதத்திற்கு 360கிலோ பால்கோவா தயாரித்து, அதிலிருந்து 110 கிலோ பால்கோவாவை பெண்டா (இனிப்பு) மற்றும் மீதமுள்ள 250 கிலோ பால்கோவா நுகர்வோருக்கு நேரடியாக விற்கப்படுகிறது.
இந்த தொழிலிலிருந்து பால்கோவா மற்றும் பெண்டா (இனிப்பு) விற்பதன் வாயிலாக இந்தக்குழு ரூ.43,500 நிகர இலாபம் பெற்றது. இந்தத் தொழில் வருடம் முழுவதும் செயல்படுகிறது, மேலும் ஒரு வருடத்தில் 5 இளைஞர்களுக்கு 300 நாட்கள் வேலை கிடைக்கிறது. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வருடத்திற்கு ரூ.50,625 வருமானம் கிடைக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. குழு உறுப்பினர்கள் பெண்டா (இனிப்பு) வை ஆர்யா என்ற பிராண்ட் பெயாில் அருகேயுள்ள கிராமங்களுக்கும், ஜஸ்தான் நகரத்திலும் விற்கின்றனர். மேலும், பெண்டா (இனிப்பு) அருகேயுள்ள கிராமத்தில் இருக்கும் கேளா சோம்நாத் கோயிலுக்கு பிரசாதமாக விற்கப்படுகிறது.
சுமார் 92 விவாயிகள்/இளைஞர் தொழில அமைப்பை காண வருகின்றனர். மேலும் இது கூடுதலாக இரண்டு கிராமங்களுக்கு பரவியுள்ளது.
This article is adapted from the original publication: ATARI-Pune (2020) ARYA: Micro Enterprises for Sustainable Income in Rural Areas. E-Publication by ICAR-ATARI, Pune, pp. 1-35 and their website
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2024, வால்யூம் 26, இதழ் 2



