10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு – உயிர்ஆதார மேம்பாட்டின் நிலைத்த வடிவமைப்பின்பணி


நிலைத்த சாகுபடிக்கு மாறும்போது நம்பிக்கையிருக்கும், ஆனால் சவால்களும் கூடுதலாக இருக்கும். காரீப் பருவத்தின்போது கனமழை பொழிந்தால், தண்டு அழுகல் போன்ற பிரச்சனைகள் அதிகாிக்கின்றன. இதனால் சில விவசாயிகள் உடனடியாக இரசாயன இடுபொருள்கள் அதிகாித்து, செலவும் உயர்த்துகிறது. 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு போன்ற முயற்சிகள் விவசாயிகளை கருவிகளுடன் செயல்பட்டு இந்த சவால்களை நிலையாக போக்குகிறது.


மஹாராஷ்டிராவின் ஜால்னா, சோலாபூர், தாராஷிவ் மாவட்டங்களில், நீர்ப்பிடிப்பு நிறுவன அறக்கட்டளை (WOTR), நிலைத்தத்தன்மை மற்றும் சீதோஷண தாங்குதிறன் செயல்பாடுகளில் சிறந்து வளங்குகிறது. புதிய கண்டுபிடிப்பின் தொழில்நுட்பங்கள் மற்றும் சமூகம் வழிநடத்தும் அணுகுமுறைகளின் மூலம், டிபிள்யு.ஓ.டி.ஆர், பயிர் உற்பத்தி விரிவாக்கம், சாகுபடி செலவுகளை குறைப்பது, மற்றும் உயிர்சூழல் உகந்த சாகுபடி முறைகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். முக்கிய முயற்சிகளில் ஒன்றான 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு செயல்படுத்துவது ஆகும். உள்ளூர் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கு உயிர் ஆதாரங்களின் மேலாண்மைக்கான ஒரு நிலைத்த வடிவமைப்பின் பணி.

10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு என்பது 10 வித்தியாசமான திரவங்களை நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மினரல்கள், மற்றும் சத்துக்கள், ஒன்றுகலந்து, தௌிக்கும்போது, பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை செய்து பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மண்ணின் இயற்கை கணிமத்தை அதிகாிக்கிறது, புரதம், லிப்பிட்கள் மற்றும் தாவரத்தின் இரண்டாம்நிலை வளர்சிதை மாற்றங்களின் உற்பத்தி விரிவடைகிறது. இதில் முதல் ஐந்து திரவங்கள், ஈ.எம் 2, டி.எப் 1, ஹியுமிக் அமிலம், பல்விக் அமிலம், குப்பைகளின் நொதிக்கலன், மற்றும் ஏழு தானிய திரவக்கழிவு சொட்டுநீர் பாசனம் மூலம் வேர்ப்பகுதியில் தௌிக்கலாம். கடைசி ஐந்து திரவங்களான ஈ.எம். தாஷ்பார்னி அர்க், ஈ.எம். அமில் அர்க், ஈ.எம். வெமில் அர்க், ஈ.எம். தேசி கெல்ப், மற்றும் ஈ.எம். பழ அர்க் ஆகியவை இலைப்பகுதியில் தௌிப்பான் மூலம் தௌிக்கப்படுகிறது. இது பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கும், தாவர வளர்ச்சிக்கும் உதவுகிறது.

எச்சங்கள் இல்லாத சாகுபடியை ஊக்குவிப்பது.
வால்மார்ட் நறுவனத்தின் நிதியுதவியுடன், ப்ரோ-ரைஸ் திட்டத்தின் கீழ், டபிள்யு.ஓ.டி.ஆர் உள்ளூர் விவசாய சமூகங்களுக்கு இரசாயனங்கள் எச்சங்கள் இல்லாத சாகுபடி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாட்டின் அடிப்படையில் 11 விவசாய உற்பத்தி நிறுவனங்களில், 16 கலன்கள் உருவாக்குவதற்கு வழிநடத்தியுள்ளது. இந்தக் கலன்கள் அடிப்படை வேளாண் இடுபொருட்களான உயிர்ஊக்கிகள், உயிர்உரங்கள், இயற்கை திரவங்கள், மற்றும் உயிர்ப்பூச்சிகொல்லிகளை உற்பத்தி செய்கிறது.

இந்த 10 ட்ரம் இடுபொருட்களின் பயன்பாடு, உள்ளூரில், முக்கியமாக குறைந்த விலையில், அதிகத் தரம் வாய்ந்த வேளாண் ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த முறையை பின்பற்றிய விவசாயிகள், குறைந்த சாகுபடி செலவு, விரிவடைந்த பயிர் மகசூல், மற்றும் சீதோஷன மாற்றத்திற்கான சிறந்த தாங்குதிறன் உருவாவதை வெளிப்படுத்தியுள்ளனர். கூடுதலாக திட்டம் மூலம் பெண்கள் சுயஉதவி குழுக்களின் திறன் வளர்த்து, இந்தக் கலன்களை மேம்படுத்தி மேலாண்மை செய்து நிலைத்த வாழ்வாதார மாதிரியை உருவாக்குகிறது.

பெண்கள் சுய உதவிக்குழு 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாட்டின் வெற்றிக்கு முக்கிய பங்களிக்கின்றன.துவக்கத்தில் இந்த பெண்கள் துவக்கத்தில், பல்வேறு இடுபொருட்களை தயாரிப்பது குறித்த விரிவான பயிற்சியை பெற்றனர். இன்று, இவர்கள் இடுபொருட்களை மட்டும் தயாரிக்காமல், விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மூலம் இவற்றை விற்கவும் செய்கிறார்கள்.இது இவர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிப்பதில் பெரும் பங்களிக்கிறது. ஒரு 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடை அமைப்பதற்கு ஆகும் செலவு சராசாியாக ரூ.2 இலட்சம். ஆறு மாதங்களில், 16 கலன்களில் மொத்தமாக ரூ. 16 இலட்ச வருமானம் பெற்றுள்ளது. இது, இந்த முயற்சியின் பொருளாதார திறன் குறித்து விளக்குகிறது.

முடிவுகள்
10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு வெறும் வேளாண் வடிவமைப்புபணி இல்லை. இது நிலைத்த வளர்ச்சி மற்றும் சமூக திறன்களுக்கான மாதிரி. இடுபொருள் செலவுகளை குறைத்தல், மண் ஆரோக்கியத்தை விரிவுபடுத்துதல், மற்றும் உயிர்ச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துதல், தொடர் உதவியால் மற்றும் இந்த முயற்சியை பரவலாக்கம் செய்ததால், விவசாயிகள் நீண்ட காலம் நிலைத்தத்தன்மையையும், பொருளாதார நிலைத்தன்மை அடைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.

பெட்டி செய்தி
ரவீந்திரா போன்ற விவசாயிகள், இரசாயன எச்சங்கள் இல்லாத சாகுபடியின் நன்மைகளை துவக்கத்தில் சந்தேகித்தவர், இப்பொழுது அதன் பயன்களை அனுபவிக்கிறார். வழக்கமாக 10 ட்ரம் அமைப்பின் கலனில் தயாரிக்கும் இடுபொருள்கள் பயன்படுத்துவதால், மண் ஆரோக்கியத்தை உயர்த்தியும், இஞ்சி போன்ற பயிர்களுக்கு இயற்கை எதிர்ப்புத்தன்மையை வளர்க்கிறது. கன மழை போன்ற சவால்கள் இருப்பினும், காரீப் பருவத்தின்போது தண்டு அழுகல் ஏற்படும் நிலையிலும், விவசாயிகள் இரசாயன இடுபொருட்கள் சார்ந்திருப்பதை குறிப்பிட்ட அளவு குறைத்துள்ளனர்.

உதாரணத்திற்கு, ரவீந்திரா சென்ற வருடம், ரூ.60000 – 65000 இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு செலவிட்டார்.இந்த வருடம் 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கலனின் கீழ், மொத்த இடுபொருட்கள் செலவு ரூ.30000 குறைந்துள்ளது, எதிர்ப்பார்க்கப்பட்ட தண்ணீர் உரங்களுக்கான கூடுதல் செலவு ரூ.10000 பின் வளர்ச்சி நிலைக்கும் திட்டமிடப்பட்டது. இந்த தொகை தோராயமாக சேமிப்பாக கணக்கிட்டால் ரூ20,000 எச்சங்கள் இல்லாத சாகுபடியின் பொருளாதார பயனாக அடிகோடிட்டு காட்டுகிறது.

பிரித்விராஜ் கைக்வாத், சச்சின் கரத்கர், பிரவீன் இகுன்டி மற்றும் சந்தீப் வாக்மர்


Prithviraj Gaikwad
Sr. Agri. Officer, WOTR
E-mail: prithviraj.gaikwad@wotr.org.in

Sachin Karadkar
Agri. Extension Officer, WOTR
E-mail: sachin.karadkar@wotr.org.in

Pravin Ekunde
Agri. Officer, WOTR
E-mail: pravin.ekunde@wotr.org.in

Sandip Waghmare
Agri. Field Officer, WOTR
E-mail: sandip.waghmare@wotr.org.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2024, வால்யூம் 26, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...