க்ரிஷி க்யான் வாஹன் திட்டத்தின் முயற்சி மாநிலத்தின் விரிவாக்க சேவைகளை குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. இது பிகாரின் வேளாண் உற்பத்தியை உயர்த்தும் திறன் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு, நேரடியாக நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வல்லுநர்கள் வழிநடத்துதல் போன்ற வசதிகளை கிடைக்க செய்வதால், இது அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
க்ரிஷி க்யான் வாஹன் (விவசாயிகள் அறிவு வாகனம்) திட்ட முயற்சி பிஹார், இந்தியாவில் துவக்கப்பட்டது. தொலைதூரப் பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவு குறைந்த நிலையில் அந்த சவாலை சந்திக்க உருவாக்கியதே இந்தத் திட்டம். இந்த முயற்சி வல்லுநர்களின் அறிவுரை மற்றும் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் வழங்கி அவர்களின் அறிவு இடைவெளியை நிரப்புவதே இதன் நோக்கமாகும். நகரும் வாகனத்தோடு கல்வி உபகரணங்கள் (பல்கலை கழகங்கள் உருவாக்கிய வேளாண் தொழில்நுட்பங்களை பலஊடக டிஜிட்டல் திரையில் வெளியிடப்படுகிறது) பயன்படுத்தி தடைகளை சந்தித்து இந்தத் திட்டத்தை கொண்டு செல்ல முடிகிறது. மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கும், பல்கலைகழகத்தில் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் பயன்பெற முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நோக்கங்கள்
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
பல்கலைகழகங்களிலிருந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சமீபகால சாகுபடி தகவல்கள் விவசாயிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
மண் பாிசோதனை சேவைகள், பயிர் நோய் கண்டறிதல், கால்நடை வளர்ப்பு சம்மந்தமான பிரச்சனைகள் இன்னும் பல வேளாண் தொழில்நுட்பங்களை உயர்த்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கலாம்.
பல்வேறு மாவட்டங்களில், குறிப்பட்ட பகுதிகளில் நன்றாக செயல்படும் சாகுபடி தொழில்நுட்பங்களின் வழிப்புணர்வை அதிகாிக்க வேண்டும்.
க்ரிஷி கியான் வாஹன்
க்ரிஷி கியான் வாஹன் திட்டம் குறித்த பல சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. க்ரிஷி கியான் வாஹனில் பல்வேறு கருவிகள் மற்றும் பொருட்கள் வேளாண் விரிவாக்க செயல்பாடுகளுக்கு உதவியளிக்கும் அமைப்பை பெற்றுள்ளது. சத்துக்கள் குறைபாட்டை அறிய பாிசோதனை கிட்டுகள் மற்றும் இரசாயன உரத் திட்டங்கள், பூச்சி மற்றும் பயிர் நோய் கண்டறிதல், விதை தரம் ஆய்வு மற்றும் மண் பாிசோதனை ஆகியவற்றை செய்வதற்கு டிஜிட்டல் முப்பாிமாண நுண்ணோக்கி இதில் உள்ளது. ஆராய்ச்சி பாிசோதனைகள், நோய் கண்டிறிதல், விதை உற்பத்தி, இரசாயனங்கள் மற்றும் வேளாண்மை கட்டுபாட்டிற்கான ஆய்வு செய்வதற்கு டிஜிட்டல் கூட்டு நுண்ணோக்கி உதவுகிறது. குளிர் சாதன பெட்டி பல்வேறு பொருட்களை சேமித்து மற்றும் பாதுகாத்து வைப்பதற்கு உதவுகிறது. உயிரியல் ஆக்ஸிஜன் தேவைக்கான (BOD) இன்குபேட்டர் உயிர்நுண்ணுயிரின் ஆய்வுகள் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் குறித்த உதவிகள் பெற முடிகிறது. பொருட்களின் துள்ளிய அளவை உறுதிபடுத்த மின்னணு தராசை பயன்படுத்துவது. பொது அறிவிப்புகள் செயல்படுத்த ஒயர்கள் இல்லாத மைக் மற்றும் ஆம்ப்ளிபயரோடு ஒளிபெருக்கி கொண்ட அமைப்பும் உள்ளது. கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் செயற்கை கருவூட்டல் செயல்முறைகளுக்கு பயன்படுத்தப்படும் மடிக்கக்கூடிய டிராவிஸ், மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கையும்,அனீமியா மற்றும் தொற்றுகளை கண்டறியும் ஹிமேட்டோ-அனலைசார் கருவி உண்மை நிலை கண்காணிக்கும் மற்றும் தீவிரமாக பாதுகாப்பதற்கு உதவிபுரியும் பல-காரணி கண்காணிப்பு கருவி. வலைத்தள இணைப்பு மற்றும் கணினி, விவசாயிகளுக்கு, அடிப்படைத் தகவல்கள் மற்றும் கலந்துரையாடக்கூடிய ஆதாரங்கள் வழங்குகிறது.
நடைமுறைகள்:
பிஹார் மாநிலத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது: பிஹார் வேளாண்மை பல்கலைகழகம், சேபர் ,பிஹார் கால்நடை பல்கலைகழகம், பாட்னா, டாக்டர்.ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண்மை பல்கலைகழகம், பூசா, சமஸ்திபூர், மற்றும் பிஹார் வேளாண்மை மேம்பாடு மற்றும் விரிவாக்க பயிற்சி மையம், பாட்னா ஆகிய நான்கு இடங்களுக்கும் தலா ஒரு வாகனம் அளிக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள விவசாய பயிற்சி மையத்தோடு இணைந்து முன்கூட்டியே திட்டமிட்டபடி அந்த மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படும் . பல்லூடகங்கள் காணொளி திரையில் போடப்படும். யு டியூப் சானலில் (www.youtube.com/bausabour) உள்ள ஹிந்தி தொழிலிருக்கும் 200 காணொளிகளிலிருந்து இவை திரையிடப்படுகிறது. விரிவான தகவல்கள் வழங்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியோடு இவற்றை உருவாக்கி ஆர்வமிக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு வாரம் முன்பு க்ரிஷி க்யான் வாஹன் கிராமத்திற்கு வந்து, இளம் பணியாளர்கள் மற்றும் இதர வல்லுனர்கள் அடிப்படைத் தகவல்களை சேகாித்து விவசாயிகளின் தேவைகளை அரிந்துகொள்கின்றனர். இந்தத் தகவல்கள் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள விவசாய பயிற்சி மையத்திலிருந்து இரண்டு வல்லுனர்கள், விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். குறைந்தது நான்கு வல்லுனர்கள் வாகனத்தில் இருப்பர், கே.வி.கே விலிருந்து இரண்டு வல்லுனர்கள், ஆத்மாவிலிருந்து ஒரு வேளாண் தொழில்நுட்ப மேலாளர் அல்லது வட்ட தொழில்நுட்ப மேலாளர், இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற ஒரு இளம் பணியாளர். ஆகையால் கிஷான் க்யான் வாஹனும் பலவகை மற்றும் பகுதி அடிப்படையில் சந்திக்கும் வேளாண் சவால்களுக்கு மாறுதலுக்குட்பட்ட அறிவுரையையும், தீர்வையும் சாகுபடிக்கு உகந்த தனித்துவமான தேவைகளுக்கேற்ப வழங்கப்படுகிறது.
அடிப்படை அனுபவம் – கே.வி.கே மஞ்காின் ஒரு வெற்றிக்கதை
மே 2023 ஆம் ஆண்டின்போது, விரிவாக்க கல்வித் துறை, பிஹார் வேளாண் பல்கலைகழகம், சேபர், க்ரிஷி கியான் வாஹன் திட்டத்தின் பயணத்தை கே.வி.கே , மஞ்சாில் 20 மே 2024 ல், ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு வட்டங்கள் மற்றும் கிராமங்களை முடிவு செய்து கவனமாக பயணத்திட்டத்தை தயார் செய்யப்பட்டது. தேதியாபம்பர் (20 மே), சங்ரம்பூர் (21 மே), தாராபூர் மற்றும் அசா;கஞ் (22 மே), பாியார்பூர் (23 மே), சதார் (24 மே), மற்றும் ஜமால்பூர் மற்றும் தஹாரார் (25 மே) ஆகிய இடங்களுக்கு திட்டமிடப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை கே.வி.கே விலிருந்து இரண்டு பருவ வல்லுனர்கள் டாக்டர். பி.டி. சிங், விரிவாக்க கல்வியில் துறைசார் நிபுணர் மற்றும் டாக்டர்.சுஜாதா குமாரி, வீட்டு அறிவியல் துறைசார் நிபுணர்,ஆகிய நிபுணர்கள் தலைமையில் எடுக்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகள் விவசாயிகளோடு நேரடியாக தலையிட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவது, மேலும் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துகன்றனர். இந்த இரண்டு விஞ்ஞானிகளைத் தாண்டி, மாநில வேளாண் துறையிலிருந்து விரிவாக்க செயல்பாட்டாளர்களும் இருப்பர்.
லக்கன்பூர் கிராமத்தின், க்ரிஷி க்யான் வாஹன் அனுபவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 22 ஆம் நாள், க்ரிஷி க்யான் வாஹன் தாராப்பூர் வட்டம், லக்கன்பூர் கிராமத்தை அடைந்தது. வாகனம் ச்சௌபால் கிராமத்தில் உள்ள பொிய அரச மரம் அமைந்திருக்கும் மக்கள் கூட்டம் கூடும் இடமாக மத்தியில் உள்ளது. இந்த செய்தி வேகமாக பரவி, க்ரிஷி க்யான் வாஹனத்திற்கு அருகில் நிறைய விவசாயிகள் கூடினர். சுமார் 84 விவசாயிகள் க்ரிஷி க்யான் வாஹனை காண வந்து ச்சௌாபாலில் கூட்டத்தில் பங்கேற்றனர். வாகனத்தின் உள்ளே பொிய திரை வைக்கப்பட்டிருந்தது. இதில், உற்பத்தி மற்றும் இலாபம் விரிவடையக் கூடிய ஒருங்கிணைந்த சாகுபடி முறை – பயிர் உற்பத்தி, கால்நடை மேலாண்மை மற்றும் இதர சாகுபடி செயல்பாடுகள் அடங்கும் நிலைத்த வேளாண்மைக்கான முழமையான அனுகுமுறை வீடியோ பகிரப்பட்டது.விவசாயிகள் கவனத்துடன் கண்டனர்,இதில் பலர் இந்தத் தொழில்நுட்பத்தையும், தகவல்களையும் முதல் முறையாக காண்கின்றனர். இவ்வாறு காணொளி மூலம் காணும்போது கடினமான கருத்துக்கள் கிடைக்கவும், தங்களுடைய வயல்களில் ஒருங்கிணைந்த சாகுபடி முறை குறித்த செயல்பாட்டு தௌிவுகள் பெற்றிருப்பது வெளிப்படையாக தொிகிறது. செயல் விளக்கத்தின் திறன் மற்றும் சுலபத்தன்மை கண்டு விவசாயிகள் குறிப்பாக ஆச்சாியமடைந்தனர்.இவை கிடைக்கும் ஆதாரங்களை பெருமளவு வடிவமைக்கப்பட்ட அதே சமயத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறையும்.
காணொளி முடிந்தவும், டாக்டர். பி.டி.சிங் கூடியிருந்த மக்கள் முன் நின்று, அவர்கள் புரிந்துகொள்ளும், மற்றும் எல்லாரையும் இணைக்கும் மொழியில் உரையாடுவார். அவர் ஒருங்கிணைந்த சாகுபடி முறை மாதிரியை அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் அடிப்படையில் எப்படி செயல்படுத்தலாம் என்பதை விளக்குகிறார். மேலும் பயிர்த் தேர்வு, கால்நடைகளை ஒருங்கிணைத்தல், மற்றும் ஆதாரங்கள் மேலாண்மை குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இவருடைய விளக்கங்கள், டாக்டர்.சுஜாதா குமாரியும் கூடுதலாக, வீட்டு அறிவியல் ரீதியிலான சுத்தம் சார்ந்த பிரச்சனைகள், பண்ணை சாகுபடி முறையில் உள்ள கடினத்தை எவ்வாறு சந்திப்பது குறித்து விளக்கி, மதிப்பு கூட்டினார். ஒருங்கிணைந்த சாகுபடி முறையின் அச்சிடப்பட்ட கோப்புகளை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கேள்வி பதிலோடு முடிவடையவில்லை. விவசாயிகளை, அவர்களின் அனுபவங்கள் மற்றும் சவால்கள் பகிர்வதற்கு ஊக்கப்படுத்தி இரு விழி உரையாடல்களை விரிவுபடுத்தியது.இவ்விரு விஞ்ஞானிகள் விவசாயிகளின் கருத்துகளை ஆவணப்படுத்தி, கேவிகேவின் எதிர்கால தலையீடுகளில் மிக முக்கிய கருத்துகளில் மையப்படுத்தி திறமையாக செயல்படுவதற்கு உறுதிப்படுத்துகிறது.
சூரியன் அடிவானத்தை அடையும்போது, க்ரிஷி க்யான் வாஹன் அடுத்த பகுதிக்கு செல்லத் தயாராகிறது. லக்கன்பூர் கிராம விவசாயிகள் மிகுந்த அச்சாியத்துடன் ச்சொளபாலிலிருந்து சென்றனர். மேலும் அவர்கள் கற்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் முடிவுடன் சென்றனர். விஞ்ஞானிகள் மற்றும் கேவிகேவின் கைபேசி எண்களை கேட்டு எடுத்துகொண்டதிலிருந்து இவர்களின் ஆர்வம் உறுதிப்படுத்துகிறது.
சவால்கள்
க்ரிஷி க்யான் வாஹன் முயற்சி பல்வேறு முக்கிய சவால்களை சந்தித்தனர். மோசமான சாலைகளால், தொலைதூர கிராமங்களை அடைவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால், தேவையான நேரத்தில் சேவையை அளிப்பது, முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். கூடுதலாக பல்வகை வேளாண் செயல்பாடுகளை பல்வேறு பகுதியில் செயல்படுத்த பொதுவான அனுகுமுறை கடினமாக இருக்கிறது, ஏனென்றால் இதற்கு அதிக உள்ளூர் மற்றும் உகந்த தீர்வுகள் தேவைப்படுகிறது. மொழி மற்றும் கல்வியில் ஏற்றத்தாழ்வுகள், விவசாயிகள் மத்தியில் தொடர்புகளில் தடைகள் உருவாகிறது. இது நவீன வேளாண் அறிவை கொண்டு செல்ல மிக கடினமாக இருக்கிறது.
பல்வேறு வேளாண்மை செயல்பாடுகளில் உள்ள சவால்களை மாற்றம் செய்யக்கூடிய பிரிவுநிலை அனுகுமுறையில் அறிவு பகிரப்பட்டு, தீர்வுக் காணப்படுகிறது. ஒரு அளவு எல்லா தீர்வுகளுக்கும் பெருந்துகிறது என்பதற்கு பதிலாக, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதன் இயல்பிற்கு உகந்த முயற்சியை வடிவமைக்கப்படுகிறது. இதை செய்வதற்கு, பகுதிக்கு உகந்த உள்ளடக்க நூலகங்கள் உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது. குறிப்பட்ட பயிர்களின் வளர்ச்சி, உள்ளூர் சீதோஷண காரணங்கள், மற்றும் புழக்கத்தில் இருக்கும் சாகுபடி தொழில்நுட்பங்கள் போன்றவற்றை குறித்து பல்வேறு பகுதிகளில் தனித்துவமான நிலைகள் மற்றும் தேவைகளுக்கு உகந்த ஆதாரங்கள் வடிவமைத்து இந்த நூலகங்களில் மேம்படுத்தப்படுகிறது. வல்லுனர் குழுக்கள் இருக்கும் ஆதாரங்களை பயன்படுத்தி அவர்கள் கற்றுகொடுக்கும் பாடங்களை வடிவமைக்கப்படுகிறது. அதன்மூலம் உகந்த தகவல்களை வழங்கியதால் அவை உள்ளூர் விவசாயிகளிடம் எதிரொலிக்கிறது.
இந்த பயன்பாட்டுத்தன்மையானது, பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு உகந்த தவல்களை வழங்குவதும், உடனடியாக செயல்படுத்துவதும் உறுதிப்படுத்துகிறது. மொழி பிரச்சனைகள் மற்றும் பலவகை கல்விநிலைகளை, சந்திக்க பல்முனை தொடர்பு அனுகுமுறைகளை இந்தத் திட்டத்தில் பயன்படுத்தி உள்ளூர் வேளாண் வல்லுனா;களின் (ஆத்மா திட்டத்தின் கீழ், வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள், வட்ட தொழில் தொழில்நுட்ப மேலாளர்கள்) உதவியுடன் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பேச்சுவழக்கில் தொடர்பு கொள்ள முடிகிறது.
பயன் மற்றும் தாக்கம்
பிஹார் வேளாண் பல்கலைக்கழகத்தின், க்ரிஷி க்யான் வாஹன், சேபர், 12 மாவட்டத்தில் உள்ள 52 வட்டங்களில் 87 பகுதிகளில் பயணம் செய்து, மே முதல் ஆகஸ்ட் 2024 வரை வெளிப்பகுதியை அடையும் முயற்சியில், 6,712 விவசாயிகளுக்கு மேல் ஈடுபடுத்தப்பட்டனர்.
க்ரிஷி க்யான் வாஹன் முயற்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மாநிலம் முழுவதும் விரிவாக்க சேவைகள் கிடைக்கச்செய்து, பிஹாரின் வேளாண் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கிறது. விவசாயிகளுக்கு நேரடியாக நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் மற்றும் வல்லுனர்களின் வழிகாட்டுதல் வழங்குவதால், இது அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குகிறது. எனினும், வெறும் நான்கு வாகனங்களைக் கொண்டு, இம்மாதிரியான உயா;ந்த நோக்கங்களின் சவால்களை அடைந்தனர்.
நிலைத்தத் தன்மை மற்றும் பரவலாக்கம்
க்ரிஷி க்யான் வாஹன் முயற்சியை நீண்ட கால நிலைத்தத்தன்மை மற்றும் பரவலாக்கம் அடைவதற்கு, தொடர் நிதியுதவியும், அதிக நிறுவனத்தின் உதவியும் மிக முக்கியம். பிஹார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் அறிவித்த, அரசு அமைப்புகள், வேளாண்மை நிலையங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் தேவையின் அடிப்படையில், பிஹாில் உள்ள 38 மாவட்டத்திற்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு நகரும் வேளாண் வாகனங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் மற்றும் மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து பணியாற்றி நிதி பெறுவதற்கும், உதவும் கொள்கைகளை உருவாக்க உதவுகிறது. பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களோடு பங்குதாரர்களாக இருந்து தேவையான தொழில்நுட்ப அறிவுரைகளை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. சமூக தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இந்த முயற்சியை உள்ளூர் தேவையை சந்தித்து உறுதி செய்கிறது. மேலும் அடித்தள உதவிகளும் சேகாிக்கப்பட்டது. கூடுதலாக, ஆதாரங்கள் குறித்து வல்லுனா;களோடு (தனியார் பங்குதாரர்கள், தொண்டு நிறுவனங்கள்) பகிர்வது மூலம் பொியளவில் தாக்கம் ஏற்படுகிறது, உபாியில்லாமல் குறைகிறது. அதேசமயத்தில் இப்பொழுதுள்ள கருத்துப்பாிமாற்ற முறைகள் திட்டத்தின் உண்மைநிலையை சீர்படுத்துகிறது.
கற்ற பாடங்கள் மற்றும் முடிவு
க்ரிஷி க்யான் வாஹன் முயற்சி குறிப்பிட்டத் தேவைகேற்ப புதிய கண்டுபடிப்புகள் வேளாண் வளர்ச்சியில் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. ஆனால் இந்த மையப்படுத்தப்பட்ட அனுகுமுறையின் சவால்கள் குறித்து சில பாடங்கள் வெளிப்படுத்துகிறது. அதேசமயத்தில் வேளாண் செயல்பாடுகளை நவீனப்படுத்த வல்லுனர்களின் அறிவு மற்றும் ஆதாரங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இந்த முயற்சி உண்மையாக பகுதிக்கு தேவையான, உகந்தவையாக இருக்க வேண்டும், மேலும் உள்ளூர் சமூகங்கள் இடையில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். திறமையாக உற்பத்தியை விரிவடைவதற்கும், கால்நடை வளர்ப்பை உயர்த்துவதற்கும் , விவசாயிகள் மற்றும் உள்ளூர் வல்லுனர்களின் கருத்தை உட்படுத்த வேண்டும். இது திட்டம் புதுமையாக கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், சேவை செய்யப்படும் சமூகங்களின் உண்மைநிலையை ஆழ்ந்து ஆய்வு செய்வதை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக, விவசாயிகளை திறமையானவர்களாக மாற்றுவதும், உணவு உத்திரவாதத்தை உயர்த்துவதும், பிஹாரின் பொருளாதார வளர்ச்சியை பெறுக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எனினும் மாநிலத்தின் வேளாண்மை துறையின் நிலைத்த எதிர்காலத்தை அடைய, பாரம்பாிய அனுமானத்தை தாண்டி அதிக மையப்படுத்தாத மாதிரியை உட்படுத்தியிருக்க வேண்டும்.
அட்டவணை 1 : தனிசிறப்புகள் மற்றும் சேவைகள்
| நல்ல விரிவாக்க செயல்பாடுகள் | விளக்கம் | பயன்கள் |
| நகரும் விரிவாக்க சேவைகள் | க்ரிஷி க்யான் வாஹன் நகரும் விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு, வல்லுனர்களின் அறிவுரையை நேரடியாக கிராமங்களுக்கு கொண்டுவரபடுகிறது. | தொலைதூர பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை நேரடியாக கிடைக்க செய்கிறது. |
| பயிர் சார்ந்த பாிந்துரைகள்
| தானியப் பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் போன்ற குறிப்பட்ட பயிர்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு வடிவமைக்கப்பட்ட அறிவுரைகளை வழங்குதல் | பயிர் மேம்பாட்டை உயா;த்த உதவுகிறது, மேலும் பூச்சி மற்றும் நோய்களினால் வரும் இழப்பை குறைத்தல் |
| மண் பாிசோதனை சேவைகள் | மண் ஆரோக்கியம் மற்றும் சத்துக்களின் தேவை குறித்து அரிய அந்த இடத்திலேயே மண்ணை ஆய்வு செய்வது. | உயர்த்தப்பட்ட மண் ஆரோக்கியம் மற்றும் சிறந்த பயிர் மகசூல் பெற விவசாயிகள் உடனடியாக உர பாிந்துரைகளை பெறுகின்றனர். |
| கால்நடை அரோக்கிய சேவைகள் | நோய்கள் கண்டுபிடிப்பது உட்பட கால்நடை ஆரோக்கியப் பிரச்சனைகளை கண்டுபிடிக்கும் சேவைகள் | ஊடனடியாக கண்டுபிடித்து பாிசோதனை செய்வதன் மூலம் கால்நடை இழப்புகள் குறைகிறது மற்றும் பண்ணை உற்பத்தியை உயா;த்துகிறது. |
| நவீன தொழில்நுட்பங்களை செயல் விளக்கம் செய்வது | LED திரை மூலம் நவீன சாகுபடி முறைகளை வீடியோக்கள் போட்டு விவசாயிகளுக்கு காண்பிக்கப்படுகிறது. | விவசாயிகள் சுலபமாக புரிந்துகொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றவும், உற்பத்தி அதிகாிக்கவும் உதவுகிறது.
|
| வேளாண் இடுபொருட்களை வினியோகிக்கப்படுகிறது | விதைகள், இயற்கை உரங்கள், உயிர்உரங்கள், மற்றும் இதர பொருட்கள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது | தேவையான இடுபொருட்கள் விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க வழிவகுக்கிறது, இது உயர்த்தப்பட்ட செயல்பாடுகளை உடனடியாக பின்பற்ற உதவுகிறது |
| இருவழி உடையாடல்கள் மற்றும் கருத்துகள் | விரிவாக்க வல்லுனர்களோடு விவசாயிகள் கேள்விகளை கேட்கவும், அவர்களின் அனுபவங்களை பகிர்வதற்கு ஊக்கப்படுத்துகிறது | விவசாயிகளின் தனித்துவமான தேவைகளுக்கும், அதற்கு சம்மந்தமான அறிவுரைகளை வழங்கி, பொறுப்புள்ள விரிவாக்க சேவையாக உருவாகியுள்ளது |
| உயா;தரமான ஆய்வு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது | நுண்ணோக்கி மற்றும் ஆய்வுக் கருவிகள் போன்ற உயர்தரமான கருவிகள், பயிர் மற்றும் கால்நடை பிரச்சனைகளை கண்டுபிடிப்பது | துல்லியமாக மற்றும் விரைவாக கண்டுபடித்து நோய் மேலாண்மையை சிறப்பாக பின்பற்றி, பண்ணை வெளிப்பாடுகளை உயா;த்துகிறது. |
ஆதித்யா சின்ஹா, டி.ஆர்.சிங் மற்றும் ஆர்.கே சோஹானே
Aditya Sinha Assistant Professor, Department of Extension Education Bihar Agricultural University, Sabour, Bihar E-mail: inc.aditya@gmail.com D.R. Singh Vice Chancellor, Bihar Agricultural University, Sabour, Bihar R.K. Sohane Director Extension Education Bihar Agricultural University, Sabour, Bihar
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2024, வால்யூம் 26, இதழ் 4



