கிராம இளைஞர்கள் – எதிர்கால விவசாயிகள்


வளர்ந்துவரும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவின் சொத்தாக கருதி, தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது அவசியமாகும். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கிராம இளைஞர்கள் பயனடையும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. கிராம இளைஞர்களின் வருப்பமும், வேளாண்மையில் இவர்களை தக்கவைக்கும் காரணிகளையும் புரிந்துகொள்ள, மஹாராஷ்டிராவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெற்ற கண்டுபிடுப்புகளும், உட்கருத்துக்களையும் வைத்து சாியான அனுகுமுறையை திட்டமிட்டு, வேளாண்மையில் கிராம இளைஞர்களை தக்கவைக்க முடியும்.


இந்தியாவின் மக்கள் தொகையில், இளைஞர்களை எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் திறன் பெற்று, ஆதாரம்வாய்ந்த மற்றும் துணிச்சலான பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகித்திற்கு மேல், 25 வயதிற்குட்பட்டோரும், மேலும் சுமார் 65 சதவிகிதத்தினர் 35 வயது நிரம்பியவர்களாக இருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கிராமத்தில் வசிக்கின்றனர். இந்திய மக்கள்தொகை கணக்கேடுப்பு 2011 ன் படி, 2022 இல் இந்தியா உலகத்திலேயே மிக இளமையான நாடு என்ற நிலையடைந்து, 64 சதவிகிதத்தினர் பணிசெய்யும் வயது நிரம்பிய குழுவை பெற்றிருக்கும். மக்கள்தொகையில் ஈட்டும்பிரிவினரை நன்றாக பயன்படுத்தவது முக்கியமாகும்.கிராம இளைஞர்களைளும், அவர்களின் கற்பனை ஆற்றலை, தேசிய வளர்ச்சிக்கு நெறிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் இளைஞர்களை மூலதனமாக்கும் முயற்சியின் அதேசமயத்தில், வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான முதலீடு மிகவும் குறைவாக இருக்கிறது. இளைஞர்களை மையமாக வைத்து திட்டங்கள் இருப்பது மிக குறைவே, அதில் தௌிவான தாக்கம் ஏற்படுத்திய உதாரணங்கள் மிக குறைவேயாகும். இருப்பினும், ஐ.சி.ஏ.ஆர் மற்றும் பல நாடுகளிலுள்ள வேளாண்மைத் துறைகளும், புதிய மற்றும் பல்வகைமை சாகுபடி செய்யும் முயற்சிகளின் பின்னால் இருக்கும் இளம் விவசாயிகளின் திறனை அங்கீகாிக்கின்றனர். பல இளம் விவசாயிகள் அதிக சவால்கள் இருக்கும், அதிக வருமானம் கிடைக்கும் வேளாண்தொழில்களான பாதுகாப்பு வேளாண்மை, துள்ளிய வேளாண்மை, இயற்கை வேளாண்மை, மலர்கள் சாகுபடி, மருத்துவ குணம் கொண்ட மற்றும் வாசனை பயிர்கள் சாகுபடி போன்ற மேலும் பல வயதான விவசாயிகளால் தவிர்க்கப்படுகின்றனர். இந்த புதிய வேளாண் முயற்சிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியுடன், நிதி மற்றும் விற்பனை உதவியை அரசு முகமைகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இளைஞர்களுக்கு வருமானம் தரும் விவசாயத்தை செயல்படுத்த உதவிப்புரிய வேண்டும்.
இளம் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்கள் செய்வதற்கான சிறந்த திறனை வயதானவர்களைவிட அதிகம் பெற்றிருக்கின்றனர். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் குறிப்பாக வேளாண்மையில் ஈர்த்து, அதனை தக்க வைத்துகொள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர். கிராம இளைஞர்களின் விருப்பங்கள் மற்றும் வேளாண்மையில் அவர்களை தக்கவைத்துகொள்வதற்கான காரணிகள் குறித்த புரிதலை பெற, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகளை, நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பவர்களின் அறிவு மற்றும் உட்கருத்துகளோடு கூடுதலாக சேர்த்து, அதன்மூலம் உகந்த அனுகுமுறைகள்/முயற்சிகளை செயல்படுத்தலாம். இதன் மூலம் சமூகங்கள் உதவியுடன் இளைஞர்களை ஈர்த்து வேளாண்மையை நோக்கி தக்க வைக்கலாம்.

முறைகள்
ஒரு ஆய்வுக்குரிய ஆராய்ச்சி வடிவமைப்பை பயன்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிராவில் விதர்பா பகுதியில் உள்ள இரண்டு மாவட்டங்களில், யவத்மால் (அம்ராவதி வருவாய் பிரிவிலிருந்து) மற்றும் நாக்பூர் (நாக்பூர் வருவாய் பிரிவிலிருந்து) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக கிராம இளைஞர்கள் வாழும் அடிப்படையை வைத்து ஒவ்வொரு மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களும், ஒவ்வொரு தாலுக்காவில் உள்ள ஐந்து கிராமங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது. முப்பது கிராமங்களிலிருந்து 300 கிராம இளைஞர்கள் வரையறையில்லாத மாதிரி முறையின் மூலம் விடையளிப்பவர்களை தேர்ந்தெடுத்தனர். இங்கு பதிளித்தவர்கள் 16-30 வயதுக்குட்பட்டவராக இருக்கின்றனர், மேலும் அவர்கள் வேளாண்மை சாகுபடியை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

ஆய்வு முடிவுகள்
பதினைந்து தனித்துவமான காரணிகளில், வெறும் ஐந்து காரணிகளே, கிராம இளைஞர்கள் மத்தியில் வேளாண்மையை நோக்கி செல்லும் விருப்பத்தின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது என்பதை ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றது. கல்வி, விவசாயத்தில் அனுபவம், வருடாந்திர வருமானம், தகவல்களின் ஆதாரம் மற்றும் சமூக பங்கெடுப்பு ஆகியவை இந்த காரணிகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. கிராம தேவைகள்/எதிர்ப்பார்ப்புகள் நோக்கி ஏற்படுத்திய பங்கின் முக்கிய ஐந்து காரணிகள் என்னவென்றால் கல்வி (42.60%), வருடாந்திர வருமானம் (17.50ம%), சமூக பங்கேற்பு (01.80ம%), தகவல்களின் ஆதாரம் (00.90ம%), மற்றும் சாகுபடியின் அனுபவம் (00.80ம%).இந்த ஐந்து காரணிகள் கிராம இளைஞர்களின் விருப்பத்தை வேளாண்மையை நோக்கி செல்ல முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது. உயர்ந்த நோக்கங்களை வேளாண்மையை நோக்கி அடைவதில் முக்கிய பங்கு வகித்த ஐந்து காரணிகளே இந்த ஆய்வு முடிவுகளின் சாட்சியாக இருக்கிறது.

பதினைந்து தனித்துவமான காரணிகளில், வெறும் ஆறு காரணிகளே, கிராம இளைஞர்கள் மத்தியில் வேளாண்மையை நோக்கி செல்லும் விருப்பத்தின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது என்பதை ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றது. கல்வி, விவசாயத்தில் அனுபவம், குடும்ப தொழில், வருடாந்திர வருமானம், பொருளாதார ஊக்கம் மற்றும் பெற்ற பயிற்சிகள் ஆகியவை இந்த காரணிகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. கிராம தேவைகள்/எதிர்ப்பார்ப்புகள் நோக்கி ஏற்படுத்திய பங்கின் முக்கிய ஐந்து காரணிகள் என்னவென்றால் கல்வி (43.75%), வருடாந்திர வருமானம் (07.66%), சாகுபடியின் அனுபவம் (01.54%), குடும்ப தொழில (01.01%), பொருளாதார ஊக்கம் (01.16%) மற்றும் பெற்ற பயிற்சிகள்(00.66%). இந்த ஐந்து காரணிகள் கிராம இளைஞர்களின் விருப்பத்தை வேளாண்மையை நோக்கி செல்ல முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது. உயர்ந்த நோக்கங்களை வேளாண்மையை நோக்கி அடைவதில் முக்கிய பங்கு வகித்த ஐந்து காரணிகளே இந்த ஆய்வு முடிவுகளின் சாட்சியாக இருக்கிறது.

முடிவு மற்றும் முன்னேற்ற வழி
வேளாண்மையில் கிராம இளைஞர்களை ஈர்க்கவும், விருப்பங்களாக ஏற்கவும் முதல் காரணியாக முக்கிய பங்கு வகித்தது கல்வியே என்று கருதப்படுகிறது. இவற்றுக்கு வருமானமும் முக்கிய காரணியாக இருக்கிறது.கிராம இளைஞர்களின் தனிப்பட்ட, சமூக-பொருளாதார, உளவியல் மற்றும் தொடர்பு பண்புகள் ஆகியவை சிலவும் முடிவெடுக்கும் காரணிகளாக இருந்தது.
பெரும்பாலான கிராம இளைஞர்கள் கீழ்-மத்திய பிரிவினர் பெறும் வருடாந்திர வருமானம் பெறுபவர்களாக உள்ளனர் என்று ஆய்வில் வெளிப்படுகிறது. இதுபோன்ற இளைஞர்களை தக்கவைத்து கொள்ள வேளாண் சார்ந்த உபதொழில்களான உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், கால்நடை, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் சிறுதொழில்கள் அமைத்து கொடுத்தால், அது அவர்களுக்கு வேளாண்மையிலிருந்து மட்டுமல்லாமல், கூடுதலாக வருமானம் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. அரசு முகமைகள் நிதி மற்றும் விற்பனை வசதிக்கு உதவுவது மட்டுமில்லாமல் சிறந்த அறிவு மற்றும் பயிற்சியை வழங்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
கிராம இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்துவதற்கு, அவர்கள் பெற்ற பயிற்சியும் முக்கிய பங்கு வகித்தது.ஆகையால் கிராம இளைஞர்களுக்கு விஞ்ஞான அறிவு மற்றும் திறன்களை பல்வேறு பயிற்சி அனுகுமுறைகள் மற்றும் நவீன வேளாண் அடிப்படையில் உள்ள தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வழங்க வேண்டும். மாநில வேளாண்மை முறை மற்றும் இதர வளர்ச்சித் துறைகளோடு வேளாண்மை பல்கலைக் கழகங்கள் இணைந்து வருமானம் ஈட்டும் தொழில்களை சார்ந்த பயிற்சிகளை கிராம இளைஞர்களுக்கு அளிக்கலாம்.

சமூக பங்கேற்பும் கிராம இளைஞர்களின் ஆர்வத்தை அதிகாிக்கும் ஒரு காரணியாக இருக்கிறது. ஆகையால்,கள அளவில் விரிவாக்க செயல்பாடுகள் மூலம் இவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களோடு ஆற்றலை உயர்த்த செய்து பல்வேறு சமூக செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். வேளாண்மையில் ஏற்படும் சமீபகால வளர்ச்சிகளை வைத்து விரிவாக்க முறைகளை எல்லா நேரத்திலும் மேம்படுத்த வேண்டும். மேலும் வேளாண்மை மற்றும் இதர தகவல்களுக்கு, கிராம இளைஞர்களை பொது /சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும்.

கிராம இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபட வைப்பதற்கு, பொருளாதார ஊக்கமாக மானியங்கள் வழங்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.விரிவாக்க முகமைகள் கிராம இளைஞர்களை ஊக்குவத்து வணிக வேளாண்மையில் ஈடுபடுவது மற்றும் குழு சாகுபடி செயல்பாடுகளில் பங்கெடுப்பது அதிகாிக்கச்செய்கிறது. சமூக செயல்முறைதான் இளம் சந்ததியினருக்கு வேளாண்மை குறித்து நல்ல எண்ணங்களை உருவாக்குதல். வேளாண்மை பிரிவில் குறிப்பாக வேளாண்தொழிலில் ஈடுபட்டுவரும் கிராம இளைஞர்களின் செயல்பாட்டுக் குழுக்கள் அல்லது சமூகங்கள் வலுக்கின்றன.

ஏ.எஸ்.கோமேஸ் மற்றும் வி.எஸ்.டிக்கேல்


A.S. Gomase
Senior Research Assistant, Associate Dean (Instruction)
Dr. PDKV
Akola-444104, Maharashtra, India
E-mail: anilgomase2002@yahoo.co.in

V. S. Tekale
Associate Dean,
College of Agriculture, Mul, Chandrapur
Dr. PDKV
Akola-444104, Maharashtra, India

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2024, வால்யூம் 26, இதழ் 2

அண்மைய இடுகைகள்
மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை...

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும்,...