வான் கோழி வளர்ப்பு – பெண்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதார வாய்ப்பு


தெற்கு பர்கானாஸ் மாவட்ட பெண்கள் வான்கோழி வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். உள்ளூர் வேளாண் அறிவியல் மையங்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த மாதிரி வளர்ச்சியின் தடைகளை உடைத்து, மகளிர் குழுக்களின் திறனை வெளிப்படுத்துகிறது.


கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கான அதிக தேவை, ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலியின் வளர்ச்சி, தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் புதுமை போன்ற பல காரணிகளால் இந்திய கோழித்துறை ஆண்டுக்கு சுமார் 8 விழுக்காடு வலுவான வளர்ச்சியைக் காண்கிறது. (டூர் மற்றும் கோயல், 2022), கடந்த சில தசாப்தங்களாக, இந்தத் துறை கொல்லைப்புற கோழியிலிருந்து வணிக ரீதியான செயல்பாட்டிற்கு தௌிவான மாற்றத்தைக் காட்டியுள்ளது. இருப்பினும், தங்கள் கொல்லைப்புறத்தில் சிறிய கூட்டமாக பாரம்பாிய முறையில் கோழிப்பண்ணைகளை வளர்த்து வந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பண்ணை பெண்களில் பெரும் பகுதியினர் அறியாமல் உள்ளனர். அவர்களிடம் போதுமான நிதி அல்லது தீவிர பிராய்லர் வளர்ப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப நியுணத்துவம் இல்லை.

இந்தப் பின்னணியில் 2016 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சஸ்ய சியாமளா க்ரிஷி விக்யான் கேந்திரா, பெண்களுக்கான மாற்று வாழ்வாதார உத்தியாக கொல்லைப்புற வான்கோழி (மெலியாக்ரிஸ் கல்லோபாவோ) வளர்ப்பை பல காரணிகள் காரணமாக வைத்து ஊக்குவிக்க முயற்சித்தது. . குறைந்த உள்ளீட்டு முறையில் வான்கோழி பறவைகள் எளிதில் செழித்து வளரும்.தீவிர வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராய்லர் பறவைகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு அவை ஆளாகாது. வான்கோழிகளின் இறைச்சி அதன் மெலிந்த இறைச்சி தரம் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக நகர்ப்புற நுகர்வோரால் விரும்பப்படுகிறது. பிராய்லர் இறைச்சியை விட (140 கிலோ கலோரி/85 கிராம்) வான்கோழி இறைச்சி குறைந்த கலோரி மதிப்பு (125 கிலோ கலோரி/85 கிராம்) கொண்டது. என்றும், இதனால் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மக்களின் உணவில் இது மிகவும் பொருத்தமானது என்றும் காணப்படுகிறது. இறைச்சிக்கு நல்ல சந்தையாக செயல்படமுடியும் என்றும் நம்பப்பட்டது.

வான்கோழி வளர்ப்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்காக இலக்கு வைக்கப்பட்ட பெண்கள் குழுவைத் திரட்டல்

முன்பு சில பெண் விவசாயிகள் கூடுதல் வருமானத்திற்காக வீட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சிறிய மந்தைகளில் குரோய்லர்/ஆர்.ஐ.ஆர் வகை கோழி இனங்களை வளர்த்தனர். படிப்படியாக அவர்கள் மூன்று காரணிகளால் பாரம்பாிய கோழி வளர்ப்பில் ஆர்வத்தை இழந்து வந்தனர். 1. பிராய்லர் வளர்ப்புடன் ஒப்பிடும்போது குறைந்த பொருளாதார வருமானம், 2. தற்போதுள்ள முறையில் திட்டவட்டமான சந்தைப்படுத்தல் வழிகள் இல்லாததால் இடைத்தரகர்களுக்கு முட்டைகள் மற்றும் தயாராக உள்ள கோழிகளை கட்டாயமாக விற்பனை செய்தல் மற்றும் 3. அதிக பறவை இறப்பு விகிதம். வான்கோழி வளர்ப்பு மூலம் மாற்று வாழ்வாதாரத்தை ஏற்றுக்கொள்ள அவர்களை அணுகியபோது, அவர்கள் அதில் ஆர்வம் காட்டினர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மூன்று மேம்பாட்டுத் தொகுதிகளான சோனார்பூர், பாருய்பூர் மற்றும் பட்ஜ் பட்ஜ் ஐஐ ஆகியவற்றிலிருந்து சுமார் 15 சுய உதவிக் குழுத் தலைவர்கள் வான்கோழி வளர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மகளிர் குழுக்களுக்கு முதலில் வான்கோழி வளர்ப்பு குறித்த நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில அரசால் நிர்வகிக்கப்படும் நடுத்தர அளவிலான வான்கோழி பண்ணைகளில் அவர்களுக்கு அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டது. பெல்டஸ்வில்லே சிறிய வெள்ளை வான்கோழி இனத்தை பயன்படுத்தி அறிவியல் பூர்வமாக வான்கோழி வளர்ப்பு குறித்த முன்னணி செயல்விளக்கங்களும் அவ்வப்போது விவசாயிகளின் வயலில் நடத்தப்பட்டன. இது பெண்களிடையே நம்பிக்கையை ஊட்ட உதவியது,மேலும் நடைமுறைகளின் தொகுப்பை கிடைமட்டமாக பரப்ப உதவியது. கொல்லைப்புற வான்கோழி வளர்ப்பிற்கான நடைமுறை தொகுப்பு அறிவியல், வீட்டுவசதி, அறிவியல் உணவு மற்றும் கடுமையான தடுப்பு பராமாிப்பு ஆகியவற்றின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, ஒரு வான்கோழி பறவை வீட்டுத் தோட்ட மேலாண்மை நிலையில் 5 மாத வயதில் 5 கிலோ எடை அதிகாிக்கிறது. பின்னர் அது சந்தைப்படுத்தப்படுகிறது.

பொிய அளவில் செயல்படுத்துவது

சுய உதவிக் குழுக்களால் வளர்க்கப்படும் வான்கோழிகளை சந்தைப்படுத்துவதற்காக, மேற்கு வங்க அரசின் துணை நிறுவனமான மேற்கு வங்க கால்நடை மேம்பாட்டுக் கழகத்துடன் ஒரு ஒப்பந்தம் மூலம், இந்தத் திட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேற்கு வங்க கால்நடை மேம்பாட்டு கழகம் விவசாயிகளின் வீட்டிலிருந்து தயாராக இருக்கும் வான்கோழிகளை எடுத்துச் செல்லத் தொடங்கியது. உயிருள்ள வான்கோழிகளின் சராசாி பண்ணை விலை ஒரு கிலோவிற்கு ரூ. 270 ஆகும். இது வணிக பிராய்லர் கோழிகளை விட மிக அதிகம் இந்த தொகை மேற்கு வங்க கால்நடை மேம்பாட்டு கழகத்தால் நேரடி வங்கி பாிமாற்றம் மூலம் பெறப்படுகிறது. சராசாியாக 20 கோழிகள் கொண்ட ஒரு வான்கோழி வளர்ப்பாளர், வளர்ப்பு சுழற்சிக்கு ரூ. 15000-20000 நிகர வருமானத்தை ஈட்ட முடியும். உள்ளூர் தீவனங்கள், சமையலறைக் கழிவுகள் மற்றும் அலோசா ஆகியவற்றைக் கொண்டு பறவைகளுக்கு உணவளித்தால் நிகர வருமானத்தை மேலும் அதிகாிக்க முடியும்.

சுகாதாரக் குழுக்களிடமிருந்து இவ்வாறு வாங்கப்படும் வான்கோழி இறைச்சி, மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மேற்கு வங்;க கால்நடை மேம்பாட்டு கழகத்தின் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் “ஹாிங்காட்டா இறைச்சி” என்ற பிராண்டில் உறைந்த இறைச்சி பிரிவின் கீழ் விற்கப்படுகிறது.

வான்கோழி வளர்ப்பை பொிய அளவில் செயல்படுத்தும் திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல், நிறுவப்பட்ட மாதிரி மூலம் படிப்படியாக வேகத்தை எடுத்து வருகிறது. இது கடன் இணைப்புகளுக்கான நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான மேற்கு வங்க அரசின் பல்வேறு துறைகள் மற்றும் சந்தை இணைப்புகளுக்கான மேற்கு வங்க கால்நடை மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வான்கோழி வளர்ப்பு மற்றும் அதனை சந்தைப்படுத்துதலுக்கான திட்டத்தை ஒட்டுமொத்தமாக வேளாண் அறிவியல் மையம் வழி நடத்தியது.

நடப்பு ஆண்டில், 160 பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வெற்றிகரமாக வான்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் சிறு மற்றும் குறு பின்தங்கிய விவசாய சமூகத்தைச் சேர்ந்த பெண் வான்கோழி விவசாயிகள், இப்போது மேற்கு வங்க கால்நடை மேம்பாட்டு கழகத்திற்கு ஒரு காலாண்டிற்கு சுமார் 1.5 டன் உயிருள்ள வான்கோழி பறவைகளை வழங்குகிறார்கள். வான்கோழி வளர்ப்பு மூலம் கிராமப்புற வளர்ச்சியின் பரந்த பிரச்சாரத்தில் அவர்கள் தங்கள் சொந்த வெற்றிக் கதையை வரைந்துள்ளனர். வான்கோழி வளர்ப்பு அவர்களின் கூடுதல் வருமானத்தின் மூலமாக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, நிறைவு, பெருமை மற்றும் குடும்ப ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது.

பெண் வான்கோழி வளர்ப்பாளர்களின் உதாரணங்களால் ஈர்க்கப்பட்டு, மேற்கு வங்க அரசின் ஏ.ஆர்.டி துறை, 2023 ஆம் ஆண்டு முதல் சோனார்பூர் தொகுதியில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் ஏ.ஆர்.டி துறை மற்றும் வேளாண் அறிவியல் மையத்துடன் இணைந்து, கிராமப்புற இளைஞர்களுக்கு வான்கோழி குஞ்சுகளை விநியோகித்து வருகிறது. இதன் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும்.

வெற்றி காரணிகள்

வேளாண் அறிவியல் மையத்தின் பயிற்சி, செயல் விளக்கம் மற்றும் ஊக்க வகுப்புகள் விவசாய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் இந்தத் திட்டத்திற்குத் தேவையான அறிவியல் அடித்தளத்தை அளித்தன. இது ஒவ்வொரு சுய உதவிக்குழு உறுப்பினருக்குள் செயலற்றிருந்த தலைமைத்துவ தரத்தின் திறன்களையும் வெளிக்கொணர்ந்தது.

வேளாண் அறிவியல் மையம், வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் – இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேற்கு வங்க அரசின் கால்நடை வள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் தொழில்நுட்ப பின்னடைவுடன் கூடிய உறுதியான சந்தைப்படுத்தல் இணைப்புகள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்கியுள்ளன.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் பல விவசாயத் துறைகள் செயல்படாமல் நின்றபோதும், இந்த உறுதியான சந்தைப்படுத்தும் வழி வான்கோழி பண்ணை சமூகத்தை நிலைநிறுத்தியது. மேற்கு வங்க அரசின் கால்நடை வள மேம்பாட்டுத் துறை, இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலேயே, ஒரு நாள் வயதுடைய வான்கோழி குஞ்சுகளை தொடர்ந்து வழங்குதல் மற்றும் கிராமங்களில் நோய்த்தடுப்புத் திட்டங்கள் மூலம் வான்கோழி வளர்ப்பாளர்களை ஆதாிப்பதன் மூலம் இந்தத் திட்டத்தில் ஒத்துழைக்கிறது. இந்த ஒத்துழைப்பு உகந்த மதிப்புச் சங்கிலியைப் பராமாிப்பதற்கு ஒரு கருவியாக மாறியுள்ளது. வான்கோழி இறைச்சிக்கான ஆர்வத்துடன் கூடிய பெருநகரம் மற்றும் அதன் மிகப்பொிய நுகர்வோர் தளத்தின் அருகாமையும் சுய உதவிக் குழு பெண்களின் வெற்றிகரமான வான்கோழி வளர்ப்பிற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஒருங்கிணைந்த மாதிரி வளர்ச்சியின் தடைகளை உடைத்து, மகளிர் குழுக்களின் திறனை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வான்கோழி வளர்ப்பின் வெற்றி உள்ளூர் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவலாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவியல் அறிவு மற்றும் அணுகுமுறையைப் பயன்படுத்தி பல்வகைப்படுத்தல் மூலம் பண்ணை வருமானத்தை மேம்படுத்த, சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற அதிகமான விவசாயிகளின் அமைப்புகளை இந்த மாற்று, ஆனால் லாபகரமான நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் உந்துதல் அளிக்க முடியும்.

பெட்டிச் செய்தி:

வீட்டு மனைவியிலிருந்து வான்கோழி தொழிலதிபராக: திருமதி. நியாதி மொண்டலின் ஊக்கமளிக்கும் துறை.

41 வயதான நியாதி மொண்டல், ஒரு இல்லத்தரசி. தனது மகளின் கல்விக்காக கூடுதல் பணம் சம்பாதிக்க போராடுகிறார். அவர் சோனார்பூர் தொகுதியின் ஜெய்கிருஷ்ணாபூர் கிராமத்தைச் சேர்ந்த புஸ்பா கோஸ்தி குழு உறுப்பினராக உள்ளார். கூடுதல் வருமானத்திற்கான ஒரு வழியாக அவர் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய கோழி மந்தையை நிர்வகித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது கொல்லைப்புற கோழி வளர்ப்பு முயற்சியில் குறைந்த வருமானம் காரணமாக அவர் பின்னடைவுகளை எதிர்கொண்டார். வேளாண் அறிவியல் மையத்தில் ஒரு பயிற்சி அமர்வின்போது வான்கோழி வளர்ப்பு பற்றி அவர் முதலில் அறிந்தபோது விஷயங்கள் நேர்மறையாக மாறியது. வான்கோழி வளர்ப்பின் அறிவியல் முறைகளை ஏற்றுக்கொண்ட சக விவசாயிகளின் கதைகளால் உந்தப்பட்டு, வான்கோழி வளர்ப்பு குழுக்களில் சேர தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

முதலில், வேளாண் அறிவியல் மையத்திடமிருந்து முன்னணி செயல்பாடாக 10 வான்கோழி குஞ்சுகளைப் பெற்றார். படிப்படையாக, வான்கோழி பறவை மேலாண்மை, பறவைகளுக்கு உணவளிக்க அசோலா வளர்ப்பு, குஞ்சுகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் பதிவு செய்தல் போன்ற அறிவியல் கருத்துக்களை ஒருங்கிணைத்தார். 6 மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது கோழி மந்தையை வான்கோழிகளால் முழுமையாக மாற்றினார். அடைகாத்தல், உணவளித்தல் மற்றும் கால்நடை மருந்துகளை வழங்குதல் உள்ளிட்;ட அறிவியல் பூர்வமான வான்கோழி வளர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் கற்றுக்கொண்டு பயிற்சி அளித்தார். இறுதியில், அசோலா சாகுபடி, காய்கறி கழிவுகளை உணவளித்தல், குப்பைகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் அறிவியல் ரீதியான உயிரியல் பாதுகாப்பு மேலாண்மை போன்ற புத்திசாலித்தனமாக தலையீடுகளைப் பயன்படுத்தி 50 வான்கோழி பறவைகள் கொண்ட மந்தையை அவர் சொந்தமாக நிர்வகிக்கத் தொடங்கினார். அவர் தனது சிறிய காய்கறித் தோட்டத்தில் வான்கோழி எருவையும் பயன்படுத்தினார். நல்ல பலன்களைப் பெற்றார். தனது அனைத்து முயற்சிகளாலும், தனது வான்கோழி வளர்ப்பு நிறுவனத்திலிருந்து சராசாியாக ஆண்டுக்கு ரூ. 60000-75000 நிகர வருமானம் ஈட்ட முடிந்தது. வான்கோழி வளர்ப்பில் குறைவான நோய் பாதிப்பு மற்றும் உறுதியான சந்தைப்படுத்தல் வழி காரணமாக, வான்கோழி வளர்ப்பு பாரம்பாிய கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்கு ஒரு சிறந்த மாற்றாகும் என்று அவர் கூறுகிறார்.

தனது கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களிடமும் மெதுவாகப் பேசத் தொடங்கினார். அவரது வெற்றியைக் கண்டு, அவரது சமூகத்தைச் சேர்ந்த 50 பெண் விவசாயிகள் சோனார்பூர் தொகுதியில் உள்ள வான்கோழி வளர்ப்பு குழுவில் இணைந்தனர்;. அவரது கிராமத்தில், அவர் படிப்படியாக ஒரு கவனம் ஈர்க்கும் ஆளாக மாறினார். வான்கோழி வளர்ப்பு மூலம் மாற்று வாழ்வாதாரத்தை எடுக்க பலரை ஊக்கப்படுத்தினார். கிராமத்தில் தற்போதைய விவசாய நிலைமை முந்தையதை விட முரணானது. 2022 ஆம் ஆண்டில், ஒரு விவசாய நிபுணராக ஒரு தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் அவர் விவாதித்தார். 2023 ஆம் ஆண்டில், பல சக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய வான்கோழி வளர்ப்பு தொழிலுக்காக மேற்குவங்க அரசின் ஏ.ஆர்.டி துறையால் “சாதனையாளர் விவசாயி” என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. வான்கோழி குஞ்சுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக தனது குழுவின் கீழ் ஒரு இன்குபேட்டர் இயந்திரத்தை அமைக்க அவர் இப்போது தயாராக உள்ளார். தனது கிராமத்தில் ஒரு சிறிய இறைச்சி பதப்படுத்தும் மையத்தையும் அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார். கொல்லைப்புற கோழி வளர்ப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய திருமதி. நியாதி மொண்டல் இப்போது தனது மிகுந்த ஆர்வம், கூட்டு அணுகுமுறை மற்றும் புத்திசாலித்தனமான தலையீடுகளுக்காக ஒரு பிரபல வான்கோழி விவசாயியாக உள்ளார்.

சர்பஸ்வரூப் கோஷ் மற்றும் நாராயன் சந்திர சாஹூ


Sarbaswarup Ghosh
Sasya Shyamala Krishi Vigyan Kendra,
Ramakrishna Mission Vivekananda Educational &
Research Institute (RKMVERI)
Arapanch, Sonarpur, South 24 Parganas, West Bengal
Email: drsarba@rediffmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...