பெண்கள் தலைமையிலான விவசாய தொழில்களை ஊக்குவிப்பது இனி ஒரு தேர்வாக இருக்காது, ஆனால் நிலையான வளர்ச்சிக்கு அவசியமாகும். கிராமப்புற அமைப்புகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை உறுதி செய்வதை விவசாயத் துறையின் பயன்படுத்தப்படாத திறனை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல், வறுமையைக் குறைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்கும்.
56 வயதான ஜம்னா தேவி, இந்தியாவின் தார் பாலைவனத்தின் பரந்த பரப்பளவில் அமைந்துள்ள ஜோத்பூர் மாவட்டத்தின் பலோடி வட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான மோகேயில் வசிக்கிறார். அவர் ஒரு விவசாயி மற்றும் அவரது பகுதியில் கிராவிஸால் செயல்படுத்தப்படும் பல்வேறு விவசாயத் திட்டங்களில் தீவிரமாக பங்கேற்பவர். அவர் தனது கிராமத்தின் புதர்தாஸ் விவசாய ஆர்வலர் குழுவில் உறுப்பினராகவும், தோரா தார்தி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பின் வாரிய உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.
2019 ல் தேவி விவசாய ஆர்வலர் குழுவில் சோ;ந்தபோது, அவர் மாதாந்திர கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பார். இது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால் இறுதியில், அவர் பல பெண் உறுப்பினா;களுடன் சோ;ந்து தலைமைத்துவ திறன்கள், நிதி கல்வியறிவு, வணிக திட்டமிடல், கணக்கு வைத்தல், உற்பத்தி தொழில்நுட்பம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, ஊட்டச்சத்து மற்றும் நீர் மேலாண்மை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்ளிட்ட சீரகப்பயிர் சாகுபடி குறித்த பண்ணை பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
இந்த விவாதங்களின்போது தொடர்ந்து எழுந்த முக்கிய சவால்களில் ஒன்று, உள்ளூரில் சீரக விதைகள் கிடைக்காதது. கல்விச் சுற்றுலாக்களில் ஒன்றில் அவர் பார்வையிட்ட விதை வங்கியைத் திறக்கும் யோசனை, வடிவம் பெறத் தொடங்கியது. அவர் உடனடியாக 60 கிலோ சீரக விதைகளை (GC4 இரகம்) சேகாித்து (சந்தையில் அரிதாகவே காணப்படுகிறது.) விவசாயிகளின் உள்ளூர் மற்றும் பாரம்பாிய நுட்பத்தைப் பயன்படுத்தி மண் தொட்டியில் சேமித்து வைத்தார். அவர் தனது வீட்டிலேயே இந்த வங்கியை உருவாக்கி விவசாய ஆர்வலர் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அதை நிர்வகிக்கிறார்.
அடுத்த விதைப்பு பருவத்தில், விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்கள் 25 விவசாயிகளுக்கு 60 கிலோ சேமிக்கப்பட்ட சீரக விதைகளை விநியோகித்தனர். விவசாயிகள் அறுவடை செய்தவுடன், அடுத்த ரபி பருவத்திற்குப் பயன்படுத்த அவர்களிடமிருந்து இரட்டிப்பு அளவு சீரக விதைகள் வாங்கப்பட்டன. இது பின்னர் 50 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, 240 கிலோ விதைகள் விதை வங்கியில் உள்ளன. அவரது கிராமத்தின் விவசாயிகள் நல்ல தரமான விதைகளை தங்கள் வீட்டு வாசலில் பெற முடிகிறது. அதே நேரத்தில் உள்ளீட்டு சப்ளையர்கள் மற்றும் கமிஷன் முகவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. ஜம்னா தேவி தனது கிராமத்தைச் சேர்ந்த பல பெண்களை மேம்பட்ட விவசாய நடைமுறைகளைப் பயன்படுத்துவதில் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஒரு வாரிய உறுப்பினராக, அவர் தனது விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான 3 ஆண்டு நிலைத்த/ வணிகத் திட்ட நடவடிக்கைகளின் வளர்ச்சியால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், அதை ஒரு செயல்பாட்டு விவசாய நிறுவனமாக மாற்றுவதில் உறுதியாக தனது பங்களிப்பை செலுத்துகிறார். இந்த நிறுவனம் வெற்றிபெற சிறிது நேரம் எடுக்கும் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும், ஜம்னா தேவியின் கதை இன்னும் வித்தியாசமாகவே உள்ளது. . ஏற்ற இறக்கமான காலநிலை, தொடர்ச்சியான வறட்சி, நீர் பற்றாக்குறை, மணல் அரிப்பு மற்றும் உப்புத்தன்மை ஆகியவற்றின் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட வாழ்வதற்கு கடினமாக இருக்கும் இந்தப் பகுதி ஒன்றும் விதியல்ல, மேலும் இவை சிறு மற்றும் குறு விவசாயிகளின் துயரங்களை அதிகாிக்கிறது. இங்குள்ள பெண்கள் பெரும்பாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் நேரத்தின் பெரும்பகுதி நீண்ட தூரத்திலிருந்து தண்ணீர் எடுப்பதில் செலவிடப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் பராமாிப்பது, தினசாி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற வீட்டு வேலைகள் போன்றவற்றிலும் அவர்களின் பங்கு உள்ளது. அவர்கள் மீதான இந்த வெளிப்படையான திணிப்புகள் அவர்கள் படிக்க, சுயமாகப் பராமாிக்க அல்லது வருமானம் ஈட்டும் வாய்ப்புகளில் வளர வேண்டிய நேரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள்
கிராமப்புற அமைப்புகளில் பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள் தங்களை லாபகரமான வணிக நிறுவனங்களாக நிலைநிறுத்துவதற்கான பாதையில் பல தடைகளை எதிர்கொள்கின்றன. மலிவு மற்றும் தரமான விவசாய பொருட்கள் மற்றும் உள்ளீடுகளுக்கான அணுகல் இல்லாமை, பணி மூலதனம், சந்தை, தொழில்நுட்பம், தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் கரம் பற்றிய ஆதரவு போன்ற பல்வேறு காரணிகளுடன் கல்வி இல்லாமை, குறைந்த இயக்கம், தொழில்முறை கூட்டமைப்புகளுக்கான அணுகல் இல்லாமை மற்றும் வரையறுக்கப்பட்ட தொழில் அறிவு ஆகியவை இதில் அடங்கும். தற்போதுள்ள சமூக ஏற்பாடுகள் பெண்களை தொழில்முனைவோர் முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு பதிலாக பாரம்பாிய பாலின மூடநம்பிக்கையினால் மட்டுப்படுத்துகின்றன.
பொதுவாக, அவர்கள் கால்நடைகளைப் பராமாிப்பதோடு விவசாயத்தில் களையெடுத்தல், விதைத்தல், நடவு செய்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சந்தை மற்றும் விற்பனை தொடர்பான அனைத்தும் பொதுவாக வீட்டு ஆண் உறுப்பினர்களின் களமாகக் கருதப்படுகின்றன. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் அவர்களின் அதிக ஈடுபாடு மற்றும் பங்களிப்பு இருந்தபோதிலும், பெண்களின் பணி பொருளாதார ரீதியாக உற்பத்தித்திறன் கொண்டதாக அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் வீட்டு வேலைகளுக்கும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளுக்கும் இடையே தௌிவான வேறுபாட்டை வரைய கடினமாக இருப்பதால் அவர்கள் தொழில்முனைவோர் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. இருப்பினும், ஒட்டுமொத்த நிலைமை இப்போது மாறி வருகிறது.
ஆண் உறுப்பினர்களின் இடம்பெயர்வு அதிகாிப்பின் விளைவாக இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கு அதிகாித்து வருவதால், அதிகமான பெண்கள் இயற்கையான தேர்வாகத் பண்ணை தொழில்முனைவை தேர்வு செய்கிறார்கள். இந்த மாற்றம் தௌிவாகத் தொிந்தாலும், பெண்கள் நுண் தொழில்முனைவோராகவும், திறன் மேம்பாட்டிற்காகவும், மூலதனம் சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான அணுகலை வழங்க உதவும் சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளதா என்பதுதான் பதிலளிக்க வேண்டிய பொிய கேள்வி. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தோன்றுவது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஒன்றிணைந்து. சிறந்த சந்தைகளை அணுகவும், அவர்களின் பொருளாதார திறனை மேம்படுத்தவும் உதவியுள்ளது. விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களில் சேருவது, பல விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆனால் பெண்கள் அமைப்பிற்குள் ஆண்களைப் போலவே சம வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்களா? பெரும்பாலான நேரங்களில், கடுமையான சமூக-கலாச்சார விதிமுறைகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் குறைந்த சமூக இயக்கம் காரணமாக பல பெண்கள் இந்த அமைப்புகளில் பங்கேற்க முடியவில்லை. விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர் மற்றும் தலைமைப் பாத்திரங்களில் ஆண்களே பெரும்பான்மையாக உள்ளனர். இந்த அமைப்புகளின் வாரியங்களில் பெண்கள் பெரும்பாலும் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் உறுப்பினர்களாகும்போது கூட அவர்கள் அடிக்கடி கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை அல்லது அவர்கள் வரும்போது பேசவிடுவதில்லை.
உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விவசாயத்தில் அவர்கள் பெரும்பாலான உற்பத்தி வளங்களை சொந்தமாக வைத்திருப்பதில் இருந்து முறையாக விலக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பெண்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். 13 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே எந்த நிலத்தையும் வைத்திருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில், இந்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 10000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக, இந்த திட்டத்தில், உருவாக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பெண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் எண்ணிக்கை அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பெண் உறுப்பினா;களின் எண்ணிக்கை குறித்து எந்த விவரக்குறிப்பும் இல்லை. பெண் விவசாயிகளுக்கு தகவல், இயக்கம் மற்றும்; பணத்திற்கான அணுகல் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, பெண்களைச் சோ;க்க சிறப்பு முயற்சிகள் தேவைப்படும். ஏனெனில் அவர்கள் தாங்களாகவே உழவர் உற்பத்;தியாளர் நிறுவனங்களில் ஒரு பகுதியாக இருப்பதைக் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.
கிராவிஸ் தற்போது 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் 50 விவசாய ஆர்வலர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் குறைந்தது 33 விழுக்காடு உறுப்பினர்கள் முடிவெடுப்பதிலும் சந்தை தொடர்பான நடவடிக்கைகளிலும் முழுமையாக பங்கேற்கும் பெண்கள் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த குழுக்களில் உள்ள பெண்கள் பொருத்தமான திறன் மற்றும் திறன் மேம்பாடு மூலம் வாரிய உறுப்பினா;களாகவும், பங்குதாரர்களாகவும் தலைமைப் பொறுப்புகளில் சோ;க்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் தளங்கள் மூலம் கற்றல், மசாலாப் பொருட்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான நல்ல விவசாய நடைமுறைகள், ஒருங்கிணைந்து வாசனைப்பயிர் இயற்கை விவசாயம் மற்றும் விதைப்பு, பண்ணையில் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள், நிலம் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உபகரணங்கள், கொள்முதல், சரக்கு மேலாண்மை, விலை நிர்ணயம், வாங்குபவர்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதல் மற்றும் பல்வேறு நிதி சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஓசியன் மற்றும் பலோடி தொகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் சிறு மற்றும் குறு சீரகம் மற்றும் கொத்தமல்லி விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் கூட்டாக வணிகத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர். வாசனைப்பயிர் விவசாயிகளின் தனிநபர் மற்றும் குழுதிறனில் கணிசமான அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் மேலாண்மை நடைமுறைகளின் கீழ் 914 ஏக்கர் நிலத்துடன், அதிகாிக்கும் விற்பனையின் அளவு மற்றும் மதிப்பில் கணிசமான அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது. 100 விழுக்காடு ஆண் மற்றும் பெண் விவசாயிகள் மற்றும் பிற மதிப்புச் சங்கிலி பங்கேற்பாளர்கள் வங்கிகள் மற்றும் விவசாயிகள் கடன் அட்டைகள் மூலம் நிதி சேவைகளிலிருந்து பயனடைகிறார்கள். அனைத்து விவசாயிகளும் வங்கி கனக்கு வைத்து, இந்த நிதி சேவைகளிலிருந்து பயனடைகின்றனர். சம்பந்தப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை அடைவதற்கு இது இன்னும் நீண்ட பாதையாகும். மேலும் கிராவிஸ் மசாலா விவசாயிகளின், குறிப்பாக பெண்களின் விவசாய ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வளங்களை அணுகுவதற்கான திறமையான சமூக பொருளாதார சூழலுடன் ஆதாிப்பதன் மூலம், நேரடி இணைப்புகளை செயல்படுத்துவதோடு, சிறந்த வருமானம் மற்றும் லாப வரம்புகளுக்கு தரமான விவசாய உள்ளீடுகளைப் பெறுவதற்கும் தொடா;ந்து உதவும்.
பெண்கள் விவசாயத் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்
தொழில்முனைவோரைத் தொடர விரும்பும் கிராமப்புற பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெல்ல, திறன் பயிற்சி, மதிப்பு கூட்டல் உள்ளீடுகள், மேம்பட்ட நிதி அணுகல், இடர் பகிர்வு மற்றும் சந்தை ஒத்துழைப்புகளுடன் வழிகாட்டுதலை வழங்கும் ஒரு ஆதரவான சூழலை வளர்க்க வேண்டும்.
பெண்களின் விவசாயத் தொழில்முனைவோரை வலுப்படுத்தவும், ஊக்குவிக்கவும் கூடிய பிற காரணிகள்:
- பெண் தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் நிதி கல்வியறிவு பயிற்சித் திட்டங்கள்.
- உற்பத்தி சார்ந்த நிறுவனத்திலிருந்து சந்தை தலைமையிலான சமூக நிறுவனமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை வளர்ப்பதற்கான திறன்களை பெண்களுக்கு வழங்குதல். போதுமான அளவு உற்பத்தி செய்வது முக்கியம். ஆனால் தேவையைப் புரிந்துகொள்வதும், சந்தையின் தரம் மற்றும் செயல்முறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவசியம். மதிப்பு கூட்டல் மட்டுமே உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தக்க வைக்க உதவும்.
- பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகாிப்பது தேசிய முன்னுரிமையின் விஷயமாக மாற வேண்டும்.
- தங்கள் வணிகங்களை அமைப்பதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், வீடுகளைக் கட்டுவதற்கும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து மென்மையான விதிமுறைகளில் கடன் பெறுவதில் பெண்களுக்கு முன்னுரிமை.
- கிராமப்புறங்களில் தகுதியுள்ள விவசாயப் பெண் தொழிலாளர்களுக்கு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மாற்று மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குதல்.
- பெண் தொழில்முனைவோரை இலக்காகக் கொண்ட திட்டங்கள் அவர்களின் நேரம் மற்றும் நிதி தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பெண் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
- பெண்களுக்கான மாற்று கடன் மதிப்பெண் முறையை உருவாக்கல், பல்வேறு மின் வணிக தளங்களில் அவர்களைப் பதிவு செய்து, அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பிற சமூக-கலாச்சார காரணிகளை சமாளிப்பதற்கும் உதவுதல்.
- சிறு மற்றும் உள்ளூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பல மாநில மற்றும் தேசிய அளவிலான உற்பத்தியாளர் கூட்டு தளங்களில் இணைந்து, ஒருங்கிணைப்பின் பலனைப் பெற உதவுதல்.
- தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தக கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகளில் பெண்கள் பங்கேற்க ஊக்குவித்தல், சமீபத்திய மற்றும் மலிவு விலை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற தகவல்களை அணுகுவதை மேம்படுத்துதல்.
- பெண் தொழில்முனைவோருக்கு பொருத்தமானவை குறித்த தகவல்களை வழங்குவதன் மூலம் அரசு திட்டங்களை அணுக உதவுதல். மத்திய நிதியுதவி திட்டங்கள் நிதியுதவியுடன் போராடும் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல நிதி ஆதாரமாக இருக்கும்.
- பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள் சந்தையில் சாத்தியமானதாக இருக்க தகவல் தொடர்பு, பிராண்டிங், தர மேலாண்மை, விலை நிர்ணயம் மற்றும் விநியோக வழிகள் மூலம் உதவ திறமையான நிபுணர்கள் மற்றும் தொழில் நிபுணர்களைக் கொண்டு வருதல்
பெண்கள் தலைமையிலான விவசாய நிறுவனங்களை ஊக்குவிப்பது இனி ஒரு தேர்வாக இருக்காது, நிலைத்த வளர்ச்சிக்கு அவசியமாகும். கிராமப்புற அமைப்புகளில் பெண்கள் சார்ந்த வணிகங்களை உறுதி செய்வது விவசாயத்துறையின் பயன்படுத்தப்படாத திறனை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல், வறுமையைக் குறைத்து வேலைவாய்ப்பை உருவாக்கி, பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்கும்போது, வணிக மற்றும் பொது சமூகத் பிரிவுகள் ஈடுபடும் ஒரு விரிவான அணுகுமுறை, புதுமை மற்றும் வளர்ச்சியை வழிநடத்துவதில் மிக முக்கியமானதாக இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவில் விவசாய நிலப்பரப்பின் அசல் வழிகாட்டிகளான பெண்களின் விருப்பங்கள் மற்றும் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் பல இடைவெளிகளைக் குறைக்கும்.
க்ருபா காந்தி
Krupa Gandhi Communication & Dissemination Consultant, GRAVIS 3/437, 458, M M Colony, Pal Road Jodhpur, 342008, INDIA Email – krupa@gravis.org.in www.gravis.org.in
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1



