செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மை – பாரம்பாியம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கிறது


பார்மோநாட்ஸ் செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மை, வெறும் தொழில்நுட்பம் – இது ஒரு மாற்றம். தரமான கருவி மற்றும் இந்திய விவசாயிகளின் நேரமற்ற தாங்குதிறன் இணைந்து, அதிக நிலைத்த, உற்பத்தி பெறக்கூடிய, மற்றும் இலாபம் தரக்கூடிய வேளாண்மை எங்கு இருக்கிறதோ, அங்கு இந்த அணுகுமுறையே எதிர்காலமாக உருவாக்கும்.


வளர்ந்து வரும் உலக மக்கள்தொகைக்கு உணவு உற்பத்தி செய்யும் அதேசமயத்தில் கிரகத்தின் ஆதாரத்தை பாதுகாப்பது சாதாரண விஷயமல்ல. இந்தியா, வேளாண்மை ஆழமாக வேரூன்றியிருக்கும் தேசமெனினும், நவீன சவால்களான சீதோஷண மாற்றம், நிலையற்ற மகசூல், மற்றும் ஆதார பற்றாகுறை ஆகியவற்றை சமாளித்து வருகிறது. இந்த திட்டம் மேலும் அழுத்தம் தருகிறது. ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தொழில்நுட்பம், குறிப்பாக, செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மையில் எப்படி உணவை நாம் வளர்க்க வேண்டும் என்பதற்கு மாற்று விளக்கம் அளிக்கிறது. பாரம்பாியத்திற்கும், புதிய கண்டுபிடிப்பிற்கும் இடையில் உள்ள இடைவெளியை இணைக்கிறது. விவசாயிகள் கருவிகளோடு திறன் வளர்த்துக்கொண்டு, கடுமையான வேலையை செய்யாமல், மென்மையான வேலையை செய்து வளர வேண்டும்.

பார்மோநாட்டின் தொழில்நுட்ப அணுகுமுறை நிலைத்த வேளாண்மையை நோக்கி
பார்மோநாட்டின் செயற்கைகோள் அடிப்படையிலான அமைப்பு, உண்மையான நேரடி புள்ளிவிவரம், செயற்கை நுண்ணறிவு ஆற்றலின் உள்கருத்துக்கள் மற்றும் தனித்துவமான பாிந்துரைகள் ஆரோக்கிய பயிர்களாக வளர்கிறது, மென்மையான ஆதார பயன்பாடு மற்றும் நிலைத்த சாகுபடி செயல்பாடுகள் ஆகியவை விவசாயிகள் உயர்த்துகின்றது.

பார்மோநாட், ஒரு முன்னோடி வேளாண் தொழில்நுட்ப நிறுவனம், செயற்கைகோள் படம், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் விவசாயிகளுக்கு உண்மையான நேரடி கருத்துகள் மற்றும் புள்ளிவிவரம் சார்ந்த பாிந்துரைகளை வழங்குகிறது. இவர்களது அமைப்பு, துல்லிய வேளாண் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. இது திடமான முடிவு எடுக்கவும், ஆதாரங்களை சிறப்பாக பயன்படுத்தவும், நிலையாக மகசூல் அதிகாிக்கவும் விவசாயிகள் திறன் உயர்த்தப்படுகிறது. பார்மோநாட், சிறு விவசாயிகள் சந்திக்கும் முக்கிய சவால்களுக்கு தீர்வு வழங்குகிறது.

தொழில்நுட்பத்தின் முக்கியத் தூண்கள்
அ) செயற்கைகோள் அடிப்படையிலான பயிர் ஆரோக்கிய கண்காணிப்பு
பார்மோநாட் பொியளவுடைய செயற்கைகோள் படத்தை பயன்படுத்தி உண்மைநிலையில் பயிர் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறது. இலை வளர்ச்சி காரணிகளான என்டிவிஐ – (Normalized Difference Vegetation Index) சாதாரண இலைவளர்ச்சி காரணி அறிகுறிகளின் வித்தியாசம், பார்மோநாட் பயிரின் வீரியத்தன்மை, அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் அடையாளம் காண்பது, மற்றும் முன்கூட்டியே பூச்சி மற்றும் நோய்களை கண்டுபிடிப்பது ஆகியவற்றை மதிப்பிடுகிறது. இதனால் விவசாயிகள் விரைவாக தலையிட்டு, நஷ்டத்தை குறைத்து பயிர் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

தொலையுணர்தல் (Remote Sensing) பூச்சி தாக்குதல், சத்துக் குறைபாடு, அல்லது தண்ணீர் அழுத்தம் போன்ற முக்கிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. பயிர் ஆரோக்கிய துல்லியமாக கண்காணிப்பதன் மூலம், விவசாயிகள் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் தண்ணீர் எப்போது எங்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து இடுவதற்கு பார்மோநாட் உதவுகிறது. இதனால் கழிவுகள் மற்றும் இடுபொருள் செலவும் குறைகிறது. பயிர் ஆரோக்கிய தரவுகள் துல்லியமாக வைத்துகொண்டு, விவசாயிகள் அதிக நிலைத்த தொழில்நுட்பங்கள் பின்பற்றி, அளவுக்கு அதிகமான இரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைத்து, தண்ணீர் போன்ற ஆதாரங்களை பாதுகாக்க முடிகிறது.

ஆ) மர வளர்ப்பு மேலாண்மை:
அதிகளவில் மரங்கள் வளர்ப்பதற்கு, மரங்களின் ஆரோக்கியம், வளர்ச்சி, மற்றும் மகசூலை மேம்படுத்துவது கடினமான செயல்பாடாகும். பார்மோநாட்டின் தீர்வுகள் அளிக்கும் கருவி, தனிப்பட்ட மரங்களை கண்காணிப்பது, அதன் வளர்ச்சி பருவங்களை மதிப்பிடுவது,, மேலும் மரங்களின் ஆதாரங்களை மிக சிறப்பாக மேம்படுத்துகிறது. மரங்களின் எண்ணிக்கை, மரங்களின் வயதை மதிப்பிடுவது, தொலைஉணர்தல் கருவி மூலம் மரங்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது ஆகியவை இதில் அடங்கும். மரங்கள் அமைந்துள்ள பகுதியின் டிஜிட்டல் வரைப்படம், மேலாளர்களுக்கு செயல்பாட்டை வரையறுப்பது, முன்னேற்றத்தை கண்காணிப்பது, மற்றும் பரந்துவிரிந்த நிலப்பகுதியின் ஆதார பயன்பாட்டை பெருக்குகிறது. மரங்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பதால், நீண்ட கால மகசூலின் போக்கை கணக்கிடவும், நிலைத்த மகசூலை உறுதிசெய்வதற்கும், பார்மோநாட் உதவுகிறது.

இ) சந்தைபடுத்துவதன் சங்கிலித்தொடர்பு அடிப்படையிலான கண்காணிப்புத்தன்மை:

பார்மோநாட, சந்தைப்படுத்துவதன் சங்கிலித்தொடர்பு தொழில்நுட்பத்தை, அதன் அமைப்போடு ஒருங்கிணைத்து, வேளாண் விநியோக சங்கிலிகள் மத்தியில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்புத்தன்மையை உறுதிபடுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம், ஒவ்வொரு விளைபொருள் பண்ணை முதல் நுகர்வோர் வரையிலான பயணத்தின் தடையில்லா டிஜிட்டல் அறிக்கையை உருவாக்குகிறது. சந்தைப்படுத்துவதன் சங்கிலித்தொடர்பை உட்புகுத்துவதன் மூலம், அவர்கள் வாங்கும் விளைபொருட்களின் தயாரிக்கும் இடம், தரம், மற்றும் நிலைத்தத்தன்மை குறித்து நுகர்வோர் சாிபார்க்கும் வசதியை, பார்மோநாட், உறுதி செய்கிறது. விவசாயிகளுக்கு, சந்தைகளின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள, நிலைத்த விளைபொருட்களுக்கு நியாயமான விலையை பெறுவது, விளைபொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதியளிக்கும் தன்மையை பெறுவதில் இது சிறந்த ஊடகமாகும்.

ஈ) பயிரிட்டப் பகுதி மற்றும் மகசூல் மதிப்பீடு
துல்லிய பயிர் பகுதி வரைப்படம் மற்றும் எதிர்ப்பார்க்கும் மகசூல் ஆகியவை, பண்ணைத் திட்டம், ஆதார மேம்பாடு, மற்றும் சந்தை நிலவரம் உயர்த்துவதற்கு மிக முக்கியம். இந்த செயற்கைக்கோள் தரவை பயன்படுத்தி, பார்மோநாட் வழங்கும் துல்லிய பயிர்ப் பகுதி வரைப்படத்தை பயன்படுத்தி, அறுவடைக்கு முன் விவசாயிகளுக்கு தங்களது மகசூலை மதிப்பிட உதவுகிறது. இந்த திறன், விற்பனை காலம், இடுபொருள் தேவை, மற்றும் ஆதாரத்தை பங்கீடு செய்வது ஆகியவற்றில் சிறப்பாக முடிவெடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.

உ) காிம பாத அச்சு
அதிகளவு சுற்றுச்சூழல் பொறுப்புகளை நோக்கி இந்த உலகம் நகா;ந்து செல்வதால், நிலைத்த வேளாண்மை முக்கிய காரணியாக இருக்கும் காிம வெளியீட்டை அளந்து, அதை குறைக்கிறது. பார்மோநாட் வழங்கும் காிம பாதஅச்சு கருவிகள், விவசாயிகளுக்கு பசுமைகுடில் வாயு வெளியீட்டை பின்தொடர்ந்து அதனை குறைக்க உதவுகிறது. காிமத் தன்மயமாக்கலை கண்காணித்து, பண்ணை தொழில்நுட்பங்களை உயர்த்துதல் மூலம், விவசாயிகள் தங்களது பண்ணை நிலைத்தத்தன்மையை விரிவுபடுத்தும் சமயத்தில், விவசாயிகள் சீதோஷண மாற்றத்தை சமாளிப்பதற்கு பெரும் பங்களிக்கிறது.

ஜீவ்நெய் – மாற்றத்திற்குட்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பண்ணை அறிவுரை
பார்மோநாட்டின் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட பண்ணை அறிவுரை அமைப்பான ஜீவ்நெய்;, உண்மையான பண்ணைத் தரவுகள் அடிப்படையில் மாற்றத்திற்குட்பட்ட பாிந்துரைகளை வழங்குகிறது. தண்ணீர் பாசனம், உரமிடுதல், பூச்சி மேலாண்மை, மற்றும் பலவற்றை மேற்கொள்வதற்கு, செயற்கைகோள் வரைபடம், வானிலை தரவு, மண்ணின் நிலை, மற்றும் பயிர் ஆரோக்கியம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, விவசாயிகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுரையை வழங்குகிறது,ஜீவ்நெய். ஓவ்வொரு பண்ணையும், சிறப்பான, உற்பத்திநிலை, மற்றும் நிலைத்த சாகுடியை செய்வதற்கு தேவையான துல்லிய அறிவுரையை வழங்குவதே, ஜீவ்நெய்யின் நோக்கமாகும்.
இதன் மையமாக, பார்மொநாட்டின் அணுகுமுறை சுலபமான ஒன்று. அதாவது விவசாயிகளுக்கு சிறந்த முடிவுகள் செய்து அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குகின்றனர். ஆனால் இந்தக் காட்சிக்கு பின்னால், இது நவீன தொழில்நுட்பத்தின் அற்புதமாகும்.
• செயற்கைகோள் உயர்ந்த தரத்தையுடைய பண்ணையின் வரைப்படத்தை படம்பிடித்து காட்டுகிறது. மண் ஈரப்பதம் முதல் பயிர் ஆரோக்கியம் அனைத்தையும் ஆய்வு செய்கின்றது.
• செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள்தரவுகளை உடைத்து, சிக்கலான அமைப்பை, செயல்படக்கூடிய கருத்தாக மாற்றுகிறது.
• கைபேசி செயலிகள் இந்த கருத்துக்களை நேரடியாக விவசாயிகளுக்கு, புரியும் மொழிகளில் அனுப்பப்படுகிறது.
இது விவசாயிகளுக்கு, அவர்கள் நிலத்தின் கழுகு பார்வை வரைபடத்தை அளித்து, இதுவரை அவர்கள் காணாத பிரச்சனைகளை கண்டறிந்து வாய்ப்புகள் வழங்குகிறது.

உண்மை வாழ்வின் வெற்றிக் கதைகள்:
பார்மோநாட்டின் அணுகுமுறை இந்தியா மற்றும் அதை தாண்டி இருக்கும் பலதரப்பட்ட விவசாய சமூகங்கள் ஏற்கனவே முழுமையான மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கவனிக்கக்கூடிய சில வெற்றிக்கதைகளை காணலாம்.
அ) கோத்ரேஜ் அக்ரோவெட் கதை: முடிக்கமுடியாததை, பார்மோநாட்டுடன் பரப்புவது
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ் நாடு, மிசோரம், மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பொியளவு மரங்களை மேம்படுத்துவது ஒரு கனவாகும். வரைபடம், கண்காணிப்பு, மற்றும் இலட்சக்கணக்கான மரங்களை நிதானமாக, துல்லியமற்ற, மற்றும் திறனற்ற முறையில் மேம்படுத்துப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து பார்மோநாட்டில் பங்குதாரராக இணைந்ததிலிருந்து கோத்ரேஜ் அக்ரோவெட் அமைப்பு சுமார் 1,00,000 ஏக்கர் நிலத்தை டிஜிட்டலைஸ் செய்து ஸ்டேட் ஆப் தி ஆர்ட் செயற்கைகோள் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது.

முக்கிய செயல்பாடுகள்:
30,000 விவசாயிகளின் திறன் வளர்த்தல்: உயா;ந்த பயிர் ஆரோக்கியம் மற்றும் பாசன ஆய்வுகள் விவசாயிகள் தங்களின் தொழில்நுட்பங்களை உகந்ததாக்க உதவுகிறது.
முயற்சி குறைந்த மரங்களை மேம்படுத்துதல்: மரத்தின் எண்ணிக்கை, வயதின் ஆய்வு, மற்றும் ஆதார வரைப்படம் உருவாக்குவது தடையற்றதாக இருக்கிறது.
உண்மையான முடிவுகளை எடுக்க: அதிகளவில் உள்ள தரவு மற்றும் பணி மேலாண்மை அமைப்பு, செயல்பாட்டு குழுக்கள் முன்பில்லாதவகையில் சிறப்பு பெற்றது.
தாக்கம்
அதிக மகசூல்: முன்கூட்டியே கண்காணித்து முன்னரே தலையிடும் நிலையில், உற்பத்தியை அதிகாிப்பது.
விலை சேமிப்பு: இடுபொருட்களான தண்ணீர் மற்றும் உரங்களின் துல்லிய பயன்பாடு, குறிப்பிட்ட அளவு விலையை குறைக்கிறது.
நிலைத்தத்தன்மை: கோத்ரேஜ் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை பின்பற்றுவதனால், அதன் பாதஅச்சை குறைக்கிறது.

விஸ்வமாதா பண்ணை: இயற்கையும், புதிய தொழில்நுட்பமும் சேரும் இடம். இயற்கை வேளாண்மையில் வல்லுநராக, விஸ்வமாதா பண்ணை, இயற்கை செயல்பாடுகனை பிடித்துக்கொண்டு மகசூலை அதிகாிக்கின்றன. பார்மோநாட்டின் கூர்மையான கருவிகள் விஸ்வமாதா பண்ணைக்கு 2019 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை வேளாண்மையை நோக்கமாக மண் ஆரோக்கியத்தை கண்காணிப்பதிலிருந்து உகந்த நேரத்தில் பாசனம் செய்வதற்கு உதவுகிறது.

முக்கிய செயல்பாடுகள்
இயற்கை சான்றிதழ்: துல்லிய வேளாண்மை இயற்கை தரக்கட்டுபாட்டோடு உடன்படுவதை உறுதிபடுத்துகிறது.பின்னர் சான்றிதழை சுலபமாக பெறலாம்.
மண் ஆரோக்கிய கண்காணிப்பு: பார்மோநாட்டின் மண் இயற்கை காிம மாதிரி சிறப்பாக மண் மேலாண்மை செய்வதற்கு உதவுகிறது.
விரிவாக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை: விற்பனை சங்கிலியின் வெளிப்படைத்தன்மை கொண்ட தீர்வுகள் நுகா;வோரின் நம்பிக்கையை பெருக்கியுள்ளது.

தாக்கம்:
அதிக மகசூல், இயற்கையாக: கடுமையான இயற்கை தரக்கட்டுபாட்டை பின்பற்றியபோதும் விசுவமாதா பண்ணை அற்புதமான அறுவடையை அடைந்துள்ளது.
உகந்த இடுபொருட்கள்: பயிருக்கு தேவையான இடுபொருட்கள் மட்டும் பயன்படுத்துவதால், வீணாவதை குறைக்கிறது.
சீதோஷண தாங்குதிறன்: உண்மை நிலை தரவு கொண்டு மாறும் வானிலை அமைப்பிற்கு பண்ணை ஏற்கிறது.

இ) அசோக் ஷிண்டேவின் கரும்பு வெற்றி
முறையற்ற பாசன மேலாண்மை மற்றும் பூச்சி தாக்கங்கள், விவசாயத்தை சவாலான முயற்சியென மஹாராஷ்டிராவில் உள்ள சிறு கரும்பு விவசாயி அசோக் ஷிண்டே கருதுகிறார். பார்மோநாட்டின் துல்லிய கருவிகள் 2020 ஆம் ஆண்டிலிருந்து பண்ணை மாறத்தொடங்கியது. செயற்கைகோள் தரவை பயன்படுத்தி, அசோக் உகந்த நேரத்தில் பாசனம் செய்து, பூச்சிகள் கட்டுப்படுத்துவது, மற்றும் மண் ஆரோக்கியமும் உயர்ந்தது.

முக்கிய செயல்பாடுகள்
மென்மையான பாசனம்: என்.டி.டபிள்யு.ஐ மற்றும் தண்ணீர் ஆவியாதல் (Evapotranspiration) மூலம் கிடைக்கும் தரவை அறிகுறியாக வைத்து தண்ணீர் பயன்பாட்டை உயா;த்தப்பட்டது.
பூச்சி கட்டுபாடு: முன்கூட்டியே கண்டுபடித்து, உகந்த செயல்பாடுகள் மூலம் பாதிப்பு குறைக்கப்பட்டது.
அறிவு பங்கீடு: அசோக் அவருடைய வெற்றியை இதர விவசாயிகளோடு பகிர்ந்து கொண்டு, உள்ளூர் வேளாண்மை புரட்சியை உருவாக்கி ஊக்கமளித்துள்ளார்.

தாக்கம்:
இலாபத்தை அதிகாிக்கிறது: குறைந்த இடுபொருள் செலவோடு, அதிக மகசூலும் வருமானத்தை மாற்றியுள்ளது.
தரவு – எடுத்துச்செல்லும் நம்பிக்கை : உள்கருத்துக்கள் அனைத்தும் குத்துமதிப்பாக செய்யப்படும் வேலையை உதாித்தள்ளியது. இதனால் அசோக்கின் திறன் உயா;ந்து மென்மையான முடிவுகளை எடுக்க முடிந்தது.

ஈ) ஐஎப்பிஆர்ஐ யின் உதவி: மஹாராஷ்டிராவில் உள்ள விரிவாக்க சேவையை ஆய்வு செய்தல்.
மஹாராஷ்டிராவில், லாட்டூர், ஒஸ்மனபாத், மற்றும் பிட் போன்ற பகுதிகளில், வேளாண்மை விரிவாக்க சேவைகளின் தாக்கத்தை ஆய்வு செய்வது சவாலாக இருந்தது. சாகுபடி தொழில்நுட்பங்களை உயர்த்துதல் மற்றும் மகசூலை அதிகாிக்க செய்தல், சாகுபடி செலவுகள், மகசூல், இலாபங்கள், மற்றும் நிலைத்த தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் போன்ற காரணிகளுக்கு முக்கியத்துவம் தருதல் குறித்த அனைத்து சேவைகளும் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையத்தோடு பார்மோநாட் 2023 ஆம் ஆண்டு இணைந்து தொலையுணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண்மை நிலங்கள் டிஜிட்டலைஸ் செய்யப்படுகிறது. இது பயிர் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம், வளர்ச்சி அமைப்புகள், மகசூல்கள், மற்றும் மண்ணின் சூழ்நிலைகள் போன்றவற்றின் முக்கிய தரவுகள் அளிக்கிறது. பாரம்பாிய ஆய்வில் செலவு குறைந்த மாற்றுத் தொழில்நுட்பங்களை, ஐஎப்பிஆர்ஐ யின் ஆராய்ச்சிக்கு உதவி மற்றும் வேளாண் சேவை குறித்த ஆய்வின் தொலையுணா;வின் மதிப்பு சார்ந்த விளக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.

முக்கிய செயல்பாடுகள்:
தரவு சார்ந்த ஆராய்ச்சி : பயிர் கண்காணிப்பின் செயற்கைகோள் தரவு மற்றும் சமயங்களில் மண் ஆரோக்கியம், விரிவாக்க சேவையின் தாக்கத்திற்கான மிக சாியான அளவீடு.
செலவு குறைந்த தரவு சேகாிப்பு: தொலைஉணர்வு அனைத்து கள ஆய்வுகளை அகற்றிவிட்டு, செலவு குறைவதோடு, முழுமையான உள்கருத்துக்களை வழங்கவும் செய்கிறது.
ஐஎப்பிஆர்ஐ யின் ஆராய்ச்சிக்கான உதவிகள்: மகசூல், ஆதார பயன்பாடு மற்றும் இலாபம் குறித்த நிலைத்த மற்றும் இயல்பான சாகுபடி தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த ஆய்விற்கு உதவுகிறது.
தாக்கம்
உயர்ந்த புரிதல்: சிறந்த விரிவாக்க சேவைகளின் மூலம் கிடைத்த தரவு முக்கிய உள்கருத்துகள் வழங்கியதால் விவசாயிகளின் மகசூல் அதிகாிப்பதற்கு உதவுகிறது.
• நிலைத்தத்தன்மையின் உள்கருத்துக்கள்: இந்தத் திட்டம் மஹாராஷ்டிராவில் நிலைத்த சாகுபடி செயல்பாடுகளின் பயன்கள் மேற்கோள்காட்டுகிறது.

உ) டி.ஆர்.எஸ்.டி.01 பங்குதாரர் : சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை விரிவுப்படுத்துதல்
நிலைத்த விளைபொருட்களான வளர்ந்துவரும் தேவையுடன், நிலப்படர்வின் மாற்றம், காிம வாயு வெளியிடுவதை குறைக்கும் கண்காணிப்பு, மற்றும் வேளாண் வினியோக சங்கிலிகள் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், அதேசமயத்தில் சுற்றுச்சூழல் தரக்கட்டுபாடுகளையும் பின்பற்றுதல் போன்று டி.ஆர்.எஸ்.டி.01 சந்தித்த சவால்களை கண்காணிக்க உதவுகிறது.
பார்மோநாட், டி.ஆர்.எஸ்.டி.01 உடன் இணைந்து 2021 ஆம் ஆண்டிருந்து அதன் தொலைஉணர்வு தொழில்நுட்பத்தை, டி.ஆர்.எஸ்.டி.01 யின் விற்பனை சங்கிலி தீர்வோடு ஒருங்கிணைக்கிறது. இந்த இணைப்பு நில பயன்பாடு, உயிர்பல்வகைமை, மற்றும் காிம வாயு வெளியிடுவதை தடுத்தல் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு உதவுகிறது. அதேசமயத்தில் விற்பனை சங்கிலி பண்ணை முதல் நுகர்வோர் வரை முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

முக்கிய செயல்பாடுகள்:
முழுமையான சுற்றுச்சூழல் கண்காணிப்பு: செயற்கைகோள் தரவு, சாகுபடி செயல்பாடுகளில், நில பயன்பாட்டு மாற்றம், தண்ணீர் மேலாண்மை, மற்றும் உயிர்பல்வகைமை, நிலைத்தத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றை கண்காணிக்க உதவுகிறது.
விற்பனை சங்கிலியின் வெளிப்படைத்தன்மை: வேளாண் பொருட்களின் உதயம், விரிவாக்கப்பட்ட வினியோக சங்கிலியின் வெளிப்படைத்தன்மையை தடையில்லாமல் விற்பனை சங்கிலி வழங்குகிறது.
நிலைத்த தாக்கத்தின் ஆய்வு: நமது திட்டம் காிம வாயு வெளியீட்டை குறைப்பதையும், சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஆய்வு செய்து, சிறந்த ஆதார மேலாண்மை செய்வதற்கு உதவுகிறது.
தாக்கம்
விரிவடைந்த நுகர்வோர் நம்பிக்கை: நிலைத்த ஆதார வேளாண் விளைபொருட்களின் விற்பனை சங்கிலி வெளிப்படைத்தன்மை நம்பிக்கையை வளர்த்துள்ளது.
நிலைத்த தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்: தொலைஉணா;வு, உயா;த்தப்பட்ட நிலம் மற்றும் தண்ணீர் மேலாண்மை உட்பட நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்களை பெருக்குவதற்கு உதவுகிறது.
• பயனுள்ள ஆவணங்கள்: துல்லிய சுற்றுச்சூழல் தரவு, தீர்க்கமாக முடிவுகள் மற்றும் நிலைத்தத்தன்மையின் நோக்கத்தோடு ஒன்றி எடுக்க உதவுகிறது.

எதனால் இது செயல்படுகிறது:
பார்மோநாட்டின் வெற்றி நவீன தொழில்நுட்பத்தோடு விவசாயிக்கு உகந்த கருவிகளோடு இணைக்கும் இயல்பு இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்பத்தின் படிப்பினையோடு, கைபேசி செயலி விவசாயிகள் பயன்படுத்துவத்றகு மிக சுலபமாக இருப்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையான தரவுகளோடு, விவசாயிகள் அவர்களுக்கு தேவையானபோது செயல்படுத்தக்கூடிய கருத்துக்களை பெறுகின்றனர். துல்லிய கருவிகள விலை குறைவாக இருப்பதால் சிறு விவசாயிகளுக்கு கிடைக்கும்படி செய்கின்றனர். செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட துல்லியத்தோடு, அல்காரிதம் ஆய்வு செய்யப்பட்ட தரவு மற்றும் குறிப்பிட்ட பண்ணை சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வுகள் வழங்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட தாக்கம்: உயர்த்துவதற்கான கொள்கை அணுகுமுறைகள்
இந்த பயன்கள் தேசியளவில் பரவலாக்க, நாங்கள் பாிந்துரைப்பது
டிஜிட்டல் கல்வி முறையில் முதலீடு செய்தல்: டிஜிட்டல் கருவிகள் சிறப்பாக பயன்படுத்தும் திறனை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்கவித்தல்: செயற்கை நுண்ணறிவு, தொலையுணர்வு,மற்றும் விற்பனை சங்கிலியின் புதிய தொழில்நுட்பத்திற்கு உறுதுணையாய் இருக்கிறது.
நிலைத்தத்தன்மையில் கூடுதல் வருமானம் பெற: தண்ணீர் சேமிப்பு, குறைந்த இரசாயன பயன்பாடு, மற்றும் உயிர்பல்வகைமை பாதுகாப்பு.
உயர்த்தப்பட்ட இணைப்பு: துல்லிய வேளாண்மையின் திறனை வெளிப்படுத்த கிராம பகுதியில் இணையதளம் சுலபமாக பயன்படுத்த உதவுகிறது.

பார்மோநாட்டுடன் முன்னேறும் பாதை
பார்மோநாட்டின் வேர்கள், இந்தியாவில் திடமாக அமைக்கப்பட்டது, அதன் தாக்கம் துணைக்கண்டத்தையும் தாண்டி பரவுகிறது. இந்த நிறுவனம் சுமார் 20 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது, இது சர்வதேச அளவில் 2,00,000 விவசாயிகளுக்கு இதன் புதிய தீர்வுகள் வழங்கப்படுகிறது. பரப்பளவில் 10 மில்லியன் ஹெக்டர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. பார்மோநாட்,உண்மையாக வேளாண்மையை சா;வதேச அளவில் பரவலாக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியா முதல் ஆப்ரிக்கா, லத்தீன் அமொிக்கா, மற்றும் அதைத்தாண்டி, தரவு மூலம் வழிநடத்தி, அளக்கப்பட்ட தீர்வுகளை, மகசூல் அதிகாிப்பதற்கு, நிலைத்ததன்மை விரிவுபடுத்துவதற்கு, மற்றும் சீதோஷன மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை சாிசெய்வதற்கு உலக விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது. கூர்மையான கருவியோடு உள்ளூர் அறிவை இணைப்பதனால், பார்மோநாட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், பிரதிபலிப்புத் தாக்கத்தை உருவாக்கி, சர்வதேச உணவு உத்திரவாதத்திற்கும், சுற்றுச்சூழல் நிலைத்தத்தன்மையை அடைவதற்கும் பங்களிக்கிறது.

பார்மோநாட்ஸ் செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மை, வெறும் தொழில்நுட்பம் – இது ஒரு மாற்றம். தரமான கருவி மற்றும் இந்திய விவசாயிகளின் நேரமற்ற தாங்குதிறன் இணைந்து, அதிக நிலைத்த, உற்பத்தி பெறக்கூடிய, மற்றும் இலாபம் தரக்கூடிய வேளாண்மை எங்கு இருக்கிறதோ, அங்கு இந்த அணுகுமுறையே எதிர்காலமாக உருவாக்கும்.

இந்த கருவிகள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்கசெய்யும் எதிர்காலத்தை கற்பனை செய்யுங்கள். வறட்சியும், பூச்சிகளும் இனி அச்சுறுத்தலாக இல்லாமல் மேலாண்மை செய்யக்கூடிய சவாலாகவே இருக்கிறது. இந்த இடத்தை அடைவதற்கு தொழில்நுட்பத்தை தாண்டிய ஒன்று நமக்குத் தேவை. கொள்கை உருவாக்குபவர்கள் ஒருபடி உள்ளே நகர்ந்து, கிராம இணைப்பில் முதலீடு செய்தல், டிஜிட்டல் கல்வி, மற்றும் நிலைத்த சாகுபடியை பயன்படுத்துதல். இது ஒன்றாக எடுக்கும் முயற்சி- ஆனால் ஒன்று மதிப்பிடக்கூடியது என்னவென்றால் ஒவ்வொரு துண்டும் ஆற்றல்மிக்கவை.

ஏனென்றால் ஒருநாளின் கடைசியில் இது வெறும் தொழில்நுட்பமல்ல, இது மக்களை பற்றியது, இது விவசாயிகளுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்து மீண்டும் கனவுகாண, அவர்களின் வயல்களை அழுத்தம் தரும் ஆதாரமாக காணாமல், நம்பிக்கையின் அறிகுறியாக திகழ்கிறது.

ஹனி ஜெயின்


Honey Jain
310-A, # 88 Borewell Road,
Opposite Whitefield Post Office
Whitefield, Bengaluru
Karnataka, Pin: 560066
E-mail: support@farmonaut.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2024, வால்யூம் 26, இதழ் 4

Please follow and like us:
Pin Share
அண்மைய இடுகைகள்
Facebook
YouTube
Instagram