வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பு – இந்தியாவிலுள்ள இளைய தலைமுறைக்கான நிலையான தீர்வு


இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதால் வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலைத்த உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிராம வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன. இந்தத் தலைப்பில் இளைஞர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளதால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் எப்படி வேளாண்மை உயிர்ச்சூழலியலில் நிலைத்த தீர்வுகள் குறித்து உருவாக்கும் திறனை வெளிப்படுத்துகிறது. தற்போதைய செயல்முறையையும் கலந்துரையாடி, இளைஞர்களின் திறனை ஒருங்கிணைக்கிறது.


இந்திய இளைஞர்கள் சந்தித்த பல்வேறு சவால்களில், வேலையின்மை, கல்வியை அடைய இயலாதநிலை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தேசிய இளைஞர் கோட்பாட்டின் (2014) படி மொத்த இந்திய மக்கள் தொகையில் 27.5 விழுக்காடு 15-29 வயது வரம்பை சார்ந்தவர்கள் இளைஞர்களாக வகுக்கப்படுவர். இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் இவர்களின் பங்கு 34 சதவிகிதமாக இருக்கிறது. வேலையில்லாத நிலையே தகுதி மற்றும் திறன்கள் கொண்ட இந்திய இளைஞர்களுக்கு அழுத்தம் தரும் காரணியாகும். சாியான வேலை வாய்ப்பு இல்லாததால் கோபமும், வருத்தமும் இளைஞர்கள் மத்தியில் பெருகிவருகிறது. கூடுதலாக, இலட்சக்கணக்காக இளைஞர்கள் ஏழ்மை, தேவையான வசதி இல்லாததாலும், சமூக தடைகளால் அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால் இவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி தடைபடுகிறது. அதை தாண்டி சுற்றுச்சூழல் பேரழிவான, சீதோஷன மாற்றம், காடு அழிப்பு மற்றும் மாசுபாடு ஆகியவை இலட்சக்கணக்கான வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாக, வேளாண்மையை, வருமானத்தின் முதன்மை ஆதாரமாக இருக்கும் கிராமப்புற பகுதிகளில் சவாலாக இருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுவதால், மக்கள் தொகையில் பெரும்பாலானோர் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் குறிப்பாக சிறுபான்மையின சமூகங்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் மிக மோசமான நிலையில் உள்ளது, மேலும் ஆதாரம் மற்றும் வாய்ப்புகள் குறைந்த அளவே அடைய முடிகிறது.

வேளாண்உயிர்ச்சூழலின் செயல்பாடு:
இந்தியாவின் வேளாண்மை பிரிவு சாதாரண சாகுபடி செயல்முறைகள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் அழிந்து, நீண்ட கால நிலைத்தத்தன்மையே கேள்விக்குறியாகிறது. சிறு பரப்பளவு நிலத்தை கொண்ட விவசாயிகள், வேளாண்மை பணியில் முக்கிய பங்கு வகித்தாலும், பொருளாதார சவால்கள் சந்தித்தும், ஆதாரங்கள் குறைவாகவே அடையும் நிலையும் இருக்கிறது. இந்த சவால்கள், சீதோஷன மாற்றம், மண் சீர்கேடு, மற்றும் தண்ணீர் பற்றாகுறை ஆகியவை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது விவசாயத்தின் மாற்று அணுகுமுறைகள் உடனடியாக தேவைப்படுவதை மேற்கோள் காட்டுகிறது.
வேளாண்உயிர்ச்சூழலியல் நமக்கு முழுமையான அணுகுமுறையை விவசாயத்திற்கு அளிக்கிறது.இது வேளாண்மை முறையில் உயிர்ச்சூழல் கோட்பாடுகள் ஒருங்கிணைப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. பயிர் பல்வகைமை, இயற்கை பூச்சி மேலாண்மை, மற்றும் முழுமையான தண்ணீர் பயன்பாடு ஆகியவை உள்ளடக்கிய முக்கிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் விவசாய முறைகளின் நிலைத்தத்தன்மைக்கு பங்களிக்கிறது. வேளாண்உயிர்ச்சூழலின் முக்கிய கோட்பாடுகள் பெட்டி 1-ல் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், வேளாண்உயிர்ச்சூழல் அடிப்படை தொழில்நுட்பங்கள் பல்வேறு புவியியல் பகுதிகளில் நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் பின்பற்றப்பட்டது. பல வருடங்களாக தனி நபர்களான ஸ்ரீபத் தபோல்காரின் ‘பிரயாக் பாிவார்” (மஹாராஷ்டிரா), இயற்கை விவசாய முறைகளை பின்பற்றும் பாஸ்கர் சாவே (குஜராத்), நாராயண ரெட்டி (கர்நாடகா), மற்றும் நம்மாழ்வார் (தமிழ் நாடு) ஆகியோரை நன்கு அறிவோம். பட்ஜெட் இல்லாத இயற்கை விவசாயம் போன்ற சமீபகால இயக்கங்கள் மட்டும் பொியளவில் விவசாய சமூகங்களின் அணித்திரட்டலாக உருவாகி வருகிறது.

வேளாண் உயிர்ச்சூழல் தீர்வாக செயல்படுகிறது
இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.மேலும் வேளாண்மையில் இவர்களது ஈடுபாடு பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது.

1. கண்டுபிடிப்புகள் மற்றும் ஏற்கும்தன்மை – இளைய விவசாயிகள் வேளாண் சவால்களுக்கு புதிய முன்னோக்கு பார்வை, கற்பனைத்திறன், மற்றும் புதிய தீர்வுகள் கொண்டு வருகின்றனர்.புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளை பின்பற்றும் இவர்களின் இயல்பு, சீதோஷன மாற்றம் மற்றும் இதர சவால்களை சந்திக்கும் நிலையில், இவற்றை தாங்கும்திறனை செயல்படுத்துவது இந்த பிரிவில் மிகவும் அவசியம்.

2. திறன் வளர்ப்பு – வேளாண் உயிர்ச்சூழல் நவீன வேளாண் தொழில்நுட்பங்களோடு பாரம்பாிய அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள் அளிப்பதனால், இளைஞர்கள் தரமான திறன்களை பெறுவர். இது அவர்களை விவசாயியாகவோ அல்லது தொழில்முனைவோராக உறுதியாக வெற்றி பெறுவர்.

3. நிலைத்தத்தன்மை: வேளாண்உயிர்ச்சூழல் நிலைத்த வேளாண்மையை ஊக்குவிக்கிறது.இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்வகைமை, மற்றும் இயற்கை ஆதார மேலாண்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இளைஞர்களை வேளாண்உயிர்ச்சூழல் அணுகுமுறைகளை பின்பற்றுவதில் ஈடுபடுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு இந்த செய்முறைகளின் தொடர்ச்சியை உறுதிபடுத்துகிறது.

4. பொருளாதார உயர்வுதிறன்– இந்தியாவில் குறிப்பாக கிராம பகுதியில் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேளாண்மை, முதன்மை வாழ்வாதாரமாக இருக்கிறது. வேளாண்உயிர்ச்சூழலில் இளைஞர்களை ஈடுபடுத்தினால், நாம் பொருளாதார உயர்வு, தொழில்முனையும்தன்மை மற்றும் கிராம வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.

5. உணவு உத்திரவாதம்– வளர்ந்துவரும் மக்கள் தொகை மற்றும் மாறிவரும் உணவின் தேர்வுகளை வைத்து, உணவு உத்திரவாதத்தை உறுதிபடுத்துவது அழுத்தம் தரக்கூடிய ஒன்றாகும். பல்வகைமை பயிர் சாகுபடி முறைகள் , இயற்கை வேளாண்மை, மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி ஆகிய வேளாண் உயிர்ச்சூழல் செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் உணவு இறையாண்மை மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்திற்கு பங்களிக்கிறது.

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு – சீதோஷன மாற்றங்கள் ஏற்படும் எதிர்மறை தாக்கங்களை சமாளிக்க, உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு, மண் ஆரோக்கியம் , மற்றும் தண்ணீர் மேலாண்மை ஆகிய வேளாண்உயிர்ச்சூழல் செயல்முறைகளை ஊக்கப்படுத்துகிறது. வேளாண்உயிர்ச்சூழலில் இளைஞர்களை ஈடுபடுத்தினால் இவர்கள் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாக மாறிவிடுவர், நிலைத்த நில பயன்பாடு மற்றும் இயற்கை ஆதார பாதுகாப்பை ஊக்குவித்தல்.

7. சமூக உயர்வு – வேளாண்உயிர்ச்சூழல், சமூக அடிப்படையிலான அணுகுமுறைகளை விவசாயத்திற்கு, ஒருங்கிணைந்த செயல்பாடு, மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு ஊக்கப்படுத்துகிறது. சமூக முயற்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தி சமூக ஒற்றுமையை ஊக்கப்படுத்தி அவர்களை உயர்த்தி, ஒருங்கிணைந்து உள்ளூர் சவால்களுக்கு தீர்வுகாண உதவுகிறது.

8. தொழில்முனையும்திறன் மற்றும் விற்பனை இணைப்புகள் – இளைஞர்கள் மத்தியில் வேளாண்மையில் தொழில்முனையும்திறனை ஊக்குவித்து மதிப்பு கூட்டுதல், பல்வகைமை, மற்றும் சந்தை பயன்பாடு ஆகியவற்றிற்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கலாம். விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுகள் போன்ற முயற்சிகளை சிறுநில விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களுடைய விளைபொருட்களை சந்தைப்படுத்தலாம், நியாயமான விலை குறித்து கலந்தாலோசிக்கலாம், மற்றும் இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சந்தையின் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இளைஞர்கள் தலைமையில் வேளாண்தொழில் நிறுவனங்களான இயற்கை உணவு மையம், மற்றும் உயிர்-வாழ்விற்கு உகந்த வேளாண் பதப்படுத்தும் மையம், ஆகியவை கிராமத்தில் வேலை வாயப்பு உருவாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்கு வகிக்கும்.

வேளாண் உயிர்ச்சூழலில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான தற்போதைய வழிமுறைகள்
இந்தியாவில் வேளாண்உயிர்ச்சூழல் பெருமளவில் பரப்புவதற்கு இளைஞர்களை ஈடுபடுத்துவது மிக முக்கியம். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனையும் திறன் ஆகியவற்றில் முதலீடு செய்யும்போது, நிலைத்த வேளாண்மையில் வளர்ச்சியடைய இளைஞர்கள் மையப்பங்கேற்று செயல்படுகின்றனர்.வேளாண்மையில் இளைஞர்கள் பங்கின் முக்கியத்துவத்தை இந்தியா அங்கீகாித்தது. மேலும் வேளாண்உயிர்ச்சூழலில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்த களத்தில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களின் திறனை விளக்குகிறது.

சில முக்கிய முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது
1. திறன் வளர்ப்பு திட்டங்கள்: இந்திய அரசு, பிரதான மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா மற்றும் தீன் தயால் எபத்யாய கிராமீன் கௌஷல்ய யோஜனா போன்ற திட்டங்கள் வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த திட்டங்கள், நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்ற தேவையான அறிவு மற்றும் திறன்களை வளர்க்கின்றனர்.
2. இளைஞர்கள் தொழில்முனையும் திட்டங்கள்: வேளாண்மை முறை உட்பட இளைஞர்கள் மத்தியில் தொழில்முனையும் தன்மையை வளர்த்துவிடுவதே, அட்டல் புதிய தொழில்நுட்ப அமைப்பு மற்றும் ஸ்டாடப் இந்தியா போன்ற முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டங்களில் நிதியுதவி, வழிநடத்தும்தன்மை, மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இளம் வேளாண் தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது.இது நிலைத்த வேளாணமையில் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு ஊக்கப்படுத்தப்படுகிறது.
3. வேளாண்உயிர்ச்சூழல் சாகுபடியை ஊக்குவித்தல்: அரசு முகமைகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் பொது சமுதாய நிறுவனங்கள் பயிற்சி திட்டங்கள், செய்முறை விளக்கங்கள், மற்றும் விரிவாக்க சேவைகளிள் மூலம், வேளாண்உயிர்ச்சூழல் சாகுபடியை பாிந்துரைக்கிறது. இந்த முயற்சிகள் இளைஞர்கள் மத்தியில் வேளாண் உயிர்ச்சூழல் பயன்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை பின்பற்றும் வகையில் செய்முறை உதவியை வழங்கிவருகிறது.
4. இளம் ஈடுபாட்டு அமைப்பு : இளம் தலைமையிலான நிறுவனங்கள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் இணையவழிக் குழுக்கள் போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் இணைப்புக் குழுக்கள், வேளாண்உயிர்ச்சூழலில் இளைஞர்களை ஈடுபடுத்த வழிநடத்துகிறது. இந்த அமைப்புகள் இளைய விவசாயிகள் மற்றும் வேளாண்-தொழில்முனைவர்கள் மத்தியில் அறிவை பகிர்ந்துகொள்ளுதல், இணைந்து செயல்படுதல், மற்றும் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் ஆகியவை நடைபெற உதவுகிறது.
5. கொள்கை உதவி: இந்திய அரசு இயற்கை வேளாண்மை, ஊக்கத்திட்டங்கள், நிலைத்த வேளாண்மை அமைப்புகள், மற்றும் வேளாண் சுற்றுச்சூழல் மானியங்கள் உட்பட வேளாண்உயிர்ச்சூழல் சாகுபடிக்கு உதவி வழங்கும் கொள்கை அளவீடுகளை அறிமுகம் செய்தது.இந்த கொள்கைகள் வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றி பரவ செய்வதற்கான உகந்த சூழலை உருவாக்குகிறது.

வேளாண்உயிர்ச்சூழலியல்: ஒரு நிலைத்த தீர்வு
வேளாண் உயிர்ச்சூழல், இளைஞர்கள் சந்திக்கும் சவால்களுக்கு நிலைத்த தீர்வு காணவும், அவர்களின் திறன் வளர்க்கவும் உதவுகிறது.வேளாண்உயிர்ச்சூழல் அவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து முழுமையான தீர்வு காண உதவுகிறது.

வேளாண்உயிர்ச்சூழல், இந்த சவால்களுக்கு தீர்வுகாணும் முழுமையான அணுகுமுறையாகவும், இந்திய இளைஞர்களின் திறனை உயர்த்தவும் உதவுகிறது. உயிர்ச்சூழல் கோட்பாடுகள் வேளாண்மை தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைப்பதால், வேளாண்உயிர்ச்சூழலியல் நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தி மகசூல் அதிகாிக்கிறது. அதே வேளையில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் குறித்த திறன் வளர்ப்புத் திட்டங்கள் வெற்றிகரமான விவசாயிகளாகவும், தொழில்முனைபவர்களாகவும் உருவாக இளைஞர்களுக்கு அறிவு மற்றும் திறன் இருக்க வேண்டியது அவசியம். இயற்கை வேளாண்மை, மதிப்பு கூட்டும் , பதப்படுத்துதல், மற்றும் உயிர்ச்சூழல் சுற்றுலா போன்ற தொழில்முனையும் வாய்ப்புகள் நிலைத்த வாழ்வாதார தேர்வாக உருவாக்குகிறது. மேலும் கிராம வளர்ச்சிக்கு சிறந்த பங்களிக்கிறது. வெளியிடு பொருட்களை குறைப்பதனால், செலவு குறைந்து உற்பத்தியாளர்களின் நிகர வருமானம் அதிகாிக்கிறது.

இன்னும் கூடுதலாக, உயிர் பல்வகைமை பாதுகாப்பு, மண் ஆரோக்கியம், மற்றும் தண்ணீர் மேலாண்மை போன்றவை வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தி, சீதோஷண மாற்றங்களின் எதிர்மறை தாக்கத்தை தடுக்கிறது. இளைஞர்களை வேளாண்உயிர்ச்சூழலில் ஈடுபடுத்துவதால், சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாக மாறுகின்றனர். நிலைத்த பண்ணை பயன்பாட்டை, மற்றும் இயற்கை ஆதார பாதுகாப்பை உயர்த்துகின்றனர். சமூக அடிப்படையிலான அணுகுமுறைகள் விவசாயத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒத்துழைப்பும் ஊக்கப்படுத்துகிறது. மேலும் சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் திறன் இணைந்து உள்ளூர் சவால்களை தீர்க்கின்றனர். கூடுதலாக வேளாண்உயிர்ச்சூழலியல் இடுபொருள் செலவு குறைத்து, பயிர் தாங்குதிறனை உயர்த்தி, மற்றும் சந்தையை நேரடியாக விரிவாக்கம் செய்வதனால் சிறிய விவசாயிகள் பொருளாதார பயன்களை அடைகின்றனர். வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் பின்பற்றுவதால், இளைஞர்கள் தாங்கும்திறன் கொண்ட சாகுபடி அமைப்புகள் வளர்க்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் அதிர்ச்சிகள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தாங்கும்தன்மை ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், வேளாண்உயிர்ச்சூழல் நிலைத்த தீர்வாக வளர்ந்துவருகிறது. இது இளைஞர்களின் திறன் மட்டும் வளர்க்காமல், உணவு உத்திரவாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராம வளர்ச்சிக்கும் பெரும்பங்காக இருக்கிறது.

பெட்டி 1 : வேளாண்உயிர்ச்சூழலியலின் முக்கிய கோட்பாடுகள்
1. உயிர்பல்வகைமை:வேளாண் அமைப்புகளில் வேளாண்உயிர்ச்சூழல் உயிர்பல்வகைமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பல்வகைமை உயிர்ச்சூழல் அமைப்புகள், பூச்சிகள், நோய்கள், மற்றும் சுற்றுச்சூழல் அழுத்த காரணிகளை அதிகமாக தாங்கும்தன்மை இருக்கிறது. வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் பயிர்பல்வகைமை, வேளாண்காடுகள், மற்றும் இயற்கை வாழிடங்களை அங்கேயே அல்லது அருகில் உள்ள சாகுபடி பகுதிகளில் பாதுகாப்பதில் ஈடுபடுகின்றது.
2. மண் ஆரோக்கியம்: வேளாண்உயிர்ச்சூழல் நிலைத்த வேளாண்மையில் மண் ஆரோக்கியம் குறித்த முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. தொழில்நுட்பங்களான பயிர் சுழற்சி, மூடுபயிர்கள், மற்றும் மண் வளம், அமைப்பு, மற்றும் ஊட்டச்சத்து சுழற்சியை இரசாயன இடுபொருட்கள் அதிகளவு சார்ந்திருக்காமல், உயர்த்தும் இயற்கை மண் உரங்கள்.
3. உயிர்ச்சூழல் பூச்சி மேலாண்மை: இரசாயன பூச்சிக்கொல்லிகளில் மட்டும் சார்ந்திருக்காமல், வேளாண்உயிர்ச்சூழல் ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை அணுகுமுறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இது உயிரியல் கட்டுபாடு, பயிர் சுழற்சி, பிறப்பிட முக்கியத்துவம், மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பூச்சிகளை எதிர்க்கும்திறன் கொண்ட பயிர் இரகங்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றை உட்பட்டுள்ளது.
4. உள்ளூர் அறிவு மற்றும் பங்கேற்புடன் கூடிய அணுகுமுறைகள்: வேளாண்உயிர்ச்சூழல் உள்ளூர் அறிவு மற்றும் விவசாயிகள், ஆாரய்ச்சியாளர்கள், மற்றும் இதர வல்லுநர்களின் பங்கேற்புடன் கூடிய முடிவெடுக்கும் செய்முறைகளை ஊக்குவிக்கிறது. உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து, வேளாண் உயிர்ச்சூழல் முயற்சிகள், குறிப்பிட்ட சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் உகந்தவாறு மாற்றி, அதன் பயன்பாடு மற்றும் ஏற்கும்தன்மையை அதிகாிக்கிறது.
5. நிலைத்தத்தனமை மற்றும் தாங்குதிறன்: வேளாண்உயிர்ச்சூழலியல் தாங்குதிறன் கொண்ட வேளாண்மை அமைப்புகளை வளர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டு மாறும் சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி, நீண்டகால உணவு உத்திரவாதத்திற்கு உறுதியளிக்கிறது. வெளியிடுபொருட்களை குறைத்து, உயிர்ச்சூழல் செயல்முறைகளை அதிகாித்ததனால், வேளாண் உயிர்ச்சூழல் சாகுபடி தொழில்நுட்பங்கள், உணவு உற்பத்தி அமைப்பின் நிலைத்தத்தன்மைக்கு பங்களிக்கிறது.

விகாஸ் யாதல் மற்றும் பங்கே பிஹாரி


Vikash Yadav
SRF ICAR-Indian Institute of Soil and Water
Conservation (IISWC)
218, Kaulagarh Road Dehradun
Uttarakhand, India -248195
E-mail: vikashyadavbkt2000@gmail.com

Bankey Bihari
Principal Scientist (Agricultural Extension)
ICAR-Indian Institute of Soil and Water
Conservation (IISWC)
218, Kaulagarh Road Dehradun
Uttarakhand, India -248195

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2024, வால்யூம் 26, இதழ் 2

Please follow and like us:
Pin Share
அண்மைய இடுகைகள்
இளைஞர்களை வேளாண்மையில் ஈர்க்கச் செய்யவும் நிலைத்திருக்க செய்வது (ஆர்யா)

இளைஞர்களை வேளாண்மையில் ஈர்க்கச் செய்யவும் நிலைத்திருக்க செய்வது (ஆர்யா)

இந்தியாவின் வேளாண் வளர்ச்சியில், கிராம இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் ஆற்றலை...

கிராம இளைஞர்கள் – எதிர்கால விவசாயிகள்

கிராம இளைஞர்கள் – எதிர்கால விவசாயிகள்

வளர்ந்துவரும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவின் சொத்தாக கருதி, தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது...

Facebook
YouTube
Instagram