பெண்கள் முன்னெடுத்து செல்லும் பண்ணை முயற்சிகள்


இயற்கை சாகுபடி முறைகள் பயன்படுத்துவதன் மூலம், விற்பனை மையங்களோடு இணைப்பதற்கும், வருமானம் பெருவதற்கும், அவர்களுடைய குடும்ப மற்றும் சமூக வாழ்க்கைத் தரத்தை விரிவடையவும், இரண்டு தொழில்முனையும் பெண்கள் இயற்கை வேளாண்மையை பரவச் செய்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கூடுதலாக, மற்ற பெண்களை ஊக்கப்படுத்தி உதவியுடன் இயற்கை விவசாயத்தை நீண்ட கால வாழ்வாதாரமாக பின்பற்ற செய்கின்றனர்.


கிராம பொருளாதாரத்தில், பெண்கள் தொழில்முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் உணவு உத்திரவாதம், ஏழ்மையை குறைத்தல், மற்றும் பாலின சமத்தன்மை ஆகியவற்றிற்கு வித்திடுகிறது. கிராம பண்ணை பெண்களுக்கு கிடைக்கும் சில வாய்ப்புகளின் தேவை குறிப்பாக இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகளில் அதிகாித்து வருகிறது. இயற்கை வேளாண்மை ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் அதேநேரத்தில், இயற்கை வேளாண்மை சார்ந்த தொழில் செய்வதற்கு, அதாவது நிலத்திற்கு சுலபமாக செல்வது, கடன், விற்பனை, தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் விரிவாக்க சேவை சார்ந்த உதவிகள் சாதகமாக இல்லாததால் பெண்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். பெண்கள் முன்னெடுத்து செல்லும் விவசாய முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்திய இரண்டு உதாரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திருமதி. ஹித்தேஷ் சௌத்ரி
உத்திர பிரதேசம், அம்ரோஹா மாவட்டம், ச்சக் ச்சாவி கிராமத்தை சேர்ந்தவர் திருமதி. ஹித்தேஷ் சௌத்ரி. முன்னோடி பெண் விவசாயியான திருமதி. ஹித்தேஷின் முக்கிய நோக்கம் என்னவென்றால் விவசாயியின் வருமானத்தை வேளாண் செயல்முறைகள் மூலம் அதிகாிப்பதேயாகும். கோதுமை வளர்ப்பதில் துவங்கி, எலுமிச்சை புல், கரும்பு, மஞ்சள் மற்றும் கடுகு ஆகியவற்றை பாரம்பாிய முறையில் சாகுபடி செய்தார்.

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை செய்து பார்க்கும் ஆர்வம் உடையவர். அவர் சில முக்கிய தலைப்புகளில் ஆற்றல் செலுத்தும் வல்லமைக் கொண்டவர். அந்த வகையில் இயற்கை எலுமிச்சை புல் சாகுபடி, ஊட்டச்சத்துமிக்க வீட்டுத் தோட்டங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் உருவாக்குதல், இயற்கை வேளாண்மை குறித்து சக விவசாயிகளுக்கு, பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.

2018 ஆம் ஆண்டு பதஞ்சலி இயற்கை ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்த பயிற்சியாளர்களின் திட்டத்தில் பயிற்சி பெற்ற பின்னர், இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். தற்போது 2 ஏக்கர் நிலத்தில் கடுகு, காய்கறிகள், எலுமிச்சை புல், கோதுமை, கரும்பு, மஞ்சள் மற்றும் கொய்யா வளர்க்கிறார். மேலும் நிலத்தின் அதிக பங்கையும் இயற்கை வேளாண்மைக்கு மாற்றினார்.
ஊட்டச்சத்து தோட்டத்தின் ஒரு பகுதியாக வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, கீரை, கொத்தமல்லி, முட்டைகோஸ், வெந்தயம், வாழை, பப்பாளி, கத்திரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொய்யா, சுரைக்காய், சேப்பங்கிழங்கு, பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகளை வளர்க்கிறார்.

இவர் எரு மற்றும் உரங்களான பீஜாமிர்தம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் ஆகியவற்றை இயற்கை முறையில் தயாரிக்கிறார். அவர் பசுஞ்சாணத்தை பயன்படுத்தி மக்கு உரம் தயாரிக்கிறார். பசுமாட்டின் கோமியத்தை சேகாித்து இயற்கை சாகுபடி இடுபொருட்களை தயாரிக்க பயன்படுத்துகிறார். இவற்றை பயன்படுத்துவதால் பயிர் உற்பத்தி செலவு பொிதளவு சேமிப்பதற்கு உதவுகிறது.

எலுமிச்சை புல் எண்ணெய், கோதுமை, கரும்பு, கடுகு, சோளம், மஞ்சள் ஆகியவற்றை நுகர்வோருக்கும், மண்டிக்கும் நேரடியாக விற்கிறார். இயற்கை காய்கறிகள், தானியங்கள் மற்றும் கடுகு வீட்டு உபயோகத்திற்காக வளர்க்கப்படுகிறது. இயற்கை விவசாய முறைகள் பின்பற்றுவதன் மூலம், வருமானம் அதிகாிப்பதைத் தாண்டி, குறிப்பிடும் வகையில் வருமானங்கள் அதிகாிக்கிறது.
குடும்பத்திலும், சமூகத்திலும் பல சவால்களை துவக்கத்தில் சந்தித்தார். குடும்ப மற்றும் பண உதவியில்லாமல் சுயநம்பிக்கையுடன் தனது பயணத்தை துவங்கினார். மற்றவர்களுக்கு இயற்கை வேளாண்மை சார்ந்த உதவிகளை அளிக்கும் நிலையை தற்போது அடைந்துள்ளார். அவர் அம்ரோஹா மாவட்டத்தில் பல்வேறு சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கும் உதவி புரிகிறார்.

திருமதி.ஹிதேஷிற்கு சமூக நிறுவனங்களும், மாவட்ட ஆட்சியும் முன்னோடி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விவசாயியாக பதக்கமளித்து அங்கீகாித்துள்ளனர். இந்திய அரசு, வேளாண்மைத் துறை, இயக்குனரகம், சர்தார் வல்லபாய் படேல் பல்கலைக்கழகம், துணை வேந்தர் உத்திர பிரதேச வேளாண்மைத் துறை மற்றும் உத்திர பிரதேச ஆளுநர் ஆகியோரிடம் மாியாதையை பெற்றார். உத்திர பிரதேச அரசால் பத்மஸ்ரீ விருதுக்காக இவரது பெயர் பாிந்துரைக்கப்பட்டது.

திருமதி.சவிதா.ஜெ.எல்னா

திருமதி.சவிதா.ஜெ.எல்னா, மஹாராஷ்டிரா, வார்தா மாவட்டம், கன்ஹாபூர் கிராமத்தை சேர்ந்தவர்.இவர் ஒரு ஏக்கர் நிலத்தில் 2008 ஆம் ஆண்டு இயற்கை வழியில் சாகுபடி செய்யத் துவங்கினார்.தெலுங்கானாவில், செகெந்திராபாத்தை அடிப்படையாக கொண்ட நிலைத்த வேளாண்மைக்கான மையத்தினால் பயிற்சி பெற்றார். மஹாராஷ்டிரா, மாநில வேளாண்மைத் துறை ஏற்பாடு செய்திருந்த பயிற்சியிலும் கலந்து கொண்டார். மஹாராஷ்டிராவில் ஸ்மார்ட் விவசாயியான திரு. சுபாஷ் ஷர்மாவின் இயற்கை பண்ணைக்கு கல்விச் சுற்றுலா சென்று பார்வையிட்டார். தனது 6 ஏக்கர் நிலத்தை 2012 ஆம் ஆண்டு இயற்கை சாகுபடியை பின்பற்றினார். அதைத் தொடர்ந்து. அவர் இயற்கை வேளாண்மையின் கீழ் மேலும் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இவர் மஹாராஷ்டிரா ராஜ்ய ஜீவன் உன்னட்டி அபியானோடு இணைந்து இயற்கை வேளாண்மை குறித்து வார்தா மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். பதஞ்சலி இயற்கை ஆராய்ச்சி மையத்தின் யோகஹார் திட்டத்தின் உறுப்பினராக இருக்கிறார். இது இயற்கை விவசாயத்திற்கு அர்பணிக்கப்பட்ட திட்டம்.

தற்போது பதஞ்சலி இயற்கை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விவசாயியாக தேர்வு செய்யப்பட்டார்.சவிதாவின் பணியை கண்டு அருகே உள்ள விவசாயிகள் ஊக்கமடைந்து முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை உணவு வளர்க்க தொடங்கியுள்ளனர். இதை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கும், மிகுதியாகவுள்ள விளைபொருட்களை விற்பனையும் செய்கிறார். இவர் 15 ஏக்கர் நிலத்தை முழுமையாக இயற்கைக்கு மாற்றினார். மேலும் 50 ஏக்கர் 50 சதவிகிதம் இயற்கையாக மாற்றியுள்ளார்.

பண்ணை விளைபொருட்களை வார்தா-நாக்பூர் சாலையில் தனது பண்ணையை தாண்டி மெதுவாக விற்க துவங்கினார். இவருடைய இயற்கை அங்காடி வார்தா நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. அங்கு பருவகால காய்கறிகள், கோதுமை மாவு, பயறு வகைகள், கடுகு, தனியா மற்றும் வெந்தய விதைகள் மற்றும் கரும்பு ஜுஸ் ஆகியவற்றை விற்கிறார்.கோதுமை, கரும்பு, கடுகு, மற்றும் துவரை ஆகிய பயிர்களில் பதப்படுத்தி, மதிப்பு கூட்டுகிறார். கரும்பு ஜுஸை கோடை காலத்தின்போது குறிப்பாக மே-ஜுன் மாதத்தில் தன்னுடைய அங்காடியில் விற்கிறார். அவரது பண்ணையில் விளையும் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு, மஞ்சள் மற்றும் பப்பாளி ஆகியவற்றை விற்கிறார். சோயா பீன்ஸ் மற்றும் மீதமுள்ள துவரை அருகில் உள்ள மண்டியில் சந்தை விலைக்கு விற்றுவிடுகிறார். மக்கள் அவருடைய அங்காடியில் இயற்கை பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஏனென்றால் இவருடைய இயற்கையான பண்ணை பொருட்களை அதிக விலையில் விற்காமல் சந்தை விலையில் மட்டுமே விற்கிறார்.

சத்து மேலாண்மை, மூடாக்கு, பயிர் சுழற்சி ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் புதிய இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களான மக்குஉரம், மண்புழு உரம், மற்றும் இதர இயற்கை ஆதாரங்கள் திருமதி சவிதா அவர்கள் தாலுக்கா மற்றும் மாவட்ட அளவில் இவருடைய முயற்சியை பாராட்டி அங்கீகாரம் அளித்தனர்.
இவர் ஒரு தனிப்பட்ட தொழில்முனைவராக திகழ்கிறார். திருமதி. சவிதா கலந்துரையாடலின்போது ‘துவக்க நிலையில் சமூகத்திலிருந்து அவர் எதிர்ப்புகளை சந்தித்தார். மக்கள் அவரை பைத்தியம் என்றும், கணவரை புரிந்துகொள்ளாதவர் என்றும், சாகுபடியை அவரே செய்துகாட்டியதால் தற்போது அனைத்தும் மாறி, இயற்கை சாகுபடி முறையை அனைவரும் பின்பற்ற துவங்கினர் என்று அவருடன் கலந்துரையாடும்போது கூறினார்.அருகேயுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தி,அவர்களுக்கு பயிற்சியளித்து இயற்கை சாகுபடி முறையை பின்பற்ற செய்கிறார்.

திருமதி.சவிதா அவருடைய பயணத்தை எண்ணி மகிழ்கிறார். மேலும் அவருடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முடிந்தது. அவருடைய மகள் சமீபத்தில் பொறியியல் படிப்பை முடித்தார் மற்றும் தனது மகன் வேளாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பண்ணையை மேம்படுத்துவதில் உதவிபுரிகின்றனர்.

பவன் குமார் , மனோஹாி ரதி மற்றும் அபூர்வா திவாரி


Pawan Kumar, Manohari Rathi and Apurva Tiwari
Patanjali Organic Research Institute
Haridwar, Uttarakhand, India.
E-mail: manoharirathi19@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1

Please follow and like us:
Pin Share
அண்மைய இடுகைகள்
Facebook
YouTube
Instagram