பொழுதுபோக்கு செயல்பாடாக துவக்கி தொழில்முனையும் விவசாயியாக உருவெடுத்துள்ள திருமதி. இந்துமதி நெடுதூரம் கடந்து வந்துள்ளார். அதிக வயதை பொருட்படுத்தாமல், பல்வகைமை மற்றும் இயற்கை சாகுபடியை பின்பற்றுவதாலும், வேலைபளுவை குறைக்கும் பண்ணை கருவிகளை பயன்படுத்துவதாலும், பண்ணை வருமானத்தை விரிவடைய செய்யலாம் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். வேளாண்மையில் அவர் வைத்திருக்கும் ஆர்வம், புதிய திறன்களை கற்பதும் வேளாண்மையில் அவற்றை ஈடுபடுத்துவதும் வயது சார்ந்தது அல்ல என்பதை நமக்கு பாிந்துரைக்கிறது.
இந்தியாவில் உள்ள விவசாய சமூகத்தின் முக்கிய தொழில், வேளாண்மை. நம் பொருளாதாரத்தின் வாழ்வாக இது இருக்கிறது. எனினும் சீதோஷன மாற்றங்கள் மற்றும் இயற்கை உபாதைகளால் வரும் சவால்களை சந்தித்து வேளாண்மையில் குறைந்த வருமானம் கிடைப்பதால் இளைஞர்கள் இன்று ஆர்வம் காட்டுவதில்லை. விவசாயத்தை செய்ய விரும்பாமல் அனைவரும் தனது வாழ்வாதாரத் தேர்வாக, நவீன, ஆடம்பர வாழ்க்கையை விரும்பி செயல்படுகின்றனர். அதனால், நகரப் பகுதிகளுக்கு வேலையைத் தேடி இடம்பெயர்ந்து செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் பெண்கள் நகரத்திலிருந்து விவசாயம் செய்ய 55 வயதில் கிராமத்திற்கு வருவது சாதாரண காரியமில்லை. இதுமாதிரியான கதையே தவலேஷ்வரா, கோகெக் தாலுக், பெலகாவி மாவட்டத்திலிருந்து , ஒரு பண்ணை பெண் விவசாயியான திருமதி.இந்துமதி பி. சன்னல் இயற்கையாக ஒருங்கிணைந்த பண்ணை முறையை செயல்படுத்தி வருகிறார்.
குறிக்கோளோடு இருந்தாலும், அப்போது பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தாத நிலையில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. கூட்டு குடும்பத்தில் இருக்கும் திரு. பண்டப்பா சன்னலை திருமணம் செய்துகொண்டார். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னர் இருக்கும் ஆதாரத்தை வைத்து ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
திருமதி. சன்னல் 2000-2001 ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்ய துவங்கினார். இரண்டு ஏக்கர் நிலத்தில் அவர் இயற்கை வழி ஒருங்கிணைந்த சாகுபடி முறையை பின்பற்றினார். வேளாண்மை-தோட்டக்கலை- வன சாகுபடி முறையை செயல்படுத்தினார். பண்ணை வீடு கட்டி, அவர் விவசாயப்பணியை துவக்கினார். இரண்டு ஏக்காில் பல்வேறு பயிர்களை வளர்க்கிறார். 30 குண்டாஸ் நிலத்தில் மஞ்சள் வளர்க்கிறார். வரகு, காய்கறிகள், தீவன மக்காச்சோளம் போன்ற பயிர்களை மஞ்சள் பயிருக்கு ஊடுபயிராக வளர்க்கப்படுகிறது. இவை வீட்டு உபயோகத்திற்கும், தீவன தேவையையும் பூர்த்தி செய்கிறது. மஞ்சள் மற்றும் திணை அறுவடைக்குப்பின், நிலத்தில் டைக்காக்கம் கோதுமை பயிரிடப்படுகிறது. திணையை விற்பனை செய்யாமல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தபடுகிறது. நிலத்தின் வரப்புகளில் சுமார் 300 தேக்கு மரங்கள் நட்டுள்ளார், இடையே சில தென்னை மரங்களையும் நட்டிருக்கிறார்.
ஆரோக்கியமான இயற்கை பொருட்களான மா, வாழை பழங்கள், தேங்காய், புளி மற்றும் மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் பண்ணையிலிருந்து கிடைக்கிறது. மஞ்சள் வளர்த்தன் மூலம், வருடத்திற்கு ரூ.65,000 நிகர இலாபம் கிடைக்கிறது. மஞ்சள் கிழங்குகளை அறவை ஆலையை பயன்படுத்தி வீட்டிலேயே தூள் செய்து, துாய்மையான மஞ்சள் தூள் தயாரிக்கப்படுகிறது. கிழங்குகள் மற்றும் மஞ்சள் தூள் இரண்டும் இடைத்தரகர்கள் மூலம் சங்கலி சந்தையில் விற்கப்படுகிறது. தேக்கு மரங்கள் எதிர்காலத்தில் ஒரு கோடிக்கு விற்பனையாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேங்காய்கள் உள்ளூர் மற்றும் அருகேயுள்ள நகர ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ.40,000/- வருமானம் கிடைத்துள்ளது. மேலும் 200 வாழை செடிகளை பண்ணையில் நட்டுள்ளார். அதன்மூலம் வருடத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. இவைகளைத் தாண்டி பல்வேறு பழ மரங்களான, சப்போட்டா, சீத்தாப் பழம், பல மா வகைகள் ஆகியவற்றை ரத்தனகிரியிலிருந்து பெற்று அவரது பண்ணையில் நட்டார். மா மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கியது. புளி, எலுமிச்சை, செர்ரி, ரம்பால் ஆகிய அனைத்தும் தார்வாட் வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து நாற்றங்கால்களை வாங்கி பண்ணையில் வளர்க்கப்பட்டன. இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை சாகுபடிக்கு உதவியாக, நான்கு எச்.எப் இரக பசுமாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பசுக்கள் ஐந்து லிட்டர் பால் தவலேஷ்வரில் உள்ள உள்ளூர் பால் விற்பனை கூடத்தில் ரூ.50 க்கு தினமும் விற்கப்படுகிறது. மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்த், உயிர்-நொதிக் கலன், கஷாயா (பலவகை மர இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது)ஆகியவை நிலத்தில் தயாரிக்கப்படுகிறது. இவற்றை உரமாக, வளர்ச்சி ஊக்கியாகவும், இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தபடுகிறது. இயந்திரம் மற்றும் பணி சுமையை குறைக்கும் கருவியான, மாவு அறவை மில், தென்னை நார் உறிக்கும் கருவி , தென்னை மரம் ஏறும் கருவி, மா அறுவடை இயந்திரம் மற்றும் பல. பண்ணையில் சொட்டு நீர் பாசனமும் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டு மொத்தமாக, ஒரு வருடத்தில் சுமார் ரூ.2.5 இலட்சம் வருமானம் பெறுகிறார். சில காய்கறி வகைகள் வீட்டு உபயோகத்திற்கு வருடம் முழுவதும் வளர்க்கிறார். இதனால் காய்கறிகளின் செலவும் குறைகிறது. பணம் சேமிப்பு என்பது பணம் வருமானத்திற்கு நிகராகும்.
விவசாயத்தில் இவரின் ஊக்கம், அர்பணிப்பு மற்றும் சாதனையை பாராட்டி, யு.ஏ.எஸ், தார்வாட், 2009-10 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் பெண் விவசாயி விருதைப் பெற்றார்.தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம், பாகல்கோட் நடத்தும் விவசாயி முதல் விவசாயி பயிற்சி திட்டத்தின் பயிற்சி வல்லுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில்முனையும் திறனை வெளிப்படுத்தும் பண்ணையை பார்வையிடும் பல பார்வையளர்கள், இந்த முதிய வயதிலும் இவருடைய ஊக்கம் மற்றும் அர்பணிப்பை கண்டு வெகுவாக பாராட்டுகிறார்கள்.
வேளாண்மையை பற்றிக்கொள்ளும் கைகளை வேளாண்மை கைவிடாது. விவசாயம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எனினும், குறிகோள், கடின உழைப்பு மற்றும் ஊக்கம் அனைத்தும் திருமதி.சன்னல் அவர்களால் ஒருங்கிணைத்து செயல்பட முடிந்தது. பல்வகைமை, ஒருங்கிணைப்பு மற்றும் இயற்கை வேளாண்மை முறைகளை பின்பற்றியதால், விளைபொருள் தரமாக இருக்கிறது, அதே சமயத்தில் உரம் மற்றும் தாவர பாதுகாப்பு முறைகளின் செலவு குறைவதால், விவசாயம் ஈட்டுவதாகவும், இலாபகரமாகவும் அமைகிறது. இவரை போன்ற மற்ற பெண் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும், இவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
அட்டவணை 1
| வளர்க்கும் பயிர்கள் | செலவுகள் | இலாபம் | காரணம் | விற்பனை முறை/நுகர்வோர்கள் |
| மஞ்சள் | 35,000 | 65,000 | வீட்டு உபயோகம் மற்றும் விற்பனை | விற்பனை முகமை மற்றும் நண்பர்கள் மூலம் நுகர்வோருக்கு |
திணை | வீட்டு உபயோகம் | |||
| தேக்கு | 5,000 | எதிர்கால மதிப்பீட்டு வருமானம் ஒரு கோடி | ||
| புளி | 100/- | 5,000/- | வீட்டு உபயோகம் மற்றும் விற்பனை | இரண்டும் உள்ளூரிலேயே விற்பனை |
| தென்னை | 2000/- | 40,000/- | இரண்டும் | அருகேயுள்ள நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு |
| வாழை | 10,000/- | 1,00,000/- | இரண்டும் | அருகில் உள்ள நகர விற்பனைக்கூடத்தில் |
| மா மற்றும் இதர பழ மரங்கள் | 2000/- | 20,000/- | பெரும்பாலான பழங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது | அருகில் உள்ள நகர விற்பனைக்கூடத்தில் |
அட்டவணை 2
| விவரங்கள் | செலவுகள் (ரூ.) | |
| கால்நடை | 25,000/- | |
| மண்புழு உரம் | 100/- | |
| உயிர்-நொதிக்கலன் | 5000/- | |
| சொட்டு நீர் பாசனம் | 20,000/- | |
| உரத் தயாரிப்பு | ||
| ,இயந்திரம் மற்றும் வேலை பளு குறைக்கும் கருவிகள் | இளநீர் பறிக்கும் கருவி | 1500/- |
| தென்னை மரம் ஏரும் கருவி | 4500/- | |
| மாங்காய் அறுவடை செய்யும் கருவி | 300/- | |
| அறவை | 10000/- | |
| மொத்தம் | 66>800/- |
விஜய ஹோஸாமணி மற்றும் மாலா பாட்டில்
Vijaya Hosamani Asst. Prof. of Agril. Extension. Dept. of SAS. College of Horticulture, Bagalkot-587 104 Mala Patil Asst. Prof. of Computer Science, Dept. of SAS. College of Horticulture, Bagalkot-587 104
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1



