பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூகத்தில் பாரம்பாியமாக பின்தங்கிய பெண்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலையை மேம்படுத்துவதற்கான செயல்முறையாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது செழிப்பான பொருளாதாரங்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது. உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த பீபி. பாத்திமாவின் கதையானது, பெண்களின் வணிகம் அல்லது நிறுவனங்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் அதிகாரமளிப்பதன் மூலம் சமூகத்தை கணிசமாக மாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.
பீபி பாத்திமா, ஹவேரி மாவட்டம், ஷிகோன் தாலுக்காவில் உள்ள தீர்த்த கிராமத்தைச் சேர்ந்த 38 வயது இளம், ஆர்வமுள்ள பட்டதாரி. சஹஜ சமுர்தா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், பீபி பாத்திமா 2018 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஆரம்பத்தில் பீபி பாத்திமா ஸ்வா சஹாய சங்கம், சுய உதவிக் குழுவை உருவாக்கி, மேலும் குந்த் கோல் மற்றும் ஷிகோன் ஆகிய இரண்டு தாலுக்காக்களில் 6 சுய உதவிக் குழுக்களை உருவாக்க உதவினார்.
சமூக விதை வங்கி
பீபி பாத்திமா 2019 ஆம் ஆண்டில் தீர்த்தாவில் விதை வங்கியைத் தொடங்கினார். இதன் மூலம் விதைகளின் உற்பத்தி மற்றும் இருப்பை வைத்து விதை கிடைப்பதை அதிகாிக்கச் செய்தார். தற்போது, பல்வேறு பயிர்களின் 300 வகையான விதைகளை வைத்துள்ளார். அவரிடம் 75 வகையான கேழ்வரகு விதைகள், 25 வகையான சாமை விதைகள், 25 வகையான குலசாமை விதைகள், 10 வகையான தினை விதைகள், இரண்டு வகையான வரகு விதைகள் உள்ளன. அவரது விதை வங்கியில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் பல்வேறு வகையான விதைகள் உள்ளன.
விவசாயிகள் தங்கள் வயலில் பல பயிர்களை வளர்க்க உதவும் வகையில் 9 வகையான விதைகளைக் கொண்ட ’நவதான்ய கிட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு விதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஹவேரி, தார்வாட், குல்பர்கா, மைசூர் மற்றும் மாண்டியா மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்தக் கருவிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. ஆர்வமுள்ள மற்ற விவசாயகளுக்கு இந்தக் கருவிகள் விலைக்கு விற்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டில்,சஹஜ சமுர்தாவின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் – ஐ.ஐ.எம்.ஆர் நிதியுதவியுடன், கிராமத்தில் ஒன்பது தினை பதப்படுத்தும் இயந்திரங்கள் (அட்டவணை 1 ஐ பார்க்கவும்) நிறுவப்பட்டன. பீபி பாத்திமா தலைமையில் இது இயக்கப்படுகிறது. இந்தப் பிரிவில், கேழ்வரகு தோசை கலவை, கேழ்வரகு பல தானிய மாவு, கேழ்வரகு மால்ட் என அனைத்து தானியங்களின் மாவு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவை தவிர பப்பாளி சோப்புகள், சுத்தமான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி காிம சோப்பு, துளசி, வேம்பு ,வேப்பம்பூ சாறு, பால், மஞ்சள் மற்றும் கற்றாழை போன்ற இயற்கைப் பொருட்களும் உற்பத்தி செய்யபட்டு வருகின்றன. அனைத்து மதிப்பு கூட்டபட்ட தயாரிப்புகளும் ஹம்பி உத்சவ் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை பொிய சமூகத்திற்கு பரவச் செய்யும்.
2023 ஆம் ஆண்டில், 1000 பங்குதாரர்களுடன் ‘தேவ்தன்யா’ என பெயாிடப்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதில் 80 சதவீதம் பெண்கள். உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், அவர்கள் ஒவ்வொரு வாரமும் 5 குவிண்டால் வெவ்வேறு சிறுதானிய அவல்களை விற்கிறார்கள். மேளா மற்றும் மாநாடுகளின்போது அவர்கள் கேட்டாிங் சேவைகளையும் செய்கிறார்கள். ரொட்டியை ரூ. 7-8க்கு மாவட்டத்திற்குள் விற்கிறார்கள் மற்றும் மாவட்டத்திற்கு வெளியே ரூ. 10க்கு ரொட்டியை விற்கிறார்கள். மொத்தத்தில், அவர்கள் சுமார் 20 சதவீதம் இலாபம் பெறுகிறார்கள்.
அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் – விவசாயத்தில் பெண்கள் பங்கு என்ற திட்டத்தில் இணைதல் அகில இந்திய ஒருங்கிணைந்த திட்டம் – ஐ.சி.ஏ.ஆர் -ன் மகளிர் வேளாண்மை, மத்திய வேளாண்மை மகளிர் நிறுவனம் (சி.ஐ.டபுள்யு.ஏ), புவனேஷ்வர் 12 மாநிலங்ளில் ஸ்ரீ அன்னகிராம யோஜனே என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. தத்தெடுக்கப்பட்ட பகுதி/கிராமங்களில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த சிறுதானிய அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
ஏ.ஐ.சி.ஆர்.பி – டபுள்யு.ஐ.ஏ, தார்வாட் மையம், அதன் திட்டத்தை செயல்படுத்த ஹவேரி மாவட்டத்தின் ஷிகோன் தாலுக்காவில் உள்ள ஷிசுவினல் மற்றும் பன்னிகோப்பா கிராமங்களைத் தேர்ந்தெடுத்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க, தீர்த்த விதைவங்கியிலிருந்து விதைகள் வாங்கப்பட்டன.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்:
பீபி பாத்திமா தனது தொடர்ச்சியான முயற்சிகள், ஆர்வம் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் பொருளாதார சுதந்திரம், மேம்படுத்தப்பட்ட சமூக அங்கீகாரம் மற்றும் தன்னம்பிக்கையை அடைந்துள்ளார். அவர் 2023 ல் டெக்கான ஹெரால்டில் மாற்றத்தின் நபராக அங்கீகாிக்கப்பட்டுள்ளார். பெங்களூரூ, மாண்டியா, சென்னை மற்றும் டெல்லியைச் சேர்ந்த பல நிறுவனங்கள் சஹஜ சம்ருத்திக்கு பல விருதுகள், பண முடிப்புகள்/விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளனர். இப்போது பீபி பாத்திமா குண்டகோலில் 40 சுய உதவிக் குழுக்களையும், ஷிகோனில் 10 மற்றும் என்.ஆர்.எல்.எம் – சஞ்ஜீவினி குழுமத்தின் கீழ் 83 சுய உதவிக் குழுக்களையும் உருவாக்கி தற்போது பஞ்சாயத்தில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில் முனைவோர் செயல்பாடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் கிராமப்புற பெண்களுக்கு உத்வேகமளிப்பது, அவர்களின் வருமானத்தை அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், கிராம அளவில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கும் பங்களிக்கிறது. பீபி பாத்திமாவின் முயற்சிகள், திறன் மற்றும் திறமையை வளர்ப்பதன் மூலம் பெண்களின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, விரிவாக்கத் தொழிலாளர்கள் அத்தகைய தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து, மற்ற விவசாயிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், செயலாக்க அலகுகள் மற்றும் நுகர்வோருடன் இணைக்க வேண்டும்.
அட்டவணை 1: சிறுதானியங்கள் பதப்படுத்தும் இயந்திரங்கள்
| ஆஸ்பிரேட்டர் | சிறுதானிங்களில் உள்ள உமியை அகற்ற பயன்படுகிறது. உமி மற்றும் அரிசி ஒரு ஆஸ்பிரேட்டர் மூலம் பிரிக்கப்படுகிறது. உமியிலிருந்து அரிசியை திறம்படி பிரிக்க இரண்டு அறைகள் பயன்படுத்தப்படுகின்றன. முற்றிலும் பாலிஷ் செய்யப்படாத சிறுதானிய அரிசியே இறுதியான பொருளாகும். |
| சிறுதானிய கிரேடர் இயந்திரம் | தானியங்களை அவற்றின் அளவுகளின் அடிப்படையில் தரம் பிரிக்க கிரேடர் பயன்படுத்தப்படுகிறது. |
| கல்நீக்கும் கருவி 1 மற்றும் கல்நீக்கும் கருவி 2 | தானியங்கள் மற்றும் கற்கள் அதிர்வு இயக்கத்தால் பிரிக்கப்படுகின்றன. கல் திரையின் மேற்பரப்பில் உள்ள பொிய கற்கள், அதிர்வு அமைப்பின் சக்தி மற்றும் காற்றோட்டத்தின் செயல்பாட்டின் கீழ், பொிய கல் வெளியீட்டில் வெளியேற்றப்படும். |
| மாவு ஆலைகள் | தானியங்களை அரைத்து உடைத்து சிறுசிறு துண்டுகளாக பிரிக்க மாவு ஆலைகள் பயன்படுகின்றன. உங்கள் தேவைகளைப் பொறுத்து, சந்தையில் கிடைக்கும் பரந்த அளவிலான அளவுகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். |
| ஆஸ்பிரேட்டர் மற்றும் டீஹல்லர் | முறையாக சுத்தம் செய்தபின் மூலப்பொருட்கள் உமியை அகற்றுவதற்கு அனுப்பப்படுகின்றன. |
| பேக்கிங் | பேக்கிங் இயந்திரங்கள் தயாரிப்புகளை திறமையாகவும், திறம்படவும் தொகுக்கப் பயன்படுகின்றன. பேக்கிங் இயந்;திரங்கள் வெவ்வேறு வகைகளில் வருகின்றன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பேக்கேஜிங் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் திறமையான, துல்லியமான மற்றும் நம்பகமானதாக மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளன. |
விதை வங்கி என்பது எதிர்கால சந்ததியினருக்கு மரபணு ரீதியாக தூய வகைகளை பராமாிக்க விதைகளை சேமித்து வைக்கும் ஒரு வசதி. விதைகள் பொதுவாக காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த ஈரப்பதம் மற்றும் பொருத்தமான வெப்பநிலையில் விதைகளை நீண்டகால பாதுகாப்பிற்கு உதவும். விதை வங்கி என்பது ஒரு வகையான காப்பீடு ஆகும். இது முடிந்தவரை பல தாவர இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் உலகளாவிய தாக்கத்தை குறைப்பதில், நன்கு நிதியளிக்கப்பட்ட மற்றும் நன்கு பராமாிக்கப்படும் விதை வங்கிகள் முக்கியமானவை.
கீதா சேனல் மற்றும் ராஜேஸ்வரி தேசாய்
For more information, contact Bibi Bibi Fatima, Thirtha village, Haveri district at 8431988093 Geeta P.Channal Senior Scientist, AICRP-WIA (Extn) University of Agricultural Sciences, Dharwad – 580 005, Karnataka, India Email ID: geetrajpatil@yahoo.co.in Rajeshwari Desai Senior Scientist, AICRP-WIA (FRM) University of Agricultural Sciences, Dharwad – 580 005, Karnataka, India
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2024, வால்யூம் 26, இதழ் 2



