ஸ்ரீமதியின் ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

திருமதி.சண்டி பாய், சங்கரெட்டி மாவட்டம், ஜஹீராபாத் மண்டலில் உள்ள அர்ஜூன் நாயக் தாண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் . தாிசு நிலங்களைக் கொண்ட வறண்ட பகுதியான இது விவசாயத்தை சவாலானதாக மாற்றுகிறது. 3 மகன்கள், 3 மருமகள்;கள், 6 பேரக் குழந்தைகள் என 13 பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்திற்கு விவசாயம் தான் முதன்மையான ஆதாரம். திருமதி.சண்டிபாய்க்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் காரீப் பருவத்தில் முதன்மையாக தனது பயிர்களை சாகுபடி செய்கிறார். திருமதி.சண்டி பாய், தனியார் வியாபாரிகளிடம் இருந்து விதைகளை கொள்முதல் செய்து சோயாபீன் மற்றும் சோளம் என இரண்டு பயிர்களை பயிரிட்டு வந்தார். அவர்களிடமிருந்து 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 20000 கடன் வாங்குவார். கலப்பின விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஜஹீராபாத்தில் இருந்து வாங்குவார்.

2016 ஆம் ஆண்டில், டெக்கான் வளர்ச்சி சங்கம் (டி.டி.எஸ்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அர்ஜூன் நாயக் தாண்டாவில் உள்ள சமூகங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியது. நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க டி.டி.எஸ் ஒரு சங்கத்தை (ஒரு சமூக குழு) உருவாக்க உதவி செய்தது. சண்டி பாய் மற்றும் ராஜி பாய் ஆகியோர் குழுத் தலைவர்களாக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 20 உறுப்பினர்களுடன் தொடங்கி, 2024ல் சங்கம் 60 உறுப்பினர்களாக வளர்ந்தது. சண்டி பாய் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விதை மேலாண்மை, இயற்கை உரங்கள் தயாரித்தல், தாவர-மூலிகை கரைசல்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான பிற இயற்கை வழி முறைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றனர்.

டி.டி.எஸ் மற்றும் வேளாண் அறிவியல் மையம் ஆகியவற்றின் சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர் ஒரு ஏக்காில் 20 க்கும் மேற்பட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அதில் சிறுதானியங்கள் (எ.கா. கம்பு, கேழ்வரகு, இரண்டு வகையான திணை, சாமை மற்றும் பனிவரகு), பயறுகள், (துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைபயிறு போன்றவை). அவருடைய விவசாய நிலத்தில் எண்ணெய் வித்துக்கள் (எ.கா. எள், ஆளி விதைகள்) என பல்வேறு இயற்கை வழி வேளாண் முறைகள் மூலம் தனது பண்ணையை வளர்க்கிறார். இறுதி உழவின்போது தோராயமாக 10 டிராக்டர் லோடு (20 டன்) உரம் இடப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ என்ற அளவில் ஊட்டமேற்றிய உரம் (மண்புழு உரம், சாணம் பிண்ணாக்கு மற்றும் ஆட்டு எரு ஆகியவற்றின் கலவை) சேர்க்கப்படுகிறது. பயிர்கள் மாற்று வரிசையில் விதைக்கப்படுகின்றன. இது ஒரு மாறுபட்ட பயிர் முறையை உறுதி செய்கிறது. பஞ்சகவ்யா மற்றும் ஜீவாம்ருதம் போன்ற பாரம்பாிய இயற்கை கலவைகள் பயிர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வேப்பிலை சாறு, வேப்பங்கொட்டை சாறு, வெல்லம், நீர் மற்றும் மாட்டுக் கோமியம் ஆகியவை பூச்சி மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
சண்டி பாயின் வயலில் சாகுபடி செய்வதற்கான சராசாி செலவு ரூ. 25050. நிகர வருமானம் ரூ. 36580. விவசாயம் மட்டுமன்றி, 4 ஆடுகள், 2 மாடுகளையும் வளர்த்து வருகிறார். அவரது விவசாய செயல்பாடுகளில் இருந்து, அவர் ரூ. 36580 நிகர வருமானம் ஈட்டுகிறார். மேலும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும், கால்நடைகளை விற்பதன் மூலம் கூடுதலாக ரூ. 30000 முதல் ரூ. 35000 வரை சம்பாதிக்கிறார். கால்நடைகளுக்கான தீவனம், அவரது பண்ணையில் இருந்து நேரடியாக பெறப்பட்டு கிராமத்தில் இயற்கையாக கிடைக்கும் தாவரங்களால் கூடுதலாக வழங்கப்படுகிறது.

அவரது பண்ணையில் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கண்ட பிறகு, சண்டி பாய் மாற்றத்திற்கான தீவிர முன்னுதாரணமாக திகழ்கிறார். அதேபோன்ற விவசாய முறைகளை பின்பற்ற தனது சக விவசாயிகளை தூண்டி வருகிறார். “எங்கள் வயல்கள் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் மிகுதியைப் பிரதிபலிக்கின்றன” என்கிறார். சண்டி பாய், இப்போது கிராமத்தைச் சேர்ந்த அதிகமான விவசாயிகள் சங்கத்தில் இணைந்து, டி.டி.எஸ் மற்றும் வேளாண் அறிவியல் மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர். இது சக விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.


Note: This has been compiled by Dr. N. Snehalatha, V. Ramesh and E. Swamy,of DDS-KVK, Zaheerabad,
Sangareddy, Telangana, India, 502228. 

Dr. N. Snehalatha can be contacted at snehalatha.ddskvk@ddsindia.org

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2024, வால்யூம் 26, இதழ் 4

Please follow and like us:
Pin Share
அண்மைய இடுகைகள்
Facebook
YouTube
Instagram