முறையான ஆதரவு கொடுக்கப்பட்டால், பெண்கள் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் பண்ணை நடவடிக்கைகள் மற்றும் பண்ணை இயந்திரங்களை கையாளும் திறன் பெறுவர். பையப் இன் சிறிய ஆதரவுடன், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றிப்பெற்ற விவசாய பெண்கள் விவசாய உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகாிப்பது மட்டுமல்லாமல், மற்ற பெண்களின் திறனும் வளர்க்க முடியும் என்பதை காட்டியுள்ளனர்.
நிலைத்த வேளாண்மை பெண்களின் பங்களிப்பை கோருகிறது. உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இணைந்து 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, பெரும்பாலான ஆண்கள் இடம் பெயர்ந்துள்ளதால், சிறு நில ப்பரப்பை கொண்ட குடும்பங்களைச் சோ;ந்த கிராமப்புறப் பெண்களில் 80 சதவீதம் பர்; விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த பெண்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்தவர்கள் என்பது வியப்பிற்குரியது.
உச்ச விவசாய நடவடிக்கைகளின்;போது தொழிலாளர்கள் இல்லாததால், விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால், விவசாய நடவடிக்கைகளில் இயந்திரமயமாக்கல் பிரபலமடையத் தொடங்கியது. இயந்திரங்கள் பெரும்பாலும் விலை அதிகம் மற்றும் அதன் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதால், தனிப்பட்ட விவசாயிகளால் அதை வாங்குவது குறைவான செலவு அல்ல.
பயாப் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன், தங்களின் அனைத்துத் திட்டங்களிலும் பெண்களின் திறன் வளர்ப்பதில் வெற்றிபெற்ற நிலையில், தனிப்பயன் பணியமர்த்தல் மையங்களை/இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை (சி.எச்.சி) ஊக்கப்படுத்தியது. பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் அடிமட்ட அளவில் பண்ணை இயந்திரமாக்கலை ஊக்குவிப்பதற்காக பெண் விவசாயிகளை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு மேம்படுத்தப்பட்ட மாதிரியாக திட்ட பிரர்னா மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆறு சுய உதவிக்குழுக்களால் தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள் அமைக்கப்பட்டன.
சுய உதவிக்குழு உறுப்பினர்களின் திறன்கள், திட்டக் குழுவின் நிபுணர் அமர்வுகளுடன் புத்தாக்க விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் பட்டறிவு பயணங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது. தினசாி செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் புரிந்துகொள்ள கல்வி சுற்றுலா அவர்களுக்கு உதவியது. வளர்ந்து வரும் நம்பிக்கையுடனும், திறன்களுடனும், குடும்பத்தில் உள்ள ஆண்களின் உதவி மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பண்ணை இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு:
பண்ணை இயந்திரங்கள் கிடைப்பதால் சாியான நேரத்தில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை திறமையாக பயன்பாடு செயல்படுத்தப்பட்டது. விவசாயிகளால் காலநிலையை எதிர்க்கும் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, பணிசுமையை குறைப்பது, பயிர் தீவிரம் அதிகாிப்பு, பயிர் எச்சங்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் விவசாய பயிர் எச்சங்களை எரிப்பதை தடுத்தல், சாகுபடி செலவைக் குறைத்தல் மற்றும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
இந்த தனிப்பயன் பணியமர்த்தல் மையங்களில் கிடைக்கும் பண்ணை இயந்திரங்களில் விதைக்கும் இயந்திரங்கள், மின்சார களையெடுக்கும் கருவி, தௌிப்பான்கள், ரோட்டாவேட்டர்கள், வெங்காயம் விதைக்கும் இயந்திரம், களை கருவிகள், ராகி அறுவடை இயந்திரங்கள் மற்றும் பிற பண்ணை சார்ந்த உபகரணங்கள் ஆகியவை அடங்கும். சொட்டுநீர் மற்றும் தௌிப்பான் அமைப்புகள் கிடைப்பதால், அதே அளவு தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவை பாசனத்திற்கு கொண்டுவர முடியும் என்பதை பெண்கள் கவனித்தனர். விதை மற்றும் உரமிடும் இயந்திரங்கள், ஊடுபயிர் பரப்பை அறிமுகப்படுத்த அல்லது விரிவபடுத்த உதவியது. விலையுயர்ந்த இரசாயன உரங்களை திறன்பட பயன்படுத்துவதை உறுதி செய்தது மற்றும் அதன் மூலம் சாகுபடி செலவைக் குறைக்கும்போது நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கிறது. மையங்களில் கிடைக்கும் உபகரணங்கள் எடை குறைவாகவும், எளிதாகவும், செயல்திறனுடனும் இருந்தன. பவர் ஸ்பிரேயர் உடல் உழைப்பைக் குறைத்தது. அதே சமயத்தில் பவர் களையெடுப்பான் மற்றும் கை மண்வெட்டி பெண்களின் சிரமத்தைக் குறைத்தது. மையங்களில் கிடைக்கும் பல்வேறு வகையான பயிர் அறவை இயந்திரங்கள் குறைந்த செலவில் சாியான நேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவியது. இது சூறாவளி, உறைபனி போன்ற பாதகமான வானிலை நிலைகளில் பயிர் சேதத்தைத் தவிர்க்க உதவும்.
உழவு செய்யப்படாத இடங்களில் பயன்படுத்தும் இயந்திரங்கள், நேரம், நீர், எரிபொருள் மற்றும் வெப்ப அழுத்தத்திலிருந்து தப்பிக்கவும், ராபி பயிர்களின் ஆரம்ப அறுவடையை உறுதி செய்ய விவசாயிகளுக்கு உதவியது. கோதுமை, சோயாபீன் மற்றும் மக்காச்சோளத்திற்கான அகல படுக்கை பாத்திகள் தொழில்நுட்பம், விரைவான வடிகால் உதவி மற்றும் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் அதிகப்படியான மண்ணின் ஈரப்பதத்தால் பயிர் சேதத்தை காப்பாற்றியது. பயன்பாட்டின் அடிப்படையில், 766 பெண் விவசாயிகள் இந்த பண்ணை உபகரணங்களை ரூ. 74,730 செலுத்தி 187 நாட்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 395 பெண்களில் 55 பயிற்சி பெற்ற பெண் விவசாயிகள் டிராக்டர்களை ஓட்டி வருகின்றனர்.
இந்த முன்முயற்சிகள் மூலம், பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்களை பயாப் பிரபலபடுத்தியுள்ளது. பெண்கள் தங்கள் பிராந்தியங்களில் விவசாயத்தின் இயக்கவியலை மாற்றியமைத்து, வளர்ச்சி தலைவர்களாக வெளிவருவதில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தனர். விவசாயி குழுக்களால் நடத்தப்படும் தனிப்பயன் பணியமர்த்தல் மையம், தேவையான உபகரணங்களை நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதை உறுதி செய்தது. இந்த துணிச்சலான பெண்கள் நம்பிக்கையுடனும், சிறந்த எதிர்காலத்திற்காகவும் அதனை நோக்கி பயணிக்கின்றனர்.
சுஜாதா கங்குட்
Sujata Kangude Thematic Programme Executive – Women & Development BAIF Development Research Foundation BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar, Warje, Pune 411058 E-mail ID: sujata@baif.org.in
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1



