தண்ணீர் பற்றாகுறை இருந்த நிலையிலிருந்து மிகுதியாக இருக்கும் நிலை வரை


சமூகங்கள் மத்தியில் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாய குழுக்களின் மத்தியில் இருக்கும் தன்னம்பிக்கை ஒன்று சேர்ந்து பணிப்புரிந்து , மேலும் கிடைத்த உதவியுடன் தண்ணீர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி , பரவச் செய்து வயநாட் பகுதியில் உள்ள கிராமங்கள் தண்ணீர் பற்றாகுறையான நிலை மாறி, தண்ணீர் மிகுதியான நிலை ஏற்பட்டுள்ளது.


கேரளாவில் தெற்கில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை எழில் மற்றும் வேளாண் பாரம்பாியத்திற்கு நன்கு பாிச்சியமான இடம், வயநாட், ஒரு அழகிய அடர்த்தியான மலைப்பகுதி ஆகும்.எனினும், வயநாட்டில் வேளாண்மை பல விதமான சவால்களை தற்போது சந்தித்து வருகிறது. இதில் வானிலை மாற்றங்கள், மனித-காட்டுவாழ் உயிரினங்கள் மத்தியில் ஏற்படும் மோதல்கள். விவசாயிகள், வேளாண்மை அடிப்படையில் உள்ள வாழ்வாதார செயல்பாடுகளை எடுத்து செய்யும் ஆர்வமில்லாமல் விரைவில் விலகுகின்றனர். தண்ணீர் இருப்பு குறைவது, இவர்கள் சந்திக்கும் பல சவால்களில் ஒன்றாகும். சீதோஷன மாற்றத்திற்கான கேரள மாநில செயல் திட்டம் 2023 – லும் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் கேரளாவை சேர்ந்த வயநாட் மாவட்டமும் குறிப்பிட்டுள்ளது. தொடர் வரட்சிகள், தண்ணீர் பாதுகாப்பது மற்றும் ஆதாரங்களை நன்கு பயன்படுத்துவது போன்ற பல அனுபவங்களை இந்தப் பகுதியின் நிலைத்த வேளாண்மைக்கு நெருக்கடியான நிலையுள்ளது.
புவியியல் தனித்தன்மையின் அடிப்படையில் வயநாட் பகுதி மூன்று உயிர்ச்சூழல் பிரிவுகளில் வகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் , தெற்கு உயர்மலையின் கலன் வறண்ட வானிலை, சீதோஷன மாற்றங்கள் போன்றவைகள் அதிகமாக காணப்படுகிறது. அதனால், பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர்த் தேவை அதிகாிக்கிறது.

தெற்கு உயர்மலையில் உள்ள நூல்புழா கிராம பஞ்சாயத்து, கேரளா மற்றும் கர்நாடகா எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது.இது வயநாட்டின், இரண்டாவது பொிய மக்கள் தொகை பகுதியாகும். இந்தப் பஞ்சாயத்து வயநாட் காட்டுஇன சரணாலயம் என்ற முக்கியப் பகுதியின் அங்கமாகும். இது தண்ணீர் பற்றாகுறையினால் மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும், இந்தப் பகுதி மிக குறைந்த மழை பொழியும் இடமாக இருக்கிறது. பெருபாலான நன்செய் நிலங்களில், நெல், இஞ்சி மற்றும் தீவன பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யும் அதேநேரத்தில் மேட்டுநிலத்தில் காப்பி, ரப்பர், தேங்காய் மற்றும் மிளகு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை ஓடைகள் மற்றும் குளங்கள், சாகுபடி செய்வதற்கான முக்கிய ஆதாரமாக உருவாகிறது. எனினும், தண்ணீர் பற்றாகுறை கோடைப்பயிர்கள் குறைந்து தரிசு நிலம் அதிகாித்து விடப்படுகிறது . மக்களின் வாழ்வாதாரம் வேளாண்மை மற்றும் இதர தொழிலநுட்பங்கள் சுற்றியே உள்ளது. வறட்சி மற்றும் காட்டு விலங்குகள் பயிர்களை அழிக்கும் நிகழ்வுகள் அதிகாித்து விவசாயிகளை அழுத்தத்திற்கு தள்ளும் நிலை இந்தப் பகுதியில் உள்ளது. இந்த சவால்கள் இருக்கும் நிலையில், இந்தப்பகுதி விவசாயிகள் பெருமளவிற்கு கால்நடை வளர்ப்பிற்கு மாறிவிட்டனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் மற்றும் இதர செயல்பாடுகள், மேலும் தண்ணீர் தேவைகளை உயர்த்தும்.
இந்த அடிப்படைத்தகவல்களுக்கு எதிராக, தண்ணீர் இருப்பை விரிவுபடுத்த மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் , நபார்ட் வங்கியின் ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்புப்பகுதி மேலாண்மை திட்டம் 2019-2022 ஆம் ஆண்டு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், சமூக வேளாண் உயிர்பல்வகைமை மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

செயல்படுத்துவதற்கு முன், 2018-19 ஆம் ஆண்டு தொடர் வெல்லத்தால் சில சவால்களும் கூடுதலாக பார்க்கப்பட்டது. அவை பொிய மற்றும் சிறிய வடிகால் அமைப்புகள் குப்பைகளால் நிரம்பியுள்ளது. நன்செய் நிலங்களின் வடிவமைப்புகள் சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு செயல்பாடுகள் தவிர்க்கப்பட்டது, ஆகும். கனமழையின்போது உவர்மண் நன்செய் நிலங்களில் தொடர்ந்து சேர்வதால், மண் வளம் குறைகிறது, நெல் சாகுபடி மோசமாக பாதிக்கப்படுகிறது. வரப்பு வடிவமைப்புகள், வாய்க்கால் அமைப்புகள் சாியாக இல்லாததாலும் குப்பைகள் மற்றும் உவர்மண் படிமண்ணோடு சேர்வதால், தண்ணீர் அதிகாித்து அருகிலுள்ள நெல்வயல்களுக்கு வழிந்தோடுகிறது.

சாகுபடி செய்யாத நிலங்களில் விவசாயிகள் இஞ்சி மற்றும் கருணைக்கிழங்கு வளர்த்து வந்தவர்கள் இப்பொழுது அந்த செயல்பாடுகளை கைவிட்டனர். வெள்ளம் பயிர்பல்வகைமையை பாதித்தது, இடப்பெயர்ச்சி மூலம் வாழ்வாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்தத் திட்டத்தில் பாசன வசதிகளை வலுப்படுத்துவது, ஏற்கனவே அமைந்துள்ள வாய்க்கால் அமைப்புகளை புதுப்பித்தல், இயற்கை தண்ணீர் அமைப்புகள் மற்றும் பாரம்பாிய தண்ணீர் அமைப்புகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

காிபூர்1, காிபூர் 2, வடகனத், வள்ளுவடி மற்றும் பச்சடி ஆகிய ஐந்தும் சிறிய நீர்ப்படிப்பு பகுதிகள் அனைத்தும், நூல்புழா நீர்ப்படிப்பு பகுதியில், சுமார் 500 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிராம நீர்ப்பிடிப்பு குழுமம், அடிமட்ட நிலையில் ஒரு குழு, திட்டத்தை தீட்டுவதற்கு, செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் உதவியாக அமைக்கப்பட்டது. சிறப்பு கிராம சபை கூட்டத்தின்போது, இந்தக் குழுவை, நபார்ட் ஐ.டபள்யு.எம்.எஸ் (IWMS) திட்டத்தை நூல்புழா நீர்ப்பிடிப்பு பகுதியில் சிறப்பாக செயல்படுத்த உருவாக்கப்பட்டது. கிராம நீர்ப்பிடிப்பு பகுதி குழுமத்தில் 3 பெண்கள் (அழிவின் விளிம்பில் இருக்கும் காட்டுநாய்கா பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர்) மற்றும் 8 ஆண்கள்(ஒரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், ஒரு இதர தகுதி வகுப்பை சேர்ந்தவர், மேலும் 5 பொது பிரிவை சேர்ந்தவர்கள்) உட்பட 11 உறுப்பினர்கள் உள்ளனர். ஐந்து சிறிய நீர்ப்பிடிப்பு பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த குழுமத்தில் அடங்குவர்.

உடனடியாக செயல்படுத்தக்கூடியது என்னவென்றால், விவசாயிகளால் அத்துமீறி பயன்படுத்தப்பட்ட நிலங்களை கொண்ட, பொது நீர் ஆதார அமைப்புகளான, வாய்க்கால் ஓரங்களை சுத்தம் செய்தல், நீர்த்தடுப்பு அணைகள் ஆகியவற்றை புதுப்பிப்பதே ஆகும். ஆகையால் வாய்க்கால் ஓரங்களை விரிவுப்படுத்த, அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்ப பெறுவதே கிராம நீர்ப்பிடிப்பு குழுமம், முதலில் செய்ய வேண்டியதாகும். துவக்கத்தில், வாய்க்கால் ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் புதுப்பிப்பது, இந்த குழுமத்தின் தேர்வாக இல்லை. ஆழ்ந்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் செயல்முறைகள் மூலம் இந்தப் பகுதியில் உள்ள கருத்து வெளியிடும் தலைவர்கள், ஒத்தக் கருத்து உடைய குழுக்கள் மற்றும் செல்வாக்குமிக்க தலைவர்களின் முயற்சியில் சமூகங்கள் மெதுவாக ஒப்புக்கொண்டனர். கிராம நீர்ப்பிடிப்பு குழுமம், ஒருமித்தக் கருத்துடன் இருக்கும் நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள் புதுப்பிப்பதை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இதனால் வெள்ளத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளது.

மெதுவாக, இந்தத் திட்டத்தின் செயல்பாட்டால், பல்வேறு வடிவமைப்புகள் கட்டப்பட்டு, மண் அரிமானம், பாசன அமைப்புகள் உயர்த்துதல் மற்றும் பல மண் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகாித்தல். சுமார் 3990 மீட்டர் நீளம் கொண்ட வாய்காலை தூர்வாருதல், வாய்க்கால் வரப்புகளை பாதுகாத்தல் ஆகியவை தண்ணீர் ஆதாரத்தை மேம்படுத்தியது. கூடுதலாக, காய்ந்த மரக் கழிவுகள் கொண்டு கட்டப்பட்ட தடுப்பணைகள், 15233 க்யுபிக் மீட்டர் கட்டப்பட்ட மண் வரப்புகள் , 4 புதிய மற்றும் 3 புதுப்பிக்கப்பட்ட குளங்கள், 13 ஊற்று வசதிகள் ஏற்படுத்தப்பட்ட கிணறுகள், 3910 தண்ணீர் ஊடுருவி செல்லும் குழிகள்,2442 மையத்தை நோக்கியுள்ள மேட்டுநில அமைப்பு மற்றும் 5 தடுப்பணைகளையும் புதுபிக்கப்பட்டது. மண் வரப்பு கட்டியதனால், தண்ணீர் வழிந்தோடும்போது வளமான மேல் மண் அரிப்பை தடுத்து மண் வளத்தை தக்கவைத்து கொண்டு, மண் அரிமானத்தை குறைக்க உதவுகிறது. மையத்தை நோக்கியுள்ள மேட்டுநில அமைப்பு மற்றும் மூடாக்கு ஆகியவை மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. இந்தப் பகுதியில், சமூகங்களும் தென்னையில் அதிக மகசூல் விரிவடைந்துள்ளதை இந்த தொழில்நுட்பம் பின்பற்றுவதன் மூலம் உணர்ந்தனர். வரப்புகளில் நடப்பட்ட தீவனப் பயிர்கள் நல்ல மகசூலை அளித்தது, இதனால் நல்ல ஊட்டச்சத்து இருப்பும் கிடைப்பதால், கால்நடைகளுக்கு நிலைத்த தீவனம் அளிப்பதற்காக உறுதுணையாக இருக்கிறது.

கட்டுமான பணிகளைத் தாண்டி சீதோஷன மாற்றங்கள் மற்றும் அதனைத் தணிக்கும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியில் உயர்ந்துள்ளது. சமூகங்களுக்கு பயிற்சி மற்றும் திறன்வளர்ப்பில் ஒரு அங்கமாக , 11 பயிற்சிகளில், இயற்கை சாகுபடி, தண்ணீர் , தண்ணீர் ஆதார மேலாண்மை, சீதோஷனத்திற்கு உகந்த வேளாண்மை தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஒருங்கிணைந்த சாகுபடி முறை, கால்நடை மற்றும் கோழி மேலாண்மை, பொருளாதாரம் கல்வி, காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது. மாதிரி பண்ணைகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சிகள் சமூகங்கள் மத்தியில் வழிப்புணர்வு விரிவடைவதோடு, விவசாய குழு தன்னம்பிக்கையுடன் ஒருங்கிணைந்து பணிப்புரிவதற்கு வித்திட்டது. மேலும் எதிர்காலத்தில் இந்தத் திறனைக்கொண்டு விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளது.

குளம் மற்றும் தடுப்பணைகளை புதுப்பித்து, கோடை காலத்தில் நன்செய் சாகுபடிக்கு தண்ணீர் இருப்பை உறுதிசெய்கிறது. சுமார் 50 ஹெக்டர் சாகுபடி செய்யப்படாத நிலம் , சாகுபடி செய்யும் நிலமாக மாறியுள்ளது. இதன்மூலம் நெல் நன்செய் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை புதுப்பித்ததால் நெல் சாகுபடி பரப்பளவில் 20 சதவிகிதம் அதிகாித்துள்ளது. அதேசமயத்தில் கிணறு ஊற்று வசதிகள், மையத்தை நோக்கி மேட்டுநில அமைப்பு, மற்றும் மண் வரப்புகள் வறட்சியின் தாக்கத்தை குறைத்து கால்நடை வளர்ப்பதற்கு வழிவகுத்துள்ளது. சிறப்பான முறையில் ஓடைகளை பயன்படுத்தியதால் தண்ணீர் இருப்பு 30 சதவிகிதம் அதிகாித்துள்ளது (கடினமான தடுப்பனை மற்றும் பரவலான முறையில் கட்டப்பட்ட தடுப்பனை). இவற்றைத் தாண்டி, தூர்வாரப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட குளங்கள் மழைக்காலத்தில் 40% அதிக தண்ணீர் சேமித்து வைக்க உதவுகிறது. தண்ணீர் சேமிக்கும் நடவடிக்கைகள் மூலம் தொலைவில் உள்ள ஆதாரங்களிலிருந்து பம்பை பயன்படுத்தி பாசனம் செய்வதற்கான செலவு விவசாயிகளுக்கு குறைந்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பங்களின் தலையீட்டினால், இந்தப்பகுதி தண்ணீர் பற்றாகுறை முதல் தண்ணீர் மிகுதி என்ற நிலைக்கு மாறியுள்ளது. மேலும் இந்தப்பகுதியின் வேளாண்மை புதுப்பிக்க உதவுகிறது. இந்தப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியை மீண்டும் தீவிரமாக செய்ய துவங்கினர்.இந்தப்பகுதி மற்ற பயிர்கள் சாகுபடி செய்வதற்கு உகந்ததாக இல்லாததால் இந்த நிலங்கள் தரிசாக விடப்பட்டது. மேலும், இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் சுமார் 4690 பணிநாட்களை உருவாக்கியுள்ளது. மொத்தம் 905 பண்ணை குடும்பங்கள் நேரடியாக திட்டம் செயல்படுத்தியதற்கு பிறகு பயனடைந்துள்ளனர்.
குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இணைப்புகளின் வளர்ச்சியாக இருக்கிறது. நிலைத்தத்தன்மை மற்றும் தொழில்நுட்பங்கள் சிறப்பு மேலும் நிதி மேம்பாட்டை உறுதி செய்வதற்கு , எம்.ஜி.என்.ஆர்.ஈ.ஜி.எஸ் (MGNREGS), கே.எஸ்.சி.எஸ்.டி.இ (KSCSTE) மற்றும் பாசனத் துறையோடு இணைப்பை உருவாக்குவதால் , வாய்க்கால் தூர்வாருதல் , தடுப்பணைகள் கட்டுதல் போன்ற தண்ணீர் சேமிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை உயர்த்துவதற்கும், பரவலாக்குவதற்கும் உதவுகிறது. இந்தத் திட்டத்தின் வெற்றியை கண்டு, உள்ளூர் பஞ்சாயத்து, இந்த மாதிரியை இதேபோன்ற வறட்சி சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கும் பிற பகுதிகளுக்கும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த முயற்சிகளில் வெளிப்படும் தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை, இதுபோன்ற புவி-சீதோஷன நிலை உள்ள பகுதியில் சீதோஷன மாற்றம் மற்றும் தணிப்பதற்கான முயற்சிகள், பிரதிபலிக்கப்படலாம்.

பெட்டி செய்தி
கிணறு ஊற்றெடுக்கும் செயல்பாடுகள் அச்சர்யப்படும் அளவிற்கு முடிவுகளை அளித்தது. இந்த செயல்பாடு இந்தப் பஞ்சாயத்தின் மேட்டுப்பகுதியில் முதலில் பின்பற்ற பாிந்துரைக்கப்பட்டது. 13 கிணறுகள் ஊற்றெடுக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, கதங்காத் என்ற இடத்தில் உள்ள கிணறு இருபது ஆண்டுகளுக்கு பிறகு நன்கு ஊற்றெடுத்தது. வல்லுவடி குருமா காலனியில் உள்ள ஒரு பழற்குடியின பகுதிக்கு நன்கு தண்ணீர் வினியோகிப்பதை அதிகாிக்க முடிந்தது. மேலும் இந்தக் காலனியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4-5 கிணறுகளிலும் நன்கு உற்றெடுத்தது.

விப்பின் தாஸ் பி, அர்ச்சனா பட், சுஜித் எம் எம் மற்றும் நௌஷிக் பி எம்


Vipindas P
Development Coordinator

Archana Bhatt
Scientist

Sujith M M and Noushique P M
Development Associates
MS Swaminathan Research Foundation-Community
Agrobiodiversity Centre
Puthoorvayal, Meppadi PO
Wayanad, Kerala - 673577

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2023, வால்யூம் 25, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...