இந்த கட்டுரை, தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் மற்றும் வறட்சி சூழ்நிலைக்கு தாங்கும் புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது. மேலும் அவை மண், பயிர்கள் மற்றும் அதிக தரமான உற்பத்தியும் அளிக்கிறது.
கருத்து மற்றும் தேவை
கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் வடக்கு பிஹார் பகுதிகள், குறிப்பாக வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்குவதால் அவதிபடுகின்றது. சில நேரங்களில் சீதோஷன மாற்றத்தினால் வறட்சியும் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இந்தப்பகுதியில் மழையின் தீவிரத்தை கணிக்கும்போது அதிகாிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் நிலைமையை மோசமாக்கலாம். குறிப்பாக கடந்த 8-10 வருடங்களில் கங்கை நிலப்பகுதியில் ஒரு மழைக்கும் இன்னொரு மழைக்கும் இடையில் 15-20 நாட்கள் நீண்ட வறட்சி ஏற்படுவது பொதுவான நிகழ்வாக இருக்கிறது.
மழையின் வரலாற்றுத் தகவல்களை நுணுக்கமாக பார்க்கும்போது மழையின் தீவிர நாட்களில் (64.5 மி.மீ. க்கும் அதிகமாக / 23 மணி நேரத்தில்) 10-20 சதவிகிதம் அதனளவு அதிகாித்துள்ளது. நிலத்திலேயே கண்காணிக்கும்போது, கோரக்பூர் மற்றும் வடக்கு சாம்பரான் தாழ்வான பகுதிகளில், எப்பொழுது 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழை பெய்கிறதோ அப்பொழுது வெள்ளம் சூழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேடான நிலப்பகுதி மற்றும் குறைவான வடிகால் அமைப்பு இருப்பதால் தாழ்வான நிலத்தின் வளமான வேளாண்மை பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
அதனால் சிறு மற்றும் குரு காய்கறி விவசாயிகளின் பயிர் சேதமடைகிறது. அதிகாிக்கும் வெள்ளப்பெருக்கின் எதிர்மறை தாக்கத்தால் கோடை பயிர்கள் (காரீப்) மற்றும் குளிர்காலப் பயிர்கள் (ரபி), விதைப்பதற்கு உணவு மற்றும் வருமான உத்திரவாதத்தில் பாதிப்படைகிறது. 75% காய்கறி விவசாயிகள், இந்தப்பகுதியில் கோடை பயிர்கள் நாற்றங்கால் வளர்த்து குளிர்காலத்தில் நடவு செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மிகுதியான தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படுகிறது.
இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முக்கிய ஆதரவு திட்டத்தின் கீழ், கியாக் வரிசை பயிரிடும் தொழில்நுட்பத்தை விவசாயிகளோடு எடுத்து செய்துவருகிறது. இந்தப் பகுதியில் தொழில்நுட்பத்தை அறிமுக சாத்தியக்கூறுக்கான ஆய்வில் மொத்த நிலத்தில் தோராயமாக 18 சதவிகிதம் பகுதி கோடையில் தேங்கி நிற்கிறது- ஒவ்வொரு வருடமும் 2-3 மாதங்கள் மிகவும் மோசமாக தண்ணீர் தேங்கி நிற்பதாக தொிகிறது. குறைந்த மண் வளம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகாித்தல் ஆகியவை மோசமான நிகழ்வுகளில் அடங்குகிறது. மேலும், தரமான நாற்றுகளுடைய நாற்றங்கால் விற்பனை மையம் இங்கு இல்லை, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உகந்ததாகவுமில்லை.
மாதிரி தலையீடாக, கியாக் நிறுவனம் உயர்ந்த படுக்கை முறையோடு வரிசை தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் வழிநடத்தி நாற்றுகளை வளர்க்கின்றனர்.மேலும் அதிக விலையை கொண்ட காய்கறி நாற்றுகளுக்கு பாலித்தீன் விரிப்பைக் கொண்டு மூடாக்கு போட்டு வளர்க்கின்றனர்.
தொழில்நுட்பத்தின் குறியீடுகள் மற்றும் மாதிரி திட்டம்
வரிசை மறைவு தொழில்நுட்பம் என்பது சிறிய வடிவமைப்புகள் (தாழ்வான குகை முறை), பசுமைக்குடில்களை போன்று தாக்கத்தை உருவாக்குதல். தாழ்வான குகை அமைப்பை ஒயர்கள் வைத்து வடிவமைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் விரிப்புகளை தாழ்வான உயரத்தில் உள்ள அரைவட்ட வடிவ குகையின் மேல் கூரையாக போடப்படுகிறது. இது கார்பன் டை ஆக்ஸைடை குகைக்கு உள்ளேயே தக்கவைக்கவும், தாவரத்தின் ஒளிச்சேர்க்கையை விரிவடையவும் வழிநடத்தி இதனால் ஆரோக்கியமான பயிர்களை வளர்க்கவும் உதவுகிறது. மிதமான வெப்பத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்துக்கள் அதிகமாக எடுத்துகொள்ள உதவுகிறது. இந்த வடிவமைப்பு குறைந்த செலவு, சுலபமாக கட்டி, பிரிக்கவும் செய்யலாம். பிரித்த பொருட்களை அடுத்த வருடத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொழில்நுட்ப குறியீடுகள்
• தாழ்வான குகை வடிவ பாலித்தின் குடில், தரைமட்டத்திலிருந்து 1-1.5 அடி உயர படுக்கையின் மேல் கட்டப்படுகிறது.இதனால் தண்ணீர் தேக்கத்தினால் வரும் பாதிப்பை தடுக்க முடிகிறது.
• விதை படுக்கையை சுற்றி 6 இஞ்ச் மண் மேட்டை வடிகால் சாிவோடு உருவாக்குவதால், மழை நீர் விதை படுக்கைக்குள் ஊடுருவாமல் தடுக்கிறது.
• பாலித்தீன் குடிலை சுற்றி வடிகால் உள்ளதால் அதிக தண்ணீர் வடிந்துவிடுவதற்கு உதவுகிறது
இந்த தொழில்நுட்பம் குளிர் மற்றும் கோடைப் பருவத்தின்போது உகந்த தண்ணீர் மேலாண்மை மூலம் பயன்படுத்தலாம். சுரைக்காய், பாகற்காய், கத்தாிக்காய், முட்டைகோஸ், தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற அதிக தேவையுள்ள காய்கறிகளின் நாற்றுகளை வளர்ப்பதற்கு இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது.
மகசூல் அதிகாித்தல், குறுகிய காலத்தில் காய்கறிகள் அறுவடை செய்தல், தண்ணீர் மேலாண்மை மூலம் மண்ணின் வெப்பத்தை பாதுகாத்தல், பறவைகள் மற்றும் பூச்சி தாக்குதலிலிருந்தும், காற்று, மழை, பனி, குளிர் மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றிலிருந்து பயிர்களை பாதுகாத்தல், முக்கியமாக விவசாயிகளின் நிகர வருமானங்கள் அதிகாிக்கிறது. என்ற கூடுதல் இலாபத்தை இந்த தொழில்நுட்பம் அளிக்கிறது.
மைய ஆதரவுத் திட்டத்தின் கீழ், வரிசை மறைவு தொழில்நுட்பத்தை உயர் படுக்கையில் நான்கு மாதிரிகளை கேம்பீர்கஞ்ச், ஜங்கலி கொளடியா மற்றும் நௌட்டான் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ளது. இவை 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் கீழே உள்ள காரணிகளை கண்காணிக்கப்பட்டது.
பாகற்காய், சுரைக்காய், கத்தாிக்காய் மற்றும் முட்டைகோஸ் ஆகிய பயிர்களில் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 35 நாட்களுக்கு தரவுகள் சேகாிக்கப்பட்டது (ஜூலை – ஆகஸ்ட 2019;)
கீழே உள்ள அட்டவணையில், பல்வேறு காரணிகளில் தரவுகள் ஒப்பிட்டிருப்பதை (பாலித்தீன் குடிலின் உள்ளே மற்றும் வெளியே) அளிக்கப்பட்டுள்ளது.
பாலிதீன் குடிலுக்கு வெளியே உள்ள பயிர்களை ஒப்படுகையில், சிறந்த தாவர முளைப்புதிறன், நோயகளிலிருந்து பாதுகாத்தல், தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படும் நாற்றுகள் சேதமடைவதை குறைந்துள்ளது. இது வரிசை மறைவு தொழில்நுட்பம் உய படுக்கைகள் அளிக்கும் சாதகங்கள் தரவுகளும், கண்காணிப்புகளும், குறிப்பிடுகிறது. உதாரணத்திற்கு, பாகற்காய், சுரைக்காய், கத்தாிக்காய் மற்றும் காளிபிளவர் ஆகியவற்றில் செய்த பாிசோதனைகளில், அதிக நாற்றுகள் (7%, 18%, 10%, மற்றும் 16%) வளர்ந்திருப்பதை குறிக்கிறது. பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. அதனால் அதிக தண்ணீர் தேங்கும் மற்றும் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிறப்பானதாகவும், இம்மாதிரியான இடங்களுக்கு பரவலாக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதை உறுதிப்படுதுகிறது.
பயனுள்ள வெளிப்பாடுகள்
சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் விற்பனை பகுதிகளில் வருடம் முழுவதும் பசுமையான காய்கறிகளின் தேவை இருக்கிறது. இது, நகர பகுதி அருகாமையில் உள்ளதால், அதிக ஆரோக்கிய விழிப்புணர்வு , அதிக மக்கள் தொகை வளர்ச்சி, மத்திய தரத்துக் குடும்பங்கள் அதிகளவு ஊட்டச்சத்து வகைபாடுகளை மாற்றிககொள்கின்றனர் போன்ற காரணத்தால் தேவையும் அதிகாிக்கிறது. உயர்த்தப்பட்ட போக்குவரத்து அமைப்புகளோடு, காய்கறிகள் வெள்ளம் தற்போது தொலைதூர பகுதிகளில், பருவத்தின்போதும், பருவமில்லாத நேரத்திலும் ஏற்படுகிறது. அருகாமையில் இருக்கும் சிறு மற்றும் குறு காய்கறி விவசாயிகள், வெளி விற்பனையாளர்களுடன் போட்டி போட வேண்டும்.
இந்த இரண்டு பகுதிகளிலும், தற்போது மாதிரி திட்டத்திற்கு பிறகு, 30 விவசாயிகளுக்கு மேல் தக்காளி, முட்டைகோஸ், காளிபிளவர், மிளகாய், கத்தாி மற்றும் படரும் காய்கறிகளான சுரைக்காய், வெள்ளரி, பாகற்காய், பூசணி போன்றவையாகும், இதன்மூலம் இவர்கள் 20-30 நாட்கள் காத்திருக்க தேவையில்லை, மேலும் அதிக தரமுடைய நாற்றுகள் சீக்கிரமாக கிடைக்கும். இது விரைவாக பயிர் கிடைப்பதற்கு உதவுகிறது, மேலும் சந்தையில் அதிக விலை பெற்றுத் தருகிறது. விவசாயிகள் நாற்றுகளை மற்ற உள்ளூர் விவசாயிகளுக்கு பாிமாறிக்கொண்டு, விற்பனையும் செய்கின்றனர்.
ஜங்கிலி கௌரியா, கேம்பியர்கஞ் மற்றும் நௌடன் வட்டங்களில், உள்ள காய்கறி விவசாயிகள் வருடம் முழுவதும் நாற்றுகள் விரைவாகக் கிடைப்பது, நல்ல தரமான காய்கறிகள் அறுவடை செய்வது ஆகிய நன்மையினால், இந்தத் தொழில்நுட்பம் திருப்தியடைய செய்துள்ளது. அதிக மகசூல், காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்தல், மண் வெப்பத்தை தண்ணீர் மேலாண்மை மூலம் பாதுகாத்தல், காற்று மற்றும் உறைபனியால் பயிர்களை பாதுகாத்தல் மற்றும் இறுதியில் விவசாயிகளுக்கு நிகர வருமானங்கள் அதிகாிக்கிறது.
அட்டவனை 1: பாிசோதனைகள் குறித்த முடிவுகள்
| மாதிரி முயற்சி | பாிசோதனைகள் | பயிர் | முளைப்பதற்கான நாட்கள் எண்ணிக்கை (நாட்கள்) | முளைத்த நாற்றுகளின் எண்ணிக்கை (%) | பு+ச்சி மற்றும் நோய் தாக்குதல் (%) | தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படும் பயிர் பாதிப்பு(%) | முதிர்ந்த நாற்றுகள் (நாட்கள்) |
| கேம்பியா;கஞ் | தறந்தவெளி நிலம் | பாகற்காய் | 6 | 75 | 9 | 25 | 32 |
| பாலித்தீன் குடில் | பாகற்காய் | 4 | 82 | 1 | 2 | 28 | |
| ஜங்கிலி கௌடியா | தறந்தவெளி நிலம் | சுரைக்காய் | 7 | 60 | 12 | 12 | 31 |
| பாலித்தீன் குடில் | சுரைக்காய் | 6 | 78 | 2 | 2 | 29 | |
| ஜங்கிலி கௌடியா | தறந்தவெளி நிலம் | கத்தாி | 11 | 75 | 15 | 50 | 35 |
| பாலித்தீன் குடில் | கத்தாி | 11 | 86 | 4 | 6 | 28 | |
| நௌட்டன் (மேற்கு ) | தறந்தவெளி நிலம் | காளிப்பளவர் | 12 | 62 | 7 | 24 | 30 |
| பாலித்தீன் குடில் | கத்தாி | 9 | 78 | 3 | 3 | 27 |
அஜய் குமார் சிங் மற்றும் அர்ச்சனா ஸ்ரீவஸ்தாவா
Archana Srivastava Project Coordinator E-mail: archanasri844@gmail.com Ajay Kumar Singh Project Coordinator E-mail: mahewa@geagindia.org Gorakhpur Environmental Action Group HIG 1st Phase 1/4 Siddharthpur, Taramanda Road Gorakhpur - 273 017
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2023, வால்யூம் 25, இதழ் 2



