விவசாய உற்பத்தி நிறுவனங்கள், இயற்கை வேளாண்மை குழுவிற்கான வெற்றிப்படியாகும்


தற்போதுள்ள விற்பனை அமைப்பின் ஒழுங்கமைக்கப்படாத நிலையின் தாக்கமாகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதற்கான முயற்சியில் செயல்பாட்டு அளவின் காரணமாக,விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க ஊக்கமளிக்கப்படுகிறது. விவசாய உற்பத்தி உருவாக்குவதற்கு உந்துதலை தாண்டி, விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கான நிதி உதவியும் முக்கியம். மேலும் இவர்களுக்கு அதிகாரமளிப்பதினால்; இவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். 


தசாப்தங்களாக, குறைந்த வெளியிடுபொருட்கள் கொண்ட நிலைத்த வேளாண்மை பிரச்சார போராட்டம் 2022 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அரசு தேசிய இயற்கை வேளாண்மை திட்டக் குழு துவக்கி வைத்ததன் மூலம் அங்கீகாிக்கப்பட்டது. இது நடக்க 3 முக்கிய காரணங்கள் அ) பட்ஜெட் இல்லாத இயற்கை சாகுபடி குறித்த தேசிய/உலகளாவிய பேச்சு, (ZBNF,http://zbnf.org.in) வெளியில் வாங்காமல், பண்ணையிலேயே தயாரிக்கக்கூடிய இயற்கை இடுபொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மஹாராஷ்ட்ரா, அமராவதி மாவட்டத்தை சேர்ந்த பிரபல விவசாய தலைவர் திரு. சுபாஷ் பலேக்கர் அவர்களும் ஊக்கப்படுத்தி வருவது. மண்புழுஉரம் போன்ற வெளியிடு பொருட்களை வாங்குவது(80%) இந்திய விவசாயிகளுக்கு குறிப்பாக பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று இவர் வாதிடுகிறார். ஆ) ZBNF தொழில்நுட்பத்தை 6 மில்லியன் விவசாயிகளுக்கு பரவலாக்கம் செய்யவும், மேலும் 2022 ஆம் ஆண்டில், 8 மில்லியன் விவசாயிகளுக்கு கொண்டு செல்லவும் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் (வேளாண்மை) திரு.டி.விஜய் குமார் தலைமையில், ஆந்திர பிரதேச சமூக இயற்கை வேளாண்மை அமைப்பு, ஆந்திர பிரதேசம், ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில், வேளாண் உயிர்ச்சூழல், ஆராய்ச்சி மற்றும் கற்றலுக்கான இந்திய-ஜெர்மன் உலகளாவிய அகாடமி துவக்கப்பட்டது (பக்ஸ், 2022). இ) நகரங்களில் அதிகாிக்கும் புற்றுநோய், அதிகாிக்கும் விவசாயிகளின் தற்கொலை, மற்றும் வேளாண்-இரசாயனங்களின் செயல்பாடு மற்றும் அதிக இடுபொருள் சாகுபடி குறித்த தேசிய கலந்துரையாடல், ஏற்றுமதிக்கான தேவையை அதிகாிக்கும் இயற்கை அல்லது பூச்சிக்கொல்லிகள் இல்லாத பயிர் விளைபொருட்கள், சாகுபடியை சாத்தியமானதாக இருக்கும் மேலும் எப்பொழுதும் பண்ணை விளைபொருட்கள் அதிகாிக்கும்.

இருபது வருடங்களுக்குமுன் துவக்கியிருந்தாலும் , 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இயற்கை உற்பத்தி பரப்பளவு 5 மில்லியன் ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தில் இயற்கை வேளாண்மையின் வேகமான வளர்ச்சி அற்புதமானது. உயிர்ச்சூழல்/ மறுஉருவாக்கும் வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கு விதவை பெண் விவசாயிகள் ஒரு ஹெக்டருக்கு ரூ.10,000 மானியமாக அளிப்பதை தாண்டி இது செலவு குறைக்கும் மற்றும் சிறு விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கலாம்.

இயற்கை சான்றிதழ் மற்றும் பாிசோதனை
குறைந்த செலவு, இயற்கை வேளாண்மையில் சிறு விவசாயிகளை ஈர்க்கும் முக்கிய புள்ளியாக இருந்தாலும் ,அதிகாிக்கும் கூலி செலவு/ முயற்சியினால் இதன் சாத்தியகூறு அல்லது நிலைத்தத்தன்மை, அடிப்படை விலையில்லாமல் இருகும் கயிற்றில் நடக்கும் நிலையில் உள்ளது. இயற்கை இலைசாறுகள், மட்கிய உர சாகுபடி, கால்நடை வளர்ப்பு ஆகியவை கூலிபணிகள் அதிகம் இருப்பவை ஆகையால் இன்று சில விவசாயிகள் அதிக பணி சுமையினால் ஏற்படும் செலவு காரணமாக ஊக்கமில்லாமல் இருக்கின்றனர். இயற்கை பொருட்கள் 20-40% கூடுதல் விலைகுறிப்பாக ஏற்றுமதி பிரிவு அல்லது நகரங்களில் உள்ள பளபளக்கும் வியாபார கூடங்களில் (Mall) கிடைக்கிறது. இவ்வாறு அதிக விலை இயற்கை விளைபொருட்களுக்கு கிடைப்பதாலும், மேலும் பங்கேற்பாளர் உத்திரவாத திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெறுவதன் மூலமும் இயற்கை சாகுபடி பின்பற்றுவது அதிகாிக்கிறது.

சில வியாபாரிகள் முன் வந்து 10 சதவீதம் கூடுதல் விலை ஆந்திர பிரதேச சமூக இயற்கை சாகுபடி பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது, குறிப்பாக திருப்பதி திருமலா தேவஸ்தானம் அறக்கட்டளை. ஆனால் பிஜிஎஸ் -ஐ வலுப்படுத்தும் தேவையை ஆந்திர பிரதேச சமூக இயற்கை சாகுபடியில் நடந்ததுபோல், தேசம் முழுக்க பரப்ப வேண்டியுள்ளது.

இரண்டாவதாக, பொருளாதார மற்றும் சமூக அறிவியலுக்கான மையம், ஹைதராபாத், மற்றும் வாசிப்பதற்கான பல்கலைகழகம், யு.கே வும் சேர்ந்து ஆந்திர பிரதேச சமூக இயற்கை சாகுபடித் திட்டத்தின் பாிசோதனை ஆய்வுகள் பண்ணையின் உயிர்ச்சூழல் உயந்துள்ளது. ஆனால் மகசூல் அதிகாிக்கவில்லை, ஏனெனில் இந்த முயற்சியின் நோக்கம் இதுவல்ல என்ற முடிவு வெளிப்படுத்துகிறது. மேலும் பொியசவால் என்னவென்றால் விளைபொருளின் தரம் உயர்த்தியதை, குறிப்பாக குறைந்த பூச்சிக்கொல்லி எச்சங்கள் அளக்க முடியவில்லை அல்லது சிறந்த விலையும் கிடைக்கவில்லை. உண்மையில், என்.ஏ.பி.எள் அங்கீகாித்த பாிசோதனைக் கூடமான அனாகான் பாிசோதனைக் கூடம், நாக்பூரில், பூச்சிக்கொல்லி அல்லது கன உலோக எச்சங்கள் பாிசோதனை ரூ. 1000 – 1500/- செலவில் செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு விவசாய பயிற்சி மையத்திலும் பாிசோதனை கருவிகளை நிறுவி, குறைந்த இரசாயன இடுபொருள் அளவு எழுத்துப்பூர்வமாக பெற இந்தப் பாிசோதனைகளை செய்யலாம்.

விற்பனை வெற்றிக்காக விவசாய உற்பத்தி நிறுவனம்
விவசாயத்தில், இறுதியாக தொடவேண்டிய அடிப்படை அல்லது அவசியமான இலக்கு, விற்பனையாகும். பயிர் விளைபொருளுக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் விவசாயிகள் நிலைத்திருக்க இயலாது. சிறு, ஏழை, குறைந்த கல்வியறிவு கொண்ட விவசாயிகள் சந்தையின் சமமற்ற மற்றும் சுரண்டல்களை கையாள்வது கடினமாக இருக்கிறது. இதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டிலிருந்து, அரசு விவசாய உற்பத்தி நிறுவனம் அல்லது கம்பெனியை ஊக்கப்படுத்தி வருகிறது. விவசாய உற்பத்தி நிறுவனம் விளைபொருட்களை பிரித்து உள்ளூர், நகர, மாநிலத்திற்குள்,ஏற்றமதி சந்தையில் விற்பனை செய்வதால், இயற்கை சாகுபடி சமூகத்திற்கு உதவியாக இருக்கிறது. இது விவசாயிகளுக்கு 60 முதல் 70 மூ நல்ல பங்கு அளிக்கிறது. பல முதல் நிலை விவசாய உற்பத்தி நிறுவனம் இதனை செய்து, ரூ.1 முதல் 10 கோடி வருமானம் ஈட்டுதல். மேலும் 1000 முதல் 10,000 விவசாயிகள் பயனைடைந்துள்ளனர். இவற்றில் ஆஹாரம் பாரம்பாிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனம், மதுரை, சேத்னா ஆர்கானிக் ,ஹைதராபாத், சஹஜாஆர்கானிக்,பெங்களுரூ மற்றும் சஹஜா விதைகள், மைசூர் , டிம்பக்டு கலக்டிவ், அனந்தபூர் மேலும் பல, ஏ.எஸ்.ஏ, அக்சஸ் வாழ்வாதார சேவை மையம், பேசிக்ஸ், பைப், கூட்டு வளர்ச்சி மையம், ஐ. எம்.எம்.ஏ, ஐ.ஆர்.எம்.ஏ, ப்ரதான், ஸ்ரீஜன், டபிள்யு.ஒ.டி.ஆர் மற்றும் விருத்தி இவையனைத்தும் ஊக்கப்படுத்தும் நிறுவனங்களாக இருந்து மற்றவைகளை காட்டிலும் நல்ல வெற்றியை அடைகின்றனர்.

இருபதாவது நூற்றாண்டில் , கூட்டுறவுகளை காட்டிலும் விவசாய உற்பத்தி நிறுவனம் தனித்து செயல்படுகிறது. விவசாய உற்பத்தி நிறுவனங்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதார உயர்விற்கு சிறந்த விற்பனை மற்றும் நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு, தேசிய அளவில் நபார்டு வங்கி 10,000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்குவதற்கானத் திட்டம் துவக்கியது. எனினும், அணுகுமுறைத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் அடிப்படையில்,சுமார் 5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் நமது நாட்டில் உள்ளன. இது நபார்டு (2,086), எஸ்.எப்.ஏ.சி (902), இதர அரசு முகமைகள் (641) மற்றும் மற்றவைகள் (1,371), வெறும் 30 சதவீதம் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுமார், 20 சதவீத நிறுவனங்கள் செயல்படுவதற்கு போராடிக்கொண்டிருக்கிறது, மேலும் 50 சதவீத நிறுவனங்கள் தற்போது துவக்கிய நிலையில்-விவசாயிகளை சேர்த்தல், நிதிகளை சேகாித்தல் மற்றும் பல. இதில் ஒரு விவசாய உற்பத்தி நிறுவனம் வருடத்திற்குரூ.100 கோடி வருமானத்தை பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது. (பெட்டி 1) விவசாய உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து 22 லட்சம் பேரை அடைந்துள்ளனர் அதாவது 2.2 மில்லியன் ஆகும். இது நாட்டில் உள்ள 1.7மூ விவசாய உறபத்தி நிறுவனங்கள்,12 கோடி விவசாய குடும்பங்களுக்கு கொண்டு செல்லும் தேவையிருக்கிறது.

முன்னே செல்லும் வழி
விவசாய உற்பத்தி நிறுவனங்கள், அரசிடமிருந்து நேரடியாகவோ அல்லது ‘பொது விநியோக” வசதிகளான உணவுகள் வாங்குவது / உணவுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றின் மூலமோ பெண் சுய உதவிக் குழுக்களிடமிருந்து மறைமுகமாகவோ உதவிபெறும் தேவையிருக்கிறது. விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியளிக்கும் நோக்கத்தோடு சமீபத்தில் 8 நவம்பர் 2023 அன்று புது தில்லியில், தேசிய கூட்டுறவு இயற்கை அமைப்பால் (என்.ஓ.சி.எல்) ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை விளைபொருட்களை ஊக்கப்படுத்தும் தேசிய மாநாட்டில், இந்திய அரசு பாரத் ஆர்கானிக் என்ற பிராண்ட் அறிவித்தது. என்.ஓ.சி.எல், பல மாநில கூட்டுறவு சமூகங்களின் சட்டம் 2002 ன் கீழ் நிறுவப்பட்டு, உற்பத்தி, வினியோகம், மற்றும் சான்றிதழ் பெற்ற இயற்கை விளைபொருட்களுக்கான சந்தை ஆகியவற்றிற்கு வழிநடத்த உதவுகிறது. இது எதிர்கால சந்ததியினரை பயனடையும் வகையில், கூட்டுறவு மற்றும் வேளாண் பிரிவிற்கு ஒரு முக்கியமையில் கல் என்று உறுதிப்படுகிறது. என்.ஓ.சி.எல் – ன் ஐந்து ஊக்குவிப்பாளர்களான டின்.டி.டி.பி (NDDB), ஜி.சி.எம்.எம்.எப் (GCMMF), என்.ஏ.எப்.இ.டி (NAFED), என்.சி.டி.சி (NCDC) மற்றும் என்.சி.சி.எப் (NCCF) ஆகிய நிறுவனங்களை அடங்கியுள்ளது. ஆறு இயற்கை பொருட்கள் பாரத் ஆர்கானிக் பிராண்ட் -ன் கீழ் துவக்கப்பட்டது. மேலும் 20 இயற்கை பொருட்கள் கூடிய விரைவில் துவக்கவிருக்கிறது. இயற்கைபொருட்களின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், பாரத் ஆர்கானிக், இயற்கை பொருட்களை புழக்கத்தில் உள்ள விலையைவிட குறைவாகவே விற்பனை செய்கிறது. என்.சி.ஓ.எல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 50% அதிக இலாபத்தை போடுகின்றனர். இதனால் அதிகாிக்கும் வருமானம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும்,அரசு விவசாய உற்பத்தி நிறுவன வழிகாட்டிகளான சாமுன்னட்டி போன்றவர்களை அழைக்கின்றது. சமீபத்தில் சிறு விவசாய சங்கத்தை போன்ற அமைப்பினால், விவசாய உற்பத்தி நிறுவனம் அணுகுமுறையில் ஐடிசி (ITC)–யை அறிமுகம் செய்வது மேலும் உதவியாக இருக்கும். விற்பனை உதவிகள் மூலம் நவீன வழியை அளித்து, கார்ப்பரேட் சமூக பொறுப்பின் அமைப்பிலிருந்து, பொருளாதார ரீதியாக விவசாய உற்பத்தி நிறுவனத்திற்கு உதவித் தேவைப்படுகிறது.

 

அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் இயற்கை சாகுபடி கோட்பாடுகள்
1)மண்புழு உர கொட்டகை மற்றும் உற்பத்தி1) வாப்சா (மட்குகள்)
2) பிளாஸ்டிக் மூடாக்கு தடுக்க செய்யப்படவில்லை2) இலை மூடாக்கு
3) நுண்ணுயிர் இடுபொருட்கள் – அசட்டோபாக்டர், ரைசோபியம், ட்ரைகோடர்மா மற்றும் பல3) ஜீவாமிருத், பிரம்மஹஸ்த்ரா போன்ற வளர்ச்சி ஊக்கிகள் / பாதுகாப்பாளர்கள்
4) மூன்றாம் அமைப்பு சான்றிதழ் பெறுவது அதிக செலவு4) பங்கேற்புடன் கூடிய உத்திரவாத அமைப்பு – குறைந்த விலை சான்றிதழ்
5) பெரும்பாலான தொழில்நுட்பங்கள் பணக்கார, பாசன நிலம் பெற்ற விவசாயிகளால் பின்பற்றுபவை5) சிறிய, மானாவாரி விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.
6) டிராக்டர் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது6) காளைகளை உழுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

 

பெட்டி 1: சையாத்திரி விவசாய உற்பத்தி நிறுவனம்
இருபது வருடங்களுக்கு முன், இந்தப் பாதிப்பினால் உருவாக்கப்பட்ட சட்டம் என்றாலும், ஒரேயொரு விவசாய உற்பத்தி நிறுவனம் மட்டுமே வருடத்திற்கு ரூ.100 கோடி வருமானம் ஈட்டுகிறது அதன் பெயர் சையாத்திரி விவசாயஉற்பத்தி நிறுவனமாகும் (https://www.sahyadrifpc.com) நாசிக், மஹாராஷ்டிரா மாநிலம். இது 2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது, தற்போது 18,000 உறுப்பினர்கள் உள்ளனர். இது 9 பயிர்களில் தொழில் செய்து வருகிறது இந்தப் பயிர் பட்டியலில் திராட்சை முதலிடம் பெற்றுள்ளது. முதன்முதலில் திராட்சையை ஏற்றுமதி செய்யத் துவங்கி, இன்று 18 இரகங்களை விற்பனை செய்து வருகிறது. தக்காளி, மாதுளை, வாழைப்பழம், ஸ்வீட் கார்ன், மாங்காய், எலுமிச்சை (ஆரஞ்சு மற்றும் சாத்துகுடி) மற்றும் முந்திரி ஆகிய இதர பயிர்களும் உட்படுத்தப்பட்டன. வெற்றி மந்திரங்கள் பட்டியலில் அ) திடபொருட்கள், ஆ) உயர் விற்பனை முயற்சி (ஏற்றுமதி), இ) நவீன மேலாண்மை (சிறந்த/வீரியமிக்க எதிராக தானம்/ மென்மையான அணுகுமுறை). 2022 ஆம் ஆண்டு இது ரூ.310 கோடி (40 மில்லியன் டாலர்) ஐரோப்பிய முதலீட்டை ஈர்த்தது.

உத்கர்ஷ் கட்டே


Utkarsh Ghate
Ecologist,
BAIF Development Research Foundation, Pune
Email: ughaate@gmail.com
https://baif.org.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பா; 2023, வால்யூம் 25, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...