திகம்கர் மாவட்டத்தில் உள்ள பண்டல்கந்த் பகுதியின் பழங்குடியின விவசாயிகள், தங்கள் பாரம்பாிய சிறுதானிய இரகங்களை சாகுபடி செய்து, பாதுகாத்து வருவதன் மூலம், தேசிய அளவில் மாியாதையை பெற்றுள்ளனர். இந்த பாரம்பாிய இரகங்களின் மரபணுக்களை, தேசிய மரபணு வங்கியில், பயிர் வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக சேகாிக்கப்படுகிறது. ஆகையால், விவசாயிகளின் இந்த பாரம்பாிய சேமிப்பு செயல்முறைகள் , நம் தேசத்துக்கு மதிப்புமிக்க மூலப்பொருளை வழங்குகிறது. இது, எதிர்காலத்தில் பல நல்ல சிறுதானிய இரகங்களை உருவாக்க உதவும்.
சிறுதானியத்தின் முக்கியத்துவம், கோவிட் 19 தொற்று பரவலின்போது, அதிகாித்தது. சிறுதானிய சாகுபடி, சிறு மற்றும் குரு விவசாயிகளின் வேண்டுதலாக கருதப்பட்டது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்களுக்கு செலவு செய்ய முடியாததால், பொருளாதார தேவைகள் பூர்த்தி செய்வதற்கு விவசாயிகள் பெரும்பாலும் சாகுபடி செய்வதாக நம்பப்படுகிறது. உண்மையாக, இவற்றை பாரம்பாிய, சமூக மற்றும் கலாச்சார பிண்னணியின் அடிப்படையில் இவர்கள் சாகுபடி செய்கின்றனர்.
சிறுதானியங்களை பாதுகாப்பதில் பண்டல்கந்த் பகுதி சிறந்த வரலாற்றை பெற்றுள்ளது. சாகுபடி செய்வதற்கு உகந்த சீதோஷன நிலை இருப்பதைத் தாண்டி, அவர்களின் உணவு தட்டில் உள்ளூர் மக்களின் முதன்மை தேர்வு சிறுதானியங்களோடு இணைத்தே உள்ளது. பல்வேறு பருவத்தின்போது, நடக்கும் விழாக்கள் மற்றும் திருவிழாக்கள், இப்பொழுதும் சிறுதானியங்களை பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பதை பார்க்க முடிகிறது. ஆகையால், பாரம்பாிய சிறுதானிய இரகங்களை பாதுகாப்பதற்கு பழங்கடியின விவசாயிகள் பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
திக்கம்கர் மாவட்ட விவசாயிகள், மத்திய பிரதேசத்தில் உள்ள பண்டல்கந்த் பகுதியில் கடந்த பல வருடங்களாக பல்வேறு சிறுதானிய இரகங்கள் பாதுகாத்து வருகின்றர். இவைகள்– சாவன், சீனா, சத்தியா, பிக்கார் போன்ற உள்ளூர் பெயர்களால் அங்கீகாிக்கப்படுகின்றன. உடலியல் மற்றும் இனபெருக்க பண்புகளை, சாகுபடியாளர்கள் நன்கு அறிவர். சமூகத்தில் நலவி வரும் புரான நம்பிக்கைகள் மற்றும் பாரம்பாியங்களோடு இந்த இரகங்கள் வெளிப்படையாக உள்ளூர் இலக்கியத்தில் மேம்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, இந்தப் பகுதியில் இருக்கும் சிறந்த கோயில்களான, அர்ச்சாவில் உள்ள பிரபல ராம்ராஜ் கோயில் மற்றும் மாவட்ட தலைநகரத்தில் உள்ள குண்டேஷ்வர் கோயில், ஆகிய கோயில்களில் வழங்கும் பரசாதத்தில் சிறுதானிய முக்கிய பங்கு அளிக்கிறது.
விவசாய பயிற்சி மையத்தின் முயற்சி
விவசாய பயிற்சி மையம், திக்கம்கர் ‘விவசாய உரிமைகள் – தாவர இரகங்கள் மற்றும் விவசாய உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2001” விழிப்புணர்வு திட்டம் வேரூண்ற கடந்த 8 வருடங்களாக பணி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இருக்கும் பாரம்பாிய பயிர் இனங்கள் பாதுகாப்பதற்கு, தேசிய மரபணு வங்கியில் மரபணு சேமிப்பது, மற்றும் இந்த இரகங்களை பாதுகாத்து சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு, உரிமை மற்றும் அங்கீகாரம் அளிப்பது.
துவக்கத்தில், தொலைதூர பகுதிகளில் பழங்குடியின விவசாயிகள் எந்தப் பயிர் , இரகங்கள் குறிப்பாக பாரம்பாிய இரகங்கள் சாகுபடி செய்கின்றனர் என்பதை தொிந்துகொள்ள, தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2013-14 ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பயிற்சித் திட்டங்கள் வழங்குவதன் மூலம் 650 – க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இரகங்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து பயிற்சிகள் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அழியும் நிலையில் உள்ள அரியவகை பயிர்களின் பல்வேறு இரகங்களை கண்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளூர் விவசாயிகள் மத்தியில் அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட ஊக்கப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு திட்டங்களை தீவிரமாக நடத்தப்படுவதால், தனித்தன்மையான பண்புகள் கொண்ட இரகங்கள் கவனம் கொள்ளப்படுகிறது. நிலக்கடலை, பயறு வகைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் தானியங்கள் போன்ற மற்ற பயிர்களோடு, 2013-14, 2014-15 மற்றும் 2015-16, ஆகிய ஆண்டுகளில் 11, 7 மற்றும் 37 வரகு இரகங்கள் முறையே, விவசாய பயிற்சி மையம் தத்தெடுத்த கிராமங்களில் உள்ள விவசாயிகளால் சேகாிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டெடுக்கப்பட்ட இரகங்களை, புது தில்லியில் உள்ள தாவர மரபணு ஆதாரங்களுக்கான தேசிய பணியகத்தின், தேசிய மரபணு வங்கிக்கு அனுப்பப்பட்டது. என்.பி.பி.ஜிஆர் (NBPGR) -இன் கிளை மையங்களில் பல்வேறு நிலப் பாிசோதனைகளை, தேர்தெடுக்கப்பட்ட இரகங்களை வயல்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் தனித்துவத்தை உறுதி செய்வதற்கு டி.யு.எஸ் (DUS) பாிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த டி.யு.எஸ் பாிசோதனை மூலம், புதிதாக அங்கீகாிக்கப்பட்ட இரகங்கள், ஏற்கனவே இருக்கும் ஒரே இனத்தின் இரகங்களோடு உள்ள வேறுபாட்டை அரிவதற்கான வழியாகும். மேலும் அறிக்கையில் உள்ள பண்புகள் ஒரேமாதிரியாகவும், நிலையாகவும் இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது. மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்ட பல்வேறு நில
பாிசோதனைகளுக்குப் பிறகு, திக்கம்கர் மாவட்டத்தில் உள்ள 12 விவசாயிகளிடமிருந்து நல்ல மற்றும் பயனுள்ள அரிய இரகங்களில் இருக்கும் மரபணுக்களை சேகாித்தனர்.இந்த இரகங்கள் நல்ல மகசூல் திறன் மட்டுமில்லாமல், பூச்சி மற்றும் நோய்கள் எதிர்க்கும் திறனும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இந்த பாிசோதனைகள் மூலம் காட்டு இனங்கள் பொதுவாக பூச்சி நோய்களுக்கு எதிராக இருக்கும் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், ஊட்டச்சத்துக்கள் ரீதியில், புரதச்சத்தின் அளவு மற்றும் தரம் மற்ற வரகு இரகங்கள் விட சிறப்பாக நம் நாட்டில் காணப்படுகிறது. இந்த இரகங்களின் நார்ச்சத்து 100 கிராமிற்கு 11-13கிராம் என்ற நிலையில், சுத்திகாிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது அரிசியை (<3கிராம்/100கிராம்) விட அதிகம்.
இந்த விவசாயிகளின் ஆச்சாியப்படக்கூடிய முயற்சிகளை, விவசாய பயிற்சி மையத்தின் மூலம் தேசிய அளவில் பாரம்பாிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி விவசாயிகள் நல்ல இரகங்களை எதிர்காலத்தில் உருவாக்குகின்றனர் என்பதை முன்னிலைப்படுத்தி பரப்பப்பட்டது குறிப்பாக , பயிர் வளர்ச்சித் திட்டங்களில் எதிர்காலத்தில், அதன் தரம் மற்றும் பயன்பாடு வைத்து ஏப்ரல் 18, 2017 ஆம் ஆண்டு பொது விழாவில் மாியாதைக்குரிய மத்திய வேளாண் அமைச்சர் திரு.ராதா மோகன் சிங், அவர்கள் திக்கம்கர் பகுதியை சர்ந்த 12 சிறுதானிய விவசாயிகளை 18 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். கவுரவிக்கும் நோக்கத்தோடு, ஒவ்வொரு விவசாயிக்கும் மாியாதை நிமித்தமான கடிதம் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கத்தை பாிசாக அளிக்கப்பட்டது. இந்த முகவரியில் உள்ள அமைச்சர் ‘ திக்கம்கர், விவசாய பயிற்சி மையம் மற்றும் உள்ளூர் விவசாயிகள் இணைந்து செய்த இந்த முயற்சி இந்திய பாரம்பாிய அறிவோடு மதிப்புமிக்க தாவர இரகங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து வெளிப்படுத்துகிறது. மேலும், இது தேசிய திறனளவாக கருதப்பட வேண்டும்.
நம்முடைய பாரம்பாியத்துக்கு தேசியளவில் இவ்வளவு பொிய விருது கிடைக்கும் என்பதை கனவில் கூட நினைக்கவில்லை என்று சொரியானா என்ற கிராமத்தை சேர்ந்த ரமா பாய் கூறினார்.
பொதுவாக, சிறுதானிய இரகங்களின் கீழ் தள்ளப்பட்டது என்றாலும், இவற்றின் அதிக ஊட்டச்சத்து பண்புகள் , குறுகிய வளர்ச்சிக் காலம் மற்றும் நீண்ட வாழ்வு ஆகிய பண்புகள், சேமிப்பு செய்வதற்கு மிக சாியான தேர்வாக கருதப்படுகிறது. இந்த பண்டல்கந்த் விவசாயிகள் சிறுதானிய உயர்வுகளுக்கு வளர்ச்சி முறைகளுக்கான கதவு திறக்கப்பட்டது.ஆனால் இது அதிக விவசாயிகளை சிறுதானிய சாகுபடியை பின்பற்றுவதில் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிக உற்பத்தியினால், இவர்களுக்கு வியாபாரிகளும் கிடைத்துள்ளனர். இந்த வழியில், வரகு, ஒரு காலத்தில் பாரம்பாியமாக மட்டும் மேம்படுத்தி வந்தவற்றை தற்போது வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாறியுள்ளது.
ஆர்.கே.பிரஜபதி, பி.எஸ்.கிரா; மற்றும் யோக் ரஞ்ஜன் சிங்
R.K. Prajapati Scientist (Plant Pathology) Krishi Vigyan Kendra, Tikamgarh, M.P.-472001, India E-mail: rkiipr@yahoo.com B.S. Kirar Principal Scientist and Head Krishi Vigyan Kendra, Tikamgarh, M.P.-472001, India E-mail: kvktikamgarh@rediffmail.com Yogranjan Singh Scientist (Biotechnogy) College of Agriculture, Tikamgarh, M.P.-472001, India E-mail: yogranjan@gmail.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2023, வால்யூம் 25, இதழ் 1



