வடகிழக்கு இந்தியாவில் சிறுதானியங்களை மீட்டெடுத்தல்


வடகிழக்கு இந்தியாவில், சாகுபடி முறைகளிலும், அவர்களின் ஊட்டச்சத்துக்களிலும் சிறுதானியங்களை மீட்டெடுத்திருக்கிறார்கள், சிறு விவசாயிகள். தொழில்நுட்ப உதவி மற்றும் மதிப்பு கூட்டுதல், மேலும் விற்பனைக்கான இணைப்பை சிறு உதவியுடன், வடகிழக்கு இந்தியாவில் சிறுதானியங்களை மீண்டும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புகளில் செயல்படுத்த உதவுகிறது.


இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மானாவாரி வேளாண்மை முறையில் வாழ்விற்குத் தேவையான விவசாயமே சிறு விவசாயிகள் அதிகமாக பின்பற்றுகின்றனர். இந்தப் பகுதியில் இடமாற்று விவசாயமே பாரம்பாியமாக சாகுபடி செய்யும் முறையாகும் இந்த சாகுபடிக்காக வனத்தில் உள்ள நிலத்தின் சிறிய பகுதியை சுத்தம் செய்து எரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தப் பகுதி அரிசி, மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், டீ, வாசனை பொருட்கள் மற்றும் பழங்கள் ஆகியப் பயிர்கள் இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றனர். இந்தப் பகுதி அதிக அளவு உயிர்பல்வகைமை நிறைந்த, பல பாரம்பாிய பயிர் மற்றும் கால்நடை இரகங்களின் இருப்பிடமாக இருக்கிறது. இந்தப் பகுதியில் அதிக ஆபத்துடைய இயற்கை போிடர்களான வெள்ளம், நிலச்சாிவு, மற்றும் பூகம்பம் ஆகியவற்றை சந்திப்பதால் வேளாண்மை பொிதும் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் தரம் குறைதல், மண் அரிமானம், குறைந்த மகசூல், வலுவற்ற விற்பனை இணைப்புகள், மற்றும் சீதோஷன மாற்றம் ஆகிய கூடுதல் சவால்களை விவசாயிகள் இந்தப் பகுதியில் சந்திக்கின்றனர்.

வடகிழக்கு இந்தியாவில் வேளாண்மை நில வடிவமைப்பில் மற்றும் ஊட்டசத்து கலாச்சாரத்தில் சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. கேழ்வரகு, காட்டுமணி, திணை, நௌிகோதுமை, கம்பு, ஆகிய சிறுதானியங்கள் அஸ்ஸாம் (18.82 கிகி/குடும்பம்/மாதம்) மற்றும் பிகார் (18.69 கிகி/குடும்பம்/மாதம்) மாநிலங்களில் சிறுதானியங்கள் அதிகமாக நுகரப்படுகின்றனர். நூறு வருடங்களாக இந்த சிறிய விதைகள் கொண்ட புற்கள் சாகுபடி செய்து, உள்ளூர் சமூகங்களால் நுகரப்படுகின்றனர். இது சவாலான மற்றும் மலைகளில் நன்கு வளரக்கூடியத் தன்மை மற்றும் மிக மோசமான வானிலை சூழல்களிலும் தாங்கி வளரக்கூடியது..பாரம்பாிய நொதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் இமயமலையிலுள்ள வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, சுவை, ஆரோக்கியம், சமூகம், சம்பிரதாயம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பெற்றுள்ளதேயாகும். கிழக்கு இமாலய பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படும் சிறுதானியப் பயிர் கேழ்வரகு ஆகும். திணை மற்றும் கேழ்வரகு பயிர்கள் மற்ற மாநிலங்களிலும் அதிகமாக காண முடிகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வாழ்விற்குத் தேவையான விவசாய முறைகளில் சிறுதானியங்களே முக்கிய பங்காக சிறு விவசாயிகளால் உருவாக்கப்பட்டது. தீவனம் மற்றும் பறவைக்கான உணவாக பயன்படுத்தினாலும், அதிகமாக உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிறுதானிய நுகர்வு முறை வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வேறுபடுகின்றனர். இதற்கு ஒதுக்கப்படும் நேரம், ஓரே மாதிரியாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். சிறுதானிய சாகுபடியை ஊக்கப்படுத்தும் முயற்சி வடகிழக்கு இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது.

சிறந்த உணவு இறையாண்மைக்காக உள்ளூர் அறிவு மற்றும் பாரம்பாிய உணவு முறைகளை மீட்டெடுக்க இந்தப் பகுதியில், கோிட்டஸ் இந்தியா பணிபுரிந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டிலிருந்து கோிட்டஸ் இந்தியா, வேளாண்மையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கைகளை வழிநடத்துதல் (FARM) என்ற வடகிழக்கு திட்டத்தை, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், கோிட்டஸ் இந்தியாவின் பொிய ஒருங்கிணைந்த திட்டமாக அப்பகுதியின் சிறிய விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கவும், சீதோஷனம் சார்ந்த பாரம்பாிய வேளாண் அமைப்புகள் மற்றும் பாரம்பாிய உணவு முறைகள் மூலம் உணவு உத்திரவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த நல்ல மாற்றத்தை கொண்டு செல்ல சமூகம் சார்ந்த,சிறு விவசாயிகளை முக்கியமான பங்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

கோிட்டஸ் இந்தியா வடகிழக்கு பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஏழு மாநிலங்களை சேர்ந்த பல்வேறு முக்கிய குழுக்களோடு, சிறுதானியங்கள் உட்படுத்திய நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. தேவையிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தை விரிவாக்குவதற்கு கோிட்டஸ் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. சிறுதானிய சாகுபடி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதன் மூலம், கோிட்டஸ் இந்தியா, ஊட்டச்சத்துமிக்க, நிலைத்த மற்றும் வலுவான பாரம்பாிய உணவு முறையை மீட்டெடுப்பதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறது.

சிறுதானியங்கள் வடகிழக்கு பகுதியில் பாரம்பாிய வேளாண்மையில் ஒரு அங்கமாக இருக்கிறது, ஆனால் அரிசி உண்பவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் முக்கிய உணவில் இதனை பயன்படுத்துவது குறைந்துவட்டது. 2016-17 ஆம் ஆண்டின் பயிர் வளர்ச்சி காலத்தின்போது, மேகாலயா மாநிலத்தில் ரிபோய் மாவட்டத்தில் முதல் முறையாக கேழ்வரகை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தப்பட்டது. பரவலாக செயல்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த கேரிட்டஸ் இந்தியா, சிறுதானியங்களை பயன்படுத்தவும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்கவும், மேலும் அவற்றின் நுகர்வை அதிகாிக்கவும் முக்கியத்துவம் அளிக்கிறது.

மக்கள்வழி வளர்ச்சி அணுகுமுறை
இந்தத் திட்டம் மக்கள் வழி வளர்ச்சி அணுகுமுறை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வளர்ச்சிக்கான பணிகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை உள்ளூர் மற்றும் தனிநபர்கள் பங்கேற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இது மக்களை திறமையாக, தங்கள் வளர்ச்சிக்கு செயல்பட்டு அவர்களின் தேவை மற்றும் சூழ்நிலைகளுக்கு சிறந்த அறிவின் ஆதாரமாக அங்கீகாிக்கப்பட்டனர். இந்த அணுகுமுறை, ஆளுமை மற்றும் முடிவெடுக்கும் திறனை சமூகத்திற்கு மாற்றிவிடும் குறிக்கோளில், சமூகங்கள் மத்தியில், பொது சமூக நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளிடம் பங்குதாரர்களாக வள்ர்ச்சியடைகின்றனர்.

மக்கள் பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைந்து முடிவெடுப்பதன் மூலம் இறையாண்மைக்கான பாரம்பாிய மற்றும் கலாச்சார உணவு செயல்பாடுகளை மீட்டெடுக்க பார்ம் திட்டம் துவக்கப்பட்டது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து சமூகங்கள் மற்றும் விவசாயக் குழுக்கள் ஒன்று சேர்ந்து, அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், வருமானம் மற்றும் உணவு உத்திரவாதம் ஆகியவற்றில் உள்ள பொதுவான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படுகிறது. சமூகத்தை ஊக்குவிக்கும் செயலை பார்ம் பார்த்துகொள்கிறது, திட்டம் கிராமங்கள் மற்றும் மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் மனித ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். இது விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த முடிவுகளை சுயமாக தனதாக்கும் நிலையை உருவாக்குகிறது.
சிறுதானிய சாகுபடியில் விவசாயிகளின் திறன் வளர்க்க பரஸ்பர அணுகுமுறையை இந்தத் திட்டத்தில் பின்பற்றப்பட்டது. பார்ம், பாரம்பாிய வேளாண் செயல்பாடுகளை விரிவுபடுத்த பணிபுரிகிறது. ஒரு புறத்தில், சாியான முறையில் கலந்த பாரம்பாிய மற்றும் விஞ்ஞான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட செயல்பாடுகளை வேளாண்மைத்துறை மற்றும் விவசாய பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மற்றொரு புறத்தில், முன்னோடி விவசாயிகள், அவர்களின் முன்னோர்களிடமிருந்து பெற்றுள்ள அறிவு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நேரடி பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இது பாரம்பாியமும், அறிவியலும் கலந்தது. பயிற்சியளித்த விவசாயிகளிலிருந்து, உள்ளூர் ஆதார நபர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் சிறுதானிய சாகுபடியில் சமூகங்களுக்கு உதவி செய்து பயிற்சியளித்தனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், முதலில் குடும்பத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. கூடுதலாக உள்ள விளைபொருட்களை உள்ளூர் சந்தையில் சாதாரண விலையில் விற்கின்றனர். சமூகங்களுக்கு இலாபத்தை விரிவாக்கம் செய்ய உதவும் வகையில் சமூகங்களை தயார்படுத்தி, விளைபொருட்களை ஒன்று சேர்த்து விற்கின்றனர். திட்டப்பகுதியில் பல சிறிய விற்பனைக் கூடங்களை உருவாக்கி அங்கு மக்கள் விளைபொருட்களை விற்பனை செய்யலாம். கூடுதலாக, அரைப்பதற்கு மற்றும் பொட்டலமிடும் கருவிகள் மூலம் செய்முறைகளுக்கு உதவியளிக்கும் நோக்கத்தோடு விவசாயிகளுக்கு உதவுகிறது.

முடிவுகள்
விவசாயிகள் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக பின்பற்றுகின்றனர். விதை பாிமாற்றங்கள் பரவலாக பின்பற்றவும் விரிவாக்கவும் உதவுகிறது. உள்ளூர் நுகர்வோரை ஈடுபடுத்தி சிறுதானியங்களுக்கு சந்தை இணைப்புகள் உருவாவதற்கு சமூகசெயல்பாடும் உதவுகிறது. பதப்படுத்தும் இயந்திரங்கள், விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ததனால் தங்களின் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டி இதன் மூலம் விற்பனைத் தேர்வுகளை சிறப்பான வகையில் உறுதிப்படுத்த உதவுகிறது. மதிப்புக் கூட்டிய பொருட்களான கேக்குகள், சிறுதானிய மாவுகள் பிரபலமடைந்துள்ளது.

பார்ம் திட்டம் இரண்டு வருடத்திற்கும் குறைவாக வடகிழக்கு பகுதியில் உள்ள 5 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் சிறுதானியம் வெற்றிகரமாக ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய பகுதிகளில் தற்போது பல்வேறு வகையான சிறுதானியங்களை, தோராயமாக 1500 க்கும் மேலான சிறிய விவசாயிகள், ஒவ்வொரு வீட்டிலும் 3-5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர்.

விழிப்புணர்வு மற்றும் உணர்வதற்கான பயிற்சிகளினால் சிறுதானியங்கள் விவசாய சமூகத்தின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. பாரம்பாிய விதை வங்கிகள் சிறுதானிய விதைகளை சேமிக்கவும் துவங்கியுள்ளது. கள அளவில் வெற்றியை உருவாக்குவது செயல்பாட்டை பின்பற்றும் தாக்கம் பன்மடங்கு பெருகுகிறது. சிறுதானிய விதை பாிமாற்ற நிகழ்வுகள், பார்ம் திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் மாநில அளவில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனால் புவியியல் ரPதியாக கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பாடுகளை பின்பற்றுவது அதிகாிக்கிறது.

முடிவுரை
மக்களை மையமாக வைக்கும் அணுகுமுறையின் பார்ம் திட்டம், வடகிழக்கு பகுதிகளில் சிறுதானியங்களை மீட்டெடுப்பதில் சிறந்த வெளிப்பாடு தொிகிறது. விவசாயிகள் மற்றும் நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கு உதவுவது மூலம், இந்த முயற்சி ஊட்டச்சத்து உணவு ஆதாரமாக, சிறுதானியங்கள் பிரபலமடைவது மட்டுமில்லாமல், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை விரிவடையவும் செய்கிறது. மேலும் பாரம்பாிய சாகுபடி முறைகள் பாதுகாக்கப்படுகிறது. மக்கள் வழிநடத்தும் வளர்ச்சி அணுகுமுறையில் சமூகம் திடமான முடிவுகளை, எது சிறப்பாக வேலை செய்யும் என்ற அவர்களின் உணவு உத்திரவாதம் சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இந்த முயற்சி உயிர்பல்வகைமை மேம்படுத்தும் அதேவேளையில் ஆரோக்கியமான உயிர்ச்சூழல் அமைப்புகளை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. சிறுதானியங்களை மீட்டெடுப்பதன் மூலம் கலாச்சார உணவு பழக்கங்களை முக்கிய சமூகத்தின் மத்தியில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இது சமூகத்தில் நல்ல மாற்றங்களை மக்கள் தலையீட்டின் சக்தியை முன்வைக்கிறது.

தாக்கத்தை ஏற்படுத்தும் வெற்றிக்கதை
திரு. லாங் பைடு, மேகாலயா மாநிலத்தில், மேற்கு ஜெயின்டியாமலை என்ற மாவட்டத்தில், சமன்காங் கிராமத்தில் வசிக்கும் 68 வயதுடைய விவசாயி, சிறுதானிய சாகுபடிக்கு திடமான ஆதரவளிப்பார். கடந்த 27 ஆண்டுகளில் சிறுதானிய சாகுபடி குறைந்து, முக்கிய தானியமாக அரிசி மாறியதில் அவருக்கு வருத்தம். பணப்பயிர்களான எள் மற்றும் கோரைப் புல் அறிமுகப்படுத்தி சிறுதானியத்தை விட அதிக இலாபம் கிடைப்பதால், இவற்றின் பங்கு குறைவதாக லாங் தன் கருத்தை கூறுகிறார். கூடுதலாக பொது வினியோக முறையில் வெறும் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை அளிப்பதன் மூலமாக, உணவு பழக்கங்களும் மாறிவிட்டன. இதனுடன் மக்கள் வெளி உணவு பொருட்களில் அதிகம் சார்ந்துள்ளனா;.
இந்த சவாலான சூழ்நிலைகளின் வெளிப்பாடு, ஜெயின்டியா மலைகள் வளர்ச்சி சமூகம், கோிட்டஸ் இந்தியா பார்ம் என்.இ திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி குறைவதை ஈடுசெய்வதற்கு முயற்சியெடுத்துள்ளனர். விவசாயிகளுடன் சிறுதானிய சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து கலந்துரையாட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. வேளாண்மை பயிற்சி மையம், மேற்கு ஜென்டியா மலைகள் மாவட்டம், சிறுதானியங்கள் வேளாண் -பதப்படுத்துதல் குறித்து தொழில் முனைவோருக்கு பயிற்சியளித்து உதவுகின்றனர்.

இந்தப் பணிகள் 2019 ஆம் ஆண்டில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் முயற்சியில் 10 குடும்பங்களின் முடிவுகள் ஏற்கனவே நல்லதாக காட்டுகிறது. எதிர்காலத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்கு சமூகத்திலிருந்து சமூகத்திற்கு பாிமாற்றத்தை ஊக்கப்படுத்துவதால் அதிக குடும்பங்கள் இந்த முயற்சியெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவி ஒட்டுமொத்த மாவட்டமும் சிறுதானிய சாகுபடிக்கு மாறினர்.

கோிட்டஸ் இந்தியாவின் உதவியுடன் அதன் பங்குதார நிறுவனமான ஜெ.எச்.டி.எஸ், இணைந்து சாமனாங் கிராமத்தில் சிறுதானியங்களின் சாகுபடி எண்ணிக்கை 51 ஆக அதிகாித்தது. க்ரீ லே என்ற வெள்ளை தானியம் மற்றும் க்ரீ வாங் என்ற கருப்புதானியம் ஆகிய இரண்டு கேழ்வரகு இரகங்கள் இந்தக் கிராமத்தில் பரவலாக சாகுபடி செய்கின்றனா;. சிறுதானிய சாகுபடி மற்றும் அதன் திறன் நீண்ட காலம் நிலைக்கும் என்ற எண்ணம் சமூகத்தை மகிழ்ச்சியுடன், பதப்படுத்துதல், பொட்டலமிடுதல் மற்றும் விற்பனை மூலம் அதிக வருமானம் பெறுகின்றனர்.

பார்ம் திட்டம் செயல்படுத்தி சமூகத்தில் சிறுதானிய சாகுபடி மீட்டெடுத்து, அந்தப் பகுதிக்கு எதிர்காலத்தில் தேவையான உணவு இறையாண்மையை ஊக்கப்படுத்துகின்றனர். இதேபோல் மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் உள்ள இதர பகுதிகளிலும் பல வெற்றிக் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பிராபல் சென்,பேட்டிரிக் ஹன்ஸ்தா,பிரதிப்தா கஜஷோர் மற்றும் சந்த் ஹாிதாஸ்


Prabal sen
Program Associate
Caritas India
CBCI Centre, Ashok Place,
Opposite Gole Dak Khana,
New Delhi - 110 001, India
E-mail: prabal@caritasindia.org

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2023, வால்யூம் 25, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...