பாசனத்திற்காக சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்


இயற்கை ஆதாரங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதியில், சூரிய ஆற்றலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் பயன்பாட்டிற்கு மாறி, வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எரிப்பொருள் ஆதாரங்களுக்காக நாம் செலவிடுவதை குறைக்கலாம். சூரிய ஆற்றலை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பயன்களை அதிகமாக பெறலாம். லடாக்கில் நிகழ்ந்த ஒரு வெற்றிக்கதை நமக்கு வழிக்காட்டுகிறது.


உலகிலேயே குளிர்ச்சியான மற்றும் மேடான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது, லடாக். இந்தப் பகுதியில் சூரியஒளி போன்ற நிறைந்த இயற்கை ஆதாரங்களால் சூழப்பட்டது. இந்தப் பகுதியில் வருடத்திற்கு 320 நாட்களுக்கு அதிகமாக தௌிவான சூரிய நாட்கள் இருக்கும், வருடத்திற்கு 2149 கி.வா.ஹ/ச.மீ சூரிய கதிர்கள் பெறுகிறது. இந்தப் பகுதியின் சராசாி சுற்றுப்புற வெப்பம் மிக அரிதாகவே 27 டிகிரி செல்சியஸை தாண்டும். இதன் அனைத்து சூழ்நிலைகளும் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு உகந்தப் பகுதியாக, குறிப்பாக மின்னழுத்த மற்றும் அனல் சக்தியை உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது.

லட்டூ, லடாக் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் இருக்கும் கடைசி கிராமமாகும். 1967 ஆம் ஆண்டு அகதிகள் சிலர் வசித்தனர். இந்த கிராமத்தில் தேவையான சாகுபடி நிலம் இருந்தாலும் பாசனத் தண்ணீரின் ஆதாரம் பாகிஸ்தானிலிருந்து அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி 700 அடி உயரத்தில் ஷிங்கோநல்லா ஆற்றுக்குமேல் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரே ஆதாரம் நீரூற்றுதண்ணீர் மட்டுமே, இதனை மின்சாரம் அல்லது டீசல் அடிப்படையிலான தண்ணீர் பம்புசெட்டுகள் மூலம் இறைக்கப்படுகிறது. அதிகமாக பயன்படுத்தும் நீரூற்று தண்ணீருடன் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சீதோஷன மாற்றம் அதிகாிப்பது தண்ணீர் பற்றாக்குறையில் முடிந்தது. மேலும் மின்சாரம் அல்லது டீசல் அடிப்படையிலான பம்புகள் பயன்படுத்தி தண்ணீர் ஆற்றிலிருந்து இறைப்பதற்கு அதிக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பின்புலத்தில், லடாக் சுயாட்சி மலை வளர்ச்சி ஆய்வகம், கார்கில் மற்றும் கார்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி முகமை ஆகிய இரண்டும் இணைந்து சூரிய நீர் மூழ்கி பம்புகளை பயன்படுத்தி தண்ணீர் இறைக்கும் அமைப்பு உருவாக்கிய ஒரு மாதிரி திட்டத்தை துவக்கியது.

ஒரு முயற்சி
இந்தத் திட்டப் பகுதியில், ஏப்ரிகாட், ஆல்பா-ஆல்பா, வீட்டுத் தோட்டம் போன்றவை அடங்கிய 23 ஏக்கர் நிலம் வறட்சியை சந்திக்கிறது. தோராயமாக 15 ஏக்கர் சாகுபடி நிலமாக இருந்தாலும் அவற்றை தாிசாக விட்டுவிட்டனர். இந்த சாகுபடி செய்யாத நிலத்தை சூரிய தண்ணீர் பம்பை பயன்படுத்தி சாகுபடி செய்யலாம். எந்த எதிர்மறை சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் கூடுதல் செலவு இல்லாமலும், பாசனத்திற்கான தண்ணீரை இறைக்கலாம்.

சூரிய தண்ணீர் இறைக்கும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நிலத்திற்கு பாசனம் செய்யப்பட்டது. பம்பின் அமைப்பு ஒட்டுமொத்தமாக சூரிய சக்தி அடிப்படையிலான நீர்மூழ்கி பம்புகள் 41 குதிரைசக்தி கொண்டது. இந்தச் சூரிய அமைப்பு 50 கி.வாட் சக்தி கொண்டு ஒரு பம்பை இயக்கும் திறனை பெற்றிருக்கிறது. ஆற்றங்கரையின் ஓரத்தில் ஜேக் கிணறு என்று கூறப்படும் அமைப்பு 3.35மீ x 2.10மீ x 3.65மீ உள்ள அளவில் உருவாக்கி பம்பை வைத்து, 140 மிமீ விட்டம் கொண்டு வெளியிடும் பைப்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படுகிறது. பைப்பின் நீளம் 360 மீ. அமைப்பு ஒட்டுமொத்தமாக 130-160 மீ அளவில் இருக்கும் இது ஆறு மணிநேரத்தில் ஒரு இலட்சம் லிட்டர் தண்ணீர் இறைக்க உதவும்.
சூரிய தண்ணீர் பம்பு 2019 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் முதல் நவம்பர் வரை கோடை மாதங்களில் (ஒவ்வொரு ஆண்டிலும்), தற்போது வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு செயல்படுவதை கண்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் சாகுபடி செய்து நல்ல இலாபத்தை பெற்று வருகின்றனர்.
சாகுபடி செய்யப்படாத மற்றும் வறட்சி நிலங்களில் பாசனம் அளிப்பதோடு, சூரிய தண்ணீர் பம்பு கூடுதலாக வேலைவாய்ப்பும் அளிக்கிறது. ஒரு கிராமத்தில் இரண்டு பேரை தேர்வு செய்து பம்புகள் மேம்படுத்துவதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது. மாதங்கள் அடிப்படையில் அவர்களை பணியில் அமர்த்தி பம்புகள் மேம்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நிறுவனம் அவர்களது குழுவை அனுப்பி ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் எதிர்பார்க்கமுடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணுகின்றனர். சில கருவியின் பாகங்களும் இலவசமாக எதிர்காலத்தில் தேவைப்படும் பொருட்களை நிறுவனம் வழங்குகிறது. தற்போது பம்பு நன்றாக பணி செய்கிறது.

குளிர்க் காலத்தில் வேளாண்மை உற்பத்தி இல்லாததால், அச்சமயத்தில் தண்ணீர் இறைக்கும் தேவை இருக்காது. குளிர்க்காலத்தின்போது சூரிய பம்புகளை அப்படியே விட்டுவிடாமல், அரசின் ஜல் ஜீவன் அபியான் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையான ஹர் கர் ஜல் -ன் நோக்கத்தை அடைவதற்கு பயன்படுத்த திட்டமிட்டனர். மேலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மற்ற எந்த ஆற்றலின் ஆதாரத்தைவிட சூரிய ஆற்றல் மிகவும் மலிவாகக் காணப்பட்டது. சூரிய ஆற்றல் அந்தப் பகுதியில் உள்ள கனிம அளவை சமன் செய்யும் நிலைக்கு வழி வகுக்கிறது.

இந்த முயற்சியின் வெற்றியோடு, இதுபோன்ற பல திட்டங்கள் லடாக்கில் உள்ள கிராமங்களான தர்கோ, சன்டக்ச்சான், அதுள்கன்ட், மற்றும் சன்னிகன்ட். சூரிய தண்ணீர் பம்புகளுடன், கூடுதலாக சூரிய பசுமைக் குடில், சூரிய பொட்டலகுடில், சூரிய தெரு விளக்கு ஆகிய அனைத்தும் இந்தப் பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது. லடாக்கின் வளமை சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை நம்பி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பயன்கள் மற்றும் சிறந்த வாழ்வு நிலை ஆகியவை நன்றாக விரிவடைந்துள்ளது.

பில்க்யூஸ் பாத்திமா 


Bilques Fatima
Doctoral Research Scholar
Department of Economic Studies
Central University of Punjab, Bathinda-151401
E-mail: bilques.fatima93@gmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2023, வால்யூம் 25, இதழ் 2

 

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...