வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளோடு தேனீ வளர்ப்பை ஒருங்கிணைத்தால், நிலைத்த வேளாண்மை முறையை ஊக்கப்படுத்தி அதன்மூலம் உயிர்பல்வகைமை மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கு, பெண்களுக்கான ஒரு தனித்துவமிக்க வாய்ப்பு வழங்குகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மற்றும் மஹாராஷ்டிராவில், தேனீ வளர்க்கும் பெண்கள் பொருளாதார ரீதியாக நன்கு பயனடைந்துள்ளனர். மேலும் தேனீக்களின் எண்ணிக்கை அதிகாித்து, வேளாண்மை மகசூலும் உறுதிப்படுத்துகிறது.
தேனீ வளர்ப்பு, வேளாண் உயிர்ச்சூழலில் ஒருங்கிணைந்த பங்களிப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மகரந்த சேர்க்கைக்கு உதவுவதோடு பயிர் மகசூலும் அதிகாிக்கிறது. மேலும் உயிர்ச்சூழலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 2030 நிறைவேற்ற வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த வளர்ச்சி குறிக்கோள்களில் (எஸ்.டி.ஜி)15 குறிக்கோள்கள் நிலைத்த தேனீ வளர்ப்பினால் அடையப்படுவதால், இதன் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறிப்பாக உணவு உத்திரவாதத்தையும் (எஸ்.டி.ஜி 2) மற்றும் உயிர்பல்வகைமை ஆகிய குறிக்கோள்களில் தாக்கம் ஏற்படுத்துகிறது (எஸ்.டி.ஜி 15). இது வேளாண்மைக்கான வெற்றித் தீர்வாக உருவாகி, நிலைத்த உணவு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் சீதோஷன மாற்றத்தை தாங்கும் பன்பை வளர்த்தல் குறிப்பாக சிறிய விவசாயிகளுக்கு இது பயனளிக்கிறது. இந்த அணுகுமுறை, நிலைத்த வேளாண்மையை அடைவதற்கு, முன்னோடி செயல்பாட்டு முறையாக உருவாகி வருகிறது. இந்நிலையில் பல்வகைமை சாகுபடி போன்ற முழுமையான அணுகுமுறைகளை செயல்பட வைத்து விவசாயிகள் மத்தியில் வேளாண்மை முறையை மறுசீரமைக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர். எனினும், நிலத்தின் பயன்பாட்டை மாற்றுதல் , இடைவிடாமல் சாகுபடி செய்வது, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, மாசுபாடு, வெளிநாட்டு பூச்சிகள் நோய்கள் மற்றும் சீதோஷன மாற்றம் ஆகிய அனைத்து மனித செயல்பாடுகளினால் உள்ளூர் தேனீக்கள் மற்றும் மகரந்த சேர்க்கையை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கைகளிலும் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது உயிர்பல்வகைமை மற்றும் நமது உணவு உத்திரவாதத்திலும் முக்கிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளோடு தேனீ வளர்ப்பை ஒருங்கிணைத்தால், நிலைத்த வேளாண்மை முறையை ஊக்கப்படுத்தி அதன்மூலம் உயிர்பல்வகைமை மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கு, பெண்களுக்கான ஒரு தனித்துவமிக்க வாய்ப்பு வழங்குகிறது. தேனீக்கள் மற்றும் இதர மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளுக்கு உதவியாக நடப்பட்ட விதைகள் மற்றும் நாற்றுகளோ அல்லது ராக் தேனீ எனக் கூறப்படும் எபிஸ் டார்சட்டாவிலிருந்து நிலைத்த தேனை பிரித்தெடுக்கும் போன்ற அனைத்து வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளோ நிலைத்த வாழ்வதாரங்களுக்கு உதவலாம். தேனீக்களில் மலர்கள் தேனீ வளர்ப்பதற்கு / இதர மகரந்த சேர்க்கை பூச்சிகளுக்கு அவசியம், ஏனென்றால் இது மற்ற பூச்சிகளுக்கு மற்றும் இதர மகரந்த சேர்க்கை பூச்சிகளுக்கு பல்வேறு மற்றும் தேவையான உணவு வழங்குகிறது. தேனீக்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி தேனீக்களுக்கு உகந்த தாவரங்கள் மேம்படுத்துவது மூலம் உதவுகிறது. தேனீக்களின் கூட்டை பாதுகாப்பது மற்றும் நிலைத்த தேனீக்கள் வளர்ப்பு முறைகளை ஊக்குவிப்பது அவசியம்.
தேனீ வளர்ப்புத் திட்டம்: மாமரத்திற்கு கீழே என்ற அமைப்பு, 2009 ஆம் ஆண்டிலிருந்து மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பழங்குடியின சமூகங்கள் மத்தியில் உள்ளூர் தேனீக்களை மையமாக வைத்து புதிய தேனீக்கள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது. துவக்கத்தில் இந்தப் பகுதிகளில் திறன் வாய்ந்த நபர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இல்லாதது, விஞ்ஞான ரீதியில் தேனீக்கள் வளர்க்கும் செயல்பாடுகள் குறித்த அறிவு, நிலையற்ற முறையில் தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களுக்கு தேவையான மலர்கள் இல்லாதது, தேனீ கூடுகள் குறைவாக இருப்பது, விற்பனை சார்ந்த பிரச்சனைகள், தேனீ வளர்ப்பு ஆண்கள் செய்யும் தொழிலாகவும், கடினமாகவும் கருதப்படுகிறது.
இந்தத் திட்டம், பாரம்பாிய மற்றும் உள்ளூர் தேனீக்கள், இவற்றின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளை மையமாக வைத்து செயல்படுத்தப்படுகிறது. தேனீக்கள் குறித்த அறிவை சமூகங்களுக்கு கற்றுக்கொடுத்து வலுவாக்குவதற்கு, திறமையான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அறிவு சார்ந்த நீண்ட கால முறையான பயிற்சி மூலம் உருவாக்கும் முயற்சியில் உள்ளது. இது மேலும் அனைத்து தேனீ சிற்றனங்கள், மகரந்த சேர்க்கை செய்யும் செயல்கள் குறித்த விழிப்புணர்வை படர செய்தல். தேனீ வளர்க்கும் பெண்களுக்கும், அவர்களின் சமூகங்களுக்கும் நீண்டகால வருமானம் ஈட்டவும், தேனீ வளர்க்க வரும்பும் இதர பெண்களுக்கு பயிற்சியளிக்கும் திறன் வளர்ப்பதே இதன் நோக்கமாகும். அவர்களின் இந்தத் திறன் மாற்றம் இந்தத் திட்டத்தின் அடிப்படையாக கொண்டு இதன் அறிவு மற்றும் அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தேனீ வளர்ப்பு பாலினம் உட்படுத்திய செயலாக:
பாரம்பாியமாக, பெண்கள் திறமையாக பல்வேறு சாகுபடி செயல்பாடுகளான பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பல பகுதிகளில் குறிப்பாக சிறிய மற்றும் வாழ்வதற்கான சாகுபடி முறைகளில், பெண்கள் முதல் நிலை உணவு உற்பத்தியாளர்களாக திகழ்கின்றனர். பல காலங்களாக இந்தியாவின் கலாச்சார பாரம்பாியத்தில் ஒருங்கிணைந்த பங்களிக்கிறது, தேனீ வளர்ப்பு. பாரம்பாியமாக தேனை மருத்துவ நோய்களுக்கும், சிற்றுண்டி தயாரிப்பதற்கு, மற்றும் ஆன்மீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெண்கள், குறிப்பாக, தேனை அறுவடை செய்வதற்கு, மற்றும் பாரம்பாியமாக தேனீ வளர்ப்பின் செயல்பாடுகள் குறித்த அறிவு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்தத் திட்டத்தில், பல பெண்கள் வெளிவந்து தன்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள தேனீ வளர்ப்புத் தொழிலை செய்வதற்காக பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வு செய்தனர். இந்த கிராம பெண்களின் சங்கங்கள் பாலின பாரபட்சத்தை உடைத்து சமமான நிலையை உருவாக்கி, குடும்பத்தை வழிநடத்தவும், சமூகத்தின் நன்மைக்காகவும் ஆதாரங்களை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில், அனைத்து தேனீ வளர்ப்புத் திட்டத்திற்கும் பெண் பிரதிநிதிகள் எல்லா எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கின்றனர். ‘வேளாண் இடுபொருட்களில் முதலீடு செய்வது அந்த விவசாயக் குடும்பங்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது வருமானத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நான் செய்த அனைத்து முதலீடுகளிலும் சிறப்பாக நன்மை தரும் என்று நான் நம்பியது தேனீ வளர்ப்பில் தான். இது சுலபமாக கிடைக்கக்கூடியது, வாங்கக்கூடியது மற்றும் துவக்கத்தில் சில தேனீக்கள் கொட்டியது தவிர முக்கியப் பிரச்சனைகள் எதுவுமில்லை என்று ஜஸ்வந்திகரத் விளக்குகிறார்.
இவர் பல்கார் மாவட்டத்தில் உள்ள பரத்படா கிராமத்தை சேர்ந்த 42 வயது நிரம்பிய முதுநிலை பயிற்சியாளர். ஜஸ்வந்தியை போன்று, பலபெண் தேனி வளர்ப்பாளர் நிலைத்த வேளாண்மை சார்ந்த பல்வேறு வருமானம் தரும் செயல்பாடுகளான தேனீ வளர்ப்பு, தேனீ பதப்படுத்துதல், தேனீ வளர்ப்புக்கு தேவையான இடுபொருள் தேனீ பெட்டி, மதிப்பு கூட்டுபொருட்கள் மற்றும் இயற்கை விளைபொருட்களை விற்பனை ஆகியவைகளை பின்பற்றுகின்றனா;.
வேளாண் உற்பத்தியில் தேனீ வளர்ப்புத் திட்டத்தின் தாக்கம்:
தற்போது, காலநிலை மாற்றங்களினால் (மழைக்காலங்கள் மாற்றம், வறட்சி, வெள்ளம்), ஆதாரப் பயன்பாடு மற்றும் நிலமேம்பாட்டு செயல்பாடுகள், பயிர் மகசூல் ஆகியவை குறைந்து, சிறு விவசாயிகளின் வீட்டுவருமானம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட முதலீடு இல்லாமலே, பண்ணை மகசூல் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, தேனீ வளர்ப்பு நிரூபிக்கப்பட்ட செயல்பாடாக அங்கீகாிக்கப்படுகிறது. தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் நல்ல மகசூல் மற்றும் தரம் உயர்வதை உறுதிப்படுத்துகிறது. தேனீ வளர்ப்பு பெட்டிகளை பயிர் வட்டத்திற்குள் அமைத்தால் மகரந்த சேர்க்கையின் தன்மை அதிகாித்து, பயிர் மகசூலும் அதிகாிக்கும். பல பயிர்களில் மகரந்த சேர்க்கையை தேனீக்கள் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டதால் மகரந்தத்தை மலர்கள் மத்தியில் மாற்றி, அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, பயிர் மகசூல் விரிவடைந்து, பழங்கள் மற்றும் விதைகள் தரமும் உயர்கிறது. சுற்றுச்சூழலில் இருக்கும் இயற்கையான ஆதாரம், தேனீக்கள். தேனீ வளர்ப்பு பணி அதிகம் உள்ள தொழில் கிடையாது, சிறியளவில் செய்தால் முக்கிய பணிநேரங்களை தாண்டி சிறியளவு நேரம் ஒதுக்கினாலேபோதும், அதனால் இலாபம் தரும் கிராம வாழ்வதாரங்களின் கூட்டுத் தொழில் குறிப்பாக பண்ணை சாகுபடியில் சிறப்பானது. தேனீக்களுக்கு தேவையாக பூக்களை உருவாக்குவதே தேனீவளர்ப்புத் திட்டத்தின் முக்கிய அம்சம், இது பெண்களுக்கு பொருளாதார ரPதியாக உதவுகிறது,தேனீக்கள் எண்ணிக்கை அதிகாிக்கிறது மற்றும் வேளாண்மை மகசூலும் கூடுகிறது.
மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு திட்டங்களில் நடத்தப்பட்ட வேளாண் ஆய்வுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளின் மகசூல் அதிகாித்துள்ளதை, தேனீ வளர்ப்பு செய்து ஒரு வருடத்திற்குள் இந்த வெளிப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேனீ பெட்டிகள் எனது பண்ணையில் வைத்தப்பின்னர் மிகக் குறைந்த அளவே பூச்சிகள் பார்க்க முடிந்தது அதனால் பூச்சிக்கொல்லிகளையும் ஒதுக்கிவிட்டேன். முந்திரி, நக்லி மற்றும் மா ஆகியப் பயிர்களின் உற்பத்தி சுமார் 30 சதவிகிதம் அதிகாித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பயிர்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அளவை உயர்த்துவதை காட்டுகிறது, இதுவரையில் இந்த முறையே சிறப்பான முறையில் உற்பத்தி கிடைத்தது. என்னுடைய சக தேனீ வளர்க்கும் நண்பர்களுக்கு, பயிர் உற்பத்தியை உயர்த்துவதற்கு தேனீக்கள் மிகவும் முக்கியம் என்று கூறுவேன்,என மஹாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தில் உள்ள மொக்கதா வட்டம் சேர்ந்த மது என்ற தேனீ வளர்க்கும் விவசாயி விளக்கினார்.
தேனீ வளர்ப்பின் நேர்மறையான தாக்கங்களை கண்டு நான் மகிழ்ந்தேன். தேன் அறுவடை 20 கிலோ வரை கிடைத்தது. மேலும் பேயெள், கொண்டைக்கடலை, மற்றும் கம்பு ஆகியவற்றின் மகசூல் அதிகாித்தது. இது எனது குடும்பத்திற்கு லாபம் கிடைத்தது. என்னை போன்ற புதியவர்களுக்கு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பயிற்சிக்குபின் கிடைக்கும் உதவியும் முக்கியமானது. தேனீ வளர்ப்பு பூச்சிக்கொல்லிகளின் தேவையை விரட்டியது, வருடத்திற்கு ரூ.4000- 5000 வரை சேமிக்க முடிகிறது. தேனீக்கள் பூச்சிகளை தடுப்பதினால், நமது பயிர் வாழ்கிறது. அதிகபட்சமாக நாம் இப்போது கூடுதலாக துவரை மற்றும் உளுந்து பருப்புகளை அதிகமாக சேமிக்க முடிகிறது. இது வீட்டின் தேவைக்கோ அல்லது அவசர பண தேவைக்கோ, பாதுகாப்பு வளையமாக காக்கிறது என்று வல்சத் மாவட்டம், தரம்பூர் வட்டம் அவ்தா கிராமத்திலிருந்து 28 வயதுடைய ரேகா பத்வி என்ற தேனீ வளர்க்கும் பெண் பகிர்ந்து கொள்கிறார்.
தேனீ வளர்ப்புத் திட்டம் கிராம பெண்கள் தங்களுடைய மனித திறமைகளை வளர்ப்பதில் ஏற்படும்
தாக்கம் :
இந்தத் திட்டத்தில் நிலைத்த தேனீ வளர்க்கும் முறையில் பாரம்பாிய தேனீ சிற்றினத்தை சார்ந்தே பெண்களுக்கு அவர்களின் திறன் மற்றும் அறிவை வளர்ப்பதற்கான பயிற்சியளிக்க உதவுகிறது. இது தொழில்நுட்ப உதவியோடு வளர்ந்து, தேனீ வளர்க்கும் பெண்களை கொண்டு இணைப்பு உருவாக்கி அதன் மூலம் தேனீ பெட்டிகள் நிறுவுவதற்கு உதவுகிறது. மேலும் நிறுவனம் அமர்த்தியிருக்கும் பணியாளர்களின் உதவியை அவர்களின் பண்ணைக்கே வந்து கற்றுக்கொடுக்கின்றனர். ஆர்வமிருந்தால், தேனீ வளர்ப்பில் நவீன பயிற்சியை எடுத்து முதுநிலை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, மாத சம்பளம் இதற்கு பெறுவார். பயனாளர்களுக்கு தேனீக்களுக்கு உகந்த மலர் பயிர்களை வழங்கி தங்களுடைய சொந்த நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். நவீன தேனீ வளர்க்கும் தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், நிதி உதவிகள், நாள் முழுவதும் கிடைக்கும் உதவி, மற்றும் சந்தை இணைப்புகள் ஆகியவைகள் கிடைப்பதால், தேனீ வளர்க்கும் தொழில்நுட்பங்கள் உயர்த்தவும், வருமானம் அதிகாிக்கவும் உதவுகிறது. இந்தத் திட்டத்தின் தேனீ வளர்க்கும் பெண்கள், இதர குடும்ப உறுப்பினர்களோடு, தங்களை சுற்றிய உறவுகளை வளர்த்து, இந்த செயல்முறையை தொடர்ந்து செயல்பட உதவுவதற்கும், வரும் எந்த சவால்களையும் எதிர்கொண்டு தீர்ப்பதேயாகும்.
வீட்டு தோட்டங்கள் மூலம் ஊட்டச்சத்துமிக்க உணவு அமைப்புகளை உருவாக்குவது
மோக்கதா – நிலைத்த உணவு அமைப்பாக மாறிய வீட்டுத் தோட்டத்தின் ஒரு வெற்றிக்கதை
மோக்கதாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் அதிக சதவிகிதத்தில் வாழ்கின்றனர். குழந்தைகள் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் நல்ல ஆரோக்கியம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட கஷ்டபடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தில் முக்கிய இடங்களிலிருந்து ஒதுக்கப்பட்டனர். காய்கறிகள் குடும்பத்தின் ஊட்டச்சத்துகளை உயர்த்துவதற்கு முக்கிய பங்களிக்கும் என்பது நமக்கு தொியும். வீட்டுத்தோட்டங்கள் யுடிஎம்டி சமூகம் துவக்கிய தேனீ மலர்கள் என்ற முயற்சியில் ஒரு அங்கமாக வடிவமைக்கப்பட்டது. கோடை காலத்தில் வீட்டுத் தோட்டத்தை அறிமுகம் செய்ததற்கான முக்கிய நோக்கம் என்னவென்றால், தேனீ வளர்ப்பை பெருக்கி, வருடத்தின் வறண்ட காலங்களின்போது குடும்பங்களுக்கு தொடர்ந்து காய்கறிகள் அளிப்பதை உறுதிப்படுத்துவதற்குதான். வீட்டுத் தோட்டத்தில் காய்கறி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிப்பது செலவு மற்றும் செயல்பாட்டில் குறைந்த சுலபமாக, கிராமத்திலுள்ள குடும்பங்களுக்கு சாிவிகித உணவுத் தேவையை குடும்ப வருமானத்தையும் தாண்டி,சந்திக்க முடிகிறது.
மாமரத்தின் கீழே என்ற சமூகம் பெண் விவசாயிகளை வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சியை அளித்தது. அதில் நிலத்தை வடிவமைத்தல், வீட்டில் பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல் (பாத்திரங்களை கழுவும் தண்ணீர் மற்றும் குளிக்கும் தண்ணீர்) போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது, குறைந்த அல்லது இரசாயன உரங்கள் மற்றும் பு+ச்சிக்கொல்லிகள் சார்ந்தில்லாமல் தானாகவே இந்த முயற்சியை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றியது. சிறந்த ஊட்டச்சத்துக்கள் உறுதிப்படுத்தும் பரந்த நோக்கத்தோடு, உணவு பழக்கங்கள் மற்றும் சீதோஷன நிலையின் அடிப்படையில் காய்கறிகளைத் தேர்வு செய்கின்றனர். திட்ட விவசாயிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலவையான காய்கறிகளை அளித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாிசோதனை செய்யப்பட்டது. பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு மோக்கதா வட்டத்தை தேர்ந்த பெண்கள், தலசாி வட்டத்தில் உருவாக்கிய வீட்டுத்தோட்டத்தை பார்வையிட்டதன் வாயிலாக வீட்டுத்தோட்டத்தை அமைக்க பயிற்சி பெற துவங்கினர். திட்டம் வருவதற்கு முன்னர், எங்கள் வீட்டுத்தோட்டம் திட்டமிடாமல் அங்குமிங்குமாக சிதறி கிடந்தது, வீட்டு உபயோகத்திற்கு தொடர்ந்து காய்கறிகள் பெறும் ஆதாரமாக நாங்கள் உண்மையாக கருதவில்லை. பட்டம் மற்றும் குளிர்க்காலத்தின்போதும், தண்ணீர் இருக்கும் வரையிலும் செயல்படுத்தினோம் என்று மஹாராஷ்டிராவில் பால்கார் மாவட்டம் ,மோக்கதா வட்டத்தை சேர்ந்த தேனீ வளர்க்கும் பெண் விவசாயி கூறுகிறார். ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு, யுடிஎம்டி சமூகம் தேனீ வளர்ப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. அக்டோபர் 2019 ஆம் ஆண்டு ஒன்பது பெண் விவசாயிகள் தேனீ வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபடுத்தினர். வீட்டுத்தோட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சியை துவங்கி, பெண்களுக்கு பயிற்சியளித்து, விதைகளையும் வினியோகித்தனர்.
2020 ஆம் ஆண்டு, ஒன்பதில் ஏழு விவசாய பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது குழு உருவாக்கி 35 ஓ 35 சதுர அடி அளவுக் கொண்ட நிலத்தில் வீட்டுத்தோட்டத்தை சிறியளவில் அமைத்தனர். தோல்வி வராத சூழ்நிலையை குறைப்பதற்கு நாங்கள் வெவ்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவராக இருந்தாலும் வீட்டின் நன்மைக்காக குழுவாக செயல்பட முடிவு செய்தோம் என்றார் ஒரு உறுப்பினர். குழுவில் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் பொறுப்புக்களை பிரித்துக்கொண்டோம். முதல் காய்கறிகள் அறுவடையை சுய நுகர்விற்கு பயன்படுத்துவதாக முடிவெடுத்தனர். மேலும் இதனை வியாபாரமாக விரிவடைய செய்யும் ஆர்வத்தில் யுடிஎம்டி சமூகத்தை இந்தக் குழு அணுகியது. வேலை மற்றும் வருமானத்தை தேடி கிராமத்திலிருந்து தொடர்ந்து வெளியில் போகாமலோ அல்லது குறைக்கும் நோக்கத்திலும், இந்த சமூகத்தை பலமுறை அணுகியது. குறிப்பாக கோவிட் பரவல் காரணத்தால் போடப்பட்ட ஊரடங்கின்போது, வீட்டுத் தோட்டம் ஒன்றே காய்கறி விநியோகத்திற்கான ஆதாரமாக இருந்தது. அந்த நேரத்தில் கூலிவேலைக்கு போக முடியாததால் வருமானமில்லாமல் மிகவும் கஷ்டபட்டு கொண்டிருந்த காலம். மேலும் எங்களிடம் பணமில்லாததால் சந்தையிலிருந்து நேரடியாக எதுவும் வாங்க இயலவில்லை என்று வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவத்தை ஒரு பெண் விவசாயி கூறுகிறார். கிராமத்தின் உள்ளே காய்கறிகள் விநியோகிப்பதை தடைசெய்யப்பட்டதால் வீட்டுத்தோட்டத்திலிருந்து கிடைக்கும் விளைபொருட்களை அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள குடும்பங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். குழு வீட்டுத் தோட்டம் ஜூன் 2020 வரை செயல்படுத்தப்பட்டது (திட்டம் 1). அடுத்த பருவத்தின்போது (ஜூலை முதல் ஆகஸ்ட் 2020 வரை), வீட்டில் சொந்தமாக வளர்த்து சேகாிக்கப்பட்ட விதைகளை, பனிக்காலம் 2020 திலும் பெண்கள் வீட்டுத் தோட்டத்தை தொடர்ந்து உருவாக்கினர். வரும் வருடங்களிலும் தொடர்ந்து விரிவாக்கம் செய்து, மோக்கதாவில் உள்ள உள்ளூர் சந்தையில் விளைபொருட்களை விற்கும் நிலையை அடைந்தனர். துவக்கத் திட்டமான 2020 திட்டத்தை செயல்படுத்திய பின்னர், ஏழு பெண்கள் இந்த செயல்பாடு விரிவடைய இரண்டு தனி நிலத்தில் (25 x 30 சதுர அடி) வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் இரண்டாவது பகுதியில் உள்ளூர் சந்தையில் விளைபொருட்கள் விற்கப்பட்டது, மேலும் வீட்டு உபயோகத்திற்காக உறுப்பினர்கள் தோராயமாக 30 % மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
தற்போது, தேனீ வளர்ப்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஒன்பது பெண்களுக்கும் வீட்டுத்தோட்ட செயல்பாட்டை தேனீ வளர்ப்போடு வளர்க்க மூன்று வெவ்வேறு குழு அமைக்கப்பட்டது (மூன்று நபர்கள் கொண்ட குழு). வீட்டுத் தோட்டத்தோடு தேனீ வளர்ப்பது வெறும் உள்ளூர் தீர்வாக பார்க்கவில்லை. பெண்கள் தேனீக்கள் நிரம்பிய பெட்டியோடு வீட்டுத்தோட்டத்தையும், யுடிஎம்டி சங்க பணியாளரின் தொழில்நுட்ப உதவியோடு சிறப்பாக மேம்படுத்தி வருகின்றனர். ‘ஒவ்வொரு நாளும் குழுவாக பணி செய்வதற்கு நாங்கள் தேனீக்களிலிருந்து நம்பிக்கையை பெற்றோம். தேனீக்கள் இருப்பதனால் ஒட்டுமொத்த அறுவடையில் அதனுடைய தாக்கத்தை காட்டுகிறது. நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட 20 முதல் 30 சதவிகிதம் அதிகமாக அறுவடை செய்தோம்” என்று ஒன்றாக பகிர்ந்துகொண்டனர். தேனீ வளர்ப்போடு வீட்டுத் தோட்டம் இணைத்ததால் எங்கள் வாழ்வாதாரத்தின் புதிய வழி திறந்தது. தற்போது நாங்கள் மோக்கதாவில் ஒரு கடை அமைத்து வீட்டுத்தோட்ட விளைபொருட்களை விற்று எங்களின் வருமானம் அதிகாித்துள்ளது என்று பெண் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். பெண் குழுக்கள் தேனீ வளர்ப்போடு வீட்டுத்தோட்டம் மேம்படுத்துவது வெறும் அவர்களது வாழ்வாரதாரத்தின் வாய்ப்பாக காணாமல், அவர்களின் பாரம்பாிய சாகுபடி முறைகளோடும், பாரம்பாிய உணவு பழக்கத்தோடும் இணைந்திருக்கும் வழியாக கருதுகின்றனர். தேனீ வளர்ப்பின் மூலம் நாங்கள், தேனீக்கள் மற்றும் இயற்கையோடு எங்களுடைய உண்மையான பந்தத்தை மீண்டும் புதுப்பித்து, பரஸ்பர பயன் மற்றும் அதிக நிலைத்தத்தன்மை உருவாகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். கடைசியாக பெண்கள் ‘ வீட்டுத் தோட்டத்திற்கு முன்பு, அதிக செலவு என்பதால் சில காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளாமல் அவற்றை வாங்காமல் ஒதுக்குவதும் அல்லது சாகுபடி செய்யாததால் எங்களுக்கு நேரடியாக கிடைப்பதும் அரிது என்று கூறுகின்றனர். வீட்டுத்தோட்டம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்கள் ரீதியில் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது என்றனர்.
வீட்டுத்தோட்டம், அதில் விளையும் உணவுபொருட்களை விற்பதன்மூலம் குடும்பத்தின் வருமானம் அதிகாிக்கிறது அல்லது விளைபொருட்கள் வீட்டிற்கு உபயோகப்படுத்துவது, சந்தையிலிருந்து நேரடியாக விலைகொடுத்து வாங்கும் செலவு குறைகிறது, அதன்மூலம் குடும்ப வருமானத்தில் குறிப்பிட்ட அளவு சேமிக்க முடிகிறது. ஊட்டச்சத்து சுலபமாக கிடைக்கும் அளவு உயரும் அதேவேளையில் பெண்கள் மத்தியில் தொழிற்பண்புகள் ஊக்கமடைகிறது.
நடாஷா ஷர்மா தோக்ரா
Natasha S Dogra Programme officer Under The Mango Tree Society 318, Unique Industrial estate Bombay Dyeing compound, Twin Tower Lane Prabhadevi Mumbai, 400025, Maharashtra, India. E-mail: natasha@utmtsociety.org
மூலம் : லீசா இந்தியா, செப்டம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 3



