பங்கேற்பு அறிவை கட்டமைத்தல்


நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு புதுமையான முயற்சியாக உள்ளூருக்கு பொருத்தமான அறிவை மீட்டெடுத்து அதில் அடிமட்ட தொழிற்விற்பன்னர்களின் திறனை கட்டமைத்தலில் டெக்கான் வளர்ச்சி நிறுவனம் பங்காற்றி வருகிறது. இந்த செயல்முறையில் புதிய அறிவு உருவாக்கப்பட்டு, பாிமாறிக் கொள்ளப்படுகிறது. மேலும் உள்ளூர் தொழிற்நுட்பங்கள் அறிவியல் அடிப்படையில் வெளிக்கொணரப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் செயல்பாடுகள், உயிரினப் பன்மயத்தை அடிப்படையாக கொண்ட இயற்கை வேளாண்மை மற்றும் குறைந்த வெளியிடு பொருள் நிலைத்த வேளாண்மையை நோக்கி மாறுவது நிலைத்த வேளாண்மைக்கு பாரம்பாிய அறிவை முக்கியமான ஆதாரமாக உருவாக்குகிறது. வளர்ச்சியை கடைபிடிப்பவர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளூர் பாரம்பாியத்தை கூர்ந்து கவனித்து, அந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களின் பலத்தை அடிப்படையாக கொண்டு புதிய மாதிரிகளை கட்டமைக்கும் ஒரு ஆர்வம் வளர்ந்து வருகிறது. இன்று, உலகளவில் நடைபெறும் நிகழ்வுகள் பாரம்பாிய அறிவு முறைகளின் மிகப்பொிய ஆதாரங்களை வெளிக்கொண்டு வருகிறது.
டெக்கான் வளர்ச்சி நிறுவனமானது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் மாவட்டத்தில் ஏழை தலித் பெண் விவசாயிகள்  மத்தியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்த வேளாண்மையில் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள உதவி செய்து பணியாற்றி வருகிறது. பெண்கள் தங்களின் பாரம்பாிய அறிவை தொடர்ந்து பின்பற்றி ஊக்கமளிக்கும் வேளையில், கிடைத்தற்காிய உள்ளூர் அறிவை நடைமுறைப்படுத்துவதிலும், செயல்முறை விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளின் வாயிலாக வளர்த்தெடுப்பதிலும் நடைபெற்றுள்ள விசயங்களையும் டெக்கான் வளர்ச்சி நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.
உள்ளூர் பாரம்பாிய அறிவை அங்கீகாிப்பது
அனுபவம் மிக்க விவசாயிகளிடமிருந்து பாரம்பாிய அறிவை மேலும் பகிர்ந்து கொள்வதற்கு இணைக்கும் விதமாக, இயற்கை முறை வேளாண்மையில் உள்ளூர் பாரம்பாிய அறிவு இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளிமிருந்து கேள்வி கேட்டு பேட்டி மூலம் சேகாிக்கப்பட்டது.  மேலும், அறிவியல் ஞானம் உள்ளூர் கருத்துக்கு எவ்வகையில் பொருந்துகிறது என்பதை செயல்படுத்தியும் உள்ளது. பிடாகன்னேவை சேர்ந்த சாமம்மா, கங்குவாரை சேர்ந்த அஞ்சம்மா மற்றும் ஹம்னபூரைச் சேர்ந்த லட்சுமம்மா போன்ற டெக்கான் வளர்ச்சி நிறுவனத்தின் பெண் விவசாயிகளிடமுள்ள பாரம்பாிய அறிவு கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, அவை அறிவியல் ரீதியான அறிவோடு மேம்படுத்தப்படுகிறது.
பிடாகன்னே கிராமத்தை சேர்ந்த சாமம்மா என்கிற தலித் பெண் விவசாயி சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்களை சமாளித்து வளரும் பயிர்களை பயிரிடும் முறைகள் குறித்த அதிகமான பாரம்பாிய அறிவை பெற்றுள்ளார். ஹம்னபூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமம்மா 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயி, கிடைத்தற்காிய 60-70 வகையான பாரம்பாிய விதைகளை மண்பானைகளில் விதை வங்கியாக சேகாித்து வைத்துள்ளார். நயல்கல் மண்டல் கங்குவாரை சேர்ந்த அஞ்சம்மா விதைகளை சேகாித்து வைக்கும் முறைகளில் நல்ல அறிவை பெற்றுள்ளார்.
திறமைகளை கட்டமைத்தல்
வேளாண் தொழிற்நுட்பங்கள் மற்றும் விவசாய சமூகத்தின் அறிவை மாற்றி கொடுப்பதில், அடிமட்ட அளவில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகள் என்று வரும்போது, விவசாயிகள் அவர்களுக்குள்ளே நல்ல வகையில் பாரம்பாிய அறிவை பெற்று அவை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது என்பது அனுபவத்தில் இருந்து வெளிப்படுகிறது. அந்த தொழிற்நுட்பங்களை கடைபிடிப்பதற்கு அவர்களுக்கு தகுந்த ஊக்கம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில், அடிமட்ட அளவில் உள்ள விரிவாக்க பணியாளர்களுக்கு அவர்களின் அறிவை மேம்படுத்திக் கொண்டு அதனை விவசாயிகள் மத்தியில் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு நல்ல  அடித்தளமும், ஆதாரங்களும் தேவைப்படுகிறது.
அடிமட்ட அளவில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் வேளாண் உயிர்ச்சூழல் வகையிலான வேளாண்மை குறித்த அறிவு பாிமாற்றம் தொடர்பான விசயங்களை விவசாயிகள் மத்தியில் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காக 3 நாட்கள் கருத்துப்பட்டறை தெலுங்கானா மாவட்டத்தில் நவம்பர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த கருத்துப்பட்டறையானது,  மேதக் மாவட்டத்தில் உள்ள 46 மண்டல்களிலும் உள்ள வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு மேதக் மாவட்டத்தில் உள்ள சாகிராபாத்தில் டெக்கான் வளர்ச்சி நிறுவனத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் 7 குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் ஆத்மா ( வேளாண் தொழிற்நுட்ப மேலாண்மை முகமை), இந்திரா கிராந்தி பதாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்த மாவட்டத்தில் விவசாயிகளோடு நேரடியாக வேலை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் அடங்குவர். இந்த முயற்சிக்கு மேதக் மாவட்டத்தில் உள்ள வேளாண் தொழிற்நுட்ப மேலாண்மை முகவை ஆதரவளித்தது.
அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக பங்கேற்பு தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, சில அளவீடுகளின் அடிப்படையில், செலவு குறைந்த மற்றும் உள்ளூரில் உள்ள மிகவும் பொருத்தமான இயற்கை உரங்கள் கண்டறிவதற்கு பங்கேற்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு உரங்களின் பட்டியலை வைத்து பங்கேற்பாளர்களை அவர்களுக்கு உகந்தவற்றை வரிசைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இந்த பயிற்சியின் விளைவாக பண்ணைக்கழிவு உரமே மண்ணில் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல, மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய உரம் என்பது தொிய வந்தது. ஆனால், பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்காததால் அதற்கு 41 மதிப்பெண் கிடைத்தது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரவ உயிர் உரங்களான மண்புழு உரக்கரைசல், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றிற்கு அதன் பல்வேறு பயன்களின் அடிப்படையில் அதிகபட்சமாக 91 மதிப்பெண் கிடைத்தது.  இரசாயன உரங்கள் பெருமளவிற்கு தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் திறனை கொண்டு அதற்கு குறைந்தபட்சமாக 19 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. குறைந்த மதிப்பெண் பெற்றவைகளில் உள்ள உண்மை என்னவென்றால் அவை செலவு அதிகம் கொண்டவைகளாகவும், உள்ளூரில் கிடைக்காத பொருளாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எந்த உதவியும் செய்யாது என்பது தான்.
ஒட்டு மொத்தமாக 46 மண்டல்களில் உள்ள 12 பிரிவுகளில் 205 விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மேல்மட்ட அதிகாரிகள் உட்பட மாவட்டத்தில் அடிமட்ட அளவில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் உள்ளூர் இயற்கை வேளாண் முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
அறிவை பரவலாக்குதல்
நன்கு பயிற்சி பெற்ற விரிவாக்கப் பணியாளர்கள் இயற்கை வேளாண்மை குறித்த அறிவை மாவட்டத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு பரவலாக்குவதில் துடிப்பான பங்கை செலுத்தினர். பரவலாக்கம் செய்யப்பட்ட இயற்கை வழி வேளாண் தொழிற்நுட்பங்களில்,  மண்புழு உரக் கரைசல் என்கிற ஒரு தொழிற்நுட்பம் விவசாயிகளின் முழு கவனத்தையும் ஈர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்கப் பணியாளர்களின் அறிவை பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி,  இந்த நிறுவனத்தை உயிரின பன்மயத்தை அடிப்படையாக கொண்ட இயற்கை வேளாண்மை அறிவுக்கான மத்திய மையம் உருவாக்கி உள்ளது. இது மற்ற மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
விதை சேகாிக்கும் முறை
கங்குவாரை சேர்ந்த அஞ்சம்மா துவரை, கோதுமை அல்லது பட்டாணி விதைகளை சேகாித்து வைப்பதற்கு ஒரு வழி வைத்துள்ளார். முதலில் மூங்கில் கூடையானது சாணி மற்றும் சேறு கலந்து மொழுகி வைக்கப்படுகிறது. அதன் பிறகு துவரை ஓடுகள் அடியிலும் மேற்புறத்திலும் நிரப்பப்படுகிறது. சேகாிக்க வேண்டிய முக்கியமான விதையை இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் கொட்டி வைக்கிறார். அதன் பின் மேல்புறம் வேப்பஇலையை நிரப்புகிறார். அதன்பின் பசுஞ்சாணம், சேறு மற்றும் சாம்பல் கலவையை கொண்டு கூடையை மொழுகி விடுகிறார். இது விதைகளை அறுவடைக்கு பின் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளை தடுக்கிறது.
பொதுவாக, அடித்தெடுத்தபின் துவரை ஓடுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவரது விசயத்தில் விதைகளை சேமிப்பதற்கான ஒரு சிறந்த பொருளாக பயன்படுகிறது. இதில் உள்ள அறிவியல் பின்னணி என்னவென்றால், துவரை ஓடுகளில் உள்ள மாலிக் அமிலம் விதைகளை சேமித்து வைக்கும் போது வரும் பூச்சிகளுக்கு ஒருவிதமான எரிச்சலை அளிக்கும். இந்த வகையில் பாரம்பாிய தொழிற்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் பகிர்ந்து கொள்ளும்போது அதற்கு ஆதரவான அறிவியல் விளக்கங்கள் தரப்படுகிறது.
வரபிரசாத் சிட்டம்

Vara Prasad Chittem
Scientist-Agricultural Extension
DDS Krishi Vigyan Kendra, Zaheerabad,
Medak, Telangana
E-mail: varachittem@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2016, வால்யூம் 18, இதழ் 1
அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...