பருப்பு பஞ்சாயத்து என்பது நிலைத்த உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதாகும். தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியாளர் கம்பெனி நடைமுறைப்படுத்தியுள்ள முன்எடுப்புகள், பருப்பு உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கு இட்டுச்செல்லும் ஒரு முயற்சியாகும்
பருப்பு வகைகள் தன்னிடம் உள்ளார்ந்து இருக்கும் உயிரியல் தழைச்சத்தை நிலைநிறுத்தும் திறன் மற்றும் பருவநிலையில் ஏற்படும் பலவித மாற்றங்களை எதிர்கொண்டு வரும் திறன் இவற்றால், தாிசு நிலங்களை புதுப்பிப்பதற்கும், சீரழிந்த நிலங்களில் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்கும் தீர்வாக உள்ளது. அதனுள் பொதிந்து கிடக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய அதன் திறன் காரணமாக பருப்பு வகைகள் குறைவான நிலங்கள் உடைய ஏழை விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
பருப்பு வகைகள் பயிரிடப்படும் நிலப்பரப்பு மற்றும் உற்பத்தி வெகுவாக குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. குறைவான மானாவாரி நிலப்பரப்பில் வளர்க்கப்படும் பருப்பு உற்பத்தி நிறைய தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவற்றில் நிலப்பரப்பு தேக்கம், குறைவான உற்பத்தி திறன், சாியான நேரத்திற்கு இடுபொருட்கள் கிடைக்காமை, பூச்சி நோய் தாக்குதல்களுக்கு உள்ளாவது, திறனற்ற சேமிப்பு முறைகள் மற்றும் சந்தை இணைப்புகள், விலை ஏற்ற இறக்கம், பயிர் காப்பீடு இல்லாமை போன்றவை அடங்கும். உலக சுகாதார நிறுவனம் பாிந்துரைக்கும் ஒரு தனி நபருக்கான பருப்பின் தேவை 80 கிராம்/ஒரு நபர் /நாள் ஒன்றுக்கு என இருக்கும் வேளையில், இந்தியாவில் ஒரு தனி மனிதருக்கு தேவைப்படும் பருப்பின் அளவும் மிகவும் குறைவாக 33 கிராம் / ஒரு நபருக்கு / நாள் ஒன்றுக்கு (2009-10) என உள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது
பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், வெகுஜன மக்களுக்கு எளிதில் கிடைக்கப்பெறுவதற்கும் அரசு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணை மேலாண்மை செயல்பாடுகளை 14 மாநிலங்களை சேர்ந்த 171 மாவட்டங்களில் தேசிய உணவு உத்திரவாத மிஷன் வழியாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் விதமாக இந்திய அரசானது ஒரு குவிண்டால் பருப்புக்கு ரூ. 200 போனஸ் தொகையாக அறிவித்துள்ளது.
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய மொராக்கோ உணவு பருப்பின் முயற்சி வழியாக பருப்பு உற்பத்தியில் தற்சார்பை வளர்த்தெடுப்பதற்காக தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் பருப்பு பஞ்சாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. ஓ.சி.பி பவுண்டேசன் – மொராக்கா இந்த திட்டத்தை – தெற்கு – தெற்கு இணைக்கும் முயற்சியாக இந்திய மொராக்கோ உணவு பருப்பு முன்முயற்சியை இந்தியா மற்றும் மொராக்கோவில் உள்ள கூட்டாளி அமைப்புகளோடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த கட்டுரையானது, தமிழ்நாட்டில் எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முயற்சியை விவரிக்கிறது.
பருப்பு பஞ்சாயத்து
எடையப்பட்டி பஞ்சாயத்து, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான பகுதிகளில் ஒன்றாகும். 95 விழுக்காடு விவசாயிகள் சிறு விவசாயிகளாக உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் உள்ள 79 திறந்த வழிக் கிணறுகள் ஒரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத்தை அளிக்கிறது. இங்கு பிரதான பயிர்களாக நெல், சிறுதானியங்கள், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. ஒரு சில விவசாயிகளே 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயறு வகை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். தாிசாக போடப்பட்டிருந்த பெரும்பான்மையான மானாவாரி நிலங்கள் தற்போது உயிர்-தொழிற்சாலை நீர்ப்பிரிமுகடு திட்டத்தின் மூலமாக பயிர் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தைப்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளை கூட்டாக தீர்வு காணும் வகையில், இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியானது 2012 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு ஜனவரி 2015 ல் பதிவு செய்யப்பட்டது. இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியானது எடையப்பட்டி உட்பட 5 பஞ்சாயத்தில் 1000 பங்குதாரர்களை உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இடையப்பட்டியில் இருந்து நூற்று எண்பத்து இரண்டு உறுப்பினர்கள் இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியில் நிறுவனரீதியான விவசாயிகளாக உள்ளனர். இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியில் நான்கு வகையான மதிப்பு சங்கிலி அடிப்படையிலான தொழில்விற்பன்ன துறைகளில் (பருப்பு, இயற்கை காய்கறிகள், ஒருங்கிணைந்த பால் மற்றும் கோழி உற்பத்தி) நிலைத்த உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பணியை விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.
2013 ஆம் ஆண்டு பஞ்சாயத்து முழுக்க பெருமளவில் ஒரு பருவத்தில் 474 ஏக்கர் நிலப்பரப்பில் பருப்பு சாகுபடி செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராபி பருவத்தில் சான்றளிக்கப்பட்ட பருப்பு விதை உற்பத்தியை உறுப்பினர்கள் வெற்றிகரமான செய்து காட்டியிருந்தனர்.
10 கிராமங்களை உள்ளடக்கிய இந்த பஞ்சாயத்து முழுக்க பருப்பு உற்பத்தியை செய்வதற்கான தொலை உணர்வு கருவிகளை கொண்டு திட்ட அணுகுமுறைகளை டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது. பருப்பு உற்பத்தி தொடர்பான திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகளை பஞ்சாயத்தும், இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியும் இணைந்து செயல்பட்டன. கிராம அறிவியல் மையம் மற்றும் வேளாண் உபகரணங்கள் வாடகை கொடுக்கும் வசதிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பஞ்சாயத்து செய்து கொடுத்தது. தொழிற்நுட்ப உதவிகளுக்கான ஆதரவை வம்பனில் உள்ள தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண் துறையும், எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் நிறுவனமும் செய்து கொடுத்தன.
இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் பல்வேறு பயிர்களில் மதிப்பு கூட்டுச் சங்கலியை அடிப்படையாக கொண்ட ஒரு வியாபார மாதிரியாக உருவாக்கப்பட்டது. எல்லா செயல்பாடுகளும் இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வழியாக மாற்றப்பட்டது. இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பணி பின் வருமாறு:
• இடுபொருட்களான தரமான விதைகள், உயிர் உரங்கள் அளிப்பது மற்றும் பண்ணைக் கருவிகளை வாடகைக்கு விடுவது போன்றவை
• உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வது, சேமித்து வைப்பது மற்றும் சந்தைப்படுத்துவது.
• வங்கிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி கடன் வசதிகளை பெற செய்து கொடுப்பது.
• கிராம அறிவியல் மையம் மூலமாக அறிவை மேம்படுத்துவது.
• உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டுவதற்காக செயல்படுத்துவது.
• எம்.எஸ்.எஸ். ஆர்.எப் மற்றும் பல்வேறு பங்குதாரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவது.
தீவிர விழிப்புணர்பு நிகழ்ச்சிகள், பருப்பு உற்பத்தியில் பங்கேற்பு முறையில் ரகங்கள் தேர்வு குறித்த பயிற்சிகள், வயல்வெளிப் பள்ளிகள், வயல்தின விழாக்கள், வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக விவாதங்களுக்கு அடித்தளங்கள் அமைத்துக் கொடுத்தல், உறுதிப்படுத்தப்பட்ட சந்தை வாய்ப்புகளை அவர்களின் உற்பத்தியாளர் கம்பெனி மூலமாக உருவாக்கிக் கொடுத்தல், உற்பத்தியாளர் கம்பெனிகள் கூடுதல் விலை பெறுவதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தல் என பல்வேறு முயற்சிகள் விவசாயிகள் பருப்பு உற்பத்தியில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்டன. அவைகளில் சில விரிவாக இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் – பங்கேற்பு முறையில் ரகத் தேர்வு பாிசோதனைகள்
இந்தப் பகுதியில் நன்றாக வளரக்கூடிய பருப்பு வகை பயிர் ரகத்தை தேர்வு செய்வதற்காக 41 பங்கேற்பு ரகத் தேர்வு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரகங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் என பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டன. ஒவ்வொரு ரகப் பாிசோதனையும் 20 விவசாயிகள் மத்தியில் பயிரின் 5 வெவ்வேறு தீர்க்கமான நிலைகளில் செய்யப்பட்டன. உளுந்தில் வம்பன் 4 மற்றும் 6 மற்றும் எம்.டீ.யு 1 என்ற ரகங்களும் நன்றாக வளர்ந்திருந்தன. பச்சை பயிரில் வம்பன் 3 மற்றும் கோ 8 ரகங்களும் நன்றாக வந்திருந்தன. துவரையில் கோ 6 மற்றும் எல்.ஆர்.ஜீ 41 ஆகிய ரகங்களும் நல்ல வளர்ச்சியை கொடுத்தன. ஒவ்வொரு பாிசோதனையின் முடிவில் விவசாயிகளின் வயல் தின விழாக்கள் நடத்தப்பட்டு, பயிர் வளர்ச்சியின் முக்கியமான 5 நிலைகளில் 10 விதமான அளவுருக்களை கொண்டு எது சிறந்த ரகம் என்பதை தேர்வு செய்யப்பட்டது.
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வேளாண் நடைமுறைகளை செயல்படுத்துவது:
தாிசு பயிர் முறையில் நெல் சாகுபடிக்குப் பின்னர் பருப்பு பயிரை ஊக்கப்படுத்தியதால், பருப்பு பயிர் சாகுபடி கூடுதலாக (40%) பகுதிகளில் பயிரிடுவது அதிகாித்தது. குறுகிய கால பருப்பு ரகங்களை பிரதான பயிராக பயிரிட்டு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இது பாரம்பாிய ரகங்களை காட்டிலும் கூடுதலாக 30% உற்பத்தியை அதிகப்படுத்தி கூடுதல் வருமானமும் கிடைத்தது. புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்களில் ஏற்படுத்தப்பட்ட ரகங்களின் மாற்று விகிதம் 70% அதிகாித்தது. இடுபொருட்கள் அளிப்பதும், கடனுதவியும் இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியின் வழியாக கொடுக்கப்பட்டது. விவசாயிகள் புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்களை பயன்படுத்தியதோடு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதிலும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப சில தொகுக்கப்பட்ட செயல்பாடுகளை கடைபிடிப்பதிலும் திறனை வளர்த்துக் கொண்டனர். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மும்பை, ஆசிய முயற்சிகள், அமொிக்கா போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு உள்ள சமூக பொறுப்பு நிதியில்இருந்து நிதி திரட்டப்பட்டு, 30க்கும் மேற்பட்ட திறந்த கிணறுகள் புதுப்பிக்கப்பட்டு, தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு, குறிப்பாக ராபி பருவத்தில் பயறு வகை சாகுபடிக்கு தேவையான நீர்த்தேவையை நியாயமாக பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்தியது. இதனால் 50 ஏக்கர் தாிசு நிலங்கள் பயிர்சாகுபடிக்காக மீட்டெடுக்கப்பட்டது.
விவசாயிகளின் வயல்வெளிப் பள்ளிகள், அவர்களை பருப்பு சாகுபடியில் புதிய மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் தொழில்நுட்பங்களான தரமான விதைகளை கிடைக்கப் பெறுவது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை சமாளித்து வளரக்கூடிய ரகங்களை பயிரிடுவது, ஊட்டச்சத்து மேலாண்மையை மண் நல அட்டைகள் மூலமாகவும், விதை நேர்த்தி, டி.ஏ.பியை பூவின் மேல்தௌிப்பாக தௌிப்பதிலும், பருப்பு அதிசயம் (ஊட்டச்சத்தை அதிகப்படுத்தி வளர்ச்சி ஒழுங்குபடுத்தும் ஒரு மருந்து) வரிசை நடவு, ஊடுபயிர், நீர் மேலாண்மை மற்றும் செயலாக்கம் செய்வதிலும் பயிற்றுவிக்கப்பட்டது.
விவசாயிகளின் வயல்வெளிப் பள்ளிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், திட்ட பணியாளர்கள், அரசு துறை அலுவலர்கள் பருப்பு சாகுபடியில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், பரவலாக்கவும் உதவியது. பல பருப்பு ரகங்களின் மகசூல் அளவானது, மாநில மற்றும் தேசிய அளவிலான மகசூல் அளவை காட்டிலும் 50% கூடுதலாக கிடைத்தது.
விதை அமைப்புமுறை மற்றும்ஆட்சியை ஊக்கப்படுத்துவது:
தரமான விதை அளிப்பிற்கு முழுமையாக இயங்கக்கூடிய மற்றும் நிலையான பருப்பு விதை அளிப்பு அமைப்பு முறை மிகவும் அவசியமானது. விவசாயிகள் அளவில் சான்றளிக்கப்பட்ட மற்றும் நம்பகமான விதைக்கு உள்ள தேவையை பூர்த்தி செய்ய பருப்பு விதை மதிப்பு சங்கிலி அமைப்பு முறை இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனி வழியாக உருவாக்கப்பட்டது. விதை மாற்று விகிதம் 40 விழுக்காடு அதிகாிக்கப்பட்டது. இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனியால் சுமார் 10 டன் அளவிற்கு தரமான விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டது. இது மேலும், அரசு நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்டது. இங்ஙனம் குறைந்த செலவில் புதுமையான விதை அமைப்பு முறை மற்றும் விவசாயிகள் தேர்வு, பங்கேற்பு முறையில் ரகங்கள் தேர்வு செய்து, பழைய ரகங்களுக்கு மாற்றாக தேர்வாகி ஊக்கமளிக்கும் வகையில் மகசூலையும் அதிகாிக்க உதவியது.
பர்டியு மேம்படுத்தப்பட்ட பயிர் சேமிப்பு பைகளில் புதுமையாக மூன்றடுக்கில் விதைகள் சேமித்து வைப்பது செயல்முறைபடுத்தப்பட்டது. (பர்டியு பல்கலைக்கழகம் இதனை வடிவமைத்தது). இம்முறையில் சேமிப்பின்போது வரும் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக இருந்ததால் விதையின் தரமும் குறையாமல் இருந்தது. விதையின் தரத்தை பாதுகாப்பதோடு, இம்முறையில் சேமிக்கப்பட்டதால் விதைகளின் வீரியமும் மேம்படுத்தப்பட்டது.
பருப்பு உயிரியல் பூங்கா:
பருப்பு உயிரியல் பூங்கா, மதிப்புக்கூட்டும் சங்கிலி ஆய்வின் அடிப்படையில் ஒரு முன்னோட்ட திட்டமாக , எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் நிறுவனத்தின் தொழிற்நுட்ப ஆதரவோடும் மற்ற பங்குதாரர்களின் ஆதரவோடும், இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. பருப்பு ஆலை ஒன்றும் நிறுவப்பட்டு, அதன் ஆரம்ப கட்ட முயற்சிகள் சிறு குறு விவசாயிகள் தங்களின் பொருட்களை ப்ராசஸ் செய்வதற்கு பயன்பட்டது மிகவும் உற்சாமளிக்கும் வகையில் இருக்கிறது. ப்ராசஸ் செய்யப்பட்ட பருப்புகள், சுத்தப்படுத்தப்பட்டு, பாக்கெட்களில் பிராண்டு பெயாில் வெளி சந்தையில் விற்கப்பட்டது. தற்போது பல்வேறு வகையான பருப்புகளில் உள்ள புதுமையான மதிப்பு சங்கிலி ஆய்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு பருப்பு உற்பத்தி திறனை மேம்படுத்தியும், விற்பனை செய்தும் மற்றும் நிலைத்த தன்மை அடையச் செய்வதற்கும் உதவும்.
இலுப்பூர் வேளாண்மை உற்பத்தி கம்பெனியால் நிர்வகிக்கப்பட்ட மதிப்பு சங்கிலி ஆய்வுகள் அடிப்படையிலான பருப்பு உயிரியல் பூங்கா, நுகர்வோரின் ரூபாயில் பருப்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கை கணிசமாக மேம்படுத்தியது.
அறிவு மேலாண்மை:
அறிவு மேலாண்மையானது செய்தி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உதவியுடன் விவசாயிகள் வயல்வெளிப் பள்ளிகள் மற்றும் விவசாயிகள் வயல் தின விழாக்களோடு ஒருங்கிணைக்கப்பட்ட கிராம அறிவியல் மையங்கள் இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சேவை உதவி மையங்கள் மூலம் வேளாண் பண்ணை கருவிகள் சாியான நேரத்தில் நியாயமான வாடகைக்கு கொடுக்கப்படுவதால் சிறு குறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயனடைகின்றனர். கிராம அறிவியல் மையம் அந்தந்த பகுதிக்கு பொருத்தமான சாியான பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தகவல்கள், பயிர் காப்பீடு, மண் நல பாதுகாப்பு, சந்தை விலை நிலவரங்கள், பயிர் மற்றும் கால்நடைகள் நோய் தீர்க்கும் மையங்கள், பருவமழை குறித்த தகவல்கள், அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது. தொலைபேசி நிகழ்ச்சிகள், குறுந்தகவல்கள் மூலம் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்காற்றியுள்ளன.
முடிவுரை:
பருப்பு பஞ்சாயத்து இயக்கம் புதுமையான அணுகுமுறைகளோடு, அறிவு மேலாண்மை மேம்பாட்டை பல பங்குதாரர்கள் தளங்கள் மற்றும் கொள்கை உருவாக்கும் கூட்டமைப்புகளை செயல்படுத்தியது, பருப்பு உற்பத்தியில் தற்சார்பு பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக விளங்கியது. இலுப்பூர் வேளாண்மை உற்பத்தி கம்பெனியால் நிர்வகிக்கப்பட்ட மதிப்பு சங்கிலி ஆய்வுகள் அடிப்படையிலான பருப்பு உயிரியல் பூங்கா, நுகர்வோரின் ரூபாயில் பருப்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கை கணிசமாக மேம்படுத்தியது. இது அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளையும் குறைக்கிறது. இந்த அணுகுமுறைகள் வழங்கல்-தேவை இடைவெளியை இணைக்கும் பலமாக மற்றும் தானிய மற்றும் பருப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, குறிப்பாக குறைவான மற்றும் நடுத்தர வருமானத்தோடு அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது. மகசூலுக்கான தடைகளை உடைத்தும், உயிரியல் மற்றும் உயிரற்ற அழுத்த காரணிகளை தாங்கியும் மற்றும் பருப்பு மரபியல் காரணிகளை விரிவுபடுத்துவதும் சர்வதேச பருப்பு ஆண்டு 2016 க்கான சவாலாக இருக்கிறது.
நன்றிகள்:
சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய பருப்பு பஞ்சாயத்து இந்த வேகத்தை முன்னெடுத்து செல்வதில் தனது ஒத்துழைப்பையும் மற்றும் அர்பணிப்பிற்கும் நல்கிய இலுப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கம்பெனிக்கு நாங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி நல்கிய ஓ.சி.பி பவுண்டேசன், மொராக்கோ, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மும்பை, ஆசிய முயற்சிகள், அமொிக்கா மற்றும் தமிழ்நாடு அரசு சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றின் உதவிகள் நன்றியுடன் நினைவுரப்படுகிறது. திட்டத்திற்கு ஒட்டு மொத்த வழிகாட்டுதல்கள் அளித்த எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அட்டவணை 1: ரகங்கள் தேர்வு பாிசோதனை 2015-2016
| பருப்பு பயிர் | பாிசோதிக்கப்பட்ட பருப்பு ரகங்கள் | சிறப்பாக விளைந்த ரகங்கள் |
| உளுந்து | காரீப் – VBN 4, ADT -5, MDU – 1 ராபி – VBN 4, VBN -6 | காரீப் மற்றும் ராபி VBN -4 |
| பச்சை பயிர் | காரீப் – Co 8, VBN 3, VRM-1 ராபி – VBN 3, Co 8, VRM 1, BGS9, ML618 | காரீப்- Co-8 & VBN 3 ராபி – VBN 3 |
| துவரை | காரீப் – 37 ஏக்கர் நிலக்கடலை ஊடுபயிராக ராபி – VBN 2, ICPL 1124, 161, 20335, 88039 | ராபி – ICPL 88039 |
| நிலக்கடலை | காரீப் – Co 7, பொள்ளாச்சி 1, VRI 2 ராபி – VRI 2, K6, Co4, TMV7, GG2 | காரீப் – Co 7 & VRI 2 ராபி – VRI 2 |
அட்டவணை 2: உளுந்து பயிர் சாகுபடியின் பொருளாதாரக் கணக்கு 2015-16
| ரகங்கள் | மேம்படுத்தப்பட்ட ரகங்கள் புதிய தொழில்நுட்பங்களுடன் – VBN 4 (ரூ.) | உள்ளுர் ரகம் பாரம்பாிய தொழில் நுட்பங்கள் – T9 (ரூ.) |
| கோடை உழவு | 550 | – |
| பண்ணைக்கழிவு உரம் (2 டிராக்டர் லோடு) | 3600 | – |
| விதைப்பதற்கு முன்பு உழவு (2 முறை) | 900 | 1100 |
| விதை அளவு ((கிலோ/ஏக்கர்) | 900 (6 கிலோ) | 1200 (8 கிலோ) |
விதை நேர்த்தி | 50 | – |
| விதை விதைப்பு | 500 (இயந்திர விதைப்பு) | 200 |
களை மேலாண்மைக்கான செலவு | 600 | 2000 |
| இலைவழித் தௌிப்பு மற்றும் களைக்கொல்லி தௌிப்பு | 1000 | 500 |
| அறுவடை மற்றும் கதிரடிப்பு | 2000 | 2000 |
| மொத்த மகசூல் (கிலோ/ஏக்கர்) | 350 | 140 |
| மொத்த வருமானம் (ரூ/ஏக்கர்) | 31500 | 12600 |
| மொத்த செலவு (ரூ/ஏக்கர்) | 10100 | 7000 |
| நிகர வருமானம் (ரூ./ஏக்கர்) | 21400 | 5600 |
| நிகர லாபம் ரூ. 21400/ஏக்கர் |
ஆர். எஸ் . சாந்தகுமார் ஹாப்பர் மற்றும் கே. தட்சிணாமூர்த்தி
R S Shanthakumar Hopper Director, Ecotechnology M.S.Swaminathan Research Foundation, 3rd Cross Street, Taramani Institutional Area, Chennai 600113 E-mail: hopper@mssrf.res.in
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2018, வால்யூம் 16, இதழ் 2



