இந்தியாவில் உள்ள வேளாண் உயிர்ச்சூழலுக்கான பெண்கள் கூட்டமைப்பின் சக்தி


இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வேளாண் உயிர்ச்சூழல் முறையாக, நமது பாரம்பாிய வகை விதைகளை பாதுகாக்கவும் மற்றும் பாரம்பாிய வேளாண்மை அறிவை பரவலாக்கவும் எங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,என்கிறார் கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு அருகில் உள்ள அமிர்த பூமியின் ஒருங்கிணைப்பாளரான சுக்கிநஞ்சுண்டசாமி. மாற்றுமுறை வேளாண் மாதிரிகளால் நிலைத்திருக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான வேளாண் உயிர்ச்சூழல் பயிற்சி மையமாகும். லாவியாகாம்பசினாவின் ஒரு உறுப்பினராக இந்த மையமானது விவசாயிக்கு விவசாயி என்ற அணுகுமுறையின் அடிப்படையில், வேளாண் உயிர்ச்சூழல்,உழவர்களின் உரிமைகள், உணவு இறையாண்மை மற்றும் சமூகநீதியை மையப்படுத்திய பயிற்சிகளை அளித்து வருகிறது.


வணிக ரீதியான தொழிற்மயமாக்கப்பட்ட வேளாண்மை உலகின் தெற்குப் பகுதி பெண் விவசாயிகளை கண்ணிற்கு புலப்படாதவர்களாக ஆக்கிவிட்டது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இது இந்தியாவின் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை செயல்பாடுகளினால் ( இப்போது இது சமூக அளவினால் மேலாண்மை செய்யப்படும் வேளாண் என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.) மாறி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிறு விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் சிறிதளவு கடன், நிலம் மற்றும் வியாபாரா ரீதியாக விதைகளை அணுகும்போது, அது அவர்களை வலுவான பிரச்சாரர்களாக மாற்றுகிறது. அவர்களின் சமூக கூட்டமைப்புகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் வழியாக, அவர்கள் தங்களின் வேளாண் உயிர்ச்சூழலை ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கும், அவர்களின் குடும்பத்தின் ஊட்டச்சத்து, வருமானம் மற்றும் மண் நலத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பையும், அவர்களின் மதிப்பையும் மேம்படுத்துக் கொள்கின்றனர். அவர்களின் செயல்பாடுகளுக்குள்,பாரம்பாிய சந்தை இயக்கவியலைவிட பெண்ணிய தாக்கம் முன்னுரிமை பெறுகிறது.

இருப்பினும், அணுகுமுறையானது அரசியல் பதட்டங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.
ஆந்திராவில், வேளாண் உயிர்ச்சூழல் வேளாண்மை சார்ந்த கொள்கைகளை கிராமத்திலிருந்து கிராமத்திற்கு பரப்புவதில் பெண்களின் சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அடிமட்ட மகளிர் விவசாயிகளின் இயக்கம் இல்லாவிட்டால், இந்த நடைமுறைகளை இன்று எட்டியுள்ள கிட்டத்தட்ட 6,00,000 விவசாயிகளுக்கு அளவிடவோ அல்லது பத்தாண்டுகளின் முடிவில் இலக்காக வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் விவசாயிகளை அடையவோ முடியாது. திட்டத்தில் பெருவாரியானபணியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் பெண் விவசாயிகளே.

அனந்தபூரில் (ஆந்திரா) நிலமற்ற பெண்களில் பலர் விவசாயிகளாக உள்ளனர். சிலர் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் விதவைகள் (இந்தியாவில் நடைபெற்றுவரும் சோகம் ) மற்றவர்கள் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். கிட்டத்தட்ட அனைவரும் சாதி பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒரு குழு முன்பு தாிசு நிலமாக இருந்ததை கூட்டாக குத்தகைக்கு கொடுக்க வந்துள்ளது. பெண்கள் தங்கள் திறமைகள்,அறிவு மற்றும் உழைப்பை தங்களுக்கு பகிர்ந்துகொள்கிறார்கள். தங்களின் குடும்பங்களுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத உணவை உற்பத்திசெய்கிறார்கள். உபாியாக உள்ளவற்றை தங்களின் பண்ணைக் கடைகளில் அவர்கள் விற்கிறார்கள். மேலும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு காய்கறிகளை சைக்கிள் மூலம் வழங்குகிறார்கள். ஒரு சிறுதொழில் நிறுவனமாக வளர்வதைக் காண ஆர்வமாக உள்ளனர்.

கூட்டுக்குழுவில் உள்ள பெண்கள் பண்ணை வேலைகளுக்காக ஒரு ரோட்ட முறையை வகுததுள்ளனர். இது வீட்டில் உற்பத்தி மற்றும் பராமாிப்பு பணிகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. இங்கே, பெண்ணியதாக்கம் பாரம்பாிய சந்தை இயக்கவியலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வேளாண் பருவத்தில் பெண்கள் ஒருவருக்கொருவர் பகுதி ஊதியத்தை செலுத்துகிறார்கள், வீட்டுத் தேவைகளை ஈடுகட்ட அறுவடைக்கு முந்திய பணப்புழக்கத்தை உறுதிசெய்கிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட நிதிகளுக்கு அப்பால், வேளாண் அறிவியல் உணவு இறையாண்மை, தன்னம்பிக்கை மற்றும் கௌரவம் போன்ற வடிவங்களில் ஈவுத்தொகையை செலுத்துகிறது.
சுஜாதாவும் அவரது கணவர் ஜெகதீஷூம் கர்நாடகாவின் கோட்டிகெஹள்ளியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட பத்துஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை கற்றுவருகின்றனர். இரசாயன வேளாண்மையில் இருந்து மாறுவது சவாலானது என்று சுஜாதா கூறுகிறார், ஆனால் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுடன் தொடர்புடைய ஆரோக்கியத்திற்கான அபாயங்கள் பற்றி அவர்கள் அறிந்தபோது, அவர்களின் தீர்மானம் வலுப்பெற்றது. இப்போது அவர்களின் பண்ணை இயற்கை வேளாண்மையின் ஐந்து அடுக்கு மாதிரியின்படி பயிரிடப்படுகிறது. வயலைவிட காடுகள் நிறைந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் 200க்கும் மேற்பட்ட தாவர வகைகள் எனது நிலத்தில் வளர்ந்திருக்கக்கூடும்” என்று ஜெகதீஷ் கூறுகிறார். இந்த தம்பதிகள் வாழைப்பழங்கள், தேங்காய்கள், கொய்யா, பலாப்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வளர்க்கின்றனர்.

அதேநேரத்தில் தங்கள் பண்ணையின் சாய்வான பகுதிகளிலும் காபியை பாிசோதனை மேற்கொள்கின்றனர். கோழிகளும் ஆடுகளும் திறந்தவெளியில் மேயவிடப்படுகின்றன. உயரமான மரங்களான சில்வர் ஓக் மற்றும் முருங்கை ஒரு இயற்கை வேலியை உருவாக்குகின்றன. மேலும் இந்த மரங்கள் இலைகளை உதிர்க்கும்போது, இது ஒரு மூடாக்காக செயல்படுகிறது. மண்ணில் மட்கை உருவாக்குகிறது.
நிசர்கா நிசர்க காசவ யவகிருஷிகர சங்கம் கர்நாடகாவின் ஹொனூரில் உள்ள ஒரு தற்சார்பு கூட்டுறவு குழு. அனைத்து உறுப்பினர்களும் சமூக மற்றும் சாதி பாகுபாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு இயற்கை வேளாண்மையை ஒன்றாக கடைபிடிக்கின்றனர்.  ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை வெற்றிகரமாக அளவிடப்படுகையில், அதன் புதழ் அரசியல் சவால்களையும் சர்ச்சைகளையும் கொண்டு வருகிறது. மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை மேம்படுத்த பசு எரு மற்றும் கோமியத்தை பயன்படுத்துவது இதன் நடைமுறைகளுக்கு மையமாகும்.

எவ்வாறாயிலும், ஒரு பொிய சவால் என்னவென்றால், பசுமை புனிதமானதாக கருதி, கால்நடைகள் படுகொலை செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடும் இந்து தீவிரவாத தேசிய கட்சிகள் இந்த நடைமுறைகளை அரசியல் மயமாக்க முயற்சிக்கின்றன. இத்தகைய நிலைப்பாடு மிகவும் சிக்கலானது, ஏனெனில் இந்தியாவில் முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மை மக்களை குற்றவாளியாக்குவதாக அச்சுறுத்துகிறது. இது கால்நடைகளை அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பிற்காக நம்பியுள்ளது. இந்த விமர்சனங்கள் தற்போது ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லாத சமூகங்கள் விலக்கப்படுவதாக சில விமர்சகர்கள் வாதிட்டனர். மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்த நிலைப்பாடு குறித்த குழப்பம் மற்றொரு கவலையை உருவாக்குகிறது. இந்த அணுகுமுறையில் மரபணு மாற்றப்பட்ட மற்றும் கலப்பின விதைகளை பயன்படுத்துவதை ஆந்திர அரசு தவிர்க்கிறது. மற்ற குழுக்கள் அவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆகவே, அது எட்டிய அளவு இருந்தபோதிலும், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பயிரிடப்பட்ட பகுதிகளில் தொழில்துறை உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை பொிதும் நம்பியுள்ள அமைப்புகளில் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் நடைமுறைகள் வெற்றிகரமாக அமையுமா என்பதில் சந்தேகம் உள்ளது.

உலகின் பெரும்பகுதிகளில், பயம்மா ரெட்டி போன்ற பெண்கள் நீண்ட காலமாக பாரம்பாிய விதைகளின் பாதுகாவலர்களாக உள்ளனர். வேளாண் அறிவியல் மூலம், அவர்களின் அறிவுச் செல்வம் மற்றும் பண்ணையில் அவர்களின் பங்களிப்பு ஆகியவை மீண்டும் மதிப்பைப் பெற்றுள்ளன. பயம்மாவின் மகன்கள் உயர் கல்விக்குச் சென்றபோது, தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, தனது வீட்டின் அருகிலுள்ள நிலத்தில் இயற்கை வேளாண்மையைத் தொடங்கினார். அவர் ஆந்திராவின் பாலகாபாிபல்லியைச் சேர்ந்தவர். இது நாட்டின் மிக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த பிராந்தியங்களில், நீர்ப்பாசனம் மற்றும் பிற விலையுயர்ந்த உள்ளீடுகள் தேவைப்படும் வணிக பயிர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட உணவுக்கூடையை உறுதி செய்வதற்கும், பயிர் இழப்பு அபாயத்தை தணிப்பதற்கும், அவரும், அவரது கணவரும் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு நவதான்யாவின் (ஒன்பது தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை கலந்து விதைப்பது) பாரம்பாிய நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

கவிதா குருகந்தி ஆஷாவின் (நிலையான மற்றும் முழுமையான வேளாண்மைக்கான கூட்டணி) நிறுவனர். இந்தியாவில் உள்ள பெண் விவசாயிகள் உரிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க செயல்படும் 24 இந்திய மாநிலங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் பெண் விவசாயிகளின் கூட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய நாடு தழுவிய அமைப்புடன் தொடர்புடையவர்.

அண்மையில் ஒரு நேர்காணலில் நடவு, களையெடுத்தல், அறுவடை போன்ற உழைப்புமிகுந்த பண்ணை வேலைகளில் பெண்கள் எவ்வாறு பாரம்பாியமாக ஈடுபட்டுள்ளனர் என்பதை விளக்கினார். இருப்பினும் அவர் விளக்குவதுபோல், வேளாண்மை என்பது சந்தைகளை மையப்படுத்தியே உள்ளதால், களைக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்கள் மீது அதிக நம்பகத்தன்மையுடன் ஆண்கள் முடிவெடுப்பதை எடுத்துக் கொள்கிறார்கள். வேளாண் அறிவியலை பின்பற்றும் போது அது பெண்கள் தங்கள் முடிவெடுக்கும் உரிமைகளை மீட்டெடுக்க அனுமதிக்கிறது.

இந்த பக்கங்களில் உள்ள புகைப்படங்களை சௌமியா சங்கர் போஸ் உருவாக்கியுள்ளார். அமிர்தா குப்தா உரையை எழுதி வேளாண் அறிவியல் நிதியத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.

 


தொடர்பு மின்னஞ்சல் amrita.agroecologyfund@gmail.com

இந்த புகைப்படகதையானது பிப்ரவரி 2020 யில் தென்னிந்தியாவில் ஒரு வார கால கற்றல் 
பாிமாற்றத்தின்போது கள வருகைகள் மற்றும் பட்டறைகளை அடிப்படையாகக் கொண்டது. 
அங்கு 30க்கும் மேற்பட்ட நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் பயிற்சியாளர்கள் வேளாண் 
அறிவியல் பயிற்சியாளர்கள், வக்கீல்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் 
கூட்டப்பட்டிருந்தனர். 

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...