அரிசி மற்றும் மீன் ஒருங்கிணைப்பு என்பது குறைந்த செலவில் நிலைத்த செயல்பாடாக அருணாச்சல பிரதேசத்தில் வாழும் அபடனி பழங்குடியினாின் பழக்கமாகும். இது விவசாய குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வருமான பாதுகாப்பாக இருக்கின்றது. இது போன்ற பாரம்பாிய முறைகள் உயிர்ச்சூழல் ரீதியாக பாதுகாப்பும், பொருளாதார ரீதியாக சாத்தியமானவையாக இருக்கும்.
அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஜீரோ பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த அனுகூலமான சூழ்நிலை அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் பகுதிகளில் சராசாி மழையானது 400 மி.மீ ஆகவும், வருடாந்திர வெப்பநிலையானது 5 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அரிசி தவிர மற்ற பல முக்கியப்பயிர்களும் அந்த பள்ளத்தாக்கில் வளர்கிறது. அவற்றில் சோளம், திணை, பக்விட், பழம் மற்றும் காய்கறிகள் போன்றவை அடங்கும்.
வேளாண்-காடுகளில் பெரும்பாலான பைன் மரங்கள் மற்றும் மூங்கில் மரங்களும் அடங்கும். அங்கு இருக்கும் வெப்பநிலையானது உலகெங்கும் இருந்துவரும் சுற்றுலா பயணிகளை அந்தப் பள்ளத்தாக்கு ஈர்க்கும் வண்ணம் அமைந்து இருக்கிறது.
அபடனிஸின் ஒருங்கிணைந்த அரிசி–மீன் மேல்தளம்
முதல் கட்டமாக ஹாங்க், ஹாி, ஹிஐா, புலாடுட்டா, மூடங், பாமின் மற்றும் பழைய ஜிரோ ஆகிய கிராமங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அது அந்தப்பகுதியில் மேற்கொள்ளும் மீன் வளர்ப்பு பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. ஜீரோ பள்ளத்தாக்கானது பெரும்பாலும் அபடனின் பழங்குடியினர் வாழுமிடமாக அந்த நிலத்தின் தனித்தன்மை உள்ளது. அங்கு அதிகபடியான ஒருங்கிணைந்த அரிசி மற்றும் மீன் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவசாயம் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கிறது மற்றும் ஆண்களோடு அவர்கள் வேலையை பங்கிட்டு கொள்கிறார்கள். இங்கு இருக்கும் விவசாயிகள், அண்டை மாநிலமான அசாமிலிருந்து மீன் விதைகளை இறக்குமதி செய்வதற்கு அதிக செலவு செய்கிறார்கள். இந்தப் பள்ளத்தாக்கு, மலைகளால் சூழப்பட்டுள்ளதால் இங்கு மீன் விதை உற்பத்திக்கு வழியற்றதாக இருக்கிறது.
இந்த அபடனிஸ் நவம்பர் மாதத்தில் அரிசி – மீன் மேல்தளம் தயாரிக்க தொடங்குவார்கள். மீதமாக உள்ள நெல் பயிர்களை அந்த நிலத்திலேயே உரமாக போடுவார்கள். சூரிய ஒளி நன்கு விழும் இடங்களில் உள்ள நிலங்களை உலர்த்துவதற்காக பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் போது மண்ணிற்கு அடியில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படுவதற்கும், நிலம் காய்வதற்கும் உதவுகின்றது. டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கும் விவசாயி அந்த நிலத்தை உழுவதற்காக வழக்கமாகவெட்டும் கருவிகளும் மற்றும் மண்வெட்டிகள் பயன்படுத்துகின்றன. விலங்குகள், இயந்திரங்கள் மற்றும் புதுக்கருவிகள் எவற்றையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. போதுமான அளவிற்கு அகலமான 30-70செ.மீ-ல் அணைக்கரை கட்டப்படுகிறது. கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம் போன்றப் பயிர்களை உற்பத்தி செய்கின்றனர். வெள்ளரி, கத்திரிக்காய், தக்காளி, பூசணி, மிளகாய், பீன்ஸ் மற்றும் பலகாய்களும் இந்த கரைகளில் கூடுதல் பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. இதுபோன்ற கரைகளில் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மேல்தளத்தில் தேங்கும் தண்ணீரால் ஏற்படும் மண் அரிப்பு தடுக்கப்படுகின்றது.
இந்தப் பள்ளத்தாக்கில் ஈரமான அரிசி மேல்தளத்தில் செயல்படுத்தும் நீர்ப்பாசனமுறை தனித்துவமானது. இதன் அடிப்படையில் முதன்மை கால்வாய் பிரதான நதியான“கில்”உடன் இணைக்கப்படுகிறது. முதன்மை கால்வாயிலிருந்து நீர் அதிகமாக பின்னப்பட்ட கால்வாயில் இருக்கும் அரிசி-மீன் மேல்தளத்தில் வடிகின்றது.
இந்தத் தீவன தடுப்பு நீர் உபயோகத்தை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து நெல் வயலிலிருந்து அரிக்கப்படுவது அருகிலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து தண்ணீர், இதிலுள்ள ஒவ்வொரு வாய்க்கால்களுக்கும் மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட குழாய்களால் சமமாக பாய்ச்சப்படுகிறது. இந்தக் குழாய்கள் 15-25 செ.மீ உயரத்தில் உள்ளது. நெல் மற்றும் மீன் நிலத்தில் 25-35 செ.மீ அளவில் நீர்நிலை இருப்பதை அந்தப் பருவகாலத்தில் உறுதிசெய்யப்படுகின்றது. அகழிகள் ஆனது மிகவும் தனித்துவமாக நெல்-மீன் அடுக்கு நிலத்தில் வெப்பமான நேரங்களில் மீன்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக தோண்டப்படுகிறது.
இந்த அகழிகள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும். அடுக்கு நிலம் உள்ள இடத்தில் 8 முதல் 12 சதவிகிதம் இது ஆக்கிரமிக்கிறது. அகழிகளில், நீர் வெளியேற்றத்திற்கு இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நிலத்தில் ஓரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேற்றுகிறது மற்றொன்று கீழ் பக்கத்தில் இருக்கிறது. இது மீன்கள் அறுவடை காலத்தில் காய்வதற்காக கொடுக்கப்பபட்டுள்ள வழி நீர் வெளியேற்றமும் மூங்கில் குச்சிகளால் தடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வளர்ப்புக்காலத்தில் மீன்கள் தப்பிஓடுவதை தடுக்கமுடியும்.
பதினைந்து வகையான அரிசி வகைகள் இந்த ஜீரோ பள்ளத்தாக்கில் அறுவடை செய்யப்படுவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. நெல் நாற்றுகள் நாற்றுப் பண்ணையிலிருந்து நிலத்தில் நடுவதற்காக ஏப்ரல் மாதத்தில் எடுத்துவரப்படுகிறது. கம்பு, சோயா, பக்வீட், மக்காச்சோளம், பார்லி ஆகியவை கரைகளில் வளர்க்கப்படுகிறது. காய்கறி வகைகளில் வெள்ளரி, கத்திரிக்காய், தக்காளி, பூசணிக்காய், மிளகாய், முள்ளங்கி போன்றவைகளும் கரைகளில் வளர்க்கப்படுகின்றது. இந்தப் பயிர்கள் அனைத்திற்கும் விதைகள் ஏப்ரல்-மே மாதத்தில் டிப்ளர் எனப்படும் மரத்தினால் ஆன இயந்திரத்தில் இவை நடவு செய்யப்பபடுகின்றன. கிவி போன்ற பழங்கள் அருகிலுள்ள நிலத்தில் வளர்க்கப்படுகின்றது. அவை நெல் வகைகளில் மற்றும் கரைகளில் அடுத்தடுத்த களையெடுத்தல் பணியானது மக்களால் கைவினை கருவிகள் கொண்டு அறுவடை காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
மீன் வளர்ப்பு ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்படும். இவை அந்த நிலத்தின் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். மிகவும் சாதகமான மீன் வகைகளான பொதுவான கெண்டை, புல் கெண்டை,வெள்ளி கெண்டை போன்றவை உள்ளுர் அரிசி வகைகளுடன் ஒருங்கிணைத்து வளர்க்கப்படுகிறது.
5-8 செ.மீ நீளமுள்ள மீன்கள் அனைத்தும் நெல் பயிர் நிலத்தில் 10-15 நாட்கள் ஏப்ரல்-மே மாதத்தில் பயிர்களை நடவு செய்தபிறகு வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்களுக்கு, நெல் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் சிறிய பூச்சிகளான நீர் வண்டு போன்றவைகளை உண்ணுகிறது. இந்த மீன்கள் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நெல் பயிருக்கு கிடைக்கும் வகையில் விடுவித்து உதவுகிறது. பொதுவான கெண்டையைத் தவிர புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை, பார்போணிமஸ் ,கோணியோடஸ், லேபியோ கோணிஸ் மற்றும் பல லேபியோ வகைகளும் இந்த நிலத்தில் இருக்கின்றன. இந்த மீன்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிதவை வழி மற்றும் ஒட்டுநுண்ணுயிர்களிடமிருந்து கிடைக்கிறது, இந்த நிலத்தில் போடப்படும் உரத்தோடு நேர்த்தி செய்யப்படுகிறது (மாட்டுசாணம், பன்றி சாணம்,கோழி குப்பை மற்றும் விவசாய குப்பை). இது போன்ற வெளியிலிருந்து கூடுதலாக வழங்கப்படும் மீன் தீவனங்களை குறைக்க உதவுகிறது. இங்கு வளர்க்கப்படும் பலவகை மீன்களின் மத்தியில்,வளHச்சியிலும் வாழ்விலும் பொதுவான கெண்டை சிறந்தவையாகும். ஏனென்றால் அவற்றின் வலுவான மற்றும் கடினமான இயல்பு இவற்றின் வளர்ச்சிக்கு பொிதும் உதவுகிறது. இந்த பயிர் நிலங்களில் களை எடுத்தல் பணி செய்யும் போது மீன்கள் அனைத்தும் தோண்டிய அகழிக்கு வழிகாட்டப்படுகிறது. குறைந்த மழை மற்றும் வெயில் காலத்தில் திறந்த நிலத்திலிருக்கும் நீர் தேக்கம் சூடாவதோடு கீழ் அகழிக்குள் இருக்கும் குளிர்ந்த தண்ணீர் மீன்கள் தங்கும் இடமாக இருக்கிறது.
நெல் – மீன் அடுக்கு நிலத்தில் அறுவடை மற்றும் வியாபாரம்
நிலத்தில் இருந்து நெல் அறுவடை செய்யப்படும் முன்பே மீன்கள் அறுவடை செய்யப்படுகின்றன. முதலில் தண்ணீர் அனைத்தும் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் மூலமாக நிலத்தில் மீன் அனைத்தும் தேங்கிக் கொள்ளும். அதன்பின் அவைகள் கைகளால் அல்லது மூங்கில் மற்றும் கரும்பால் நெய்த கயிர்களால் பிடிக்கப்படுகிறது. பொதுவான கெண்டை 3 முதல் 4 மாதத்திற்குள் 300 முதல் 500 கிராம் எடையை அடைவதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் மீன்கள் 65 முதல் 80 கிராம் எடையை எட்டியவுடன் அவற்றை விற்றுவிடுகின்றன. அறுவடை செய்தமீன்கள் அனைத்தும் சுத்தமான நீரில் கழுவப்பட்டு பின்பு சந்தைக்கு மூங்கில் கூடைகளில் அனுப்பப்படுகிறது. ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட பைகளோ மற்றும் தண்ணீரோ ஏதும் இல்லாமல் அவை அடுக்கப்படுகின்றன. கீழ் சுபன்சிரியின் மாவட்ட தலைமையகமான ஹப்போலியில் உள்ள உள்ளூர் சந்தையில் மீன்கள் விற்கப்படுகிறது . அனைத்து மீன்களும் இங்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். இந்த மீன்கள் அனைத்தும் உயிருடன் இருக்க நீர் நிரப்பப்பட்ட மூங்கில் தொட்டிகளில் விடப்படுகிறது. இந்த மீன்கள் பண்ணை விளைபொருட்களாக இருப்பதால் வேறு இடைப்பட்ட மனிதர் யாரும் விற்பனையில் ஈடுபடுவதில்லை. உயிர் மீன்கள் ரூ.300/கி.கி விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளில் இலாபம் அரிசி அறுவடையிலிருந்து 100 சதவிகிதம் மேலாகவே இலாபம் அளிக்கிறது.
நெல் நடவை அடிப்படையாக கொண்டு நெல் கதிர்கள் செம்படம்பர் – அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. நெல் – மீன் நிலத்திலிருந்து கிடைக்கும் அறுவடையானது ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 100 குவிண்டால் ஒரு போகத்திற்கு நிலத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கும். இங்கு கிடைக்கும் அரிசி வகைகள் அனைத்தும் பழங்குடியினர் குடும்பங்கள் உபயோகத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக கரையில் நடவு செய்யப்பட்ட பயிர்களான கம்பு, மக்காசோளம், சோயா பீன்ஸ் போன்றவை ஆகஸ்டு – செம்டம்பர் அறுவடை செய்யப்பட்டு உணவுக்கு தேவையான மாவாக எடுக்கப்படுகிறது. மேலும் மது உற்பத்திக்கும் இவை உபயோகிக்கப்படுகின்றன. அதுபோல காய்கறிகள் ஜுலை-அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. காய்கள் வீட்டு உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டு மீதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவை விற்பனை செய்யப்படுகின்றது.
சில முயற்சிகள்:
நில ஆய்விலிருந்து கிடைக்கும் முடிவுகளை வைத்து தற்போது உள்ள மீன் வளர்ப்பு முறைகளை வலுப்படுத்தவும் அவற்றை பற்றி விவசாயிகளுக்கு மேலும் தௌிவு கொடுக்கவும் ICAR – DCFR விஞ்ஞானிகளின் குழு 2018 முதல் 2019 வரை சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றில் சில
இந்தப் பள்ளத்தாக்கில் விதை மீன் உற்பத்திக்கு இடம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் மீன்களை வாங்க பக்கத்து மாநிலமான அஸ்ஸாம் சென்று வாங்குவதால் அதிகமான விலையில் பெறும் நிலை உள்ளது. அதனால், எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய குசுடீ-யால் ஆன மீன் வளர்ப்பு இடம் ஹாி கிராமத்தில் 2018-ல் நிறுவப்பட்டது.
இது அங்குள்ள மீன் வளர்ப்புத் துறை, அருணாச்சல பிரதேச அரசு மற்றும் அபடனி சமூகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. பெண் தொழில் முனைவோர் தலைமையிலான கூட்டுறவு சங்கத்தின் கீழ் இந்தப் பிரிவு 2014-ல் அமைக்கப்பட்டது. சமூகம், விவசாயம், மீன்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவை வளரும் நோக்கத்துடன் இது துவங்கப்பட்டது.
ஹாி கிராமத்தில் 22 மார்ச் 2018 அன்று ஒரு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மீன் வளர்ப்பு மற்றும் விதை மீன் உற்பத்தி குளிர்பகுதிகளான அருணாச்சல பிரதேசத்தில் எவ்வாறு உள்ளது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 200 விவசாயிகள் தங்கள் கருத்துக்களை அரசுப்பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் எடுத்து வைக்க ஒருவாய்ப்பாக இருந்தது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையாக தேவையான விதை மீன்கள் இலவசமாக அவர்களின் நிலத்திலோ அல்லது வளர்ப்புதொட்டியிலோ சேமித்து வைக்க கொடுக்கப்பட்டது.
இத்துடன் தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டமாக தொடக்க மீன் வளர்ப்பு,மீன் விதைகள் தயாரித்தல் மற்றும் மீன் பண்ணை மேம்பாடு ஆகிய நோக்கத்திற்காக அருணாச்சல பிரதேசத்தின் மலைவாழ் விவசாயிகளுக்காக 20 முதல் 24 மே மாதம் 2018 பபோயி பிஸ்வநாத் மாவட்டத்தில் நடைபெற்றது. சமூகத்தில் உள்ள 5 உறுப்பினர்களுக்கு அடை காக்கும் மேலாண்மை, ஹேட்சாி செயல்பாட்டு முறைகள், போக்குவரத்து மற்றும் விற்பனை மீது திறன்களை வழங்கியது. நர்சாி மேலாண்மை நடைமுறைகள் மற்றும் விதை மீன் வளர்ப்பு போன்றவைகளும் இதில் அடங்கும். அத்துடன், ICAR – DCFR , பீம்டால் இந்த சமூகத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியாக ஆதாித்து மீன் ஹேட்சாியின் எல்லைக்குள் நான்கு மண் நர்சாிக்கள் மற்றும் ஒரு அடை காக்கும் குளத்தை அமைக்க உதவியது. இந்த இடம் வெவ்வேறு வகையான மற்றும் அளவான மீன்களை விவசாயிகள் இந்த இடத்தை விதைமீன் தேவைகளுக்காக வளர்க்கின்றனர்.
இந்த நெல் நிலத்தில் உள்ள நீர்வாழ் சூழல் அந்த வாய்க்கால் வழி ஓடும் நீரின் தன்மை குறித்தே காணப்படும். நீர்த்தன்மை மற்றும் மீன் உணவு தன்மையை பற்றிய புரிதலுக்காக நீர் அந்த வாய்க்காலில் இருந்து அரிசி-மீன் நிலத்தில் இருந்தும் எடுத்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் தாவரக் குற்றுயிர்கள் அதிகமாக அரிசி-மீன் நிலத்தில் இருக்கின்றன. அரிசி மற்றும் மீன் கொண்ட நிலத்தில் நீர்வாழ் தாவரங்கள் நிறைந்திருக்கிறது. அவை, ஸ்பைரோகைரா, (12-47ம%), ஊசைடிஸ் (40%), நாவிகுலா (5-14%), பின்னுலாரியா (6-13%), நிட்ஷியா (13%) , யுலோத்திரிக்ஸ்(13%) , க்லாஸ்டீரியம் (13%), ஸ்டிகியோக்லோனியம்(11%)மற்றும் அங்கைரா (7%). நீர்வாழ் விலங்குகளான துடுப்புக்கால் பூச்சிகள் (11-90%) மற்றும் தண்ணீர் ஈக்கள் நெல்-மீன் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
பண்ணை ஆலோசனை மற்றும் தொாழில்நுட்ப வழிகாட்டுதலும் அவ்வப்போது விவசாாயிகளின் நிலத்தை கண்டு அறிவிக்கப்படுகின்றது. உதாரணமாக, நெல் – மீன் நிலத்தில் 90 செ.மீ. ஆழப்படுத்துதல் மற்றும் நெல் – மீன் நிலத்தின் ஓரங்களில் அதிக மீன் குஞ்சுகள் விட்டு, அதனை சுலபமாக அறுவடை செய்வதற்கும் கட்ட வேண்டும் என்று பண்ணைக் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இம்மாதிரியாக ஓரங்களில் அதிக மீன் குஞ்சுகள் விடுவதற்கு 1-2 முதல் 4-5 சதுரமீட்டர் பகுதியில் ஆழமான குழிகள் உருவாக்குவது
முடிவுரை:
ஒருங்கிணைந்த மீன் மற்றும் அரிசி வளர்ப்புமுறை குறைந்த செலவில் நிலையான பயிற்சியாக கிராமப்புற மக்களுக்கு அதிகமான மதிப்பீட்டில் புரதம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பகுதிகளில் இருந்து வருமானம். நெல்-மீன் ஒருங்கிணைந்த விவசாயம் பூச்சிக்கொள்ளிகள், உரம் மற்றும் களைக்கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்கிறது மற்றும் மீனுக்கு செயற்கை உணவின் தேவை இருக்காது. இதுபோன்ற வேலைகள் குறைவதால் விவசாயிகளின் செலவு 50 சதவிகிதம் குறைவதோடு வருமானத்தை மீன் வியாபாரம் மூலமாக இரு மடங்கு கூடுகிறது. இதுபோன்ற கூடுதல் வருமானம், அரிசி-மீன் ஒருங்கிணைந்த வேளாண்மையின் நிகர உற்பத்தித்திறன், ஒற்றை கலாச்சாரத்தை அரிசியைவிட அதிகமாகவே இந்த பள்ளத்தாக்கில் காணப்படுகின்றது. மேலும் தனியார் மீன் விதை மையங்கள் இந்த ஜீரோ பள்ளத்தாக்கில் இருப்பது தரமான மீன் விதைகள் கிடைக்க பொிதும் உதவுகிறது.
மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் திறன் மேம்பாடு மீன் விதை உற்பத்தி மற்றும் மீன் ஹட்சாி மேலாண்மைமீன் விதை வர்த்தகம் மூலம் பண்ணை உற்பத்தித்திறனைஅதிகாிக்க வழிவகுத்தது. ஆனாலும், இன்னும் சுத்தமான மீன் சந்தையை குளிர் சேமிப்பு போக்குவரத்து வசதி தேவையாக உள்ளது.
தீப்ஜோதி பாருவா, ரவீந்திர போஸ்டி, கே. குணால், பி.எ. கணி, டி. சர்மா மற்றும் கயதி ரினியோ
References Baruah D & Singh ND., Rice-fish cultivation of Apatanis: A high altitude farming system in Arunachal Pradesh, 2018, Journal of Krishi Vigyan,7(1), pp. 187-191. Halwart M and Gupta MV., Culture of fish in rice fields, 2004, FAO and The World Fish Center, pp.1-77 IRRI, Rice research in a time of change, 1993, IRRI, Los Banos, Laguna, Philippines Deepjyoti Baruah, Ravindra Posti, K Kunal, P A Ganie, D Sarma ICAR-Directorate of Coldwater Fisheries Research, Bhimtal-263136, Nainital, Uttarakhand E-mail: deep_baruah@rediffmail.com Gyati Rinyo Gaumco Multipurpose Cooperative Society Lower Subansiri district, Hapoli-791120 Arunachal Pradesh
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2019, வால்யூம் 21, இதழ் 1



