வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் மூலமாக மேற்கொள்ளப்படும் நிலைத்த வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் வெளிப்புற ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைப்பதோடு, கழிவுகளையும் குறைக்கிறது. பண்ணைக்குள் உள்ள உயிரினப்பன்மயம், நல்ல ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை தருவதோடு, நல்ல வாழ்விற்கான தன்னாட்சி தன்மையையும் கட்டமைக்கிறது. லட்சுமி மற்றும் சங்கரப்பாவின் கதையானது இதனை நிரூபிக்கிறது.
ஒரு நாள் நீண்ட உழைப்பிற்குப் பிறகு, சமையல் அடுப்பை பற்ற வைப்பதைப் போன்ற ஒரு கடினமான போராட்டம் ஏதும் இருக்க முடியாது. ஆனால் தற்போது, நாப்பை திருகி புகையில்லா சமையல் செய்வது எனது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது, என்கிறார், கர்நாடகாவின் போர்கி கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய். லட்சுமிபாய் தனது கணவரான சங்கரப்பா ஹனுமந்தராவுடன் கர்நாடகாவின் பிடார் மாவட்டத்தில் ஜோஜனா ஊராட்சியில் உள்ள போர்கி கிராமத்தில் வசித்து வருகிறார். 280 குடும்பங்கள் வசிக்கும் போர்கியில் லிங்காயத்து மற்றும் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து வாழ்கின்றனர். மானாவாரியில் பயிரிடப்படும் சோளம், மக்காச்சோளம் மற்றும் பயறுவகைப் பயிர்களே கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாகும்.
சில வருடங்களுக்குமுன் நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இந்த தம்பதிகளின் பயணம் உளுந்து, பச்சைப் பயிறு, துவரை மற்றும் தீவனச் சாகுபடியோடு மானாவாரி வேளாண்மையில் உள்ள நான்கு ஏக்கர் பண்ணை நிலத்தில் துவங்கியது. ஒரு ஏக்கர் தாிசாக விடப்பட்டது. அதிகளவு கரடு முரடான மண் ஆரோக்கியம் இல்லாத நிலத்தில் கிடைத்த உற்பத்தியும் குறைவாகவே இருந்தது. ஆனாலும், அவர்கள் அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் சிறிதளவு பணத்தில் வாழ்க்கையை ஓட்டிவந்தனர். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பத்தின் அளவும் பொிதாக பலவாய்களுக்கு உணவளிக்க அவர்களின் பண்ணையை நம்பியிருப்பது மிகவும் கடினமாகியது. உள்ளூரில் உள்ள இடுபொருள் விற்பனை செய்பவரின் ஆலோசனைப்படி, அவர்கள் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தொடங்கினர். தொடக்கத்தில் அவை அவர்களுக்கு அதிக உற்பத்தியோடு நல்ல விளைவுகளை கொடுத்தன. பண்ணையில் இருந்து அதில் கிடைக்கப் பெற்ற லாபத்தை கால்நடைகளில் முதலீடு செய்து நான்கு பசுக்கள் மற்றும் ஒரு எருமையை வாங்கினர்.
சில வருடங்களில், இந்தத் தம்பதிகள் இரசாயன இடுபொருட்களை பயன்படுத்தும் அளவு அதிகாித்து வருவதையும், உற்பத்தியில் பொிய லாபம் கொண்டுவர முடியவில்லை என்பதை உணர ஆரம்பித்தனர். மேலும், உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் இடுபொருட்கள் வாங்குவதற்கான கடன் வாங்க ஆரம்பித்தனர். 2012 ஆம் ஆண்டில் தாறுமாறாக பெய்த மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு நீண்ட வறட்சியும் ஒட்டுமொத்தப் பயிரை பாதித்து நிலைமையை மிகவும் கடினமானது. கால்நடையில் இருந்து கிடைத்த வருமானம் குடும்பத்திற்கு உணவளிப்பதற்கே போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் இல்லாததால் கடன் அதிகாிக்க ஆரம்பித்தது. இது அந்த வருடத்தில் அவர்கள் கூலிவேலைக்கு செல்லும் அளவிற்கு கொண்டு சென்றது.
ஒரு துவக்கம்:
2013 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இந்த கிராமத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் சந்திக்கும் நிச்சயமற்ற சூழலுக்கு பங்கேற்பு அணுகுமுறையின் மூலம் தனது செயல்பாடுகளை துவக்கியது.ரிலையன்ஸ் பவுண்டேஷன் அந்த சமூகங்களை திரட்டி, கூட்டு உரிமைகள், முடிவு எடுத்தல் மற்றும் பொது நலனுக்காக கிராம அமைப்புகளை ஏற்படுத்தியது. லட்சுமி மற்றும் சங்கரப்பா இந்தக் கிராம அமைப்பில் முதல் நபர்களாக தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் பட்டறிவு பயணங்கள் போர்கி கிராம அமைப்பை மேலும் வலுப்படுத்தியது. கிராம அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்ட சூழ்நிலை ஆய்வு, மோசமான நில நிலைமைகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையினால் நடைமுறையில் உள்ள வேளாண் சிக்கல்களை வெளிப்படுத்தியது.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் கொடுத்த நிதி உதவியோடு, கிராம அமைப்பானது பொிய அளவில் ஆழமான உழவு, நிலங்களை சமப்படுத்துதல் மற்றும் வரப்பு அமைத்தல் போன்ற வேலைகளை நடைமுறைப்படுத்தியது. லட்சுமியின் நிலமும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கிராம அமைப்பானது சாண எரிவாயு, மண்புழு உரம், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் விதை நேர்த்தி போன்றவற்றிற்கு நிறைய பயிற்சிகளை உள்ளூர் நிலைத்த தீர்வுகளாக பயன்படுத்தியது. லட்சுமி மற்றும் இதர கிராம அமைப்பின் உறுப்பினர்கள் புதிய திறமைககளை உன்னிப்பாக கற்றுக்கொண்டு, சாண எரிவாயு மற்றும் மண்புழு உரங்களை தயாரித்து பயன்படுத்தத் தொடங்கினர். போர்கி கிராமத்தில் 14 சாண எரிவாயு கலன்கள் மற்றும் 47 மண்புழு உரத் தொட்டிகளை உருவாக்குவதற்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் உதவியது.
மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு
லட்சுமி காலையில் தொழுவத்திலிருந்து சாணத்தை சேகாித்து டைஜஸ்டருக்கு அளிப்பார். சாணம் சாண எரிவாயுவாக மாற்றப்படும். 1.8 கியூபிக் மீட்டா; கொள்ளளவு திறன் கொண்ட டைஜஸ்டர் அவரது சமையலறைக்குத் தேவையான, அவரது குடும்பத்திற்கு இரண்டு வேளை உணவுக்கான எரிபொருளுக்கு போதுமானது. டைஜஸ்டாில் இருந்து வெளியேறும் குழம்பு மண்புழுஉர தொட்டியில் மண்புழுஉரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது சோயாபீன்ஸ், பச்சைப்பயிறு மற்றும் உளுந்து போன்ற வேளாண் பயிர்க்கழிவுகளோடு கலக்கப்படுகிறது. இந்த உலர்ந்த இலைக்கழிவுகளோடு மண்புழுக்கள் விடப்பட்டு அவை அதனை உண்டு மண்புழுஉரம் தயாரிக்கப்படுகிறது. முதல் சுற்றில், மண்புழுஉரம் உற்பத்தி செய்ய 90 நாட்கள் எடுத்துக்கொண்டாலும், பிறகு அது 45-50 நாட்களில் உற்பத்தி செய்யுமளவுக்கு குறைக்கப்படுகிறது.
“இந்த யூனிட்டிலிருந்து கிடைக்கும் உரம் பண்ணையின் 90 விழுக்காடு தேவையை பூர்த்தி செய்கிறது. இது இடுபொருள் செலவினங்களை பெருமளவில் குறைத்து மகசூலை 5 குவிண்டாலிலிருந்து 20 குவிண்டாலாக அதிகாிக்கிறது. இதன் பலன்களை பார்த்த பிறகு, நாங்கள் மேலும் இரண்டு மண்புழு உர யூனிட்டுகளை உருவாக்கினோம். மேலும், நான் எனது சுயஉதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கும், போர்கி மற்றும் பக்கத்து கிராமத்தில் உள்ள 40 பெண்களுக்கும் விற்றேன்”என்கிறார் லட்சுமி.
மேலும், லட்சுமி தனது கால்நடைத் தொழுவத்தில் மாட்டுக் கோமியத்தை சேகாிப்பதற்காக ஒரு குழியை வெட்டினார். பசுவின் கோமியமானது, தௌிப்பானாகவும், திரவ உரமாகவும் பயன்படுத்தப்பட்டது. கிராம அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பண்ணை சுற்றுலாவில் ஒரு முற்போக்கு விவசாயியின் பண்ணையில் இயற்கை இடுபொருட்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மிளகாய் பூண்டு கரைசல் போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதையும், அதனை எப்படி பயன்படுத்தி கால்நடைகளின் ஆரோக்கியத்தையும், தாவரங்களுக்கு பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டார். ஜீவாமிர்தம் தயாரிப்பதற்கு அவர் பசுவின் சாணம், கோமியம், வெல்லம், பயறுவகை மாவுகள் போன்றவற்றை பயன்படுத்தி அதனுடன் சிறிது மண் மற்றும் சாண எரிவாயுவில் கிடைக்கும் குழம்பு சேர்த்து இரண்டு நாட்கள் நொதிக்கச் செய்து தயாரித்தார். ஒவ்வொரு முறை நீர்பாய்ச்சிய பின்னும், அதை தௌித்தும், மண்ணுக்கு உரமாக அளித்தும் மண்ணின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தினார்.
மிளகாய், பூண்டு, இஞ்சி கரைசல் கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள், இலைச்சுருட்டுப் பூச்சி, தண்டு துளைப்பான் மற்றும் மஞ்சள் நரம்பு புள்ளி போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவர் தனது சமையலறை மற்றும் பண்ணையிலிருந்து கிடைக்கும் வாழைப்பழம், பசுநெய், வெல்லம், இளநீர், பால், பசுஞ்சாணம் மற்றும் பசுவின் கோமியம் போன்ற 9 பல்வேறு வகையான பொருட்களை கலந்து, அதனை 30 நாட்கள் குளிர்ச்சியான நிழல் உள்ள பகுதியில் நொதிக்க வைத்து பஞ்சகாவியா தயாரிக்கிறார். இது கால்நடைகளுக்கு அதன் தீவனங்களோடு சேர்த்து வைக்கும்போது எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதோடு, பால் உற்பத்தியையும் அதிகாிக்கிறது, என்கிறார் லட்சுமி.
பரவலாக்குதல்:
கிராம அமைப்பானது, லட்சுமிக்கு ஒரு திறந்தவெளிக் கிணறு கட்டுவதற்கும் உதவியது. அரசின் பல்வேறுத் திட்டங்களை இணைத்து, கிராம அமைப்பானது, லட்சுமி வேளாண் துறையிலிருந்து அதிகபட்ச மானிய உதவிகளோடு, சொட்டு மற்றும் தௌிப்புநீர் பாசனவசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவியது. ராபிப் பருவத்தில் முதல் முறையாக இந்த குடும்பம் தக்காளி, பீர்க்கங்காய், கத்திரிக்காய், கீரைகள் போன்றவற்றை பயிரிட்டது. அவர்கள் நாவல், சப்போட்டா, மாதுளை, கொய்யா மற்றும் எலுமிச்சை போன்ற தோட்டப்பயிர்களை பயிரிட்டதோடு, இரண்டு பசுக்களையும் வாங்கினார். இங்ஙனம், இந்த தம்பதிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் தாிசாக போடப்பட்டுள்ள 1 ஏக்கர் நிலத்தை புதுப்பிப்பதில் மிகவும் பரபரப்பாக உள்ளனர்.
முடிவுரை:
லட்;சுமிபாய் மற்றும் அவரது கணவர் சங்கரப்பா ஹனுமந்தராவ் போன்ற சிறு மற்றும் குறு விவசாயிகளே நமது 70 விழுக்காடு உணவை அளிக்கிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை, வளமிழந்த நிலம், இடுபொருட்கள் கிடைக்காமை, சந்தை, நிதி மற்றும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாமை போன்ற பல்வேறு சவால்களை அவர்கள் சந்திக்கிறார்கள். மேலும், கடந்த சில தசாப்தங்களாக அதிகாித்துவரும் கணிக்க முடியாத காலநிலை மானாவாரி வேளாண்மையில் உணவு உற்பத்தி முறையை மேலும் பாதிப்புக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் உள்ளாக்குகிறது.
வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டின் மூலமாக மேற்கொள்ளப்படும் நிலைத்த வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் லட்சுமி மற்றும் சங்கரப்பாவிற்கு தங்களால் சொந்தமாக நிலைத்திருப்பதற்கு உதவுகிறது.
வெளிப்புற ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைப்பதோடு, கழிவுகளையும் குறைத்து நல்ல வாழ்விற்கான தன்னாட்சி தன்மையையும் கட்டமைக்கிறது. லட்சுமி மற்றும் சங்கரப்பாவின் கதையானது இதனை நிரூபிக்கிறது.
பண்ணைக்குள் உள்ள உயிரினப்பன்மயம், வருமானத்தை அதிகாிப்பதோடு, அவர்களின் உணவுத் தட்டில் ஊட்டச்சத்தை அளித்து குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. லட்சுமி வேளாண்மை குறித்த ஆலோசனைகளுக்கு தன்னைத் நோக்கி வரும் தனது உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் நல்ல மாியாதையோடும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.
ஜாஸ்பிர் சந்துமற்றும் சிவானந்தாமடபட்டி
Jasbir Sandhu Reliance Foundation, Mumbai, Maharashtra, India. E-mail: Jasbir.Sandhu@reliancefoundation.org
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2



