சமூக பங்கேற்போடு மரங்களை நடும் கலாச்சாரம் என்பது ஹசிருஹப்பா எனப்படும் நடவு திருவிழாக்களை நடத்துவதன் மூலமாக கிராமப்புற வாழ்க்கை முறையில் இரண்டற கலந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரச்சனைகளையொட்டி உலகம் முழுவதும் 123 சிறப்புநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதில், மூன்று நாட்கள் மட்டும் மண்ணுக்காகவும், தாவரங்களின் வாழ்விற்காகவும், பூமிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை, உலக வன தினம் (மார்ச் 21), உலக பூமி தினம் (ஏப்ரல் 22) மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5). இந்த சம்பவங்களைக் கொண்டாடுவதை தவிர, பொது மக்களிடையே தாவரங்கள் குறித்தும், மனித குலத்திற்கு அவற்றின் பலன்கள் குறித்தும் பொிய அளவில் விவாதங்கள் நடப்பதில்லை.
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு சுத்தமான காற்றும், சுற்றுச்சூழலும் தேவைப்படுவதால், மரங்களை நடுவது அனைத்து குடிமக்களின் பணியாக இருக்கிறது. எனினும், உலக சுற்றுச்சுழல் தினம் போன்ற நாட்களில் மரங்களை நடுவது, ஒரு சம்பிரதாயமாக அந்த நாட்களை குறிக்கும் வண்ணம் செய்யப்படுகிறது. இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் வேண்டிய உணவைக் கொடுப்பது தாவரங்கள். தீமைதரக்கூடிய நச்சுவாயுக்களை உறிஞ்சி, காற்றை சுத்தப்படுத்துவது தாவரங்கள். ஒரு நாட்டிற்கு குறைந்தபட்சம் 33 விழுக்காடு நிலங்களில் வனப்பரப்பு இருக்க வேண்டும். ஆனால் அண்ணையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் காடுகளின் பரப்பு 20 விழுக்காடுகளுக்கும் குறைவாக உள்ளது. எனவே, மரங்களை நடுவதும், பாதுகாப்பதும் மிகுந்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஹசிரு ஹப்பா, பசுமைத் திருவிழா
பயாப் நிறுவனம் விரிவாக்கம் மற்றும் நீர்ப்பிரி முகடுத் திட்டம், வேளாண் காடு வளர்ப்பு, வேளாண் தோட்டக்காடு வளர்ப்பு போன்ற மரங்களை அடிப்படையாக கொண்டத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மூன்று தசாப்பதங்களாக போடப்பட்ட பணிகளின் விளைவாக, மரங்கள் வளர்ப்பு என்பது வேளாண் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடிகிறது. சமூக பங்கேற்போடு மரங்களை நடுவது என்ற கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகளோடு கலந்து, அது கிராமங்களிலும், நகரங்களிலும் நடைபெறும் மற்ற திருவிழாக்களைபோல ஒரு திருவிழாவாக மாறியுள்ளது.
கிராமப்புற சமூகங்களை ஈடுபடுத்தி பொியஅளவில் மரங்களை நடுவதை பிரபலப்படுத்தும் பொருட்டு, கர்நாடகத்தின் பயாப் நிலைத்த வாழ்வாதார மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஹசிரு ஹப்பா- பசுமைத் திருவிழாவை அதன் அனைத்து திட்டசெயல்பாட்டு தளங்களிலும் 2001 ஆம் ஆண்டில் இருந்து பிரபலப்படுத்தியது. இந்த முயற்சிக்கு மதத் தொடர்பு மற்றும் அங்கீகாரங்களை கொடுக்கும் வகையில், மரங்களை நடும்போது கிராமத்தில் உள்ள மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் என அனைத்துப் பிரிவினர்களையும் அழைத்து நடத்தப்பட்டது. ஆதிச்சுஞ்சனகிரி மதத்தை சேர்ந்த மறைந்த ஸ்ரீ ஸ்ரீ பாலகங்கதரநாத் சுவாமிஜி, தொண்டதார்யா மாத்தை சேர்ந்த மறைந்த ஸ்ரீ ஸ்ரீ சித்தலிங்கேஷ்வர், டம்பால், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டும், ஏற்பாடுகள் செய்தும் மரங்களை நடுவது மற்றும் பாதுகாப்பது குறித்த முக்கியத்துவத்தை சமூகங்களுக்கு எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தினர். மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், விவசாயிகளின் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கிராம அளவிலான நிறுவனங்கள் இந்தக் கருத்தாக்கத்தை பிரதிபலித்தனர்.
பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஹசிரு ஹப்பாவுக்கு ஒரு தேதியானது சமூகப்பிரதிநிதிகளோடு கலந்துபேசி முடிவு செய்யப்படும். திட்டத்தின் பயனாளிகள் அருகாமையில் உள்ள கிராமங்கள், பள்ளி குழந்தைகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுவர். நிகழ்விற்கு முந்தைய நாளே மரக்கன்றுகளை கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து வசதிகள், விரைவாக வளரக்கூடிய மரங்களின் விதைகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கான குழிகளை எடுப்பது போன்றவற்றோடு மற்ற ஏற்பாடுகள் தயார்நிலைகள் உறுதிப்படுத்தப்படும். காலையில் சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மரங்களை நடக்கூடிய பகுதிக்கு ஊர்வலமாக சென்று, அங்குள்ள மரக்கன்றுகளுக்கு பூஜைகள் நடத்தி மரக்கன்றுகளை நடுவதற்குமுன் ஹசிரு ஹப்பா உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.
பல்வகை மரவகைகளும் அவற்றின் தாக்கமும்;:
பள்ளி வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றி வேம்பு போன்ற மரங்களை நடுவதால் அது நோய் தடுப்புமுறைகளுக்கு உதவுகிறது. அந்தோசெபாலஸ் (கடம்பா), பில்வாரா மற்றும் அல்பீசியா லெபெக் போன்ற மரங்கள் நடும்போது அவை சிறு மற்றும் பெருநகரங்களில் உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும். மைக்கேலியா மில்லிங்டோரியா வகைகள் மற்றும் நைக்டியாந்தசே (பாரிஜாதம்) வகைத் தாவரங்களை குப்பைமேடுகள் மற்றும் கழிவுநீர் பாதைகளில் நடுவதால் அந்தத் தாவரங்களுக்கு அங்கிருந்துவரும் துர்நாற்றங்களை குறைக்கும் திறன் உள்ளது. பைக்கஸ் ரிலிஜியோசா, பைக்கஸ் பெங்காலின்சிஸ் போன்ற வகைகளை பூங்காக்கள் மற்றும் கோயில் வளாகங்களில் நடலாம். ஏனெனில், இந்த தாவரங்கள் காற்றை சுத்தம் செய்யும் திறன் கொண்டவை.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், சீசல்பினியாசப்பன், டல்பர்கியா சிசு, சைடியம் கொய்யா மற்றும் அல்பாசியா லெபெக் போன்ற வகைகளை நடவு செய்யும்போது அவை சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் உள்ள காற்று மாசுபாட்டை தாங்கி வளரக்கூடிய வகைகளாக பாிந்துரைக்கிறது.
உயிர்வேலிகள் அமைக்கப்படுவது கார்பன் வரிசைப்படுத்தலுக்கு உதவி அவை காலநிலை மாற்றத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. நிலத்தின் எல்லைகளை ஒட்டி உயிர் வேலிகளை கிளேரிசிடியா, எர்த்ரினா, லாண்டனா போன்ற போத்துகளை மழைக்காலங்களில் வெட்டி நடுவதன் மூலம் உருவாக்கலாம். மேலும் விரைவாக வளரக்கூடிய செஸ்பேனியா, சூபாபுல், மற்றும் கிளைரிசிடியா போன்றவற்றின் விதைகளை வரப்புகளின் ஓரங்களில் விதைக்கலாம். இவைகள் விரைவாக வளர்ந்துவிடும். இரண்டாம் ஆண்டில் இருந்து, வேலியிலிருந்து பொியஅளவில் கிடைக்க ஆரம்பிக்கும் இலைதழைகள் கொண்டு மட்குஉரம் தயாரிக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல, அந்த இடத்திற்கான தாவர வகைகளில் வேலியில் வளர ஆரம்பிக்கும்.
கிளேரிசிடியா, சூபாபுல், எர்த்ரினா மற்றும் செஸ்பேனியா கிராண்டிபுளாரா போன்றவை மிக விரைவாக வளரக்கூடிய வகைகள் என்பதால், அவற்றை மழைக்காலங்களில் நேரடியாக விதைப்பு செய்வதன் மூலம் வளர்த்து உருவாக்கலாம். இவைகள் தீவன தேவைகளை பூர்த்தி செய்வதோடு மற்றும் அதன் இலைதழைகள் மண்ணில் மீண்டும் பரப்பி உழுவதற்கு உதவுகிறது. உழவர்களுக்கு விதைகளும், இந்த குறைந்த செலவிலான செயல்முறையை பின்பற்றுவதற்கு உற்சாகமும் அளிக்கப்படவேண்டும்.
கர்நாடக அரசானது, அதன் மாநில உயிர்எரிபொருள் வளர்ச்சி வாரியத்தின் வழியாக அரசு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் உயிர்எரிபொருள் மரவகைகளை நடுவதை ஊக்குவித்து வருகிறது. புங்காமியா, சிமருபா, ஜட்ரோபா, மதுகா போன்ற வகைகள் விவசாயிகளுக்கு ஹசிருஹோன்னு மற்றும் பாரடுபங்காரா திட்டத்தின் வழியாக வழங்கப்பட்டது. இந்த வகை தாவரங்களை நிலத்தின் வரப்புகளில் மற்றும் சாகுபடி செய்யாத நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். விதை உற்பத்திக்கு அப்பால், அதிக அளவில் இழைதழைகள் மற்றும் இலைகுப்பைகள் கிடைக்கும். இவற்றை சேகாித்து, மட்குஉரமாக மாற்றி நிலத்திற்கு பயன்படுத்துவதன் மூலம், காலநிலை மாற்றங்களின் பின்னணியில் இரசாயனங்களையும், வேதியியல் உரங்களையும் குறைக்க முடியும்.
பரந்தஅளவில் பரவலாக்கம்:
மரங்கள் வளர்ப்பு என்பது பொதுநிலங்கள், பள்ளி வளாகங்கள், கோயில் வளாகங்கள், தாிசுநிலங்கள், சாலையோரங்கள் போன்ற இடங்களில் ஊக்கப்படுத்த வேண்டும். மரங்களை நட்டு வளர்ப்பது கட்டாயப்படுத்தப்படாமல், நமது கலாச்சாரத்தோடு ஊறிய ஒன்றாக மாற வேண்டும். இதற்கு ஒரு பலமான சமூகத்தை திரட்டுவது தேவைப்படுகிறது. இந்த மரவளர்ப்பு செயல்பாடுகளை நிலைத்ததன்மையுடையதாக செய்வதற்கு கிராமங்கள் உள்ள சுய உதவிக் குழுக்கள், இளைஞர் குழுக்கள், பள்ளிக் குழந்தைகள் போன்றவற்றை ஈடுபடுத்தி செய்வதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. மானாவாரி விவசாயிகள் வேளாண் காடுகள் மற்றும் மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண்மையை மேற்கொள்வதில் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். வீட்டின் கொல்லைபுறத்தில் இருக்கும் இடத்திற்கு ஏற்றபடி ஒரிரு மரங்களை நடலாம். எந்தவொரு அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கு, ஒரு ஏக்கருக்கு 200 முதல் 300 மரங்களை நடுவதை கட்டாயமாக்க வேண்டும். இறுதியாக, வளிமண்டலத்திலிருந்து கார்பனை பிரித்தளித்து கொடுக்கும் பணியை மரங்கள் தான் செய்து காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தணிக்க உதவுகின்றன.
எம்.என்.குல்கர்னி
M N Kulkarni Addl. Chief Programme Executive BAIF, KoneruLakshmaiah Street, Mogalarajpuram, Vijayawada, Andhra Pradesh. E-mail: mnkulkarni65@gmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பா; 2019, வால்யூம் 21, இதழ் 4



