வேளாண் உயிர்ச்சூழல் காலநிலையை எதிர்கொள்ளும் உணவுமுறைகளை நோக்கி


சூழலியல் மண்டலத்தை பாதுகாப்பதைத் தாண்டி, வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளை பின்பற்றுவது வருமானத்தைப் பெருக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும். ஒரு கிராமத்தில் 50 விழுக்காடு விவசாயிகள் நிலைத்த விவசாயத்தை பின்பற்றினால் கூட, அது கிராமப்புற பொருளாதாரத்தில் பொிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வேளாண் உயிர்ச்சூழல் முறைகளை பாதுகாக்கும் வேளையில், வளஆதாரங்கள் மறுசுழற்சி மேம்படுத்தி காலநிலையை எதிர்கொள்ளும் வேளாண் உயிர்ச்சூழல் உணவுமுறைகளில் தீர்க்கமாக ஈடுபடும் நேரமிது.


கர்நாடகாவில் கடக் மாவட்டத்தின் ஷகோட்டி கிராமத்திற்கு சென்றிருந்தேன். கிராமத்திற்குள் நுழையும்போது நான் கவனிக்க முடிந்ததெல்லாம் முழுமையான அமைதி. அந்த கிராமத்தில் இருந்த சேறுபடிந்தசாலை என்னை ஒரு சிறிய கட்டிடத்தின் முன் நான் கண்ட ஒரு பொிய கூட்டத்தை நோக்கி அழைத்து சென்றது. கிராமத்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அங்கு கூடி மிகவும் ஆழமான ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். விவாதம் ஏலத்திற்கு வரும் கதிர் அடிக்கும் இயந்திரத்தை குத்தகைக்கு எடுப்பதை ஒட்டி இருந்தது. பருவமழை தவறியதன் காரணமாக மக்களிடையே இயந்திரத்தை எடுப்பதற்கான நம்பிக்கை குறைவாக காணப்பட்டது. கடந்த 3 வருடங்களாக ஏற்பட்ட தொடர் வறட்சியினால் குறு விவசாயிகளின் வாழ்வு ஒரு நிச்சயமற்ற போக்கிற்கு செல்வதை மழைதான் தீர்மானிக்கிறது என்பது கண்கூடாக தொிந்தது.

இருப்பினும், மகாதேவ்கௌடா என்னும் விவசாயி இயந்திரத்தை ஒரு வருடகாலத்திற்கு நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்க முன்வந்தார். மற்ற உறுப்பினர்கள் இயந்திரத்தை எடுப்பதற்கு தயக்கம் காட்டியபோது, அவர் எடுக்க காரணம் என்னவென்றால், தனது வேளாண்மையின் தாரகமந்திரமாக வேளாண் உயிர்ச்சூழலை அவர் பின்பற்றியதால், தொடர் வறட்சியிலும் அவரின் வேளாண்மையை பாதிக்கவில்லை. மகாதேவ்கௌடா வெளிப்படுத்திய நம்பிக்கை அவரிடம் என்னை அணுக வைத்தது. மற்ற விவசாயிகள் வறட்சி என்னும் பிரச்சனையை தீர்ப்பதற்கு போராடும்போது அதனை எவ்வாறு இவர் அணுக போகின்றார் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை அணுகத் தூண்டியது.
அந்த கூட்டம், ரிலையன்ஸ் பவுண்டேஷனால் உருவாக்கப்பட்ட “ஷகோட்டி கிராம விவசாய சங்கம்” என்று அழைக்கப்படும் கிராம கூட்டமைப்பின் பொதுக்குழுவின் கூட்டம் என்பதை நான் புரிந்துகொண்டேன். மகாதேவ் கௌடாவிடம் நடைபெற்ற முதல் கட்ட விவாதங்களிலிருந்து அவர் 4 வருடகாலங்களில் இந்தக் கிராம கூட்டமைப்பின் உதவியோடு தனது பண்ணையை நவீன வேளாண்மையிலிருந்து நிலைத்த வேளாண் முறைக்கு மாற்றியவர் என்பதை நான் அறிந்துகொண்டேன். மற்ற விவசாயிகள் தங்களின் பண்ணையிலிருந்து சராசாியான உற்பத்தியை எட்டுவதற்கே போராடும் நிலையில், இவரால் உற்பத்தியை இரட்டிப்பாக மாற்றி கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார்.

அந்த பயணம்:
அவரின் பண்ணையிலிருந்து போதுமான வருமானம் கிடைக்காததால்தான் வாழ்விற்கான சம்பாத்தியத்திற்கு பலவருடங்களாக மகாதேவ்கௌடா விவசாய கூலியாக இருந்துள்ளார். பின்பு வேளாண்மைக்கு மாறியுள்ளார். தனது முழுமையான 3 ஏக்கர் பண்ணையில் ஓரினப்பயிராக நிலக்கடலையை மட்டும் சாகுபடி செய்து வந்ததால், துவக்க ஆண்டுகளில் மிகவும் கடுமையாக இருந்துள்ளது. மற்ற விவசாயிகள் செய்ததைபோல இவரும் உரங்களை பயன்படுத்தி வந்தார். வருடத்திற்கு ரூபாய் 25000 என இவர் சம்பாதித்தது தனது குடும்பத்தை நடத்துவதற்கும், உடல் நலப்பிரச்சனைகளினால் அவதிப்பட்டு வந்த அவரின் மகளுடைய மருத்துவ செலவினங்களை பார்ப்பதற்கும் போதவில்லை.

இரசாயன உரங்களை கொண்டு செய்த வேளாண்மையில் துவக்க வருடங்;களில் நல்ல உற்பத்தி கொடுத்தபோதிலும், போகபோக உற்பத்தி அளவு குறைந்து, முன்பு எடுத்த உற்பத்தி அளவை எட்ட அதிகளவு இடுபொருட்கள் தேவைப்பட்டது. மேலும், அதிகளவு உரங்களை பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் கார்பன் அளவை அதிகாித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை அவர் உணர்ந்தார். நைட்ரஸன் உரங்கள் மிகவும் சக்திவாய்ந்த பசுமைகுடில் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடை வெளியிடுகின்றன. அவரது கிணற்றில் உள்ளநீர் அவருடைய பண்ணைக்கு நீர்பாசனம் செய்வதற்கு போதுமானதாக இல்லாததால் பயிர் முழுவதும் கருகிவிட்டது. அதேநேரத்தில் பொதுவாக வேளாண் கழிவுகள் என கருதி பண்ணை உரமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பண்ணையில் ஒரு மூலையில் சிலசெடிகள் ஆரோக்கியமாக வளர்வதை அவர் கவனித்தார். அங்கு முளைத்து வந்த விதைகள் நம்பிக்கைக்குரிய அறிகுறியாகப்பட்டது. வேளாண் கழிவுகள் இயற்கையான மூடாக்காக வேலை செய்து அந்த விதைகள் காய்ந்துவிடாமல் பாதுகாத்து வந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சில பழத் தோட்டங்களை சென்று பார்த்தும், கிராம அமைப்பினால் நடத்தப்பட்ட நாற்றங்கால் அமைப்பது குறித்தான பயிற்சிகளிலும் கலந்துகொண்டு அதில் மிகவும் துடிப்புமிக்க உறுப்பினராக இருந்தார். மானாவாரி வேளாண்மையில் வெற்றிகரமாக செயல்படும் விவசாயிகளின் பண்ணைகளை சென்று பார்த்ததால் நிலைத்த வேளாண்மையை பின்பற்றுவதில் அவரது ஆர்வம் அதிகாித்தது. அவரின் ஆர்வத்தை புரிந்துகொண்ட கிராம அமைப்பும் அவருக்கு பொருளாதார மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக உதவியது. அவரும் தனது பண்ணையில் வேளாண் தோட்டகலையை மேம்படுத்த நாற்றங்காலை உருவாக்கினார். தற்போது அவர் 70 மா, 200 தேக்கு கன்றுகள் வரப்பிலும், 200 சப்போட்டா, 20 எலுமிச்சை, 50 முந்திரி, 10 பப்பாளி, 600 வாழை, 2 கொய்யா, 2 அத்தி, 5 போிச்சை, 10 பாக்கு, 25 தென்னை, 70 கிளரிசிடியா மற்றும் 500க்கும் அதிகமான கறிவேப்பிலை கன்றுகளை அவரின் 2 ஏக்கர் நீர்பாசன வசதியுள்ள நிலத்தில் வைத்துள்ளார். இவற்றிக்கும் மேல், பண்ணையில் மீதம் உள்ள இடங்களில் அவர் காய்கறிகள் மற்றும் தீவனப் புற்களையும் வளர்த்து வருகிறார். ’வருடத்தின் எந்த நேரத்தில் யார் எனது வீட்டிற்கு வந்தாலும் குறைந்தபட்சம் அவர்களுக்கு இரண்டு வகையான பழங்களை அளிக்க வேண்டும் என நான் எப்போதும் எண்ணுவேன். இங்கு நாங்கள் விளைவிப்பது எல்லாமே இயற்கைவழியில் இது நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நமது சுற்றுச்சூழலையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவுகிறது”. விவசாயியின் இந்த பெருமையான வார்த்தைகள் அவர் தனக்கு சொந்தமான உணவை சாகுபடி செய்வதில் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் கண்ணாக இருப்பது வெளிப்படுகிறது.

அவர் இரசாயன உரங்களுக்கு பதிலாக மட்குஉரம், பயிர் சுழற்சிமுறை, மூடாக்குப் பயிர்கள், பொறிப் பயிர்கள், ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான தொழுஉரங்களின் பயன்பாடு இவற்றின் மூலம் ஈடுகட்டுகிறார். அவர்கள் காிமப் பொருட்களை அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், வளிமண்டலத்தில் இருந்து அதிகபட்ச அளவிற்கு காியை கைப்பற்றுவதற்கு உதவுகிறார்கள். அதிகளவு காிசேகாிப்பு மண்ணின் வளத்தையும், தழைச்சத்து நிலைநிறுத்துவதையும் அதிகாிக்கிறது. பயிர் பல்வகைப்படுத்துதல் வேளாண்மையில் ஆபத்துக்களை குறைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை கடைபிடிப்பது , மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகளுக்கு ஒரு மையமாக சேவை புரிந்து மற்றும் காடு அழிவிற்கு ஒரு தடையாக உள்ளது.

மகாதேவ் கௌடா ஊடுபயிர் சாகுபடி, நாற்றங்கால் உருவாக்குதல், காய்கறிச் சாகுபடி, மூடாக்கு, மட்குஉரம், திறன்மிகு நீர்ப்பாசனம் மற்றும் சாண எரிவாயு டைஜஸ்டர் மூலம் உர மேலாண்மையை கடைபிடித்து வருகிறார். மேலும் அவர் மண்புழு உரம் மற்றும் 2 அசோலா அலகுகளை வைத்துள்ளார். இந்த அணுகுமுறையானது அவருக்கு மறு சுழற்சி, மறு பயன்பாடு மற்றும் வளஆதாரங்களை ஒருங்கிணைத்து வெளியிடுபொருட்களின் சார்புத்தன்மையை குறைத்து மற்றும் பருவநிலை மாற்றங்களை சமாளிக்கும் வகையில் ஒரு வட்டப் பொருளாதார மாதிரியை உருவாக்க உதவியது. அவர் நிலத்தடி நீரை உகந்த அளவு பயன்படுத்தி மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான குடி நீர் வினியோகத்தை மழைநீர் அறுவடை முறையில் கிடைப்பதை உறுதி செய்கிறார்.

அவரது பழ மரங்கள் ஏற்கனவே உற்பத்தியை துவங்க அதிலிருந்து அவர் அறுவடை செய்து விற்றது பெருமளவு லாபத்தை கொடுத்தது. மரங்களிலிருந்து கிடைக்கும் இலை தழைகளை சேகாித்து அவற்றை மண்புழு உர தொட்டிக்கு மூலப்பொருட்களாக மறுசுழற்சிக்கு பயன்படுத்தினார். மண்புழு உரம் பயன்படுத்தியதால் ஈரப்பதத்தை தக்கவைக்க நன்றாக இருந்தது , பண்ணையில் எங்கு தோண்டினாலும் மண்புழு இருப்பதிலிருந்து தௌிவாக தொிந்தது. இது இவரது பண்ணையின் மண் அமைப்பை கணிசமான அளவிற்கு மேம்படுத்தியது. ஒவ்வொரு மண்புழு உர மாதிரியிலும் 3 சுழற்சியில் ஒவ்வொன்றுக்கும் 3 குவிண்டால் வீதம் ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்திற்கு 18 குவிண்டால் இவரால் எடுக்க முடிந்தது. இவர் தொடாச்சியாக ஜீவாமிர்தாவை பயன்படுத்தி வருகிறார் (இயற்கை முறையில் உருவாக்கியது)

மேலும் அவரது புதுப்பிக்கப்பட்ட கிணற்றில் அவர் மீன் வளர்க்கிறார். அதன் மூலம் அடுத்த வருடம் ஏராளமான அறுவடை கொடுக்கும் என எதிர்பார்க்கிறார். சாமந்திப் பூக்கள் பூச்சிகளை கவர பொறியாக மட்டுமல்லாது பல்வகை தேனீக்கள் மற்றும் வண்டுகளை கவர்ந்து, அது உயிர்ச்சூழல் சுழற்சியை முடித்து வைப்பதில் பொியபங்கு வகிக்கிறது. தொடர் முயற்சியாக 3 வருடங்களுக்குப்பிறகு அவரது பண்ணை தற்போது இயற்கை மையமாக நிலைத்த வேளாண்மையை கற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்களை மட்டும் கவர்ந்திழுக்காமல், பல்வேறு பறவைகள் மற்றும் இயற்கையில் மகரந்தச் சேர்க்கையை அளிக்கும் உயிர்களை கவர்ந்திழுத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு தேனீக்கும்கூட அது வாழ்வதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அது தவறும்போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு பாதகமான ஒரு நிலைமை நாம் சுற்றுச்சூழலில் உருவாக்கி, முடிவில் பருவநிலை மாற்றத்தின் வழியாக நம்மை பாதிக்கிறது என்பதை யாரும் எளிதாக அளவிட முடியும்” என்கிறார் மகாதேவ்கௌடா. அவரது பண்ணையின் சுற்றுப்புறம் ஒரு ஆரோக்கியமான வளிமண்டலத்தை காட்;டுகிறது.

மகாதேவ் கௌடா தனது முழு நேரத்தையும் வேளாண்மைக்கு அர்பணித்ததால், இப்போது ஒரு வருடத்திற்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் வறட்சியான சூழலுக்கு மத்தியில் அவரது பண்ணை வேளாண் -உயிர்ச்சூழல் முறைக்கும், பண்ணையில் உள்ள வளஆதாரங்கள் மறுசுழற்சிக்கும் ஒரு மாதிரியாக பணியாற்றுகிறது. அவரது செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, கிராம அமைப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களும் நிலைத்த வேளாண் செயல்முறைகளை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். கிராமத்தில் உள்ள 50 விழுக்காடு விவசாயிகள் நிலைத்த வேளாண்மையை கடைபிடித்தால், சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாத்தல் தவிர, வேளாண்-உயிர்ச்சூழல் செயல்முறைகளை கடைபிடிப்பது ரூ. 3 கோடி அளவிற்கு ஊதியத்தை பெருக்குவதற்கான திறனை பெற்றுள்ளது. இது கிராம பொருளாதாரத்திற்கு மிகப்பொிய திருப்புமுனையாக இருக்கும். எனவே, காலநிலை நெகிழ்திறன் கொண்ட வேளாண் உயிர்ச்சூழல் உணவுமுறைகளில் உணர்வுப்பூர்வமாக முதலீடு செய்வதற்கான நேரமிது. இதனால், சுற்றுச்சூழல் நிலைத்த தன்மையை பாதிக்காமல் உற்பத்தியையும், உணவு உத்திரவாதத்தையும் அதிகாிக்கலாம்.

ரஞ்சிதா குமரன் மற்றம் பாஸ்கரபட்டா ஜோஷி


Ranchitha Kumaran & Bhaskarabhatta Joshi
Reliance Foundation,
RCP, Project Office, 1st floor,
Ghansoli, Navi Mumbai-400701
E-mail: ranchitha.kumaran@reliancefoundation.org
Bhaskarabhatta.Joshi@reliancefoundation.org

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...