ஹிமாச்சல பிரதேசத்தின் மத்திய மலைப்பகுதிகளில் இருந்து வழக்கு ஆய்வுகள்
பெண் விவசாயிகள் வேளாண் சூழலியல் கொள்கைகளை உள்ளூணர்வாக நடைமுறைப்படுத்துகின்றனர். நிலையான நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் அவர்களின் கவனம் மண் மற்றும் பயிர்களில் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தின் ஆரோக்கியத்திலும் உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இரண்டு நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதன் மூலம், பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பன்முகப்படுத்துவதைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் பண்ணைகளை நிலையானதாக மாற்றுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
இந்தியாவில் விவசாயத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதும் ஆண் அல்லது மூத்த பெண்களின் கைகளிலேயே இருந்தது. வழக்கமாக, அவர்களின் பாத்திரங்கள் பாலினம் மற்றும் தொழில்நுட்பம் சார்புடையவை. டிராக்டர்கள் அல்லது காளைகள் மூலம் உழுதல் போன்ற நிலப்பரப்பு சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய செயல்பாடுகள் பாரம்பாியமாக ஆண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரத்தில் விதைகளை விதைத்தல், களைகளை அகற்றுதல், அறுவடை செய்தல் போன்ற கடினமான நடவடிக்கைகள் பொதுவாக பெண்களால் கவனிக்கப்படுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில், சிதறிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட நிலத்தில் குறைந்த வாழ்வாதார வாய்ப்புகளைக் கொண்ட ஆண் விவசாயிகள், பிற வருமான ஆதாரங்களை ஆராய்வதற்காக சமவெளிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் விவசாயப் பொறுப்பை பெண்கள் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாித்த சுயாட்சியுடன், பெண்கள் வெறும் பயிர் வாழ்வாதாரத்திற்கு அப்பால் குடும்பத்திற்கு மிகவும் விரும்பத்தக்க முடிவுகளை எடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா மாவட்டத்தில் உள்ள எங்கள் திட்டப் பகுதியைச் சர்ந்த பின்வரும் வழக்குகள் இதை எடுத்துக்காட்டுகின்றன.
அத்திஜியின் கதை
சக்ரி பஞ்சாயத்தின் சுகர்னா கிராமத்தில் வசிக்கும் 40 வயது விவசாயி அத்திஜி. அவள் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இவரது கணவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவளுக்குச் சொந்தமாக 27 கானல்கள் (8 கானல்கள் என்பது ஒரு ஏக்கர் விவசாய நிலம்). அதில் 25 கானல்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவரது வீட்டை ஒட்டி 18 கானல் நிலங்களும், தொலைவில் 7 கானல் நிலமும் உள்ளது.
அத்திஜியின் வீட்டில் கால்நடைகள்
2017 ஆம் ஆண்டு வரை இவரது வீட்டை ஒட்டியிருந்த 18 கானல் நிலங்கள் முட்புதர்கள், மரங்கள் மற்றும் கொடிகளால் மூடப்பட்டிருந்தன. அவள் சொல்கிறார், “ஆத்மி ஆர் சே பார் நஹி திக்தா தா, யஹான் பூரா ஜங்கிள தா” (அது மிகவும் அடர்த்தியாக இருந்தது. நிலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் யாரும் பார்க்க முடியாது) அதைத் துடைக்க, உள்ளூர் மேய்ப்பர்களை – காடி சமூகத்தை, தன் நிலத்தில் தங்கள் மந்தைகளை மேய்க்க அழைத்தாள். நிலத்தை சுத்தம் செய்வதில் கால்நடைகள் அவளுக்கு ஒரு தொடக்கத்தை அளித்தன. பின்னர் கைக் கருவிகளின் உதவியுடன் புதர்கள் மற்றும் கொடிகளை வெட்டத் தொடங்கினாள். மரங்கள் மற்றும் அதிகமாக மண்டிக்கிடக்கும் புதர்கள் சவாலாக இருக்கும் சந்தர்பங்களில், பக்கத்து நிலத்தில் மின்கம்பங்களை நிறுவும் மின்சாரத் துறை ஊழியர்களிடமிருந்து உதவியைப் பெற்றார். சீசன் பருவம் வாரியாக, அவர் சிறிய நிலங்களை அழித்து, பல்வேறு பயிர்களை பயிரிடத் தொடங்கினார். அதற்காக அவர் முன்பு மற்ற கிராமவாசிகள் மற்றும் சந்தைகளை நம்பியிருந்தார்.
நிலம் பல ஆண்டுகளாக மரங்களால் மூடப்பட்டிருந்ததால், புதிதாக அழிக்கப்பட்ட நிலம் மிகவும் வளமாக இருந்தது. இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சல் மற்ற விவசாய நிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாக இருந்தது. அவளுடைய குடும்பம் தலைமுறை தலைமுறையாக பயிரிட்டு வந்தது. அதிக மகசூல் உள்ளூர் சந்தையில் உபாியை விற்று கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பையும் அவளுக்கு அனுமதித்தது. அடுத்த பருவத்தில், அவர் அந்த நிலத்தில் சோயாபீன்ஸ் பயிரிட்டார். பின்னர் உள்ளூர் மொழியில் “சுவாடு” என்று அழைக்கப்படும் சமையலறை தோட்டத்தை நோக்கி சென்றார். நிலம் மிகவும் வளமானதாக இருந்ததால் இந்தப் புதிய நிலத்தில் ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அத்திஜி ஒருபோதும் உணரவில்லை. தானியங்கள் மற்றும் சமையலறை தோட்டம் தவிர, மாம்பழம், இந்தியன் ப்ளாக்பொ;ரி, பொிய சாத்துக்குடி, இந்திய நெல்லிக்காய் (அம்லா), மல்பொி மற்றும் கொய்யா போன்ற பலவகையான பழ மரங்களையும் அவர் நட்டார். அத்திஜிக்கு சொந்தமாக 4 பசுக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நாட்டு இனம் மற்றும் 3 கலப்பின மாடுகள். அவர் வீட்டில் தயிர், நெய் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதால், சந்தையில் விற்கும் அளவுக்கு பால் அதிகமாக இருப்பதில்லை.
2022 ஆம் ஆண்டில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் (ஆத்மா) திட்டத்தின் கீழ், அத்திஜி பாரம்பாிய விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறினார். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான கிராமப்புற தொழில்நுட்ப வளர்ச்சி மையம் (ஆர். டி. டீ.சி) மூலம் இந்தத் திட்டம் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பல்வேறு களப் பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும், சமகால விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக கற்றல் பயணங்களை மேற்கொண்டார். கடந்த காரீப் பருவத்தில், பட்டாணி, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், வயல் பட்டாணி, புல் பட்டாணி, அருகம்புல், அகத்திக்கீரை, மஞ்சள் போன்ற காய்கறிகளை பயிரிட்டார். மேலும் பார்லி, விரலி, கோதுமை, நெல் போன்ற தானியங்கள் மற்றும் கடுகு மற்றும் ஆளி போன்ற விதைகள் பயிரிட்டார்.
காய்கறிகள் மற்றும் தானியங்கள் தவிர, சீமை சாமந்தி (கெமோமில் மற்றும் ஜடாமான்சி (ஸ்பைக்கனார்ட்) போன்ற மருத்துவ தாவரங்களையும் பயிரிட்டார். உலர்ந்த கேமோமில சீமை சாமந்தி பூக்களை தேநீருக்கு பயன்படுத்தலாம். மருத்துவ குணமும் கொண்டது. 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஸ்பைக்கனார்டின் ஜடாமான்சி முதிர்ந்த வேர்கள் ஆயர்வேத மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. மேலும், அவர் நவம்பர் 2022 ல் தேனீ வளர்ப்பைத் தொடங்கினார். தேனீ பெட்டிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட தேன் அவரது வருமானத்தை அதிகாிக்க உதவியது மட்டுமல்லாமல், தேனீக்கள் பயிரை மகரந்தச் சேர்க்கைக்கு உதவியது, இது விளைச்சலை பாதித்தது. தாக்கம் ஏற்பட்டது
பிராமிஜி கதை
பிராமிஜி தனது கணவர் மற்றும் மகனுடன் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள குடைல் பஞ்சாயத்தின் ராஜோடு கிராமத்தின் தொலைதூர மூலையில் வசிக்கிறார். 22 வயதில், பொிய குடும்பத்திலிருந்து பிரிந்த பிறகு, பிராமிஜியும் அவரது குடும்பத்தினரும் மூதாதையர் வீட்டை விட்டு வெளியேறி, புதிதாக எல்லாவற்றையும் தொடங்கினர். அப்போது அவரது கணவர் அருகில் உள்ள தொழிற்சாலையில் மாதம் 250 ரூபாய் கூலி வேலை செய்து வந்தார். நல்ல வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த அவரது கணவர் சவுதி அரேபியாவுக்கு மெக்கானிக்காகப் பணிபுரியச் சென்றார். ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில், அவர் அவர்களின் எல்லா சேமிப்பையும் இழந்தார். 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபராக பிராமிஜி ஆனார்.
பிராமி தேவி தனது வீட்டை ஒட்டி சமையலறை தோட்டத்தை வளர்த்தார்.
பிராமிஜி சமாளித்த முதல் பிரச்சினை, சந்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் தனது செலவுகளைக் குறைப்பதாகும். தன் வீட்டை ஒட்டியிருந்த 4 கானல் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தாள். உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கியுடன் உள்ளூரில் சுவாடு என்று அழைக்கப்படும் சமையலறை தோட்டத்தை அவள் தொடங்கினார். பல ஆண்டுகளாக, கீரை, டர்னிப் , நூல்கோல், மஞ்சள், காலிபிளவர், வெள்ளரி மற்றும் பிற பருவகால இலைக் காய்கறிகளை உள்ளடக்கிய காய்கறிகளின் பன்முகத்தன்மை அவரது சமையலறை தோட்டத்தில் வளர்ந்துள்ளது. மேலும், அவர் இப்போது சில அரிய மற்றும் காட்டு காய்கறிகளான பாம்பு புடலங்காய் “படோல்” மற்றும் கிழங்கு யாம் “டயோஸ்கோரிய அலடா” (உள்ளூர் பெயர் – தார்டி) போன்றவற்றை பயிரிடுகிறார். இது மற்ற காய்கறிகளை விட சிறந்த வருமானத்தை அளிக்கிறது. சந்தையில் இருந்து கிடைக்கும் ருசியை விட தனது சொந்த காய்கறிகளின் சுவை மிகவும் சிறந்தது என்று அவர் கூறுகிறார். ஆரம்பத்தில், அவர் தனது சமையலறை தோட்டத்தை நிறுவியபோது, அவர் பல காய்கறிகளை உபாியாகப் பெறத் தொடங்கினார் மற்றும் அதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். ஆனால் பின்னர் தனது தோழி ஒருவரின் ஆலோசனையின் போில், அவள் அனைத்து முள்ளங்கிகளையும் சேகாித்து, அவற்றை கழுவி, வீடு வீடாக விற்க ஆரம்பித்தார். அவர் காய்கறிகளை விற்று அதில் லாபம் பெற்றது இதுவே முதல் முறை. இந்த சிறிய வெற்றி, தனது சமையலறை தோட்டத்தில் இருந்து மிகுதியான பொருட்களை கிராம மக்களுக்கு தொடர்ந்து விற்க தூண்டியது.
பின்னர் அவர் தனது வயலில் மா, பிளம், பொிய எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பல்வேறு மரங்களை நட்டார். இருப்பினும், இந்த முயற்சி உடனடியாக வெற்றி பெறவில்லை. பிராமிஜி எதிர்கொண்ட முதல் சவால் காட்டு குரங்குகளின் தாக்குதல். அறுவடையை பலமுறை அழித்துவிட்டது. இது பிராமிஜியைத் தடுக்கவில்லை. குரங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சேகாிக்கத் தொடங்கினார். மேலும் சிலவற்றை மீட்டு வீட்டு உபயோகத்திற்காக சட்னிகள் மற்றும் ஊறுகாய்களை உருவாக்கினாள். கடந்த மூன்று ஆண்டுகளாக இவரது பண்ணைக்கு குரங்குகள் வருவது குறைநந்துள்ளது.
1999 ல் அங்கன்வாடியில் உதவியாளர் பணி கிடைத்தது. புதிய வேலை இருந்த போதிலும், அவர் தனது துறைகளளில் தொடா;ந்து பணியாற்றினனயார் மற்றும் புதிய நுட்பங்களையும், முறைகளையும்; கற்றுக்கொண்டார். 2003 ஆம் ஆண்டில், வட்டார வேளாண்மைத் தொகுதி அதிகாரியால் மண்புழு உரம் தயாரிப்பில் பயிற்சிக்குத் தோ;ந்தெடுக்கப்பட்டார். பயிற்சிக்குப் பிறகு, மண் வளத்தை அதிகாிக்க தனது பண்ணையில் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர் 2019 ல், கிராமப்புற தொழிற்நுட்ப மேம்பாட்டு மையம் (ஆர். டி.டீ.சி) குழு அவருக்கு மற்ற விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் ஸ்ரீ சுபாஷ் பாலேகர்ஜியின், இயற்கை விவசாய முறை. தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் கொண்டு இயற்கை விவசாயக் கொள்கைகளைப் பயிற்சி செய்யத் தொடங்கினார். பசுவின் சாணம் மற்றும் கோமியத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எருமைச்சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தினார். அதிலும் நல்ல பலன்களைப் பெற்றார். தொற்று நோய்களின்போது, விளைபொருட்களை விற்பனை செய்வதில் அவர் அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. கிராம மக்கள் அவரது வீட்டிற்கு வந்து, நல்ல தரமான ஆர்கானிக் காய்கறிகளை சந்தை விலையை விட 3 மடங்கு கொடுத்து வாங்குவார்கள். வளங்களின் பற்றாக்குறையால் தேவை அதிகாித்தால், அவர் டர்னிப்ஸ் மற்றும் முள்ளங்கி இலைகளை விற்பனை செய்தார், இல்லையேனில் நிராகாிக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு பொிய ஏலக்காய் மற்றும் விரலி திணை கேழ்வரகு பயிரிட தொடங்கியுள்ளார். அவர் தனக்குச் சொந்தமான 2 எருமைகள் மற்றும் ஒரு பசுவிலிருந்து தயிர் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் தனது வருமான ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளார். மார்ச் மாதத்தில் ஆர்.டி.டீ.சி குழுவின் ஆதரவுடன் கொல்லைப்புற கோழி வளர்ப்பு திட்டத்தை அவர் தொடங்கினார்.
முடிவுரை
வாய்ப்பு கிடைத்தபோ, பெண் விவசாயிகள் வேளாண்மையியல் கொள்கைகளை உள்ளுணர்வுடன் நடைமுறைப்படுத்தினர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், பெண்கள் தங்கள் சொந்த உணவை வளர்ப்பதன் மூலம் தாங்கள் சந்தை சார்ந்திருப்பதை குறைக்க தேர்வு செய்தனர். அவர்கள் நிலையான விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கள் குடும்பம், பயிர்கள் மற்றும் மண் ஆகியவற்றின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினர். வேளாண் சூழலியல் அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இந்த பெண்கள் பாரம்பாிய அமைப்புடன் பணிபுரிந்தனர். ஆனால் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவைப் பயன்படுத்துவதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகலை வழங்கும்போது, உள்ளூர் சமூகங்களுக்கு பல்வேறு தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்த தேர்வு செய்தனர்.
இந்த பெண்கள் அவர்களின் சமூக நிலை அல்லது நிதி சிக்கல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. அட்டிஜி கடினமாக உழைத்து, குழந்தைகளுக்கு சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க, அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து அறிவு மற்றும் ஆதரவையும் பயன்படுத்திக் கொண்டார். அதேசமயம், பிரமிஜி, இயற்கை விவசாயத்தில் நடைமுறையில் உள்ள நடைமுறைகளைக் கடைபிடிப்பதைத் தாண்டி, புதிய முடிவுகளை உருவாக்கவும் முயற்சி செய்தார். இரு பெண்களும் தங்களின் சொந்த முயற்சிகள் மற்றும் புரிதலுடன் வேளாண் சூழலியல் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவதில் விதிவிலக்கான வெற்றியை வெளிப்படுத்தினர்.
Acknowledgements The support provided by Meena Devi- Community Resource Person (Himachal Pradesh), Rural Technology Development Centre (RTDC) is gratefully acknowledged. Chhavi Bathla Regional Coordinator (Himachal Pradesh) Watershed Support Services and Activities Network (WASSAN) E-mail: chhavi@wassan.org Sai Nikam Program Officer (Hyderabad) Organization- Watershed Support Services and Activities Network (WASSAN)
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 3



