பயிர்களின் ஆரோக்கியத்தை புரிந்து கொள்வது


தாவரத்தின் மரபியல் எதிர்ப்புத்திறனைக் காட்டிலும், சாியான நேரத்தில் பொருத்தமான ஊட்டச்சத்துக்களை, சாியான அளவில், அதற்கு தேவைப்படும் வடிவில் கொடுப்பது பயிரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. பயிரின் ஆரோக்கியத்தை தூண்டும் காரணிகளை ஒரு முழுவடிவத்தில் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.


மனிதர்களுக்கான ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான பயிர்களில் இருந்தே கிடைக்கிறது. நவீன வேளாண்மை, தாவர கலப்பு, வேளாண் இரசாயனங்களான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை உணவு தன்னிறைவுக்கு உதவி செய்துள்ளது. ஆனால், அதே வேளையில் அவை பொிய அளவில் உயிர்ச்சூழலுக்கு பாதிப்பையும், மனித ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பயிரிடப்பட்ட பயிர்கள் அநேக ஆரோக்கிய பிரச்சனைகளை உயிருள்ள மற்றும் உயிரற்ற வெவ்வேறு வகையான அழுத்தங்களான காலநிலை மாற்றம், சிறுபருவநிலை, மண் மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் தாவரத்தின் உயிர் வேதியியல் மாற்றங்களை சந்திக்கிறது.

நிலத்திற்கு மேலும், கீழும் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் தாவரங்களின் உயிர்வேதியியல் கலவைகள், பயிர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிப்பதை பற்றிய ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது.

மண் ஆரோக்கியமே முக்கியமானது
நல்ல மண் ஆரோக்கியமான சூழ்நிலை என்பது எங்கு நல்ல வடிகால் மற்றும் வேர்கள் எந்த புழுக்கமும் அடையாத வகையில் காற்றோட்டம் அதிகமாக உள்ளதோ, பயிரின் முழு வளர்ச்சி காலத்திற்கும், அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வேறுபடும் நிலையில் கொடுக்கப்படுவதும், சாதகமான வேதியியல் நிலையில் வேர்களின் இயக்கம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது பாதிக்காமலும் அளிப்பதும், மண்ணின் உயிரியல் ஊட்டச்சத்து கிடைப்பதற்கு ஆதரவாகவும், நுண்ணுயிர்கள் பிழைத்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் மண்ணின் இயற்கை காிமம் மற்றும் அதன் தட்பவெப்பநிலை இருக்கும் ஒரு நிலையாகும்.

வெறுமனே வழக்கமான முறையில் மண் பாிசோதனை மட்டும் மேற்கொண்டு மண்ணைப் பற்றி புரிந்து கொள்வது பயிர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு போதுமானது அல்ல. இப்போதும் கூட நாம் மண்ணின் ஆரோக்கியத்தை குறித்த பாிசோதனை செய்வதில்லை. எனவே, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

வேர்மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்கள் பெருக்கமானது, இந்த பூலோக சூழல் மண்டலத்தில் உள்ள மிகப்பொிய களஞ்சியமாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 20 விழுக்காடு ஒளிச்சேர்க்கைகள் மண்ணில் வெளிவிடும்போது அவை வேர் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவில் குறிப்பாக சர்க்கரைச் சத்து, அமினோ அமிலங்கள், பிளாவினாய்டுகள், அலிபாடிக் அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கும். அவை தாவரத்திற்கும், வேர்பகுதியில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகிறது. தேவைப்படும் அளவு பற்றாக்குறையில் இருந்து போதுமான அளவு இருக்கும்போது நோய்க்கிருமிகளின் செயல்பாடுகள் அதிகாிக்கிறது.

வேரில் இருந்து வெளியேறும் திரவங்களின் கலவை மற்றும் அளவை முடிவு செய்வதில் மண் சார்ந்த காரணிகளோடு, உயிரியல் காரணிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் வேர் மண்டலத்தினால் கவரப்பட்டு அமோனியம் நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்றுகிறது. பாஸ்பரஸ் பெரும்பாலான மண்களில் குறைவாகவே கரைவதால், இயற்கையான சூழல் மண்டலத்தில் ஊட்டச்சத்தை அடிக்கடி குறைத்துக் கொள்கிறது. மண்ணில் உள்ள பாக்டீரியா தாவரங்களுக்கு தேவைப்படும் பாஸ்பரஸை உருவாக்குவதற்கு தண்ணீரில் கரையக்கூடிய வகையில் மாற்றுவதற்கும், மண்ணில் நகர நிலையில் உள்ள ஊட்டச்சத்துக்களை நகர வைப்பதற்கும் மைக்கோரைசா பூஞ்சைகள் உதவுகிறது என்பதற்கு சில உதாரணங்களும் உள்ளன.

நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்துக்களை உள்ளிழுப்பதை மேம்படுத்தி வேர் பகுதியின் கட்டமைப்புகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை ஊக்குவிக்கின்றன. வாம் பாதிக்கப்பட்ட லவென்டுலா தாவரங்களின் வளர்ச்சியானது, வாம் பாதிக்கப்படாத லவென்டுலா தாவரங்களைவிட 8.5 மடங்கு அதிக வளர்ச்சியடைந்துள்ளது. மைக்கோரைசல் மேம்பட்ட வளர்ச்சியின் முதன்மைக் காரணம் ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக பாஸ்பரஸை அதிகாிப்பதாக தோன்றுகிறது. மண்ணின் அடக்குமுறையை அதிகாிப்பதன் மூலமும், நோய்க்கிருமிகளை அடக்குவதைக் குறைப்பதன் மூலமும், ஹோஸ்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகாிப்பதன் மூலமும், ரைசோஸ்பியரைக் கையாளுவதன் மூலம் பயிர் ஆரோக்கியத்தை வெற்றிகரமாக மேம்படுத்த முடியும். 2003 ஆம் ஆண்டில் டி போட் மற்றும் அவரது சக ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சைசோஸ்பியர் மண்ணில் நுண்ணுயிரியின் அதிகாித்த செயல்பாடு குறித்த ஆய்வில், இது இரும்புச்சத்துக்கான போட்டியை நேரடியாக அதிகாித்தது, கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்து மற்றும் அதன் மூலம் கார்னேக்ஷன் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றில், மண்ணால் பரவும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் புசோியம் வில்ட் போன்ற நோய்களை கட்டுப்படுத்தியது. ரைசோஸ்பியாில் இருக்கும் பி.ஜீ.பி.எப் (தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பூஞ்சை) மற்றும் பி.ஜி.பி.ஆர் (தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா) ஆகியவை, பூச்சி மற்றும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக தாவரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறனைக் கொண்டுள்ளன.

ஆய்வுகளில் இருந்து வெளிப்படுவது என்னவென்றால், தாவரங்கள் நுண்ணுயிர்களை தேர்வு செய்து கவர்கின்றன. அதன் மூலம், சில வகைகளின் பெருக்கும் அதிகாித்து, அவை பல்வேறு வகையான நுண்ணுயிர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

மைக்ரோ க்ளைமேட் பயிர்களின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
மைக்ரோக்ளைமேட் என்பது பயிருக்கு மேலே மற்றும் பயிர் விதானத்திற்குள், மேலாண்மை நடைமுறைகளால் பாதிக்கப்படக்கூடிய மண் வேர் மண்டலத்தில் உள்ள காலநிலையைக் குறிக்கிறது. சிறந்த பயிர் மைக்ரோக்ளைமேட் என்பது, பயிர்களுக்கு சாதகமாக வளரும் சூழலை வழங்கி, பயிர் உற்பத்தித்திறனை அதிகாிக்கச் செய்வதாகும். மூடாக்கு அசல் மண்ணில் புதிய மைக்ரோக்ளைமேட்டை உருவாக்குகிறது, சூரிய கதிர்வீச்சின் பரவலைக் குறைக்கிறது, மற்றும் மண்ணின் வெப்பநிலை, ஆவியாதல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு உதவுகிறது. மண்ணில் உள்ள உயிரியல் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு பயிர்நிலத்தின் மைக்ரோக்ளைமேட் மண் மற்றும் காற்றில் கிடைக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை, பனி மற்றும் உறைபனி இருப்பது, ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது. இது தாவர வளர்ச்சி மற்றும் முறைப்பு, மண் சுவாசம், மண்ணின் உயிரியல் வாழ்வின் வீரியம், ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் பூச்சிகள் மற்றம் நோய்கள் ஏற்படுவதை பாதிக்கும்.
மைக்ரோக்ளைமேட் மேலாண்மை என்பது பாதுகாக்கப்பட்ட சாகுடியில் நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஆனால் வயல் பயிர் சாகுபடியில் ஒரு சொற்ப அளவிற்கு மட்டுமே அறியப்பட்டுள்ளது. பயிர் ஆரோக்கியம் தொடர்பாக மைக்ரோக்ளைமேட் மிகவும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிர் ஆரோக்கியம் தொடர்பாக மைக்ரோக்ளைமேட் மேலாண்மை குறித்து போதுமான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை

தாவரத்தின் பாதுகாப்பு முறைகளை ஊட்டச்சத்துக்கள் தீர்மானிக்கின்றன
ஒரு தாவரத்தின் பொருத்தமான ஊட்டச்சத்து செறிவே, ஒரு பயிரின் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் உபாி ஊட்டச்சத்துக்கள், நன்மை பயக்கும் மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் பூச்சிகளை அழைப்பதற்கும் பொறுப்பாக உள்ளது. ஊட்டச்சத்துக்கள் ஒரு தாவரத்தின் பாதுகாப்புக்கான முதல் வரியாக செயல்படுகின்றன. ஒரு பயிரில் உள்ள ஊட்டச்சத்துக்களின் செறிவை மாற்றுவது தாவரங்களின் பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு முறையை நேரடியாக தூண்டுகின்றது.

ஊட்டச்சத்துக்கள் ஹோஸ் பயிரின் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் நிலையை நேரடியாக மாற்றியமைத்தல், ஊட்டச்சத்து அதிகாிப்பு, செல் சுவர் ஒழுங்கமைப்பு மற்றும் பலவற்றை மாற்றலாம். கனிம ஊட்டச்சத்துக்கள், காிம திருத்தங்கள், உழவு, விதைப்பு தேதி, பயிர் சுழற்சி, மூடாக்கு, கார அமிலத்தன்மை சாி செய்தல் போன்ற பல காரணிகள் தாவர நோய்களின் தீவிரத்தை பாதிக்கின்றன. இந்த காரணிகள், தாவரங்கள் மற்றும் நோய்க்கிருமிகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ரைசோக்டோனியா வகைகள், மற்றும் புசாரியம் வகைகள் மற்றும் கிளப் ரூட் நோய்களால் ஏற்படும் வேர் அழுகல் ஆகியவை மண்ணின் கார அமிலத்தன்மையை மாற்றுவதன் மூலம் எளிதாக நிர்வகிக்கலாம்.

தாவர பாதுகாப்பு முறையானது, சாலசிலிக் அமிலம் (எஸ் ஏ), ஜாஸ்மோனேட்ஸ் (ஜே ஏக்கள்) மற்றும் எத்திலின் போன்ற தாவர ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த ஹார்மோன்கள் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக தாவரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. நோய்க்கிருமிகளுக்கு எதிரான அமைப்பு ரீதியான எதிர்ப்பை அதிகாிப்பதில் சாலசிலிக் அமிலம் ஒரு பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பயோட்ரோபிக் மற்றும் ஹெமி-பயோட்ரோபிக் நோய்க்கிருமிகள், வாழும் திசுக்களை காலனித்துவப்படுதுகிறது. ஜாஸ்மோனேட் மற்றும் எத்திலீன் நெக்ரோட்ரோப்புளுக்கு எதிராக ஒரு பங்கை வகிக்கின்றன. மேலும், ஊட்ட்சத்துக்களைப் பெற இப்பூச்சிகள் விரைவாக தாவர செல்களை கொல்கின்றன.

உருளைக்கிழங்கின் லேட் ப்ளைட் நோக்கு எதிர்ப்பை அதிகாிக்க பொட்டாசியம் பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இது இலைகளில் பூஞ்ஞானக் கலவையான அர்ஜினினை அதிகாிக்கும்.
தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் பூச்சி பாதிப்புகள்
தாவரங்களை தின்று அழிக்கும் பூச்சிகளின் செயல்திறனை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று நைட்ரஜன். நைட்ரஜன் சில பூச்சிகளின் இனப்பெருக்கம், நீண்ட ஆயுள் மற்றும் ஒட்டுமொத்த உடற்திறன் ஆகியவற்றை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செயற்கை நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவதால் தாவர எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்டு, மிகவும் தீவிரமான பூச்சிகள் பயிர்சேதங்களை ஏற்படுத்துகிறது. தாவரங்களில் குறைந்த நைட்ரஜன் உள்ளடக்கங்கள் பூச்சிகளுக்கு எதிரான தாவரங்களின் எதிர்ப்பை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில் அதிக நைட்ரஜன் உள்ளடக்கம் தீவரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக எதிர்ப்பு சக்தி குறைகிறது. இருப்பினும், அதிக நைட்ரஜன் விகிதம் ஒரு இலைக்கு அதிகபட்சமான பெருக்கத்தை ஜாசிட், வெள்ளை ஈ, மற்றும் த்ரிப்ஸின் போன்றவற்றில் ஏற்படுத்துகிறது. அதிக நைட்ரஜன், பருத்தியில் ஏபிட் இனப்பெருக்கம் மற்றும் வெள்ளை ஈயின் விகிதத்தை அதிகாிக்கிறது. உதாரணமாக கடுகில் எபிட் தொற்று, நைட்ரஜனின் அளவை அதிகாிக்கிறது.

உயர் பாஸ்பரஸ் நிலை முதிர்ச்சியடைந்த ஏபிட்களின் (மேக்ரோசிபம் யூபோர்பியா) வளர்ச்சி நேரத்தை குறைத்தது. பாஸ்பரஸின் பயன்பாடு அவற்றின் தொகை அடர்த்தி மற்றும் நெற்று உறிஞ்சும் பிழைகள் மற்றும் எம்போவாஸகா டோலச்சி ஆகியவற்றின் சேதத்தை குறைத்ததாக சமீபத்திய தகவல்கள் தொிவிக்கின்றன.

பொட்டாசியம் உரம் ஏபிட்ஸ் (அபிஸ் கிளைசின்கள்), இலைச்சுருட்டு புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றுடன் எதிர்மறையாக தொடர்புடையது. பொட்டாசியம் ஊட்டச்சத்து, பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளுக்கு தாவரத்தின் கவர்ச்சியை மேம்படுத்துவதோடு அவற்றின் அடுத்தடுத்த வளர்ச்சி திறன் மற்றும் வளர்ச்சியிலும் ஆழமான விளைவைக் கொண்டுள்ளது.

பொட்டாசியம் குறைபாடு அதிக பூச்சி தாக்குதலுடன் தொடர்புபடுத்தாமல் இருக்கலாம். ஆனால், தாவரங்களின் மீது பொட்டாசியம் குறைபாட்டின் அடுத்தடுத்த தாக்கம், பூச்சிகள் உறிஞ்சுவதன் மூலம் தாவரங்களை எளிதில் தாக்க வைக்கிறது. உதாரணமாக, பொட்டாசியம் அளவின் அதிகாிப்பு அதிக பினோல்களைக் குவிப்பதற்கு வழிவகுத்தது. இது சில நெல் சாகுபடிகளில் பூச்சி எதிர்ப்பை அதிகாிக்க காரணமாக இருக்கலாம். மேலும், நெல் தாவரத்தில் பொட்டாசியம் தூண்டப்பட்ட மாற்றங்கள் பூச்சி – ஹோட் தாவரத்தின் தொடர்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

பயிர் ஆரோக்கியத்தை பாதிக்கும் உயிரற்ற சூழல் அழுத்தங்கள்
பயிர் ஆரோக்கியத்தை பாதிக்கும் உயிரற்ற சூழல் அழுத்தங்களில், உப்புத்தன்மை, வறட்சி, வெள்ளம், உலோக நச்சுத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை, நிழல், புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு, புகைப்பட தடுப்பு, காற்று மாசுபாடு, காற்று, ஆலங்கட்டி மழை போன்றவை அடங்கும். தாவரங்கள் மற்றும் அவற்றின் மீது உயிரற்ற சூழல் அழுத்தங்களின் விளைவு மேலாண்மை நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை:
பயிர் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது முழுமையான முறையில் கவனிக்கப்படவில்லை. ஊட்டச்சத்து, தாவர மற்றும் சுற்றுச்சூழலை சாியான முறையில் கையாளுவது, பூச்சி மற்றும் நோய்களைக் குறைக்கும். தாவரத்தின் மரபணு எதிர்ப்பை விட, சாியான நேரத்தில் சாியான ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துவது, கிடைக்கக்கூடிய வடிவத்தின் அடிப்படையில் சாியான டோஸில், தாவர ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில நேரங்களில் ரைசோஸ்பியா எதிர்வினை எதிர்மறையாகவும் இருக்கலாம். சில வேதியியல் சேர்மங்கள் நோய்க்கிருமிகளை ஈர்க்கின்றன. எனவே, ஊட்டச்சத்துக்களின் சாியான அளவைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஊட்டச்சத்துக்களுடன், பயிர் திருத்தங்களும் மேக்ரோக்ளைமேட்டை மேம்படுத்த உதவுவதோடு, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவு மூலமாகவும் செயல்படுகின்றன. மேலும், தாவரங்கள் அவற்றின் மரபணு வகைக்கு ஏற்ப ரைசோஸ்பியாில் உள்ள நுண்ணிய உயிரினங்களை ஆட்சேர்ப்பு செய்யும் திறன் கொண்டவை. ரைசோஸ்பியாில் அதிக நுண்ணுயிர்கள் அடர்த்தியை பராமாிப்பதில்தான் சவால் உள்ளது.

டி. எம், தியாகராஜன், எஸ். ராஜஸ்வரி, எல். ராமசேமே மற்றும் சி. பார்த்தீபன்


T M Thiyagarajan, S Rageshwari, L Ramazeame and C Partheeban
Faculty of Agricultural Sciences
SRM Institute of Science and Technology
SRM Nagar,
Kattankulathur - 603 203
Chengalpattu District,
Tamil Nadu.
E-mail: dean.agri@srmist.edu.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...