சூரிய ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் இந்த கர்நாடக விவசாயி
பொருளாதாரம் இல்லாமல் உயிர்ச்சூழல் பிழைத்திருக்கும், ஆனால் உயிர்ச்சூழல் இல்லாமல் பொருளாதாரம் பிழைத்திருக்க முடியாது. எம்.கே. கைலாக்ஷ் இந்த கடினமான வழியை கற்றிருக்கிறார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் டோட்டின்டுவாடி கிராமத்தை சேர்ந்த, வங்கி அதிகாரியாக இருந்து ஒரு விவசாயியாக மாறியவர், மாநிலத்தில் மிகவும் வறட்சியான பகுதிகளில் ஒன்றில், தனது 22 ஏக்கர் நிலத்தை ஒரு சிறிய காடாக மாற்றியுள்ளார். பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் வேளையில், இயற்கை வேளாண்மையில் மூர்த்தி செய்துவரும் பாிசோதனைகள், இந்த நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு முன்மாதிரியாக எழுந்து நிற்கிறது.
1984 ஆம் ஆண்டில் மூர்த்தி இரசாயன வேளாண்மையை கடைபிடிக்க ஆரம்பித்தார். நான்கு வருடங்களில் உயிரினப்பன்மயம் குறைந்து வருவதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை உணர துவங்கினார். மண்ணின் வளம் குறைய துவங்கியது மற்றும் தாவரங்கள் அதிகமான நீரையும், உரங்களையும் கேட்கத் துவங்கியது.
“பூச்சிகள் என்பவை இயற்கையில் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதை விவசாயிகள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அப்படியே விட்டுவிட்டால், பயிர்கள் அவைகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும். வெறுமனே பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை தௌிப்பதனால், பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் அவை வேலை செய்வது மாதிரி தோன்றும், ஆனால் தொடர்ந்து அவை பயன்படுத்தப்படும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். இதுதான் எனக்கு ஆரம்பத்தில் ஏற்பட்டது”, என்கிறார் மூர்த்தி. “எனது பண்ணையில் இருந்த பூச்சிகள், அனைத்து வகையாக பூச்சிக் கொல்லிகளுக்கும் எதிர்ப்பு சக்தியை வளர்ந்துக் கொண்டதால், தாவரங்கள் அதிக அளவு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, யூரியா மற்றும் நீரை கேட்கத் துவங்கின” என்கிறார் மூர்த்தி.
துவக்கம்
ஜப்பானைச் சேர்ந்த இயற்கை வேளாண்மையின் முன்னோடியான மசானோபு புக்குவோக்காவினால் கவரப்பட்டு, 1988 ஆம் ஆண்டு மூர்த்தி இயற்கை வேளாண்மைக்கு மாறினார். அதன்பிறகு 30 வருடங்கள் கடந்து விட்டது பின் மூர்த்தி இரசாயன உரங்களோ அல்லது பூச்சிக் கொல்லிகளோ பயன்படுத்தவில்லை. இன்றும் கூட அவர் உழுவதுமில்லை, களை எடுப்பதும் இல்லை என்பதை கடைபிடித்து வருகிறார். பயிர் சாகுபடிக்கு, இயற்கை உரங்களான பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தா போன்றவற்றை கூட நான் பயன்படுத்துவதில்லை. நான் ஒளிச்சோ;க்கையை மட்டும் பயன்படுத்துகிறேன் என கூறும் அவர், தனது கூற்றுக்கு ஆதாரமாக அவர் கடைபிடிக்கும் ஜீரோ இடுபொருள் பயன்பாட்டு வேளாண்மையை கூறுகிறார்.
அவரது பண்ணையில் தற்போது மொத்தம் 3069 மரங்கள் உள்ளன. இதில் பாக்கு, மா, வாழை, வால் பீன்ஸ், பப்பாளி மற்றும் அதிக அளவிலான மூலிகைகளும் அடங்கும்.
மூர்த்தி இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவில்லை என்றால், எப்படி அவர் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறார்? துவக்கப்பள்ளியில் நாம் படித்த அறிவியல், தாவரங்கள் தனக்கு தேவையான உணவையும், பூச்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. மேலும், இயற்கை எப்போதும் ஒரு உயிரினம் மட்டுமே இந்த உலகை ஆள்வதை அனுமதிப்பதில்லை” என பதிலளிக்கிறார் மூர்த்தி. பயிர்களின் பல்வகை தன்மை பயன்களை பற்றி விளக்குகையில், அவர் கூடுதலாக சொல்வது என்னவென்றால், நீங்கள் பல்வேறு வகையான காய்கறிகள், தாவரங்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை வளர்க்கும்போது, ஒவ்வொரு பயிரும் குறைவான பூச்சித்தாக்குதலுக்கே உள்ளாகும். ஏனென்றால், பூச்சிகள் பெருக்கத்தை தடுக்க இயற்கை எதிரிகள் அதிகமாக கொண்டிருக்கும் என்கிறார் மூர்த்தி. அவருடைய வாழ்வின் ஒரு கட்டத்தை பற்றி குறிப்பிடும்போது, சில வகை மரங்கள் வாழை சாகுபடிக்கு தீமை அளிக்கக்கூடியதாக இருந்ததையும், அந்த வகை மரங்களை கொல்வதற்கு “எதிரி மரங்களை” அறிமுகப்படுத்தி அதன் மூலம் வாழை சாகுபடி பிழைத்ததையும் குறிப்பிடுகிறார்.
அவரது வாழை தோட்டத்தில், வாழை கனோபி அதன் அடியில் உள்ள பகுதியை முழுவதும் மூடி, அதன் வாயிலாக மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பாதுகாத்து, அவைகள் வளர்வதற்கு உதவி புரிகின்றது. வாழைக்கு ஆதரவு தரும் பயிர்களில் இருந்து விழும் இயற்கை கழிவுப் பொருட்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. மேலும், மண்ணின் மேற்பரப்பானது மூடப்பட்டிருப்பதால், நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. இங்ஙனம், மண்ணில் ஈரப்பிடிப்புத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
இரசாயன உரங்களினால் ஏற்படும் தீய விளைவுகளையும், இயற்கை வேளாண்மைக்கு திரும்புவதினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு கொல்லேகல் தாலுக்காவுக்கு அருகில் இயற்கை வேளாண்மைக்கான ஒரு அகாடமியை மூர்த்தி உருவாக்கியுள்ளார். அவரும், போராசிரியர் எம். டீ. நஞ்சுண்டசாமியும் இணைந்து ஜீரோ இடுபொருள் வேளாண்மையை கர்நாடகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பரவலாக்குவதற்காகவும், மக்களுக்கு இயற்கை வேளாண்மை எப்படி பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் சிக்கல்களுக்கு எதிராக போராட உதவுகிறது என்பதையும், இயற்கை வேளாண்மை எப்படி மரபியல் பங்குகளை பாதுகாக்கிறது என்பதையும் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக பணி செய்து வருகின்றனர். இந்தியாவிலேயே இவர் ஒருவர் மட்டும்தான் அவரது பண்ணைக்கு அருகில் சூரிய ஆற்றலோடு உணவு பதப்படுத்தும் ஆலையை அமைத்துள்ளார்.
விஞ்ஞானிகளின் வாயிலிருந்து நேரடியாக வந்தவை:
சில வருடங்கள் கழித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து வல்லுநர்களை தனது பண்ணையில் உள்ள சாதக மற்றும் பாதக அம்சங்களை ஆய்வு செய்யுமாறு அழைத்திருந்தார். அவர்கள் ஆய்வு செய்ததில், அனைத்து தாவரங்களும் ஆரோக்கியமாகவும், எந்தவிதமான நோய் அறிகுறிகளோ, குறைபாடுகளுக்கான அறிகுறிகளோ தென்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் எம். என். ரமேஷ் அவர்கள், மூர்த்தியின் பண்ணையில் உள்ள தோட்டப்பயிர்கள் அனைத்தும் பூச்சித்தாக்குதல் இன்றி, நிறைய, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் பருப்புகளை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
கிட்டத்தட்ட, 28 தாவர குடும்பங்களை சேர்ந்த 138 வகையான மூலிகைகள் மற்றும் மரங்கள், காடுகளில் காணப்படும் ஒரு சூழ்நிலை மண்டலத்தை போல, சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி ஒன்றுக்கொன்று இணக்கமான சூழலில் வளர்ந்து வருகின்றன. அவரது பண்ணையை ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகளின் கருத்துப்படி, களைச் செடிகளினாலும், மரங்களில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் சருகுகளினாலும் நிரம்பிய இலை மட்கு ஒரு அடர்த்தியான அடுக்காக (9 இன்ச்) மண் மூடப்பட்டு, மூடாக்கானது மிகவும் சிறப்பாக செயல்பட்டு மண் அரிமானத்தை தடுத்துள்ளது. மேலும், களைகள் மற்றும் கீழே விழும் இலைச் சருகுகள் இயற்கையில் உள்ள மண்புழுக்கள், பூச்சிகள் மற்றும் காளான்களால் இயற்கையாக மறுசுழற்சி செய்யப்பட்டு மண்ணில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மழை நீரானது கீழே நன்கு இறங்கி வேர்கள் வரை சென்று நிலத்தடி நீர் பகுதி மறு உற்பத்தி செய்து கொள்ள உதவியுள்ளது. வல்லுநர்களின் மதிப்பின்படி இந்த பண்ணையில் உள்ள மர வகைகள் ஒவ்வொரு ஆண்டும் 1085 டன் அளவினான கார்பனை வரிசைப்படுத்தியுள்ளது. பெங்களுரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் முனைவர் என் நந்தினி (வாசகர் மற்றும் முதன்மை புலனாய்வாளர்) அவர்கள் மேற்கொண்ட மண்ஆய்வின்படி, அவரது நிலத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் அதிக அளவு என்.பி.கே (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து) அளவு இருப்பதும், போதுமான அளவு நுண்ணுட்ட சத்துக்களான நிக்கல், துத்தநாகம், இரும்பு, தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளதாக கண்டறியப்பட்டது.
அவரது பண்ணையில் உள்ள 300க்கும் மேற்பட்ட தோட்டக்கால் மரங்கள் மற்றும் டிம்பர் மரங்கள் மழைத்துளிகள் நேரடியாக மண்ணில் விழுவதை தடுப்பதனால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
ஆனால், அவரின் பண்ணை பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து எப்படி காக்கப்படுகிறது.?
மா மரம் பருவநிலை மாற்றத்தின் ஒரு அறிகுறியாகும்.பூப்பதில் இருந்து மகரந்தச்சேர்க்கை வரையிலும் மற்றும் பழம் முதிர்ச்சியடைவது வரை நடைபெறும் ஒவ்வொரு மாறுபாடும் முந்தைய காலங்களில் கணிக்கக்கூடியதாக இருந்தது. நமக்கு தொியும், மா மரங்கள் ஜனவரி மாதத்தின் நடுவில் பூக்க ஆரம்பிக்கும். மே மாதத்தில் நாம் அதனை அறுவடை செய்யலாம். ஆனால் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. மேலும், மா மரம் வளர்வதற்கு நடுத்தரமான தட்பவெட்பநிலை தேவைப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஒரு நீண்ட அதிக வெப்ப காலம் இருப்பதை நான் கவனிக்க முடிகிறது, இது பூக்களை எரித்துவிடுகிறது. பருவநிலை மாற்றம் விவசாயிகளை தங்களின் பழமரங்களின் வாழ்க்கை சுழற்சியை கணிக்க இயலாத வகையில் மிகவும் கடினமாக உள்ளது.
அவரோடு பேசும்போது, அவர் மா மரங்களைப் பற்றி மட்டும் கவலைப்படுபவராக இல்லாமல், மா மரங்களை நம்பி வாழும் பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்கள் என அனைத்தையும் குறித்து கவலைப்படுவராக புரிந்துகொள்ள முடியும். “இந்த மாற்றங்களுக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொள்ள இந்த சிறிய உயிரினங்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த உயிரினங்கள் தங்களின் வாழ்க்கை சுழற்சியில் முழுவதுமான மாற்றங்களை கொண்டுவந்து அவை பிழைக்கவும், அதன் அடுத்த தலைமுறைகள் வளர்வதற்கும் உதவுகின்றன” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
நாம் நமது ஆரோக்கியத்திற்கான உத்திரவாத்தை மிகச்சிறந்த மருத்துவமனைகளில் இருந்து பெற முடியாது, ஆனால் நமது உணவின் பல்வகைத்தன்மையில் இருந்து பெற முடியும். ஆகவே தான், இத்தனை வருடங்களாக, நான் மண்ணுக்கு அடியில் உள்ள நுண்ணுயிர்களையும், மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக்கூடிய அவற்றின் திறமைகளையும் படித்து வந்துள்ளேன்.
இயற்கை வேளாண்மைக்கு நம்மை மாற்றிக்கொள்வது இந்த காலக்கட்டத்தில் மிகவும் பொருத்தமாக உள்ளது, ஏனெனில் குறு விவசாயிகள் இவ்வளவு வருடங்களாக சந்தித்து வந்த தொடர் இழப்புகளை இனியும் சந்திக்காமல், ஆனால் லாபத்தை பெருக்கும் வகையில், தங்களின் இடுபொருட்கள் செலவினங்களை அதிக அளவில் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
This article was originally published in Down to Earth. You can find the link at: https:// www.downtoearth.org.in/news/agriculture/this karnataka-farmer-hasn-t-used-fertilisers pesticides-forthree-decades-now-57443
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 4



