டெக்னோசர்வ் போன்ற லாப நோக்கமில்லா நிறுவனங்கள் கூட்டுச் செயல்பாடுகள் மூலம் சிறு விவசாயிகளை தகவல் மற்றும் சந்தை வாய்ப்புகளோடு தொடர்புபடுத்தி அவர்களை மேம்படுத்தி கொள்வதில் பங்களிப்பு செய்து வருகிறது. அவர்களின் முயற்சியின் வழியாக, பீகாரில் உள்ள சிறு விவசாயிகள், விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களில் உறுப்பினர்களாகி, கூட்டாக சந்தைப்படுத்துவதால் உள்ள பேரம்பேசும் திறன் அதிகாித்திருப்பதை உணர்ந்துள்ளனர்.
புர்னியா மாவட்டம் பீகார் மாவட்டத்தில் உள்ள சோளம் அதிகம் விளையக்கூடிய பகுதியாகும். ராபி பருவத்தில் இங்குதான் தேசிய அளவில் அதிக அளவாக ஒரு ஏக்கருக்கு 4 டன் உற்பத்தி இருக்கும். சோளம் இந்த மாவட்டத்தில் சராசாியாக 1.39 ஏக்கர் நிலப்பரப்புடைய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதன்மையான பணப்பயிராக உள்ளது. இவ்விவசாயிகளுக்கு சந்தைக்கு விற்கக்கூடிய உபாி அளவு கிட்டத்தட்ட 90 விழுக்காடு இருப்பினும், அவர்கள் சந்தையை அணுகக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. (பண்ணை விளைப்பொருட்களை விற்கக்கூடிய பொிய சந்தை). மாற்றுத்தீர்வுகளுக்கான வாய்ப்பு இல்லாதபோது அவர்கள் தங்களின் பொருட்களை பல்வேறு இடைத்தரகர்கள் வழியாகவே விற்க வேண்டியுள்ளது.
இடைத்தரகர்கள் சங்கிலியானது, கிராம அளவில் சேகாிப்பு முகவர்கள் தொடங்கி, சிறு சந்தைகளில் உள்ள தரகர்களிடம் போய், அங்கிருந்து பொிய வணிகர்கள் வழியாக நாடு முழுக்க உள்ள நிறுவன ரீதியான வாங்குபவர்களிடம் இறுதியாக சென்றடைவதால் அச்சங்கிலி மிகவும் பொியதும் பரவலானதாகவும் உள்ளது. ஒவ்வொரு இடைநிலையிலும் கமிஷன் கொடுக்கப்பட வேண்டியுள்ளதால், விவசாயிக்கு கிடைக்கும் இறுதி விலையை மிகவும் குறைத்துவிடுகிறது. இதற்கும் கூடுதலாக, கிராமங்களில் பொருட்களை சேகாிக்கும் முகவர்கள் பின்பற்றும் மதிப்பீடு வழிமுறைகள் மற்றும் எடைபோடும்போது நடக்கும் தில்லுமுல்லுகள் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுக்கிறது. (விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் குவிண்டாலுக்கு சுமாராக ரூ. 60 முதல் ரூ. 80 வரை இழப்பு). வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தும் குழு சட்டத்தில் மாற்றங்கள், சந்தை உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தக ஒழுங்குமுறைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. தற்போது விலைகள் சில பொிய வர்த்தகர்களால் முடிவு செய்யப்பட்டும், தானியத்தின் தரத்தை ஈரப்பதம் காட்டும் கருவிகள் துணையின்றி, வெறும் பார்வை மற்றும் உணர்வாலே தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு சந்தை இடைநிலைகளை கொண்டு எடை மற்றும் மதிப்பீடுகளில் தில்லுமுல்லுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத வர்த்தக கூட்டமைப்பு என இந்த இணைப்பின் காரணமாக, விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசி விலையை மிகவும் குறைத்து விடுகிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பெண் விவசாயிகளை குழுக்களாக்குவது:
பீகாரில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் சந்திக்கும் மேற்கூறிய பிரச்சனைகளை மனதில் கொண்டு, கிராமப்புற பீகாரில் ஜீவிகா என்னும் ஏழ்மையை குறைப்பதற்காக உலக வங்கி உதவியுடன் ஆர்யன்யா வேளாண் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் ( ஏ.ஏ.பி.சி.எல்) என்னும் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்கப்பட்டது. ஜீவிகா (சமஸ்கிருத்தில் அதற்கு வாழ்வாதாரம் என்றும் பொருள்) திட்டம் பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் (பி.ஆர். எல்.பி.எஸ்) என்னும் பீகார் அரசின் தனி அமைப்பினால் நடைமுறைப்படுத்தபட்டது. பீகாரில் தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணியை பரப்பவதற்காக இந்த அமைப்பு மாநில கிராமப்புற வாழ்வாதார அமைப்பாக (எஸ். ஆர்.எல்.எம் ) நியமிக்கப்பட்டது.
ஏ.ஏ.பி.சி.எல் 2009 ஆம் ஆண்டு நவம்பாில் 2002 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, அதன் பதிவு அலுவலகம் புர்னியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் ஏ.ஏ.பி.சி.எல் அங்கீகார பங்கு மூலதனமாக ரூபாய் 5 லட்சமும் பெற்றிருந்து, அது 50000 பங்குகளை ஜீவிகா இலக்கு குடும்பங்களான சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ. 10 செலுத்தும் வகையில் துவங்கப்பட்டது. இந்த கம்பெனியில் பங்குதாரராக விரும்புபவர்கள் அடிப்படையில் மாவட்டத்தின் தாம்தஹா வட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டில் ஏ.ஏ.பி.சி.எல் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும், அதனுள் இருந்த பெரும்பாலான உற்பத்தியாளர் குழுக்கள் செயல்படாமல் இருந்ததால், அதுவும் இயக்கம் இல்லாமல் இருந்தது. பீகாரில் உள்ள பெரும்பான்மையான பெண் உற்பத்தியாளர் குழுக்கள் பெருவாரியாக சிறு மற்றும் குறு விவசாயிகளை பிரதிநிதிகளாக கொண்டிருந்தது. அவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை அவர்களாகவே நேரடியாக விற்பனை செய்யும் திறமை குறைவாகவும் அல்லது உற்பத்தி பொருட்களை பயிர்கள் பயிரிடாத பருவங்களில் தேக்கி வைத்து அதற்கான பிரீமியம் கொடுக்கும் திறமை குறைவாக இருந்தது. உற்பத்தி குழுக்களில் உள்ள மேலாண்மை திறன் பல்வேறு சந்தை வழிமுறைகள் மற்றும் பொருட்கள் வாங்குபவர்களிடம் பேரம் பேசும் திறன் குறைவான புரிதல் இருந்ததாலும், அது மிகப் பொிய இழப்பிற்கும் ஆபத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாக உறுப்பினர்கள் கூட்டாக பொருட்களை சேகாிப்பதிலும், அதனை சந்தைப்படுத்துவதிலும் உள்ள திறனை எப்போதும் உணர்ந்ததில்லை.
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜீவிகா, டெக்னோசர்வ் இந்தியாவோடு இணைந்து ஒரு தொழிற்நுட்ப உதவி திட்டத்தை பீகாரில் டிசம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு துவக்கியது. டெக்னோசர்வ் என்பது ஒரு வித்தியாசமான லாபம் நோக்கமில்லா அமைப்பு. அது ஏழை மக்களை தகவல் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுத்து இணைக்கும் பணியை செய்து வருகிறது. பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த திட்டத்தின் நோக்கமானது, ஜீவிகா குழுவிற்கு மதிப்பு கூட்டும் சங்கிலி வளர்ச்சியிலும், பீகாரில் உள்ள இரண்டு மாவட்டங்களில் உள்ள பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சந்தையை ஒட்டிய விவசாய உற்பத்தி நிறுவனங்களாக செயல்பட திறன் வளர்ப்பில் ஈடுபடுவதும், பீகாரில் உள்ள உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொழிற்நுட்ப உதவிகள் அளித்து, மாநிலத்தில் உற்பத்தியாளர் குழுக்கள் சிறப்பாக செயல்பட பல வருடங்களுக்கு ஒரு நல்ல பாதை அமைத்து கொடுத்து அவர்களை பலப்படுத்துவதாகும். இந்த நோக்கங்களை சாதிக்க, டெக்டோசர்வ் புர்னியா மாவட்டத்தில் ஒரு திட்டத்தை அதிக விலையை விவசாயிகள் கூட்டு சேகாிப்பு மற்றும் விற்பனை மூலம் செயல்முறைபடுத்தி காட்டவும், பொருட்கள் மாற்றிக்கொள்ளும் தளங்களில் தேசிய அளவில் ஈடுபடும் உற்பத்தி பொருட்களை வாங்குவோரிடம் ஒரே மாதிரியான தகவல்கள் போய் சேருவதை குறைப்பதாகும்.
புர்னியாவில் உள்ள உற்பத்தியாளர்கள் குழுக்களில் நடைபெற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களின் பயிர் விவரம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களில் சவால்கள் சந்திக்கப்பட்டதால், டெக்னோசர்வ இந்தியா ஏ.ஏ.பி.சி.எல்லுக்கு தொகுத்து திரட்டல் மற்றும் சந்தையை இணைக்கும் வியாபார மாதிரியை நடைமுறைப்படுத்த பாிந்துரைத்தது. இந்த மாதிரி பல அடுக்குகளில் காணப்படும் இடைநிலைகளை ஒழித்து நல்ல விலை உணர்தலை உறுதிப்படுத்தும் விவசாயிகள் பருவமல்லாத காலங்களில் விலையை அதிகாித்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்தது. இந்த திட்டம் மேலும் உற்பத்தியாளர் நிறுவனம் ஆபத்துக்களை குறைக்க தனது பொருட்களை மின்னணு வர்த்தக முறையில் விற்க பாிந்துரைத்தது.
ஜீவிகாவின் நிறுவன செயல்முறையை பயன்படுத்தி, ஏ.ஏ.பி.சி.எல் கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாயை வேலைக்கான மூலதனமாக அதன் உள் ஆதாரங்கள் வழியாக – உற்பத்தியாளர் (இடைவெளி நிதி) மற்றும் குழுக்கள் அளவிலான கூட்டமைப்புகள் (0.6 விழுக்காடு கடன் /மாதத்திற்கு) சோளம் கொள்முதல் செய்து சந்தைப்படுத்துவதற்காக வாங்கியது. ஏ.ஏ.பி.சி.எல் உறுப்பினர்கள் சோளத்தில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்திலும் – எடைபோடுதல் மற்றும் தரம் பிரிக்கும் முறைகளிலும் (மின்னணு எடை போடும் இயந்திரங்கள் மற்றும் டிஐிட்டல் முறையில் ஈரப்பத்தை அளவிடும் மீட்டர்கள் ) பயிற்சி அளித்து, பொருட்கள் சேகாிப்பிலும் மற்றும் விற்பனையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தியது. இது இந்திய முழுவதும் உள்ள முக்கியமான வாங்கும் அமைப்புகளை அடையும் பொருட்டு மின்னணு வர்த்தக நடைமுறை ஒன்று (என்.சி.டீ.இ.எக்ஸ் – மின்னணு சந்தை லிமிடெட்) பயன்படுத்தப்பட்டது. விவசாயிகளின் விளைபொருட்கள் என்.இ.எம்.எல் மூலம் சான்றளிக்கப்பட்ட கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு அதன்பின் தரப் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நிறுவனரீதியாக வாங்குபவர்களுக்கு ஸ்பாட் சந்தை (என்.இ.எம்.எல்) மற்றும் எதிர்கால சந்தை என இரண்டிலும் வருமானத்தை அதிகாிப்பதற்காக செய்யப்பட்டது. இந்த செயல்முறைகளினால், இந்த உற்பத்தியாளர் நிறுவனம் என்.சி.டீ.இ.எக்ஸ் நடைமுறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு சோளம் வர்த்தகத்தில் ஈடுபட்ட முதல் இந்திய நிறுவனமாக அமைந்தது.
2015 ஆம் ஆண்டில் ஏ.ஏ.பி.சி.எல் லில் இருந்து 300 பெண்கள் ஆன்லைன் மூலமாக சோளம் விற்றது, 2016 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 818 பெண்களாக வளர்ந்தது. கடந்த இரண்டு சோளம் பயிரிடப்பட்ட பருவங்களில் இந்த உற்பத்தியாளர் நிறுவனத்தின் முக்கிய விற்பனை விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயன்களோடு கூடுதலாக, உற்பத்தியாளர் கம்பெனி புதிப்பிக்கப்பட்டது உறுப்பினர்கள் மத்தியில், வியாபாரம் எப்படி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், அதனால் உள்ளூர் சேகாிப்பு முகவர்களிடம் தங்களின் பொருட்களுக்கு நல்ல வேலையை கேட்க தொடங்கினர். மேலும் அவர்கள் தங்களிடம் பொருட்களை சேகாிக்கும் முகவர்களிடம் சீரமைக்கப்படாமல் உள்ள எடைபோடும் கருவிகளையும், கை கொண்டு தரம் பிரிக்கும் முறைகளில் இருந்து தொழிற்சாலை தரத்திற்கான உபகரணங்கள் மற்றும் செயல்முறைகளுக்கு மாற்ற அழுத்தம் கொடுத்தனர். மின்னணு வர்த்தக செயல்முறைகளை பயன்படுத்தியதன் காரணமாக அது உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தேசிய அளவில் பொருட்களை வாங்குபவர்களோடு தொடர்பை ஏற்படுத்தவும், பணபட்டுவாடாவில் உள்ள தாமத மற்றும் நம்பிக்கை மீறுதல்களை தடுக்கவும் உதவியாக அமைந்தது. மேலும், பொருட்கள் விற்கப்பட்ட 3-5 நாட்களில் உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கப்படுவதால், அவர்களும் குறித்த நேரத்தில் அவர்கள் வாங்கிய பயிர் கடன் மற்றும் மற்ற கடன்களை திருப்பி செலுத்துவதை உறுதிப்படுத்தியது.
உற்பத்தி நிறுவனமானது சோளத்தை ஜீவிகா சோளம் என்ற பிராண்ட் பெயாில் அதன் பொருளை உயர்ந்த தரத்திலும் விற்பனை செய்ததால் அதன் பொருட்களை நிறைய பேர் வாங்குவதற்காக ஈர்க்க முடிந்தது. ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவிலும் ஈரப்பதத்தை அளவிடும் மீட்டர் இருந்ததால், அது உறுப்பினர்கள் தங்களின் சோளத்தை விற்பனைக்கு முன் உலர வைத்து, தூய்மைப்படுத்தி முதல் தர சோளமாக விற்க முடிந்தது.
முஹாப்பூருக்கு விரிவாக்கம்:
சோளத்தோடு கூடுதலாக, மே 2016 ஆம் ஆண்டு ஜீவிகா டெக்னோசர்வ் உதவியுடன் இடைத்தரகர்களை துண்டித்து லிட்சி மற்றும் காய்கறியில் சந்தைத் தொடர்பை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் புதிய முயற்சியை தொடங்கியது. இதை செய்வதற்கு, சமர்ப்பன் ஜீவிகா மகிளா கிசான் உற்பத்தியாளர் நிறுவனத்தை (எஸ்.ஐ.எம்.கே.பி.சி.எல்) பலப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் துவக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பருவத்தில் எஸ்.ஐ.எம்.கே.பி.சி.எல் 6120 கிலோ லிட்சியை கொள்முதல் செய்வது. பெங்களுர், அகமதாபாத், மற்றும் மும்பை போன்ற அதிக தூரங்களில் உள்ள சந்தைக்கு என்.இ.எம்.எல் முறையில் நான்காயிரம் கிலோ விற்கப்பட்டது. உற்பத்தியாளர் நிறுவனம் இதன் மூலம் இந்திய ரூபாயில் 5 லட்சம் நிகர வருமானத்தை லிட்சி வியாபாரத்தை 8 விழுக்காடு லாபத்துடன் சம்பாதித்தது. முதல் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், அதே இடத்தில் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் ஊக்கத்தொகை விலையாக 16 விழுக்காடும், ஒப்பந்த விவசாயிகள் நல்ல விலையோடு , பணப்பட்டுவாடாவும் உறுதிப்படுத்தப்பட்டது.
காய்கறிகள் சந்தை தொடர்பில் 5 மெட்ரிக் டன் (இந்தியா ரூபாயில் 1.5 லட்சம்) காய்கறிகள் விவசாயிகளால் சக்ரா ப்ளாக்கிலிருந்து பொிய சந்தைகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனை சங்கிலி வழியே 1 மாதத்தில் விற்கப்பட்டது. (ஆகஸ்டு 2016)
முன்னோக்கிய பாதை:
முன்னோக்கிய வழியில் நகரும் பொருட்டு, ஏ.ஏ.பி.சி.எல் சோளத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்ற பொருட்களான உருளைக்கிழங்கு மற்றும் வாழை போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அதே வேளையில் எஸ்.ஐ.எம்.கே.பி.சி.எல் லிட்சி மற்றும் காய்கறி மதிப்பு சங்கிலியை விரிவுபடுத்தி, பருப்பு வர்த்தகத்திலும் முயற்சிக்கிறது. இரண்டு நிறுவனங்களும் உறுப்பினர்கள் மத்தியில் அதிக தேவை இருப்பதால் இடுபொருட்கள் (உரம்) அளிக்கும் வியாபாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏ.ஏ.பி.சி.எல் தனது பங்குதாரர்களின் எண்ணிக்கையை இன்னும் 3 வருடத்தில் 10000 விவசாயிகளை சேர்த்து அதன் மொத்த விற்றுமுதலை 100 கோடியாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டு விற்பனை முறை வழியாக பேரம் பேசும் திறனின் சக்தியை அறிந்துள்ளனர். உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினராக அதில் பங்கு வகிப்பதை பெருமையாக கருதி, அதனை இன்னும் விரிவுபடுத்தும் வேலையை ஏற்கனவே துவங்கிவிட்டனர்.
சோளம் கொள்முதல் – சிறப்பம்சங்கள்
2014-15 பருவம் | 2015-16 பருவம் |
| 1014 மெட்ரிக் டன் சோளம் கொள்முதல் செய்யப்பட்டது | 3064 மெட்ரிக் டன் சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. |
| ஏ.ஏ.பி.சி.எல் வருமானம் 1.28 கோடி, நிகர லாபம் 0.09 கோடி | உற்பத்தியாளர் நிறுவனத்தின் மொத்த வருமானம் – ஜூலை வரை 75 லட்சம் |
| விவசாயிகளுக்கு 11.46 விழுக்காடு | ஊக்கத்தொகை வருமானம் உற்பத்தியாளர் குழுக்களின் உறுப்பினர்கள் ஏ.ஏ.பி.சி.எல் -க்கு சோளம் விற்றதில் சராசாி விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 13.6 விழுக்காடு அதிகம் |
| 70 விழுக்காடு லாபம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை போனஸ் ஆக விநியோகிக்கப்பட்டது. | 27 உற்பத்தியாளர் குழுக்களின் 818 உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு ரூ. 3.49 கோடி மாற்றப்பட்டது. |
| குவிண்டாலுக்கு ரூ. 109 வீதம் ஊக்கத்தொகையின் வாயிலாக கூடுதல் வருவாயாக கிடைத்தது. | ஏ.ஏ.பி.சி.எல் -க்கு சோளம் விற்பனையில் உறுப்பினர்களின் பங்கேற்பு 138 விழுக்காடு அதிகாித்தது. |
ஒரு பயனாளி பேசுகிறார்
”இப்போதிலிருந்து நான் எனது விளைபொருட்களை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கே விற்பேன்”
ஷகிலா கட்டூம் புர்னியா மாவட்டத்தின் கிழக்கு கிராமமான குக்ரனின் வசித்து வருகிறார். 40 வயது நிரம்பிய அவர் 11 பேர்கள் அடங்கிய கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு உள்ள 8 ஏக்கர் நிலத்தில் இருந்து செய்யும் வேளாண்மையில் இருந்து தான் வருமானம் கிடைக்கிறது. 95 விழுக்காடு நிலத்தில் சோளம் பயிரிடப்படப்படுகிறது. அதே வேளையில் கோதுமையும் வீட்டு உபயோகத்திற்காக பயிரிடப்படுகிறது. காரிப் பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. அதில் 50 விழுக்காடு உள்ளூர் சந்தையில் விற்கப்படுகிறது. மே மாதத்தில் புயல் காற்று வெகுவாக தாக்கிய போதிலும், அவரது சோள உற்பத்தி இந்த வருடம் 27.7 மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்த வருடம் வரை தனது சோளத்தை உள்ளூரில் உள்ள வியாபாரியான திரு. முஷ்டாக் என்பவரிடம் தனது வீட்டிற்கே வந்து கையால் தர நிர்ணயம் பார்த்து அதன் அடிப்படையில் அவர் கேட்கிற விலைக்கு விற்று வந்தார். கையால் தயாரிக்கப்பட்ட எடைபோடும் இயந்திரத்தால் இடைநிலை வியாபாரிகள் எடைபோட்டு ஈரப்பத இழப்பை காரணம் காட்டி எப்போதும் 1 குவிண்டாலுக்கு 7-8 கிலோ வரை குறைத்து தான் எடுப்பார்கள். மற்றவர்களைப் போலவே, அவரிடம் பயிர் விதைப்பதற்கு கடன் பெற்றதால், ஷகிலாவும் திரு முஷ்டாக்கிடம் எதுவும் பேரம் பேச முடியாது.
மார்ச் 2015 முதல் வாரத்தில், ஷகிலா தான் உறுப்பினராகிய அன்னபூரணா உற்பத்தியாளர் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இந்த பருவத்தில் உற்பத்தியாளர் குழு சோளம் கொள்முதல் செய்து ஏ.ஏ.பி.சி.எல் -க்கு விற்க திட்டமிட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. ஜீவிகா மற்றும் டெக்னோசர்வ சேவைக்கு நடத்திய அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு அதன் வாயிலாக அனைத்து நடைமுறைகளையும் அறிந்து குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்த தகவல்களை கொண்டு போய் சேர்த்தார்.
திட்டத்தின் குழுவினர் பாிந்துரைத்திருந்தபடி அவரும் சோளம் அறுவடைக்கு பிந்தைய தொழிற்நுட்பங்களை கடைபிடிப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். அதன் விளைவாக அவரது சோளம் முதல் தர சோளமாக 100 விழுக்காடு உற்பத்தியாளர் குழுவிடம் விற்கப்பட்டது. அவர் தானே தன்னுடைய தானியத்தில் உள்ள ஈரப்பத அளவை ஈரப்பத அளவிடும் கருவியை பயன்படுத்தினார். பொருட்களின் எடையானது மிகத் துல்லியமாக மின்னணு எடைபோடும் கருவியால் அளவிடப்பட்டு, அவருக்கான பணம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்ட 3 நாளிலே மாற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையான தன்மை அவரை தனது 100 விழுக்காடு பொருளையும் உற்பத்தியாளர் குழுவிற்கே விற்க முடிவெடுக்க வைத்தது. ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1003 சராசாியாக சம்பாதிக்க முடிந்தது. இது முஷ்டாக் அவரிடம் விற்றதை காட்டிலும் 6 விழுக்காடு அதிகம். உற்பத்தியாளர் குழுவின் பங்குதாரராக இருப்பதால் ஆண்டின் முடிவில் உற்பத்தியார் குழு லாபம் ஈட்டும் பட்சத்தில் அதற்கான ஊக்கத்தொகை போனஸையும் சேர்த்து 11.3 விழுக்காடு அதிக விலையை அவர் பெறுவார்.
”எனது வாழ்க்கையில் எங்கள் வீட்டிற்கே வந்து இவ்வளவு வெளிப்படைதன்மையோடு சோளம் கொள்முதல் செய்யப்படுவதை நான் பார்க்கிறேன். நான் மட்டுமல்ல, உற்பத்தியாளர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இப்போதில் இருந்து சோளத்தை உற்பத்தியாளர் குழுவிடம் விற்போம்”. – ஷகிலா கட்டூம், உறுப்பினர்;, அன்னபூரனா உற்பத்தியாளர் குழு, ஏப்ரல் 25, 2015
தேபரஞ்சன் புஐஹாி மற்றும் ஆர்த்தி தயால்
Debaranjan Pujahari Associate Practice Leader Aarti Dayal Manager, Communications and New ProgramDevelopment TechnoServe India B1 - 201, Centre Point, Opposite Bawla Masjid 243A N M Joshi Marg, Lower Parel (E) Mumbai - 400 013
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4



