வயல் வெளிப் பள்ளி – பண்ணையின் அறிவை வளர்த்தல்


விவசாயிகள் மற்றும் ஆதார வல்லுநர்கள் பரஸ்பரம் பயில்வதற்கான மேடையாக, விவசாய வயல் வெளிப் பள்ளி அமைகிறது. விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் பராம்பாிய அறிவை புதுப்பித்து, நிலைக்க செய்வதற்கான வாய்ப்பை அனுபவிக்கும் அதே சமயத்தில் நவீன அறிவியல் மூலம் முன்னேற்றங்கள் செய்யப்படுகிறது.


இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் தென் மாவட்டங்கள், பெரும்பாலும், சராசாியாக 1200- 1400 மி.மீ வருடாந்திர மழையளவை கொண்டது. இது மலைப்பகுதியில் உள்ள மானாவாரி நிலமாகும். பழங்குடியின சமூகங்கள், இந்தப் பகுதியில் வன அடிப்படை வாழ்வாதாரங்கள் பாரம்பாிய சிறுதானியங்கள், பயறு வகைகள், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் ஆகியவற்றை மாற்று சாகுபடி முறையில் இணைத்து பின்பற்றி வருகிறது.ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வணிக காரணங்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கபட்டதனால், இந்த சமூகங்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. மாறிவரும் மழை காலங்கள், தொடர்ந்து செய்யப்படும் மாற்று சாகுபடியும் இணைந்து பரவலாக மண் அரிமானத்தையும், கீழ் நிலங்களில் உப்பு படிமண் சேர்வதும் அதிகாித்துள்ளது. அதிகளவு இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் பயன்படுத்தியதன் விளைவாக, மண்ணின் வளம் குறைந்ததோடு சாகுபடி செலவும் அதிகாித்தது. விவசாயிகள், குறிப்பாக பயிர் இழப்பு ஏற்படும்போது, அவர்கள் கடன்பட்டவர்கள் என்ற கொடூர வட்டத்திற்குள் வந்துவிடுகின்றனர். இந்த நிலை இன்னும் மோசமடையும் வகையில் பெரும்பாலான வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலம் இந்தப் பகுதியில் உள்ள உயிர் பயிர்களைவிட அரசால் ஊக்கபடுத்தப்படும் பணப்பயிர்களையே சாகுபடி செய்யப்படுகிறது. உயிர் பயிர்களால் உயரும் உள்ளூர் பொருளாதாரம், சமூகத்தின் உணவு மற்றும் சத்துக்கள் உத்திரவாதத்தை உறுதி செய்வதை அரசால் உதாசினம் செய்யப்படுகிறது.
ஒட்டு இரக விதைகள் மற்றும் தனிப் பயிர் சாகுபடி முறை அதிகம் பயன்படுத்துவதால், சாகுபடி மற்றும் விதை ஆதாரங்கள் குறித்த பாரம்பாிய அறிவு தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

ஒரு பயணம்
ஒடிசாவில் வாழும் பழங்குடியின மற்றும் இதர நலிவடைந்த சமூகங்களின் வளாச்சிக்காக பொறுப்பேற்ற அக்ரகாமி என்ற அடிதட்டு நிறுவனம், வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகள் மூலம் சமூகங்களின் வாழ்வாதாரம், உணவு மற்றும் சத்துக்கள் உத்திரவாதத்தை உறுதி செய்வது மற்றும் உயிர் பல்வகைமையை பாதுகாக்கவும் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் அறிவை மேம்படுத்தும் முறையான விவசாய வயல்வெளிப் பள்ளி மூலம் காசீபூர் மற்றும் தமைல் ராம்பூர் ஆகிய இடங்களை சேர்ந்த இரண்டு வட்டங்களில் வசிக்கும் உள்ளூர் சமூகங்களுடன் பணிசெய்து வருகிறது.
விவசாயிகளுடன் பலமுறை ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை தேர்வு செய்து கலந்துரையாடப்பட்டது. வெற்றியடைந்த வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு குறும்படங்கள் மற்றும் கல்விச் சுற்றுலா மூலம் கிடைத்த முதல் நிலை பண்ணை அனுபவங்கள், நெருக்கமாக கலந்துரையாடுவதற்கும், விவசாயிகள் மத்தியில் மாற்று கலாச்சார கற்றலை அதிகாிக்கவும் வாய்ப்பளிக்கிறது. இந்த நிகழ்வுகள் தகவல் பாிமாற்றத்தை அதிகாிக்கிறது, பாரம்பாிய விதைகள், பண்ணை சாகுபடி முறைகள், பல்வகை உணவுகள் மற்றும் அதன் கலாச்சார பழக்கங்கள் குறித்த விவாதங்களுக்கு வித்திடுகிறது.

பண்ணை பள்ளிகளில் சமமாக உருவாகும் அறிவு
கிராம அளவில் துவக்கப்படும் விவசாயிகள் வயல் வெளிப் பள்ளி அறிவு வளர்ச்சி மற்றும் வேளாண் உயிர்ச் சூழல் குறித்து பாிமாறிக் கொள்வதற்கு அருகாமையில் உள்ள 4-7 சக கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி உள்ளூருக்கு உகந்த தீர்வுகளை காணுவதற்கு உகந்த மேடையை அளிக்கிறது. மண், தண்ணீர் மற்றும் சத்து மேலாண்மைக்கான பாரம்பாிய முறை, விதை இரகங்கள், பயிர்ச் சாகுபடி, பூச்சி கட்டுபாடு, புல் மற்றும் தீவன மேலாண்மை ஆகியவைகள் குறித்து செய்முறை பயிற்சி மூலம் அவர்கள் கற்கின்ற அதேசமயத்தில் உயிர் பல்வகைமையும் பாதுகாக்கப்படுகின்றது.
விவசாயிகளுடன் கலந்துரையாடுவது மூலம், பல பாரம்பாிய தொழில்நுட்பங்கள் ஆவணப்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வயல் வெளிப்பள்ளிகளில் விவசாயிகளைக் கொண்டு பல பாிசோதனைகள் செய்வதன் மூலம், இவைகள் மதிப்பிடப்படுகிறது. இந்த முடிவுகளை கண்டு விவசாயிகள் தனது வயல்களில் சில மாற்றங்களுடன் பாரம்பாிய தொழில்நுட்பங்களை பின்பற்ற துவங்கினர். உதாரணத்திற்கு, வேம்பு இலைகளைக் கொண்டு தானியங்களுடன் கலந்து சேமிக்கப்படும் பாரம்பாிய முறையை கர்நாஜ் மற்றும் அமாரி ஆகிய இலைகளை, பூஞ்சானம் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாத்து, சிறந்த மற்றும் நீண்ட காலத்திற்கு சேமிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விவசாய வயல் வெளிப் பள்ளியில் மாற்றம் செய்து கற்றுத்தரப்படுகிறது. தகவல் பாிமாற்றத்தின் முழுமையான கடினமான வலை படம் 1 இல் வெளிப்படுகிறது. இங்கு கற்றல் என்பது பல திசைகளுக்கு செல்லும் தகவல் மற்றும் அறிவாகும்.

வயது அதிகமுடைய இரகங்களை மீட்டெடுக்கும் அழுத்ததின் தேவையை உணர்ந்து, தேர்வு செய்யப்பட்ட பயிர்களான நெல் சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு விவசாயிகள் களப் பாிசோதனைகள் மேற்கொள்கின்றனர். விவசாயிகள், அழிவின் விளிம்பில் உள்ள பல இரகங்களை விதை பெருக்கம் செய்வதற்கு ஈடுபட்டுள்ளனர். பாிசோதனைகளுக்கு முக்கிய இடத்தை தேர்வு செய்வதன் மூலமும், உயிரியல் வரை படத்தை பயன்படுத்தியும், முக்கிய பண்புகளைக் கொண்ட வரிசையை தேர்ந்தெடுத்தும் செய்யப்படுகிறது.

விவசாய விழாவின்போது வேளாண் – உயிர்ச்சூழல் அனுபவங்களை பாிமாறிக்கொள்ளும் அறிவு, சில முக்கிய வகுப்புகளை சேர்ந்த விவசாயிகளை கவலையுற செய்யும் பல பிரச்சனைகளை முறையாக ஆய்வு செய்வதற்கு உட்படுத்தப்படுகிறது. இந்த அறிவு பாிமாற்றம், விஞ்ஞானிகளுக்கு, விவசாயிகளின் வெற்றி மற்றும் தோல்விகளை புரிவதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் தற்போது கிடைக்கும் உள்ளூர் ஆதாரங்களை, விவசாயிகளின் திறன் மற்றும் அவர்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு களப் பாிசோதனைகளில் மாற்றம் செய்தனர். 180 களப் பாிசோதனைகளில், மேட்டு நிலங்களில் பல்வேறு பாரம்பாிய இரகங்களான மட்டிதான், போதிகால், பிரதான், டிப்பதான் ஆகியவற்றில், மட்டிதான் இரகம் அதிக மகசூல், குறுகிய கால இரகம், பூச்சி மற்றும் நோய்கள் எதிர்ப்புத் திறன் கொண்ட காரணிகளில் உயர்ந்து நிற்கிறது. மேலும் துவரையடன் இதனை இணைத்து சாகுபடி செய்வதால் மற்ற இணைப்புப் பயிர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. காய்கறி கலப்பு சாகுபடியில், கிழங்கு வகைகளுடன் பயறு வகைகளை கலந்து பயிரிடுவது மற்றதைவிட உயர்ந்து காணப்படுவதை விவசாயிகள் கண்டனர். மக்காச் சோளம் மற்றும் பயறுவகைகள் இணைத்ததுடன், இருக்கும் ஈரப்பதத்துடன் இரண்டாவது பயிராக கடுகை பயிரிடுவது வெற்றிடைந்துள்ளது. களப் பாிசோதனைகளில் விவசாயிகளை ஈடுபடுத்துவது, உயர்ந்த இரகங்களை சாகுபடி செய்வது மற்றும் கலப்புப்பயிர் சாகுபடி வெற்றியை பின்பற்றி மற்ற விவசாயிகளை ஈர்க்கும் முறை விஞ்ஞானிகளும் கற்றுக்கொண்டனர்.

விதை சேமிப்பில், பெண்கள் சிறந்த அறிவை பெற்றிருப்பதால் 15 கிராமங்களிலும் தானிய மற்றும் விதையளவை முடிவு செய்து, சேமிக்கப்படும் இரகங்களை தேர்வு செய்வதன் விளைவாக நெல், பயறு வகைகள், சிறு தானியங்கள், கிழங்கு வகைகள் மற்றும் காய்கறி இரகங்களை பாதுகாக்கப்படும் அனைத்து பணிகளும் தானிய மற்றும் விதை வங்கிகளில் பெண்களால் மேலாண்மை செய்யப்படுகிறது. தாவர இனப்பெருக்கம் ஆராய்ச்சி மையத்துடன் தானிய மற்றும் விதை வங்கிகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கான புதிய கற்றல்கள்
தனிப் பயிர் சாகுபடியில் அதிக உணவு கிடைப்பதாலும், குறைந்த அல்லது இயற்கை எதிரிகள் இல்லாமல் இருப்பதாலும், பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குகிறது என்று விவசாயிகள் கற்றுகொண்டனர். பயிர் பல்வகைமை குறித்தும், பூச்சி தாக்குதலை தடுக்கும் சில குறிப்பட்ட பயிர்களை சாகுபடியில் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை கற்றுகொண்டுள்ளனர். டாக்டர். டிபேஷ் பிரசாத் பாடி, அக்ரகாமி நிறுவனத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு தோட்டக்கலை நிபுணர். அவரை பொருத்தவரையில், வளர்ப்பு மற்றும் காட்டு புற்களை பயன்படுத்துவதால் முக்கிய பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை புற்கள் ஈர்த்துகொண்டு பாதுகாக்கும். டெஸ்மோடியம் போன்ற செடிகளை மக்காச் சோளம்/ சோளப்பயிர்களின் வரிசைக்கு மத்தியில் விதைத்தால், தண்டு துளைப்பான் விரட்டும் ஒருவித இரசாயன வாசனையை டெஸ்மோடியம் உமிழ்வதன் மூலம் பாதுகாக்கப்படும். அறிவியல் விளக்கங்களை புரிந்துகொண்டு விவசாயிகள் உகந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். அயல் மகரந்த சேர்க்கை வழியாக ஏற்படும் உணவு உற்பத்தியும், பூச்சி தாக்குதலை கட்டுபடுத்துவதற்கும் பல நன்மை செய்யும் பூச்சிகளின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. உதாரணமாக, மிருதுவான உடல் அமைப்பை உடைய அஸ்வினி, வெள்ளை ஈ, இலைப்பேன் மற்றும் கரையான் ஆகியவற்றை உண்டு பயிர் சேதத்தை தடுக்கும் பொறிவண்டை கண்டால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதே மாதிரி, மக்காச்சோளம் மற்றும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்தபின், இருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டு இரண்டாவதாக கடுகை பயிர் செய்வது விவசாயிகளுக்கு வரமாக அமைகிறது. மற்றொரு புறத்தில் தேவை மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாக கொண்டு விவசாயிகளின் முடிவெடுக்கும் முறையை விஞ்ஞானிகள் கற்றுகொண்டனர்.

தற்போது விவசாயிகள் சைமோரூபா க்லாகா, பின்னேட்டா மற்றும் கேசியா டோரா ஆகியவற்றை கொண்டு உயிர் பல்வகைமை மற்றும் தீவனம், எரிபொருள் ஆகியவை விரிவடைகிறது. இந்த ஓரப் பயிர்கள், காற்று தடுப்பானாக செயல்படுவதால், மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கிறது என்பதால் இவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

ஒன்றுகூடி செயல்படுவதன் தேவை
வேளாண் உயிரியல் அமைப்புகள் நுண்ணிய அறிவுகள் நிறைந்தவை. உள்ளூர் நிலையை ஆழ்ந்து உணர்ந்து, சமூகங்களுடன் ஏற்கனவே இருக்கும் பாரம்பாிய அறிவை வளர்ப்பதற்கு விவசாயிகளை அழைத்தனர். நிலம் – பாிசோதனை கூடம் – நிலம் அணுகுமுறையை விவசாயிகளும் விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிரந்தர தொடர்பை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆராய்ச்சி முறையில் விவசாயிகளின் பங்கு மிகவும் முக்கியம் ஏனென்றால் விஞ்ஞானிகள் பாரம்பாிய அறிவு பெறுவதற்கும் அவர்களின் யுக்தியை மறுவடிவமைப்பு செய்வதற்கும் உதவுகிறது. இந்த முறையின் வெளிப்பாடு விவசாயிகளுக்கு சம்மந்தமாக இருப்பது மட்டுமில்லாமல், நீண்ட காலத்திற்கு நிலைத்தும் இருக்கிறது.

நன்றி கூறுதல்
தொழில்நுட்ப தகவல் மற்றும் முக்கிய கருத்துகளை வழங்கியதற்கு நிகழ்ச்சி அறிவுரையாளரான டிபேஷ் பிரசாத் பதே அவர்களுக்கு நன்றி.

அபிஜித் மொஹந்தி மற்றும் ரஞ்சித் சாஹூ


Abhijit Mohanty
Agragamee
E-mail: abhijitmohanty10@yahoo.com
Blog: developmentalternativesblog.wordpress.com

Ranjit Sahu
Research Associate
University of Virginia, USA.
E-mail: sahurk9@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2016, வால்யூம் 18, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...