பயிர் பல்வகைமையை விரிவடைவதன் மூலம் பண்ணையை சீரடைதல்


கலப்புப் பயிர் சாகுபடி முறைகளோடு உள்ளூர் பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக வருமானம் அதிகாிக்கும் நோக்கத்தோடு பணப்பயிர்களை தனிப்பயிராக சாகுபடி முறையை பின்பற்றுவதால், உணவு உத்திரவாதம் மற்றும் சீதோஷன நிலையை எதிர்மறையாக தாக்கம் ஏற்படுகிறது. இது பங்கேற்புடன் கூடிய இரகங்களை தேர்வு செய்தல், பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு ஊடுபயிர் பாிசோதனைகள் மூலம் உயர்ந்த இரகங்கள் உற்பத்தியை சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிப்பதனால் விவசாயம் பெருமளவில் சீரடைந்தும், வருமானம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கிறது


தாவர மற்றும் விலங்கினங்களின் அளவில்லாத பல்வகைமை உடைய உறைவிடமாக இந்தியா திகழ்கிறது. உலகில் உள்ள உயிர்பல்வகைமை மிகுதியான பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. தாவரங்களை அழித்தல் மற்றும் வெளிநாட்டு இனங்கள் அதிகாித்து வருவதால், பெருமளவில் பல்வகைமை அச்சுறுத்தும் வகையில் அழிந்துவருகிறது. வேளாண்மை உயிர் பல்வகைமையின் பிறப்பிடமாக இருக்கும் தென்னந்தியாவின் மலைப் பகுதிகள் அனைத்தும், பண்ணை வருமானத்தை அதிகாிக்கும் வகையில் பணப்பயிர்களை சாகுபடி செய்வதற்கு மாற்றப்பட்டு வருகிறது. கொல்லிமலையில் கடந்த முப்பது வருடங்களாக சிறுதானியங்களுக்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கு பயிரை சாகுபடி செய்கின்றனர்.
அதே மாதிரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் என்ற பகுதியில் அனைத்து பாரம்பாிய வேளாண் சாகுபடி முறைக்கு பதிலாக தைல மரம் நடப்படுகிறது. அதே சமயத்தில் கேரளாவில் வயநாட் பகுதியில் நெல்லிற்கு பதிலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பணப்பயிர்களை ஒரு பயிர் சாகுபடி முறை மூலம் உற்பத்தியை அதிகாித்து சந்தை படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு சில வருமானம் ஈட்டும் அதே சமயத்தில் பயிர் பல்வகைமை அழியும் நிலையில் , மண் அரிமானம், பயிர் நோய் ஏற்படுவது அதிகாித்து விவசாயிகளை சீதோஷன மாற்றத்தின் விபரீதத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் உற்பத்தி குறைவதோடு, வெளிப்பகுதியிலிருந்து கொள்முதல் செய்யப்படும் உணவை பொது உணவு வினியோக அமைப்புகள் அளிக்கும் கோதுமை மற்றும் அரிசியையே மக்கள் நம்பியிருப்பது அதிகாித்து வருகிறது.

கிராமப்புற இந்தியாவில் உள்ள சிறு விவசாயிகளின் பாரம்பாிய உணவு மற்றும் வருமான ஆதாரங்களான, வேர்கள் மற்றும் கிழங்குகள், வேளாண் விரிவாக்க மையங்களால் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்படுகிறது. எனினும் கொல்லிமலையில் 70 விழுக்காடு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது முற்றிலும் சந்தைப்படுத்துவதற்காக வளர்க்கப்படுகிறது. சுமார் 7000 ஹெக்டர் நிலத்தில், தொழிற்சாலைகள் தேர்வு செய்யும் அதிக மாவுப்பொருள் இருக்கும், உணவுக்கு பயன்படாத இரகமான எச் 165 என்ற ஒரே இரகம் பயிரிடப்படுகிறது. ஒரே கிழங்கு இரகம் தனிப்பயிர் சாகுபடி முறையில் அதிக பரப்பளவு கொண்ட நிலத்தில் பயிரிடப்பட்டதால், நோய் தாக்கம் மற்றும் மண் அரிமானம் அதிகாித்து உற்பத்தி குறைந்தது. இது கலப்பு சாகுபடி முறை மற்றும் வேர்கள் மண்ணிற்கு எரு சேர்ப்பதையும், உணவுக்கு பயன்படுத்த கூடிய நீர் களை/ எறா/ நண்டு/ சிறிய மீன்கள் நெல் வயலில் இருந்து உணவாக பயன்படுவதை காண்கிறோம். மேலும் நெல் வயல் நிலத்தடி நீரின் அளவை அதிகாிப்பதற்கு முக்கிய பங்கு அளிக்கிறது. அதனால் மகசூலை எப்படி கணக்கிடப்படுகிறது? தண்ணீர் ஊற்று அதிகாிப்பதற்கும் அல்லது உயிர்பல்வகைமை சேமிப்பதற்கும் உயிரியலில் பங்கை நெற்பயிர் எப்படி செய்கிறது. ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவு அளிக்கும் 40 வகை பயிர்களுக்கு மேல் இருக்கும் தோட்டத்தின் பயிர் அடர்வை பொது ஆய்வின்படி அளவீடு செய்யமுடியாது. மண் ஆரோக்கியத்தை அளவிட தழை, மணி, சாம்பல் மற்றும் இயற்கை கார்பன் ஆகியவற்றை தவிர வேறு எந்த காரணியும் நம்மிடம் இல்லை. ஒட்டுமொத்த பண்ணை அமைப்பில் ஆரோக்கியத்தை நாம் விளக்க முடியாது-கணித ஈக்வேஷனுக்கு இது கடினமான ஒன்று.

உயிர் பண்ணை திட்டம் முறைகளின் முக்கியத்துவத்தை அறிய சமூக, உயிரியலில் மற்றும் பொருளாதார காரணிகளின் மாற்றங்களை ஆய்வு செய்ய முயற்சித்துள்ளது. மூன்று வருடங்கள் என்பது இந்த ஆய்வின் தாக்கத்தை உருவாக்குவதற்கு மிக குறுகிய காலமாக இருக்கிறது ஆனால் இது முடிவின் முக்கிய திசையை காட்டுகிறது. இது சமூக கண்காணிப்பு மற்றும் புள்ளிவிவரத்தின் ஆய்வு மூலம் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வருவாயை மதிப்பிடுதல்
எந்த ஒரு செயலின் முன்னேற்றத்தை பின்பற்றுவதற்கும் ஏற்கனவே உருவாக்கிய வழியாக சமூக கண்காணிப்பு முறை இருக்கிறது. இது இடைநிலையில் சில திருத்தங்களை செய்துகொள்ள முடிகிறது. கூடுதலாக, நோக்கத்தை வரையறுப்பது, ஒருவர் சாியான திசையில் செல்லுகின்றார் என்பதை உறுதிபடுத்த உதவுகிறது. இதை மனதில் வைத்துகொண்டு, சக்கர வரைபடம் என்ற அடிப்படையில் கருவியை உருவாக்கப்பட்டது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் தன் சொந்த நோக்கத்தை வரையறுத்து அதை கண்காணிக்க உதவுகிறது. பத்து அம்ச காரணிகள் உருவாக்கப்பட்டது.
1. குழு/கூட்டு செயல்பாடுகள் – விவசாய குழுக்கள், கூட்டு குழுக்கள், பொது செயல்பாடுகள் மற்றும் இணை செயல்பாடான பொது நிலத்தில் சாகுபடி செய்தல் போன்றவற்றில், ஈடுபாடு எந்தளவிற்கு உள்ளது. குழுவை பொறுத்தவரையில், மொத்த குழுவின் ஆரோக்கியத்தை காரணிகளாக கருதப்படுகிறது.
2. மண் நீர் சேமிப்பு முறைகள் பின்பற்றுதல் – எவ்வாறு மண் நீர் சேமிப்பு முறைகள் பண்ணையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.உதாரணமாக, வயல் வரப்பு, மழைநீர் சேகாிப்பு, மூடாக்கு, எரு பயன்பாடு, அரைவட்ட வரப்பு, உழவற்ற சாகுபடி, டைமண்ட் வடிவ படுக்கை, இரட்டிப்பாக தோண்டப்படும் படுக்கை, தௌிப்பு பாசனம், வட்ட படுக்கை போன்றவை.
3. உப அமைப்பின் எண்ணிக்கை – பண்ணைக்கு சொந்தமான உப அமைப்புகளின் எண்ணிக்கை, நுண்ணுயிர் சொிமானக் கருவி, கோழி வளர்ப்பு, கால்நடை, மரங்கள், பயிர்கள், நீர் வாழ் உயிரின வளர்ப்பு
4. உப அமைப்புகளின் உள்ளே செல்லும் ஆதாரங்கள் – பல்வேறு உப அமைப்புகள் மத்தியில் உருவாகும் இணைப்புகளின் எண்ணிக்கை
5. நுண்ணுயிர் சொிமான கருவிகளின் எண்ணிக்கை – இயற்கை எரிவாயு கலன், மண்புழு உரக் குழி, எரு குழி, திரவ எரு இடுதல், தொழு உரம், மற்றும் பசுந்தாள் உரம்.
6. பயிர் பல்வகைமை மற்றும் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் – இருக்கும் பயிர் பல்வகைமை கூறுகளின் அடிப்படையில் பண்ணையை பிரித்தல் பழவகை, பயறுவகை, கீரைகள், தானியங்கள், மூலிகைத் தாவரங்கள், கிழங்கு வகைகள், நறுமணப் பொருட்கள் போன்றவை பயிர்களில் அடங்கும், கலப்பு பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, பயிர் சுழற்சி, தொடர் பயிர் சாகுபடி போன்றவை பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களில் அடங்கும்.
7. பெற்ற பயிற்சிகள் – விவசாய வயல் வெளிப் பள்ளி என்ற ஒரு வருட கால பயிற்சி அணுகுமுறை மூலம் விவசாயிகள் பெற்ற பல வகையான பயிற்சிகள், பரவலாக இதில் கற்றுத்தரப்பட்ட திறன்கள் . – 1) அழுத்தநிலை ஆய்வு, வாழ்வாதார சூழல், ஆதாரங்கள், திறன்கள் மற்றும் சொந்த பண்ணை மாதிரியை திட்டமிடுதல், 2) பல்வேறு மண் சத்து மேலாண்மை முறைகள், 3) தண்ணீர் மேலாண்மை முறைகள் 4) வீட்டுத் தோட்டம் மற்றும் வயலில் உள்ள தோட்டக்கலைப் பயிர் 5) தீவனத்துடன் கூடிய கோழி வளர்ப்பு மேலாண்மை, 6) தீவனத்துடன் கூடிய சிறு கால்நடை மேலாண்மை 7) அனைத்து வளர்ச்சி நிலைகளில் பயிர் கால்நடைகளின் நோய்/பூச்சி மேலாண்மை) குழு வளர்ப்பு மற்றும் மதிப்பு சங்கிலியில் மென்திறன் வளர்த்தல்
8. வெளி உணவு இடுபொருள் – சந்தையிலிருந்து பெறப்பட்ட வெளி உணவு இடுபொருளின் அளவு (காய்கறிகள், புரதங்கள், – சமநிலை உணவுக்கு தேவையான அனைத்தும்).
9. பண்ணைக்கான வெளி இடுபொருள் – சந்தையிலிருந்து பெறப்பட்ட பண்ணைக்கு தேவையான வெளி இடுபொருளின் அளவு (விதை உட்பட).
10. விற்ற விளைபொருளின் வருமானம் – சந்தை இணைப்பு வருமானத்திலிருந்து எவ்வளவு பணத் தேவையை சந்திக்க முடிகிறது. – விற்பனையை மட்டும் கருத்தில் கொள்வதில்லை. இதனை மதிப்பிட வேண்டும். ஒவ்வொரு காரணிக்கும், (10 அம்ச வரைபட அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளது) விவசாயிகள் 0 முதல் 5 வரை (குறைவிலிருந்து மிக அதிகம் வரை) மதிப்பிட வேண்டும். மேலும் இந்த மதிப்பை வரைபடத்தில் குறிக்க வேண்டும். இதனையே 6 மாதத்திற்கு மீண்டும் மதிப்பிட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் மதிப்படும்போது பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் செய்வது இந்த பயிற்சியின் மிக முக்கிய பங்காக கருதப்படுகிறது.இந்த மதிப்பீட்டின்போது பல குறைபாடுகள் மற்றும் வெற்றிகள், இதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிட்டு காட்டுவதனால், எதிர்காலத்தில் பின்பற்றும் செயல்களுக்கு திட்டமிடுவதற்கு உதவுகிறது. இது இரண்டு நிலைகளில் முயற்சி செய்யப்பட்டது- குழு அளவிலும், தனிப்பட்ட விவசாய மட்டத்திலும் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு, பண்ணை செயல்பாடுகள், இடுபொருள் மற்றும் விளைபொருள் குறித்த விவரங்களை கையேடுகளாக தொடர்ந்து பராமாிக்கப்படுவதற்கு உகந்த திறன் வளர்க்கப்பட்டது. இது பின்னாளில் ஆய்வு செய்வதற்கு உதவுகிறது. இது மேலும் நிகர வருமானம் மற்றும் இதர உயர்ந்த காரணிகளின் மதிப்பீடு பெற்றுள்ளது. ஆனால் பண்ணையின் வேளாண் உயிரியலில் சம்மந்தமான காரணிகளை ஆய்வு செய்வதையே முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஜார்கண்ட் -டியோகார் மற்றும் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பண்ணைகளை குறிக்கிறது, மேற்கு வங்காளம் – பிர்பம், பங்கர் மற்றும் புருளியா மாவட்ட பண்ணைகளை குறிக்கிறது, நேபாளில் உள்ள சதிவான் மலை பகுதியிலுள்ள பண்ணைகளை குறிக்கிறது. வங்க தேசம் – சிட்டகாங் மலைப்பகுதியிலுள்ள பண்ணைகளை குறிக்கிறது.இதன் முடிவுகள் கீழே கலந்துரையாடப்பட்டது.

பண்ணை பல்வகைமையை அளவெடுத்தல்
வேளாண் உயிரியல் பண்ணையில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது பல்வகைமையாகும். வருடம் ஒரு முறை ஒரு பயிரை சார்ந்தே வருமானம் இருக்கும். இதை ஒப்பிடுகையில் பல்வகைமை உப அமைப்பு, வருடம் முழுவதும் ஒவ்வொரு காலக்கட்டத்துடன் வருமான பல்வகைமையின் ஆதாரமாக இருக்கிறது. பயிரிடும் வயல், தோட்டம், கோழி வளர்ப்பு, கால்நடை, நீர்வாழ் அமைப்புகள், நுண்ணுயிர் சொிமான கருவி, பொது மரங்கள், குழுவாக மதிப்பு கூட்டப்பட்ட பொருளின் சுயதொழில் போன்றவை உப அமைப்புகள் ஆகும். மேற்கு வங்காளத்தில் உப அமைப்புகள் பல்வகைமை 3.5 திலிருந்து 8 ஆக அதிகாித்துள்ளதை காட்டுகிறது. இதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜார்கண்ட் மற்றும் மலை பகுதிகளில் வருமானம் மற்றும் இலைதழைகளின் ஆதாரமாக 5 நிலைபடுத்தப்பட்ட உப அமைப்பு இருக்கிறது. இது ரபி பட்டத்திலும் உண்மையான ஒன்று. கோடை காலத்தில், பொதுவாக தாிசாக இருக்கும் நிலத்தில் கூட, 2014 ஆம் ஆண்டிலிருந்து சராசாியாக 2.54 இலைதழைகளின் ஆதாரங்களாக இருப்பதைக் காணமுடிகிறது. இதன் தாக்கம், ஜார்கண்டில் அடிப்படையாக ஒரு பட்டத்திலிருந்து 3 பட்டமாக 45 விழுக்காடு பண்ணைகளில் விரிவடைவது பிரதிபலிக்கிறது. மலை பகுதிகளில் 89% உள்ளது. மேற்கு வங்காளம் பொறுத்தவரையில் 60 விழுக்காடாக உள்ளது. இரண்டிற்குமேல் உள்ள உபஅமைப்புகள், பொதுவாகவும் சந்தைக்காகவும் பயன்படும் இலைதழைகளின் வளர்ச்சி அதிகமாக இருப்பது காணமுடிகிறது.

வருமான பகிர்மானம்
ஒரு உப அமைப்புகளுக்கு மேல் இருந்தாலும் அது வருமான பல்வேறு பிரிவினருக்கு பகிரப்படுவது பாதிக்கப்படுகிறது. 65 முதல் 85 விழுக்காடு குடும்ப வருமானம், பருவ காலத்தை நேரடியாக சார்ந்திருக்கும் பண்ணையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பெறப்படுகிறது. ஆனால் மூன்று வருடங்களுக்குள், இதன் தலையீடு சீதோஷனம் சார்ந்த ஆதாரத்தை நம்பியிருப்பது குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கால்நடை, கோழி வளர்ப்பு, நீர் வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் இதரவற்றிற்கு இடம் உருவாக்கியதே ஆகும்.உதாரணமாக, மலை பகுதியில் 2012 ஆம் ஆண்டு காரீப் பட்டத்தின் வருமான பகிர்மானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது – பயிர்கள் – 32.26 விழுக்காடு காய்கறிகள் – 13.12 விழுக்காடு , கால்நடைகளிலிருந்து 19.77 விழுக்காடு , கோழி வளர்ப்பு – 1.32 விழுக்காடு , நீர்வாழ் உயிரின வளர்ப்பு – 14.91 விழுக்காடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் -18.60 விழுக்காடு. காலத்தோடு கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவை வளர்ப்பதற்கு மிகவும் சிறந்தது. மேற்கு வங்கத்தில் நீர் வாழ் உயிரின வளர்ப்பு வருமானம் அதிகாிப்பிற்கு பெரும்பங்கு வகிக்கிறது அதாவது அதிகபட்சமாக 34 விழுக்காடு. சீதோஷனம் சார்ந்த வருமான ஆதாரத்தின் மேல் சார்புத்தன்மையை குறைப்பதனால் சீதோஷனத்திற்கு உகந்த சிக்கல் குறையும். இந்த ஒரு காரணத்தால், ஏன் வேளாண் உயிரியலியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

குறைந்த ஆவணத்தை வைத்து, கூடுதல் உப அமைப்புகளின் எண்ணிக்கையுடன் வருமான விரிவாக்கத்தின் மத்தியில் சக இணைப்புகள் உருவாக்கப்பட இயலாது. ஆனால் வருடம் முழுவதும் வருமானம் சமமாக பகிரப்படுவது காணப்படுகிறது. ஆகையால் பண இருப்பு வருடம் முழுவதும் அதிகாிக்கிறது.முக்கியப் பயிர் பல்வகைமை 2-3 முதல் அதிகபட்சமாக 4-5 வரை பயிர் நிலத்தில் அதிகாித்துள்ளது. வீட்டுத் தோட்டத்தில் சராசாியாக மிக அதிக பல்வகைமையான 6-7 வரை அதிகாித்துள்ளது. தானியப் பயிர்களான நெல், கோதுமை, கேழ்வரகு, பயறு வகைகளான உளுந்து, லென்டில், எண்ணெய் பயிர்களான – நைஜர், கடுகு, பிளேக் விதை மற்றும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கலப்பு காய்கறிகள் ஆகியவை பெருமளவில் அதிக இடத்தில் வளர்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள மலைப் பகுதியில், சமநிலை உணவு பல்வகைமையில் பொிய தாக்கம் மிக அதிகளவில் இருக்கிறது. உணவு தரத்திற்கு அப்பாற்பட்டு, நிரந்தர மற்றும் பட்டத்தில் தாிசாக விடப்பட்ட நிலத்தில் கலப்பு பல்வகைமை பொருட்களை வளர்த்து, பல்வகைமை எண்ணிக்கையை பாதிக்கப்படுகிறது. 650 ஹெக்டர் தாிசு நிலம், பயிர் செய்யும் நிலமாக மாற்றப்பட்டது மற்றும் 850 ஹெக்டர் தனிப்பயிர் செய்யப்பட்ட நிலப்பகுதி இரண்டு பயிர் சாகுபடி செய்யும் இடமாக மாற்றப்பட்டது. நிலத்தின் பண்பை மாற்றுவதற்கு பயறுவகை பயிர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

உணவு பல்வகைமை
உணவு பல்வகைமை மதிப்பீடு ஜார்கண்ட் இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன் முடிவில் 70 விழுக்காடு பெண்கள் குறைந்தது 5 உணவு வகைகளை – பீன்ஸ் மற்றும் பட்டாணி, கொட்டைகள் மற்றும் விதைகள், பால் பொருட்கள், முட்டைகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் உண்ணுகின்றனர் . 2011 ஆம் ஆண்டு துவக்கத்தில் பெரும்பாலான வீடுகள் கிழங்கு வகைகளை அதிகம் உண்ணுகின்றனர். சைவம் அதிகம் உண்ணும் மாநிலமாக இருப்பதால் முன்னேற்றம் பொியளவில் இருக்கிறது.

உப அமைப்புகளுக்குள் உள்ள இணைப்புகள், உப அமைப்புகளுக்கு ஆற்றல்/ இலைதழைகள் மாற்றம் பண்ணை அமைப்பிற்குள் நடப்பது வெளிப்படுகிறது. இது அமைப்பின் நெருக்கமும் மற்றும் இன்றியமையாததாக இருப்பது வெளிப்படுகிறது.

பொதுவாக, அதிக எண்ணிக்கையில் இணைப்புகள், அதிக இன்றியமையாத அமைப்பாகும். 2011 ஆம் ஆண்டு சராசாி இணைப்புகள் ஒன்றைவிட சிறிது அதிகமாக இருந்த நிலையிலிருந்து மூன்று வருடங்களில், 8 இணைப்புகள் அதிகாித்து மேலும் அதிகபட்சமாக 12 இணைப்புகள் உருவாகியது. மேற்கு வங்காளத்தில், சமூகத்தில் பண்ணை குடும்பங்கள் இருப்பதால், இதன் முடிவு சிறப்பாக இருக்கிறது. மலை பகுதிகளில், ஒப்பிடுகையில் முடிவுகள் குறையாக இருந்தது. இயற்கையாக இலைதழைகள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இலைதழை கிடைப்பதை அதிகாிக்கச் செய்து இணைப்பை உருவாக்க தேவையில்லை. இடம்வாரியாக வேறுபட்டாலும், இணைப்புகள் எண்ணிக்கை அதிகாிப்பதோடு இலைதழைகள் மறுசுழற்சி செய்யும் அளவும் ஏற்றத்தின் வழியையே காட்டுகிறது. ஒரு பண்ணையில் 2015 ஆம் ஆண்டில் காரீப் பட்டத்தில், உப அமைப்புகள் மத்தியில் மறுசுழற்சி செய்யப்பட்ட இலைதழைகள் 7738 கிலோவாகும். உயிர் பண்ணை திட்டத்திற்கு முன்பு, ஆற்றலின் பொழிவிற்கு களோரி என்று அழைக்கப்பட்டது. இந்த முறை மிக சுலபமாக வைத்துகொள்ளலாம் என்று முயற்சித்தோம். ஆகையால் இது சுலபமாக புரிந்துகொள்ளப்பட்டது.

இந்த மறுசுழற்சி, வெளியிடு பொருட்களின் பயன்பாட்டை குறைவதற்கு உதவுகிறது. இலைதழை மறுசுழற்சி காரீப் பட்டத்தில் சிறப்பாக இருப்பதை காணமுடிகிறது. அதுவும் மேற்கு வங்கத்தில் மிக சிறப்பாக இருக்கிறது. அடிப்படையில், மாட்டு தொழுவத்திலிருந்து கிடைக்கும் சாணம் மட்டுமே சேகாித்து இலைதழைகளின் மறுசுழற்சியை சமூகத்தால் செய்யப்பட்டுவந்தது. உயிர்பொருளின் விளக்கத்தை திட்டத்தின்போது விரிவடைய செய்ததில், பயிர் கழிவுகள், கால்நடை எச்சங்கள், களைகள் போன்றவை உள்ளடக்கியது. குவியல் மற்றும் குழியில் மக்கு எரு தயாரித்தல், உயிர் சாணம் தயாரிப்பு நாடெப் மக்கு எரு, மண்புழு உரம், திரவ உரம் தயாரிப்பு, மூடாக்கு போன்றவைகள் செய்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த உயிர்பொருள் மறு சுழற்சி செய்யப்படவில்லையென்றால், ஒன்று வெளியிலிருந்து வாங்க வேண்டும் அல்லது பண்ணைகளில் இந்த குறைபாடுகளை சந்திக்க நோிடும் ஜார்கண்ட் 35% விவசாயிகள் 50% குறைவான பண்ணை இடுபொருளை 2012 ஆம் ஆண்டில் உள்ளிருந்தே பெற்றனர். மேலும் 2013 ஆம் ஆண்டு அது 12 % ஆக குறைந்தது. (அட்டவணை 1). இந்த நிலை மெதுவாக சுய சார்புத்தன்மையை, 5% விவசாயிகள் 90% மேல் இடுபொருட்களை பண்ணையிலேயே தயாரித்து பயன்படுத்தியதன் மூலம் அடைகின்றனர். மேற்கு வங்க பண்ணையில் சிறந்த முடிவு காணப்பட்டது. இதில் அதிக எண்ணிக்கையில் இணைப்புகளும் அதிக உயிர் பொருளும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.தன்னை உயர்த்தி கொள்ளும் பொிய வாய்ப்பு இன்னும் நீண்டு செல்லும் நிலையில் இருக்கிறது.

உணவு சுய சார்புத் தன்மை அதிகாிக்கும்
உணவு உத்திரவாதம் என்ற ரீதியில், பண்ணை குடும்பங்கள் உணவு மிகுதியாக கிடைக்கும் நிலைக்கு முன்னேற்றுவது ஒரு சவால். 2013 ஆம் ஆண்டு 48% விவசாயிகளுக்கு உணவு மிகுதியாக கிடைக்கும் நிலையை அடைந்தனர்.

உயிர்பொருள் மகசூல்
மகசூல் என்பது அடிப்படையாக ஒரு பயிரையே குறிக்கும். ஒருங்கிணைந்து பண்ணை முறையில் மொத்த பண்ணையின் உயிர்பொருள் மகசூல் என்பது சுய தேவை மற்றும் சந்தைக்கு கொண்டு செல்லும் உணவு தீவனம், எரிபொருள் மற்றும் மறுசுழற்சி செய்யப்படும் உயிர்பொருள் ரபி மலை பகுதிகளில் (12000கிலோ/ஹெக்டர் 2013) மற்றும் ஜார்கண்டில் (2013 ஆம் ஆண்டு 9000 கிலோ/ஹெக்டர் ) சிறந்த முடிவுகள் காணப்பட்டது. காரீப் பட்டத்தில் மேற்கு வங்கத்தில் சிறந்த முடிவுகள் காணப்பட்டது. காரீப் பட்டத்தில் மேற்கு வங்கத்தில் சிறந்த முடிவுகள் காணப்பட்டது (8100 கிலோ). நிலத்தின் உயிர்பொருள் மகசூல் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டில் குறைந்ததுள்ளதை ஆர்வமிக்கதாக இருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் குறைவான தாிசு நிலத்தில் அதிக அளவிலான பயன்படுத்தப்படாத உயிர்பொருள் இருப்பதேயாகும்.

சில பாதகங்கள்
அங்கீகாிக்கப்பட்ட புள்ளிவிவரம் இல்லாததால், குடும்ப உறுப்பினர்கள் சாகுபடி செயல்பாடுகள் செய்வதற்கு ஒதுக்கிய நேரம் இல்லாத காரணத்தால், கூலி மகசூல் கணக்கிட கடினமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு விவசாய பண்ணைகளை தனித்தனியாக ஆய்வு செய்தபோது வேளாண் உயிரியலில் சாகுபடி, கூலி அதிகம் தேவைப்படும் முறை, அதிலும் பண்ணையில் கால்நடை பராமாிக்கப்படுவதால், குடும்பத்தில் பெரும்பாலும் பெண் உறுப்பினர்கள் மேல் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆகையால் ஒட்டுமொத்த திட்டத்திலும் பாலின முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும் இது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் சொந்த பண்ணைக்கு கிடைக்கும் கூலி நாட்கள், வெளிபண்ணையில் கூலியாட்களாக பணிபுரிவதை காட்டிலும் இது உயர்ந்தது. பெரும்பாலான வெற்றிபெற்ற விவசாயிகள் அதிகம் கூலி/ வேலையை உள்ளடக்கிய முறையை சாதகமாக எடுத்து கொண்டுள்ளனர்.

மாறும் பழக்கப்பட்ட அறிவு
வருமானத்தை தாண்டி வேறுபட்ட பல்வேறு காரணங்கள் வேளாண் உயிரியலில் மேல் தாக்கங்களை மதிப்பீடு செய்வதன் மூலம் விவசாயிகள் பல்வேறு பயன்கள் உணர்வதற்கு உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் அவர்களின் பண்ணைகளில் பல்வகைமை அதிகாித்ததையும் உணர்ந்தனர். பல்வேறு பயன்கள் உணர்வதற்கு உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் அவர்களின் பண்ணைகளில் பல்வகைமை அதிகாித்ததையும் உணர்ந்தனர். பல்வேறு காரணிகள் மற்றும் அறிகுறிகளை ஆவனம் மற்றும் ஆய்வு செய்யும் திறன்களை வளர்த்ததனால், விவசாயிகள் தங்கள் பழக்கப்பட்ட அறிவை சாதகமான வழியில் செலுத்தி நெல்லை தனிப்யிராக சாகுபடி செய்யப்பட்ட நிலையிலிருந்து பல்வகைமை சாகுபடி முறைகளை நோக்கி செல்கின்றனர். கையேடுகள் மேம்படுத்துபவர்கள் / பண்ணையில் முன்னேற்றத்தை கண்காணிப்பவர்கள் தொடர்ந்து கோட்பாடுகளுடன் செய்து வருகின்றனர். புள்ளிவிவரத்தை கண்டு விவசாயிகள் ஊக்கமடைந்து சேகாித்து ஆய்வு செய்து மற்றும் புரிந்துகொண்டதை பண்ணையிலிருந்து சாகுபடி அமைப்புகளுக்கு மாறுகின்றனர்.

இ.டி.ஐ. ஆலிவர் கிங், எஸ். அபுபெக்கர் சித்திக் கிரிகன் கோபி மற்றும் நட் கவ்


EDI Oliver King
M S Swaminathan Research Foundation
3rd Cross Street, Institutional Area, Taramani
Chennai 600 113, India
E-mail: ediok151173@gmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2016, வால்யூம் 18, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...