கர்நாடகா, தவனகிரி மாவட்டம் ஹாிஹரா தாலுக்கா, கும்பலுரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ஏ.என். ஆஞ்சநேயா ஒரு இளம் விவசாயி. இவரின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் வேளாண் இரசாயனங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று இவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மருத்துவர்கள் அறிவுரை கூறினர். ஆகையால் 15 வருடங்களுக்கு முன் இவர் இயற்கை வழியில் சாகுபடி செய்யும் முறைக்கு மாறினார். இதற்கு முன்பு, இவர் சாதாரண வேளாண் முறைகளை பின்பற்றியபோது பல இரசாயனங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளை நெற்பயிருக்கு உபயோகப்படுத்தினார்.
ஆஞ்சநேயா பயறு வகைகளை சாகுபடி (முக்கியப்பயிர்கள் விதைப்பதற்குள் பசுந்தாள் பயிர்களை மண்ணில் மடக்கி உழுதல்) செய்வதற்கு உந்ததலாக இருந்தது. அருகேயுள்ள மாவட்டத்தில் , ஷிகாரிபுரா கிராமத்தில் வசித்துவரும் விவசாயி, திரு.பி.என்.நந்திஷ் ஆவர்.முன்னதாக லீசா இந்தியா பி.என். நந்திஷ் ஷின் பயறுவகை சாகுபடி அனுபவத்தை கொண்ட கட்டுரை வெளியிட்டது. எஸ். கே.டி.ஆர்.டி.பி, சஹஜா போன்ற நிறுவனங்களோடு ஆஞ்சநேயா வைத்திருந்த தொடர்பு மூலம் பயறுவகை சாகுபடி குறித்து தகவலை அறிந்துகொண்டார். ஆஞ்சநேயா இதனை செய்து பார்த்ததில், நல்ல முடிவுகள் கிடைத்தது. அவரை கண்டு பல விவசாயிகள், ஆஞ்சநேயாவிடம் கிடைத்த தொழில்நுட்ப உதவி பெற்று பயன்படுத்தினர்.
2009 ஆம் ஆண்டில் விவசாயிகளின் ஆர்வத்தை கண்டு வேளாண்மை துறை உள்ளூர் இயற்கை விவசாயிகள் குழு சரனா முத்தண்ணா சவயவா குஷிகாரா பலகாவிற்கு உதவி அளித்ததன் மூலம் இந்த பகுதியில் அதிகளவில் பரவலாக்கம் செய்யப்பட்டது.
எஸ்.எம்.எஸ்.கே.பி. பதிவு செய்யப்பட்ட இயற்கை விவசாய குழு உயிர்ச்சூழல் வேளாண்மை, குறிப்பாக பாரம்பாிய நெல் இரகங்கள் பயிரிடுகின்றனர். இந்தக் குழு இரசாயனம் இல்லாத வேளாண்மை மற்றும் கூட்டு விற்பனையில் துவக்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டது. கும்பலுரு கிராமத்தில், இந்த குழுவில் சுமார் 300 விவசாயிகள் இருக்கின்றனர். இந்தக் குழு தற்போது நெல் பதப்படுத்துதல் மற்றும் கூட்டு விற்பனை மேற்கொள்கிறது.
2009 ஆம் ஆண்டு, வேளாண்மை துறையின் உதவியோடு விவசாய குழுக்கள் பொியளவில் பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து வந்தனர். சணப்பை வெல்வெட் பீன்ஸ், டைன்ச்சா மற்றும் பில்லிபெசரா ஆகிய முக்கிய பயிர்கள்; பசுந்தாள் உரமாக குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றனர். ஆஞ்சநேயா தனது 4 ஏக்கர் உவர்த்தன்மையால் பாதிக்கப்பட்ட நெல் பகுதியிலும் விரிவடைந்து பசுந்தாள் பயிரை சாகுபடி செய்தனர். வருடத்திற்கு வருடம், பசுந்தாள் பயிர் சாகுபடி பகுதி அதிகாித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு 40 ஏக்கர் நிலத்திலிருந்து, 2011 இல் 150 ஏக்கரும், 2012 இல் 400 ஏக்கரும், 2013 ஆம் ஆண்டு 600 ஏக்கரும் மற்றும் 2014 ஆம் ஆண்டு 1200 ஏக்கராக விரிவடைந்துள்ளது. இந்தப் பகுதியில் விவசாயிகளால் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக ஏற்றுகொள்ளப்பட்டது. மொத்த பணியும் ச.மு.ச.கே.ப. குழுவால் செயல்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. தற்போது கிராமத்தில் உள்ள நெல் விவசாயிகள் வரும் ஆண்டில் 12000 ஏக்காில் செய்யப்போவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் உற்பத்தி செலவில் 20மூ வரை குறைவதற்கு உதவுகிறது. மேலும் மண் வளத்தை அதிகாித்து அதன் மூலம் மண் கனிமத் தன்மையும் அதிகாித்தது. விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைந்ததை கண்டனர். இரசாயன உரங்கள் பயன்பாட்டை பெருமளவில் விவசாயிகள் நிறுத்தினர். மிக முக்கியமாக ‘ஆரோக்கிய தரத்தினை கடந்த 5 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது என்று ஆஞ்சநேயா மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் தொிவித்தனர்.
இவரின் அனைத்து முயற்சிகளுக்கும் , க்ரிஷி பண்டிட் என்ற விருதை மாநில அரசு வழங்கியது. மேலும் மக்கள் நல அமைப்புகளிலிருந்து பல விருதுகளை பெற்றுள்ளார்.
மஞ்சுநாத் ஹொலாலு
Manjunath Holalu Organic farming consultant C/o Razaki building, Vinayaka nagar Savanur Road, Shiggaon-581 205 Haveri, Karnataka. E-mail: manjubaduku@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 3



