வேளாண்மையில் நல்ல தொழில்நுட்பங்களை அதிகளவில் பரப்பசெய்வது எப்பொழுதும் சவாலான ஒன்றுதான்.எனினும், இந்தியாவில் பண்டல்கந்த் பகுதியில் உள்ள சிறிய கிராமமான, ரஜாவரில் உள்ள மக்கள் சமூக வானொளியை பயன்படுத்தி சிறப்பான முறையில், வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதை நோக்கி கூட்டு செயல்முறையை பார்வைக்கு கொண்டுவந்தனர். தனி நபாிலிருந்து முழு சமூகத்திற்கும் மண் வளத்தை அதிகாிப்பதற்கான தொழில்நுட்பத்தை பரப்பும் ஊடகமாக இந்த சமூக வானொளியில் ஒலிபரப்பாகும் கிராமத்தின் நேரடி நிகழ்ச்சி புதுமையான நிகழ்ச்சியாக அமைந்தது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 6 மாவட்டங்களும், உத்திர பிலதேசத்தில் உள்ள 7 மாவட்டங்களும் அடங்கிய, மத்திய இந்திய பகுதியில் உள்ள பன்டல்கந்த், மித வறண்டப்பகுதியாகும். இந்தப் பகுதி, குறைந்த மழையளவு பெற்று பல வருடங்களாக தொடா;ந்து வறட்சியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் பன்டல்கந்த் பகுதி, கட்டியான பாறைகளைக் கொண்டுள்ளதால், பெய்யும் குறைந்த அளவு மழையளவும் நிலத்தின் மேல்பரப்பில் வீணாக வழிந்தோடுகிறது. ஆகையால், இந்தப் பகுதியில் எப்பொழுதும் தண்ணீர் குறைபாடும், மிகவும் குறைந்த வேளாண் செயல்பாடுகள் இருந்துவருகிறது. கடந்த சில காலமாக மாறிவரும் சீதோஷண நிலையும், மிக மோசமான மற்றும் எதிர்பார்த்திராத மழையும் விவசாயிகளின் நிலையை மேலும் குழப்பத்திற்கு அளாக்கியது.
பன்டல்கந்த் பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் வேளாண் மகசூல் பாதித்துள்ளது. மேலும் வாழ்வாதார அமைப்புகளும் பாதிப்படைந்துள்ளன. சீதோஷண நிலை மாற்றத்தினால், வேளான் வாழ்வாதாரம் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தி 58 பன்டல்கந்த் பகுதியில் குறைந்துள்ளது. ஒருகாலத்தில் அடர்ந்த காடாக இருந்த பன்டல்கந்த் பகுதி, தற்போது அந்த பசுங்காடுகள் அழிந்துவருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக, உகந்த அனுகுமுறைகளின் அடிப்படையில், சீதோஷண மாற்றத்தினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைப்பதற்கு பன்டல்கந்த் பகுதியில் நிலைத்த வளர்ச்சிக்கு அர்பணிக்கும் சமுதாய அமைப்பான, வளர்ச்சி மாற்றங்கள் என்று கூறப்படும் அமைப்பு புதுமையான அனுகுமறையான, கிராம நேரடி நிகழ்ச்சி ஒன்று கிராம சமூகங்களுக்காக வடிவமைத்தது. கிராம நேரடி நிகழ்ச்சி சமூக வானொளியை கருவியாக வைத்து உள்ளூர் சமூகங்களை பயன்படுத்தப்பட்டது மற்றும் சுலபமாக பின்பற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் பொழுதுபோக்கு – கல்வி முறையில் அவர்களிடம் கலந்துரையாடின.
ஒரு நேரடி நிகழ்ச்சி
கோன் பனேகா ஷுப்கல் லீடர் எனப்படும் முதல் இந்திய கிராம நேரடி நிகழ்ச்சி, அர்ச்சாவை அடிப்படையாக கொண்ட வானொளி பன்டல்கந்த் என்ற சமூக வானொளியில் ஒளிபரப்பப்பட்டது. பன்டல்கந்த் வானொளி வேளாண் துறை மற்றும் சமூகம் இணைந்து மேம்படுத்தப்படுகிறது, ஏனென்றால் மக்களின் பங்கேற்புடன் வேளாண் துறை பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, மத்திய இந்தியாவில் உள்ள வறண்ட பகுதிகளில், சீதோஷன மாற்றம் குறித்த விழிப்புணர்வு உருவாக்குவதற்கும், தேர்வுகளை பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.
வல்லுனர்கள் மற்றும் சமூக நேர்காணல்கள், கலந்துறையாடல் நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப அடிப்படையிலான அறிக்கைகள், நாட்டுப்புற பாடல்கள், வானொளி நாடகங்கள் மற்றும் போட்டிகள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைத்து இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடையதாகவும், பொருளுடையதாகவும் ஆக்குகின்றன.இந்த போட்டிகள், பங்கேற்பாளர்களுக்கு, சீதோஷன மாற்றத்திற்கு உகந்த தொழில்நுட்ப தேர்வுகள் குறித்த திறன் வளர்ப்பு, சிறந்த செயல்பாளரை தேர்வு செய்ய வெளியேற்றும் சுற்றுக்கள், நிலைத்தத்தன்மையை உறுதிப்படுத்த தேர்வு செய்தவர்களை தக்கவைத்துகொள்ளுதல் ஆகியவை உள்ளடக்கியது. இந்த கிராம நேரடி நிகழ்ச்சியில், உள்ளூர் கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீதோஷன வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து, பல்வேறு செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இந்த வெற்றியாளர்களை ஆய்வு செய்து, இவர்களால் எத்தனை விவசாயிகளை ஈடுபடுத்த முடியும் என்ற அடிப்படையில் தேர்வுக் சுற்றுக்களின் மூலம் எடுத்துச்சென்று, மேலும் கிராமத்தில் குறிப்பிட்ட செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த முறையின் மூலம், தகவலை பொிய சமூகத்திற்கு மிக விறைவாகவும், சிறப்பாகவும் விரிவாக்கம் செய்வதற்கு உதவியது. கிராம நேரடி நிகழ்ச்சியின்போது கிராமங்களுக்கு பாிந்துரைக்கப்பட்ட சீதோஷன மாற்றத்திற்கு ஏற்ற 25 தொழில்நுட்பங்களில், அம்ருத் மித்தியை பயன்படுத்துவது, மண் வளத்தை அதிகாிக்கப்பதற்காக செயல்படுத்தும் முறைகளில் ஒன்றாகும். மேலும் இரசாயன உரத்தின் பயன்பாடு குறைகிறது. அம்ருத் மித்தி, பயிர் கழிவுகள், கால்நடை கழிவுகளுடன் சிறிது வெள்ளம் கரைக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும், இயற்கை எருவாகும். இந்த எரு மிக அதிகச் சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் மண் வளம் மற்றும் தண்ணீர் தக்கவைக்கும் திறன் அதிகாிக்கச்செய்யும் என்பது நன்கு அறிந்ததே. ஆகையால், பன்டல்கந்த் போல் மித வறண்ட பகுதியில் வேளாண்மைக்கு உகந்த சிறப்பான தொழில்நுட்பங்களில் இது ஒன்றாகும்.
மண்புழு உரம் தயாரித்து தோட்டத்தில் இடப்படுகிறது. மீண்டும், காய்கறி உற்பத்தியிலிருந்து கிடைக்கும் வீணாண தழைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரத்தை தயார் செய்யப்படுகிறது.
பிரகாஷ் குஷ்வாஹா, திகம்கர் மாவட்டம் ரஜாவர் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய விவசாயி கிராம நேரடி நிகழ்ச்சியின்போது, அம்ருத் மித்தியை தயாரிக்கவும், பயன்படுத்தவும் கற்றுகொண்டார். இதுவரையில்லாத வகையில் அவர் பண்ணையில் அம்ருத் மித்தியை பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த தகவலை பரப்பினார். சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து நன்கு புரிந்துகொண்ட பிரகாஷ், சுற்றுச்சூழலும், விவசாயிகளும் பயனடையும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் முறைகளை பாிசோதனைகளையும் செய்தார். பிரகாஷின் கதை சீதோஷன மாற்றத்தின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட தாக்கத்தில் உருவான வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். மேலும் கிராம நேரடி நிகழ்ச்சியின் இறுதி பட்டம் வென்றவர்களில் ஒருவராக இவர் இருந்தார்.
தாக்கத்தை பரப்புதல்
கிராம நேரடி நிகழ்ச்சியில் பங்குகேற்ற பின்னர், பிரகாஷ், அவருடைய கிராமத்தில் பரபலமடைந்தார். மேலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவை கண்டு மக்கள் அவருக்கு மாியாதை அளித்தனர். தற்போது பண்ணை சார்ந்த சந்தேகங்களை, அனைத்து வயதுடைய மக்களும், இவரிடம் அறிவுரை பெறுகின்றனர்.
பிரகாஷ்ஜி, என்னையும், என் சகோதாிகளையும் எங்கள் வீட்டில் மரங்கள் நடுவதற்கு ஊக்கப்படுத்தியவர்களில் ஒருவர் என்று, அதே கிராமத்தை சேர்ந்த பப்ளி என்ற 20 வயது பெண் கூறினார். இன்னும் கூடுதலாக பப்ளியின் தந்தை, பிரகாஷ் ரஜாவரில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு உதாரணமாக, தகவல் ஆதாரமாக, அலோசகராக மற்றும் ஆய்வாளராக திகழ்கிறார். இவர் இந்த கிராமத்தின் ஒவ்வொரு விவசாயியின் மாற்றத்திற்கும் காரணமாக இருந்தார்.
பிரகாஷின் கிராமமான, ராஜாவர் நுழையும்போது,மலையடிவாரத்தில் உள்ள பச்சைபசேலென இருக்கும் வயல்களில் மக்கள் ஆர்வத்துடன் பணிசெய்து கொண்டிருப்பதை காணலாம்.
குழந்தை பருவத்திலிருந்தே விவசாயம் செய்துவரும் கிராமவாசியான, சந்தோஷ் குஷ்வாஹா என்பவர் ‘எங்கள் நிலம் முன்பு வளமாக இல்லை, மேலும் பாறை நிலம், குறைந்த மழையளவு கொண்டிருப்பதால் எந்த பயிர் வளர்ப்பதும் மிக கடினமாக இருக்கும். அதனால் விவசாயம் இங்கு சுலபமான பணியாக இல்லை என்று கூறினார். தற்போது, சந்தோஷ் தனது வயல்களை காட்டும்போது அவரது சந்தோஷத்தில் முகம் ஒளிர்கிறது. மேலும், அம்ருத் மித்தியை வயலில் பயன்படுத்திய பன்னர் நிலத்தின் உற்பத்தி அதிகாித்துள்ளது என்று கூறினார். சந்தோஷ் மற்றும் மற்ற விவசாயிகளும் அவர்களுடைய நிலத்தின் சிறுப் பகுதியை அம்ருத் மித்தியை பயன்படுத்தி முதலில் ஒரு பயிர் பட்டத்திற்கு பாிசோதனை செய்தனர். அம்ருத் மித்தியை பயன்படுத்திய இடத்தில் தண்ணீர் தேவை மிக குறைவாக உள்ளது, மேலும் தானியங்கள் அரோக்கியமாகவும் இருப்பதை அவர்கள் கண்டனர். இன்று ரஜாவரில் உள்ள சுமார் 90 சதவிகித விவசாயிகள் அம்ருத் மித்தியை தனது வயல்களில் பயன்படுத்துகின்றனர். அம்ருத் மித்தியை பயன்படுத்துவதினால், பாசத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு குறைவதோடு, பயிரின் உற்பத்தி தரம் விரிவுபடுத்துகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இது மேலும் இரசாயன உரங்களின் செலவு குறைப்பதற்கும் உதவுகிறது. இந்த செலவே முன்பு விவசாயிகளுக்கு அதிக பண்ணை செலவாக இருந்தது. இதுமட்டுமில்லாமல், தற்போது, இந்த கிராமத்தில் முன்பு வளர்க்க இயலாத, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களான காய்கறிகள் வயல்களில் வளர்க்க முடிகிறது.
ரஜாவரில் உள்ள மக்கள் மரங்கள் வளர்ப்பதற்கும், அவர்களுடைய சொத்திற்கும் உள்ள சம்மந்தத்தினை புரிந்துகொண்டனர். நல்ல மழை பெய்வதற்கு தேவையான மரங்களை நடுவது முதல் கொண்டு, பயிர் சுழற்சி தொழில்நுட்பம் வரையில் பயன்படுத்தக்கூடிய அம்ருத் மித்தி, மற்றும் இதர முறைகளும் மக்களால் பயன்படுத்தப்பட்டு இயற்கை தாயுடனான உறவு அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட்டது. இந்த சிறிய கிராமத்தின் வெற்றி பெருமைப்படும் விவசாயிகளின் முகத்தில் பரதிபலிக்கிறது.
ஆகையால், ரஜாவர் கிராமம் ஒரு சோ;ந்த மாற்றத்தின் செயல்முறை மூலம் சிறந்த முறையில் வளர்ச்சியை நோக்கி செல்வதை செய்து காட்டியுள்ளது. சமூக வானொளி, இங்கு, தகவல்களை தனி மனிதர்களுக்கு வழங்குவதில் வெற்றி கண்டது மட்டுமில்லாமல், சீதோஷன மாற்றத்தின் பரச்சினைகளுக்கும் இந்த சமூகத்தில் கலந்துரையாடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. இந்த செயல்பாடின் மாற்றம் ஒருவரிடமிருந்து துளிர்ந்து, மற்ற சமூக மக்களுக்கு சென்றடைந்து, சமூக அளவிலான தாக்கத்தை பெற்றது என்ற வகையில் இந்த கிராமம் ஒரு ஆர்வமுடைய மாதிரியின் பிரதிநிதியாக திகழ்கிறது. மேலும் கிராம நேரடி நிகழ்ச்சி, இந்த செயல்முறையை துவக்குவதற்கு முக்கிய பங்கு வகித்தது.
ஷ்வேதா பரஜபதி மற்றும் கசாலா ஷேக்
Shweta Prajapati Deputy Manager, Development Alternatives GazalaShaikh Assistant Programme Director Development Alternatives B-32, TARA Crescent Qutub Institutional Area, New Delhi - 110 016
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2015, வால்யூம் 17, இதழ் 1



