விவசாயிகளாக அங்கிகாரம் பெறுதல் – கேரளாவில் ஒன்றுகூடிய பெண்களின் வெற்றிக்கதை


விவசாயத்தில் பெண்களின் வெற்றியை வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருக்கிறது கேரள மாநிலம். பெண்கள் குழுக்களின் ஒன்றுகூடிய சக்தி, உள்ளூர் சுய அரசுகளின் ஒருங்கிணைப்பு, மற்றும் திட்ட செயல்படுத்துவதற்கு முன் அளிக்கும் நிதியுதவி நிலமற்ற பெண்களுக்கு அவர்கள் வர்த்தக இயற்கை விவசாயிகளாக கேரளாவில் உருவெடுத்துள்ளனர். பெண்கள் தற்போது பெரு விவசாயிகளாக, குழு அடிப்படையில் அதிக பகுதிகளில் நெல், காய்கறிகள், வாழைப்பழம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை சாகுபடி செய்வதை மாநிலத்தில் காண முடிகிறது. இந்த பெண்கள் குழுக்கள் மூலம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளாக அங்கிகாரம் பெற்று வருகின்றனர்.


கடந்த முப்பது ஆண்டுகளில், சமூக பொருளாதார மாற்றங்களினால், கேரளாவில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்கள் யாவும் சாகுபடி அல்லாத மற்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதிகாித்துவரும் கூலி செலவுகள், சிறந்த சந்தை உதவி இல்லாமை, குறைந்த வருமானம் மற்றும் தொடர்ந்து மாறிவரும் சீதோஷண நிலை போன்ற காரணிகள் யாவும், சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு ஆர்வமற்ற நிலை உருவாகியுள்ளது.
குடும்பஸ்ரீயின் கீழ் பெண்கள் கூட்டு சக்தியை பெற்றுள்ளனர். மேலும் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் கிடைத்தது. இவை நிலமற்ற பெண்கள் விவசாயிகளாக மாற்றியதற்கு முக்கிய பங்கு வகித்தன.

பரவலாக நெல் வயல்கள் தாிசாக விடப்பட்டது. இது விவசாயத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறைந்ததால், பெண் கூலியாட்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் பொிதும் பாதிக்கப்பட்டனர். பாரம்பாியமாக, கேரளா வேளாண் அமைப்பின் முக்கிய பங்குதாரர்கள், பெண்களே. இதில் பெரும்பாலானோர் சொந்த வயல்களில் பணியாற்றும் கூலி பெறாத கூலியாட்களாகவோ அல்லது மற்ற வயல்களில் பணியாற்றும் கூலியாட்களாகவோ இருக்கின்றனர். பொதுவாக மாநிலத்தில் பரவலாக, பெண்கள் குழுக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது, விவசாயம் செய்வதற்கான நிலம் இல்லாமை. நில உரிமையாளர்கள் தன் சொந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதில் தங்களது நில உரிமையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. கேரளாவில் உள்ள நில உரிமையாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக, சாகுபடி செய்வதற்கு நிலத்தை குத்தகைக்கு விடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு வகையான முறையற்ற முறையில் குத்தகைக்கு வடுவது புழக்கத்தில் இருந்தது. இம்மாதிரியான முறையற்ற குத்தகை ஏற்பாடுகளில் கூட, பெரும்பாலான நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தில் பெண்கள் குழு விவசாயம் செய்வதற்கு அனுமதிக்க தயாராக இல்லை. இதுவே, விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பை நிலைத்தத்தன்மை பெறுவதில் பாதிப்பு ஒரு பிரச்சனை.பெண்களை ஒதுக்கப்பட்ட வேளாண் வாழ்வாதாரங்கள், ஒரு முக்கிய வாய்ப்பாக கேரள அரசு கருதுகிறது. பெண்கள் , குழுவாக சிறு நிதி உதவியை பயன்படுத்தி, உள்ளூர்களில் உள்ள தாிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அரசின் குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்பட்டது.

குடும்பஸ்ரீ திட்டம்
குடும்பஸ்ரீ என்பது மாநில ஏழ்மை ஒழிப்பு அமைப்பு, 1998 –ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இந்த திட்டம், சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களை சக்திமிக்கவர்களாக்குவதன் மூலம் ஏழ்மையை ஒழிப்பதற்கு உள்ளூர் சுய அரசுகளுடன் பெண்களின் சமூக அளவிலான குழுக்கள் சேர்ந்து பணிபுரிவதற்காக மாநிலத்தில் பரவலாக உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு உள்ளூர் சுய அரசு அமைப்பான – கிராம பஞ்சாயத்து அல்லது நகர உள்ளூர் அமைப்பில், குடும்பஸ்ரீ மூன்று மட்டத்தில் கூட்டமைப்பை பெற்றுள்ளது. ஆதாவது, அக்கம்பக்கம் உள்ள நண்பர்கள் குழு, பகுதி வளர்ச்சி மையம் மற்றும் உள்ளூர் சமூக வளர்ச்சி மையம்.

ஒரு பகுதியில் வாழும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பத்து முதல் இருபது குடும்பங்கள் அடிமட்ட நண்பர்கள் குழுவாக பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு தொகுதியில், ஒரு பகுதி வளர்ச்சி மையம் உள்ள உள்ளூர் சமூக குழுவில், ஒவ்வொரு பகுதி வளர்ச்சி மைய பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலிருந்து ஐந்து உறுப்பினர்களை கொண்டது ஒரு பொதுக் குழு. குடும்பஸ்ரீயின் உயர் மட்ட அமைப்பு, அதாவது சமூக வளர்ச்சி மையம், உள்ளூர் சுய அரசு அமைப்பின் அடுத்த மட்ட இடத்தில் உள்ளது.
குடும்பஸ்ரீ திட்டத்தின் கிராம பஞ்சாயத்து அளவிலான ஒருங்கிணைந்த அமைப்பான உள்ளூர் சமூக வளர்ச்சி மையம், ஒட்டுமொத்த அமைப்பை செயல்படுத்துவதற்கு சிறந்த பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு கிராம பஞ்சாயத்து அளவில் குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கூட்டு பொரறுப்பு குழுவை உருவாக்குவது, பெண்கள் குழுக்களுக்கு கடன் பெறும் படிவத்திற்கு தேவையான ஆவணங்கள் தயாரித்தல், 250 முதல் 300 வரை உள்ள கூட்டு பொருப்புக்குழுக்களை நன்கு பார்வையிடுதல், அவர்களுடைய செயல்பாடுகளுக்கு உதவிபுரிதல், கிராம பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறையுடன் நட்புறவை மேம்படுத்தி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவது, பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சிகள் வழிநடத்துதல் மேலும் கடனை குழுக்களால் காலம் தவறாமல் திரும்ப செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

சமூக வளர்ச்சி மையம் மற்றும் உள்ளூர் சுய அரசின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், பங்கேற்போடுகூடிய அரசியலமைப்பு சமூகத் தேவைகளின் வளர்ச்சியை அடிமட்டத்திலிருந்து உயர்வதற்கு ஒருங்கிணைப்பது மற்றும் இது உள்ளூர் சுய அரசின் கருவியாக பயன்படுத்தி பல்வேறு ஆதாரங்களிலிருந்து உள்ளூர் வளர்ச்சி மற்றும் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பதே ஆகும். நபார்ட் வங்கியின் கீழ் இயங்கும் கூட்டு பொறுப்புக் குழு திட்டத்தில் வட்டியில்லாமல் குழு விவசாயத்திற்கு நிதியுதவி பெறப்பட்டது. கு.பொ.கு திட்டத்தின் கீழ் குழுவை அடிப்படையாகக் கொண்டு நிதியுதவி பெற்று விவசாய செயல்பாடுகளை நான்கு முதல் ஐந்து பெண்கள் கொண்ட குழு செய்தது. தேசிய கிராம வாழ்வாதார அமைப்பின் கீழ் உள்ள, மகிளா கிசான் சசக்திகரன் பாியோஜனாவிடமிருந்து குறைந்த வட்டிவிகிதத்தில் குடும்பஸ்ரீ உதவியுடன் நிதியுதவிக்கு மானியம் பெற்றதற்கு மிக முக்கிய பங்கு வகித்து, பெண்களின் கனவை நனவாக்கியது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 2.8 லட்சத்திற்கும் மேலான பெண் உறுப்பினர்கள் 61836 கூ.பொ.கு- லாக ஒருங்கிணைந்து, தற்போது தாிசு நிலத்தில் விவசாயம் செய்துவருகின்றனர்.நடப்பு ஆண்டில், கூ.பொ.கு விவசாயம் மூலம் மாநிலத்தில் 38706 ஹெக்டர் நிலப்பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டது. இது மேலும் பெண்கள் விவசாயத்தை மீண்டும் 39000 ஹெக்டர் பரப்பளவில் பெரும்பாலும் இயற்கை விவசாயத்தையே மேற்கொள்ளப்பட்டது என்றும் புரிந்துகொள்ளலாம். நெல், (10934 ஹெக்டர்), வாழை (10648 ஹெக்டர்), கழங்குகள் (8686 ஹெக்டர்), காய்கறிகள் (8476 ஹெக்டர்), மற்றும் இதர பயிர்கள் (14433 ஹெக்டர்) ஆகியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது

இயற்கை சார்ந்த குழு விவசாயம்
பெரும்பாலான பெண் குழு உறுப்பினர்கள் குறைந்த இரசாயன இடுபொருட்களுடன், இயற்கை சார்ந்த விவசாயத்தை பின்பற்றுகின்றனர். இவர்களுள் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இயற்கை விவசாயத்தை முழுமையாக பின்பற்ற முடிகிறது. இயற்கை எருவிற்கு இவர்களுள் சிலர் பசுஞ்சானம், கோழி எரு, மண்புழு உரம், காட்டு செடி எரு, தென்னை நார் உரம் போன்றவைகளை உபயோகப்படுத்தி தனக்கு தேவையான சொந்த உரத்தை தயார் செய்துகொள்கின்றனர். பூச்சி மேலாண்மைக்கு, பெண் குழக்கள் அதிகமாக தயாரிக்கப்படும் உயிர் இடுபொருட்களையே சார்ந்து இருக்கின்றன. செலவு மற்றும் கூலி ஆகிய இரண்டும் அதிகம் தேவைப்படும் இயற்கை சார்ந்த விவசாயத்தில், தங்களது விளைபொருட்களுக்கு ஞயாயமான விலை கிடைக்கவில்லை என்று வறுந்துகின்றனர்.ஆனால் சில பெண்கள் உள்ளூர் சமூகங்களிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான உணவு அளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு திருப்தியடைந்ததை வெளிப்படுத்தினர்.

சில பெண் குழுக்கள், அவர்களது விலைபொருட்களை பதப்படுத்தி, அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பதற்கு ஆர்வமூட்டப்பட்டது. அலம்கோட் மற்றும் தென்னல்ல பஞ்சாயத்துகள் தங்களுடைய புதுமையான தலைமை பண்புகளை செய்துகாட்டியுள்ளன. ஆவை பெண் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை சேகாிப்பது, உள்ளூர் அரிசி ஆலைகளில் அரைத்தல் மேலும் தென்னல்ல அரிசி மற்றும் ஆலம்கோட் புத்தாரி இயற்கை அரிசி என்று சொந்த பெயாில் விற்கப்படுகிறது. பல்வேறு அரிசி விளைபொருட்களான அவல், அரிசி மாவு, உடைந்த அரிசி போன்றவைகளும், இந்த இரண்டு பெண் விவசாய குழுக்கள் சந்தைக்கு அறிமுகம் செய்தது. நபார்ட் வங்கியின் உதவியுடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் பெண் விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் உருவாவதற்கு உதவியது.

தாக்கம்
‘தற்போது நாங்கள் விவசாயிகள், பணியாளர்கள் அல்ல” என்னால் என் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்க முடிகிறது”, “என் மகள்களின் திருமணத்திற்கு என்னால் தங்கம் வாங்க முடியும்”, ‘நான் இருசக்கர வாகனத்தை சொந்தமாக வைத்திருக்றேன்”, ‘என்னால் என் பெயாில் நிலம் வாங்கி புதிய வீடு கட்ட முடியும்”, ‘என்னால் எனது கணவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க முடியும், மேலும் அவருடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கு உதவவும் முடியும்”, நான் உற்பத்தி செய்த நெல்லை என்னால் சேமித்து வைக்க முடியும், ‘இது வருடம் முழுவதும் என் குடும்பத்திற்கு தேவையான அரிசியை பெற முடிந்தது. பணம் ஈட்டும் உறுப்பினராக கருதி எனக்கு மாியாதை செலுத்துகின்றனர் மேலும் என் குடும்பத்தில் அனைத்து முடிவெடுக்கும் விஷயங்களுக்கும் என் ஆலோசனையை கேட்கின்றனர்”, ‘என் கணவர் நிதியுதவிக்காகவும், நண்பர்கள் வளர்ச்சி தகவல்களை பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து பெறுவதற்கு அணுகுகின்றனர்”. இவை யாவும் பெண்களின் சில குறல்கள் திட்டத்தின் தாக்கமாக அவர்கள் வாழ்வில் பரதிபலிக்கிறது.

அன்னமனடா(திருசூர்), ஆலத்தூர் (பாலக்காடு) , ஆலம்கோட் மற்றும் தென்னல்ல (மல்லபுரம்) ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து அளவிலான குடும்பஸ்ரீ அமைப்புகளை உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் வேளாண் அலுவலகம் உதவியோடு ஏற்படுத்தி,அதன்மூலம் சாகுபடி செய்யமுடியாத நில உரிமையாளர்களிடமிருந்து பெற்று ‘நில வங்கி” என்ற முதற்கட்ட அமைப்பின் மூலம், பெண்கள் குழுக்களுக்கு தேவையான குத்தகைக்கு விடும் நிலங்கள் அவர்களுக்கு உறுதியாக கிடைக்கும்படி செய்கின்றனர். நில உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் நிலத்தை சாகுபடி செய்வதற்கான தேவை , குத்தகை விவசாயத்தை எடுப்பதற்கு பெண்கள் குழுக்களின் தயார் நிலை, மேலும் வேளாண் அலுவலகம் மூலம் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது மூன்று வருடங்கள், குத்தகைக்கு எடுக்கும் வழிமுறை ஆகிய காரணிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் நில உரிமையாளர்கள் அவர்களது நிலத்தை பெண் விவசாயிகளுக்கு குத்தகைக்கு அளிப்பது பாதுகாப்பானது என்று உணர்ந்துள்ளனர். மிகுவும் ஆர்வமிக்க ஆலம்கோட் மற்றும் தன்னல்ல பஞ்சாயத்துகளை சேர்ந்த பெண் தலைவர்கள் பதஷேகரா குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். (வேளாண்மை துறை ஏற்படுத்திய உள்ளூர் நெல் விவசாயிகளின் குழுமம்).

கடந்த காலத்தில் பெண்களுக்கு கடனுதவி அளிக்க ஆர்வமில்லாத வங்கி முகமைகள், தற்போது பல பெண்கள் குழுக்களுக்கு அதிக கடன் அளிக்கப்படுகிறது. கூட்டு பொறுப்புக் குழு திட்டம் மூலம் செயல்பாட்டிற்கு முன் அளிக்கப்பட்ட கடனுதவி மற்றும் பெண்கள் குழுக்கள் சிறப்பான முறையில் செய்த மேலாண்மை ஆகியவை கேரளாவில் உள்ள பெண்களை தொழில் விவசாயிகளாக மாற்றிய கற்களாக இருக்கிறது.

நன்செய் நில உயிர்ச்சூழல் அமைப்பின் பாதுகாவலர்கள்
உறுதியாக இடுபொருட்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைப்பதனால் ஏழைப் பெண்கள் விவசாயத்தை செய்கின்றனர். மேலும் அவர்களை பணம் ஈட்டுபவர்களாக மாற்றுகிறது, அதன்பின்னர் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் மதிப்பிடப்படும் உறுப்பினர்களாக மாறுகின்றனர். குடும்பஸ்ரீயின் கீழ் பெண்கள் கூட்டு சக்தியை பெற்றுள்ளனர். மேலும் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் கிடைத்தது. இவை நிலமற்ற பெண்கள் விவசாயிகளாக மாற்றியதற்கு முக்கிய பங்கு வகித்தன.

நீண்ட காலமாக தாிசாக விடப்பட்ட நெல் வயல்களில் நிலைத்த நெல் சாகுபடி செய்ததனால், கேரளாவில், பெண்கள் குழுக்கள் இயற்கையாகவே ‘நன்செய் நில உயிர்ச்சூழல் அமைப்பின் பாதுகாவலர்களாக உருவாகியுள்ளன. கேரளாவில் உள்ள பெண் விவசாயிகள் பாதுகாப்பான மற்றும் நல்ல தரமான உணவு உற்பத்தி செய்து, உள்ளூர் மக்களுக்கு அளிக்க முடிகிறது என பெருமிதம் கொள்கிறார்கள். அதே சமயத்தில் கவுரவமான வருமானம் பெற்று, நல்ல தரமான வாழ்க்கை வாழவும் முடிகிறது.

பி.எஸ். கீதாகுட்டி


Geethakutty P S
Professor and Project Co-ordinator
Centre for Gender Studies in Agriculture
Kerala Agricultural University
Vellanikkara, Thrissur, Kerala
E-mail: geethakutty@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2015, வால்யூம் 17, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...