உணவு இறையாண்மை என்பது சமூகங்கள் அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றில் இருந்து விடுபட்ட அனைவருக்குமான சமமான உலகை உருவாக்குவதாகும். நமது சொந்த தன்னாட்சி உணவு மற்றும் வேளாண் முறைகளை வரையறுப்பதன் வழியாகவும், அதன் மூலம் பெருநிறுவனங்கள் உணவு மற்றும் வர்த்தக ஆட்சியை எதிர்ப்பதற்கும் மற்றும் ஒழிப்பதற்கும், நமது வீடுகளிலும், சமூகத்திலும் நமது உணவுக்கான உரிமையை பெறுவதற்கான ஒரே வழியாகும். அப்படியாக எதிர்க்கவும், வலியுறுத்துவற்கான சிலவற்றுள் உணவு இறையாண்மைக்கான இந்திய கூட்டமைப்பும் ஒன்றாகும்.
உணவுக்கான அர்த்தம் வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு பொருளாக ஏற்கப்படுகிறது. இன்று நாம் வெகு விரைவாக நமது உணவு, உணவு முறைகள் மற்றும் உணவு கலாச்சாரத்தின் மீது நமக்கு இருக்கும் கட்டுப்பாட்டை இழந்து வருகிறோம். நாம் என்ன உண்ண வேண்டும், அந்த உணவு எப்படி வளர்க்கப்பட வேண்டும், பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், எப்படி பேக் செய்யப்பட வேண்டும், சந்தைப்படுத்தப்பட வேண்டும், எப்படி பாிமாறப்பட வேண்டும் போன்ற உணவைச் சுற்றி உள்ள நமது முடிவுகள், அரசாங்கங்களின் வழிகாட்டுதல்களினால் ஒரு சில பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பசுமை மற்றும் வெண்மை புரட்சிகள்தான் நமது உணவு முறைகளில் தொழில்மயமாக்கப்பட்டதன் முதல் படிகளாகும், அதன் பின் 1990 களில் கொண்டு வரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கள் தொழில் முறை முதலாளித்துவ முறைகளை விரிவுபடுத்தும் வழிகளை ஒருங்கிணைத்தது. வேளாண் வணிகம் மற்றும் உணவு சாம்ராஜ்யங்கள் நமது உணவு உற்பத்தி, நுகர்வு மற்றும் பகிர்வை வேகமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகின் பார்வையில் மற்றும் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் தற்சார்பு மற்றும் சுதந்திரமாக இருந்த சிறு விவசாயிகள் தற்போது பெருநிறுவனங்களின் பொருட்களான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உட்பட இயந்திர தொழிற்நுட்பங்களை நுகர்பவர்களாக மாறி விட்டனர். பெருநிறுவனங்களில் அடிமைகளாய், அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைவான கூலிகள் தொழிற்சாலைகளுக்கான உணவுகள் தயாரிக்கவும், கடன்களின் சுழற்சியில் சிக்க வைத்து அவர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும் இருந்து வருகிறது. எனவே, ஒரு காலத்தில் பல்வகைப்பட்ட வேளாண் உயிர்ச்சூழலோடு அமைக்கப்பட்ட உணவு பயிர்கள் விளைந்த நிலங்களில் தற்போது சந்தைக்கு தேவைப்படும் ஓரினச் சாகுபடி பயிர்களான நெல், தொழிற்சாலைகள் மற்றும் கால்நடைகளுக்கும் , கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம், காப்பி, முந்திரி மற்றும் ரப்பர் தோட்டங்களாகவும், வெங்காயம், தக்காளி, மிளகாய், கரும்பு மற்றும் இதர ஓரின காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவைகள் சந்தையில் உள்ள உணவு சங்கிலியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அதே பெரு நிறுவனங்களிடம் மட்டுமே விற்கும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை உணவு உற்பத்தி முறையானது, சமூகத்தில் ஏற்கனவே நிலவி வரும், கட்டமைக்கப்பட்டுள்ள சமத்துவமின்மையை மேலும் அதிகப்படுத்தவும், மற்றும் இந்த புவியின் நடைமுறையில் உள்ள இயற்கை முறைகளில் பிரச்சனைகளை உருவாக்கவும் இட்டுச் செல்கிறது. இது இயற்கையின் மீது நமது கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்புகள் அறுபடுவதை மேலும் தீவரப்படுத்தும். நமது வாழ்வின் வழிமுறைகளில் முடிவுகள் எடுப்பதற்காக நாம் நமது விதைகள், கலப்பினங்கள், நிலம், நீர், காற்று, அறிவு, ஆரோக்கியம் மற்றும் நமது இறையாண்மை போன்றவற்றை இழந்து வருகிறோம்.
இந்த அழிவுகளுக்கு மத்தியில், எதிர்ப்பின் விதைகள் தொடர்கின்றது. ஆதிவாசிகள், தலித்துகள், விவசாயிகள், கால்நடை மேய்ப்பவர்கள், மீனவர்கள் மற்றும் இணை உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்களின் வள ஆதாரங்கள், உணவு மற்றும் வாழ்க்கைக்கான வழி மீது அவர்களுக்கு உள்ள கட்டுப்பாட்டை பாதுகாக்க ஒன்றுபடுகின்றனர். அப்படியாக எதிர்க்கவும், வலியுறுத்துவதற்கான சிலவற்றுள் உணவு இறையாண்மைக்கான இந்திய கூட்டமைப்பும் ஒன்றாகும்.
இந்த கூட்டமைப்பானது உணவு இறையாண்மை குறித்து பொது பார்வை மற்றும் உணவு உரிமை மற்றும் அன்னை பூமியின் மீதான உரிமையை பாதுகாக்கவும், ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் மற்றும் அவர்களின் எதிர்கால மக்களுக்காகவும் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உணவு இறையாண்மை என்பது சமூகங்கள் அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றில் இருந்து விடுபட்ட அனைவருக்குமான சமமான உலகை உருவாக்குவதாகும். நமது சொந்த தன்னாட்சி உணவு மற்றும் வேளாண் முறைகளை வரையறுப்பதன் வழியாகவும், அதன் மூலம் பெருநிறுவனங்கள் உணவு மற்றும் வர்த்தக ஆட்சியை எதிர்ப்பதற்கும் மற்றும் ஒழிப்பதற்கும், நமது வீடுகளிலும், சமூகத்திலும் நமது உணவுக்கான உரிமையை பெறுவதற்கான ஒரே வழியாகும்.
உணவு இறையாண்மைக்கான நமது செயல்முறைகள்:
சமூகத்தின் செயல்பாடு – பிரதிபலிப்பு – செயல்பாடு இப்படியான நடைமுறைகள் உணவு இறையாண்மையை தடுக்கும் காரணிகளை அடையாளம் காணவும் மற்றும் அதனை பாகுப்பாய்வு செய்வதும், அதன்படி உணவு இறையாண்மைக்கான கூட்டு உருமாற்று செயல்பாடுகளை பாிணமிக்கச் செய்வது இந்த இயக்கத்தின் முக்கியமான செயல்பாடாகும். சமூகத்தின் உணவு இறையாண்மைக்கான திட்டமானது, அரசியல் செயல்பாட்டின் சிக்கலான வெளிப்பாட்டினால் உருவானது. ஆதிவாசி சமூகங்கள் மத்தியிலான வாழ்க்கை சுழற்சி மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பாளர்களின் வேளாண் சுழற்சி, அதனுடன் கூடிய சமூகங்களின் பாரம்பாிய அறிவு இந்த திட்டத்திற்கான கட்டமைப்பை கொடுத்தது. திட்டத்தில் வள ஆதாரங்களான நிலம், நீர், காடுகள், எல்லைகள், உயிரினப் பன்மயம், விதைகள், கலப்பினங்கள் மற்றும் அறிவு போன்றவற்றை ஜனநாயக முறையில் ஆள்வது, மண்ணில் உயிரினங்களை வளர்த்தெடுப்பது, ஆரோக்கியமான, பன்மய மற்றும் கலாச்சார உணவு மற்றும் வேளாண் சூழலை பகிர்ந்து கொள்வது மற்றும் விதை மற்றும் கால்நடை இனங்களின் இறையாண்மையை உள்ளூர் விதைகளை மற்றும் கால்நடை இனங்களை பாதுகாத்து மற்றும் பாிமாறிக் கொள்வதன் வழியாக உறுதிப்படுத்துவது, வேளாண் பணிகளை, அறிவை, பொருட்களை பகிர்ந்து கொள்வது, உள்ளூர் உணவு சந்தைகளை பலப்படுத்தி அதன் மூலம் உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் இணைப்பது போன்றவை உணவுப் பயிர்களை புதுப்பிக்கவும், பெருக்கவும் இட்டுச் செல்கிறது. இந்த கூட்டமைப்பானது, அதன் உறுப்பினர்கள், குறிப்பாக அந்த பகுதியில் மறைந்து போன விதைகளை மீட்டெடுக்கவும், அந்தப் பகுதியையும் தாண்டி விதைகளை பகிர்ந்து கொள்ளவும், பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. உணவு இறையாண்மையின் மையக் கருத்தாக உள்ளது சமூக நீதியாகும். எனவே சாதி, வகுப்பு, பாலின பாகுபாடு போன்ற அநீதியான கட்டமைப்புகளை உடைத்தெறிவதும் இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.
சமூகத்தில் தலைமுறைகளுக்கு இடையிலான, முதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான அறிவு கற்றலும், பகிர்தலும் ஒரு முக்கியமான அணுகுமுறையாகும். சமூகத்தில் உள்ள முதியவர்களிடம், குறிப்பாக பெண்களிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் விதமாக அவர்கள் பல்வகையான கிழங்குகள், மூலிகைகள், பழங்கள் மற்றும் விதைகளை சேகாிக்கும்போது அவர்களோடு இளைஞர்கள் இணைந்து, அவற்றை எப்படி சேகாிப்பது, சேமிப்பது, பதப்டுத்துவது, விதைகளை சேமிப்பது, சமூக விதை வங்கிகளை எப்படி உருவாக்குவது மற்றும் உள்ளூர் வேளாண் கருவிகளை எப்படி வடிவமைப்பது போன்றவற்றை கற்றுக் கொள்கின்றனர். உள்ளூர் திருவிழாக்கள், பாடல்கள், நடனங்கள், தெரு நாடகங்கள், சமூக அளவில் ஒன்றாக இணைந்து சமைப்பது மற்றும் மற்ற கலாச்சார செயல்பாடுகளின் மூலமாக உணவு பன்மயத்தை கொண்டாடுவது, அவற்றை அவர்களின் வாழ்க்கை சுழற்சியோடும், வேளாண் பருவ கால அட்டவணைகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பதும், அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். பிரச்சாரங்கள், பயணங்கள், உணவு இறையாண்மைக்கான கருத்தரங்கங்கள், சில குறிப்பிட்ட கேள்விகள், சமூக அளவிலான செயல் ஆராய்ச்சிகள், அனுபவ பகிர்வுகள் மற்றும் பிரச்சனைகளை ஊடகங்கள் மற்றும் புகழ்பெற்ற கல்வி பத்திரிக்கைகள் மற்றும் வேறு சில அணுகுமுறைகள் வாயிலாக பகிர்ந்து கொண்டு ஒருமைப்பாட்டை வளர்ப்பதும், உணவு இறையாண்மைக்கான கூட்டுச் செயல்பாடுகளும் நடத்தப்படுகின்றன.
இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களின் உணவு இறையாண்மைக்கான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு கூட்டு அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஆதிவாசி பகுதிகளில், ஆதிவாசி சமூகத்தினர் பாரம்பாிய கிராம கவுன்சில்கள் மூலம் கூட்டு குரலாக – ஆதிவாசி ஐக்கிய வேதிகா – என்ற வகையில் அவர்களிடம் இருந்து வனஉரிமைச் சட்டம் 2006 மற்றும் பி.இ.எஸ் ஏ போன்றவற்றால் பறிக்கப்பட்ட அவர்கள் சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் நில உரிமை மற்றும் எல்லைகள் உரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக ஒன்று கூடுகின்றனர். ஆதிவாசிகளின் பகுதிகளில் தொழிற்சாலை முறையிலான உணவு உற்பத்தி நடைபெற்று பெரும் அழிவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு, மெகப்பூப் நகாில் சென்சு ஆதிவாசி சமூகங்கள் அரசின் மானியத்திட்டங்களினால் ஈர்க்கப்பட்டு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி பருத்திக்கு மாறியுள்ளனர். உணவுப் பயிர்கள் குறைந்ததும், மண் வளம் குறைந்ததும் மற்றும் புனிதமாக கருதப்பட்ட தேனீக்கள் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் பெருமளவு குறைந்துள்ளது. நல்லதொரு விவாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகளின் விளைவாக, சமூகங்கள் தங்களின் பருவகால உணவு சுழற்சியை, தாவரங்களை, உயிரினங்களை, உயிரினப் பன்மயத்தை உணவு தொடர்பான திருவிழாக்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த சுழற்சியானது அவர்கள் தங்களின் காடுகளோடு உள்ள உறவை உறுதிப்படுத்துவதற்கான மிகவும் பயனளிக்கக்கூடிய காட்சி முறையாக உள்ளது. மற்றும் இது பருவ நிலை மாற்றங்களின் தாக்கங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து கண்காணிக்கும் வழிமுறையாகவும், அது குறித்து விவாதித்து அதற்கான செயல் அணுகுமுறைகளை திட்டமிடவும் உதவுகிறது. இந்த நடைமுறைகள் பருத்தி பயிரிடும் விவசாயிகளை கவர்வதோடு, மீண்டும் உணவு பயிர்களை வேளாண் உயிர்ச்சூழல் முறைக்கு திருப்பி அழைத்துவரவும் உதவுகிறது. இது இயற்கையில் நடைபெறும் மகரந்த சுழற்சிகளை மீண்டும் உருவாக்கி தேனீக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலித் மகிளா சங்கம், அவர்களின் சமூகத்தை நில உரிமைக்கான போரட்டத்தில் முன்நின்று நடத்துகிறது. அவர்களின் போராட்டத்தில், நிலம் அவர்களின் கையில் கிடைத்தப்பின் அதில் வேளாண் உயிர்ச்சூழல் முறைகளை, சமூகங்களின் அறிவு, ஞானம் மற்றும் மண் நல உருவாக்கத்திற்கான மற்றும் உணவு பன்மயத்தை மீண்டும் உருவாக்கும் செயல்பாடுகளை உள்ளடக்க வேண்டும் என்பதாகும். இந்த நடைமுறைகள் பெண்கள் கூட்டாக தங்கள் மீதான பாலின பாகுபாடு, வன்முறை மற்றும் பாகுபாடு போன்றவற்றை எதிர்த்து போராடுவதற்கான சக்தியை பலப்படுத்தியுள்ளது. இன்று, பெண்கள் தங்களின் பொருட்களை விற்பதற்காக சொந்தமாக உள்ளூர் சந்தையை உருவாக்கியுள்ளனர்.
டெக்கானி கோரிலா மிகலா பெம்பாகடருலா சங்கம் தெலுங்கானவில் உள்ள ஆடு மேய்பவர்களின் வாழ்வாதாரத்திற்கு கருப்பு உல் டெக்கானி ஆட்டினத்தை பாதுகாக்கும் வேலைகளை நடத்தி வருகிறது. இந்த ஆடு, அங்குள்ள மக்களுக்கு கறி, உரம் மற்றும் உல் இவற்றிற்கு மிகவும் ஆதாரமாகும். இந்த உல்லானது கொன்காடி எனப்படும் பாரம்பாிய போர்வையை நெய்வதற்கு பயன்படுகின்றனது. 90 களின் மத்தியில் அரசின் கொள்கைகள் பலமான மற்றும் விரைவாக வளரும் நெல்லூர் கலப்பின (கடலோர ஆந்திரப்பிரதேசம்) வகையில் இருந்து தயாரிக்கப்படும் உல் அல்லாதவற்றை டெக்கானி மந்தையில் அறிமுகப்படுத்தியன் விளைவாக உல் அல்லாத கலப்பு மந்தைகள் தோன்றின. சங்கமானது டெக்கானி ஆட்டினத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் அதன் வாயிலாக நெல்லூர் ஆட்டினத்திற்கு மாற்றாக கொண்டுவருவதிலும் கவனத்தை செலுத்தியது. காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்கான உரிமையை நிலைநாட்டுவதும், அக்கேசியா மரங்கள் விழுவதை தடுப்பதும், பொது மேய்ச்சல் நிலங்களை நிலைநாட்டுவதும், அதனோடு கால்நடைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொறுப்பை தனியார்மயமாக்குவதை தடுக்கும் வகையில் அரசின் கொள்கைகளில் அழுத்தங்கள் ஏற்படுத்தவதும் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்தும் அவர்களின் முக்கிய பணியாக இருந்தது. சுத்தமான டெக்கானி ஆட்டினம் கிடைக்கப் பெற்றது, கொண்காடியை கண்காட்சிகள் வழியாக உள்ளூர் சந்தைகளில் விற்பதற்கும், அதிகம் கிடைத்த விலையானது உற்பத்தி செலவில் குறைத்து கொடுப்பதற்குமான உத்வேகத்தையும் அளித்தது.
2011 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ கோபி ரித்து சங்கம் தங்களின் சொந்த பால் சந்தையை ஒருங்கிணைத்ததன் விளைவாக பெருவணிக நிறுவனங்கள் நடத்தும் பால் பொருள் விற்பனை ஆதிக்கத்தை எதிர்க்க முடிவு செய்தது. 6 லிட்டர் பால் ஒரு நாளைக்கு என்ற நிலையில் இருந்து இன்று 600 லிட்டர் பால் ஒரு நாளைக்கு 5 கிராமங்களில் உள்ள 80 விவசாயிகளிடம் இருந்து சேகாித்து, உள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் மதனபள்ளி என்ற அருகாமையில் உள்ள 150 வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர். சங்க உறுப்பினர்களும், நுகர்வோர்களும் கூட்டாக பாலின் விலையை முடிவு செய்கின்றனர். விவசாயிகளும் பல்வகையான உணவு பயிர்களான: சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுகின்றனர். வீட்டு உபயோகத்திற்கு பின், அவர்கள் சிறுதானியங்களை பதப்படுத்தி , உபாியானவற்றை கிராமப்புற மருத்துவமனைக்கு அருகில் ஒரு கடை அமைத்து விற்கின்றனர். அண்மையில் உள்ளூரில் உள்ள கடைக்காரர் வழியாக அவர்களின் சிறுதானியங்களை விற்க ஆரம்பித்துள்ளனர். அவரும் சங்கத்துடன் ஒரு ஆண்டிற்கும் மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் தனது கடையில் சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட உணவுப் பொருட்களை தனது மெனுவில் சேர்த்துள்ளார். இது சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கும் அதன் வாயிலாக உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.
எப்.எஸ். ஏ முதலாளித்துவ பொருளாதார முறையில் ஒரே மாதிரியான ஏகத்துவம் கொண்ட சரக்குகளை சந்தையில் விற்கும் கருத்தை தள்ளுபடி செய்தது. உள்ளூர் சந்தைகளே முன்னேறி செல்வதற்கான பாதையாகவும், உற்பத்தி என்பது மக்களின் கட்டுப்பாட்டிலும், பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதும் தான் இந்த சவால்களை எதிர்கொள்ளும் சிறந்த வழியாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்குமான ஒரு உறுதியான வழி. இதில் வழிகாட்டும் தத்துவம் என்னவென்றால் நாம் விளைவிப்பதையே நாம் உண்ணுவது, உபாியானவற்றை விற்பது மற்றும் வறட்சியான காலங்களில் சமாளிக்க சேமிப்பு முறைகளை புதுப்பிப்பதாகும். முக்கியமாக நாம் உள்ளூர் சந்தைகளை பேச்சுவார்த்தைகளின் வாயிலாக நுகர்வோரையும் பங்கேற்கவும் போராடவும் செய்து, வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதாகும்.
சுதந்திரமாக விடப்பட்ட சமூக அளவிலான செயல்பாட்டு ஆராய்ச்சிகள் எங்களின் நடைமுறையில் மற்றுமொறு முக்கியமான உபகரணம். அது கூட்டமைப்பில் பணிக்குழுக்களை அமைத்து அதன் வழியாக பிரச்சனைகளை வடிவமைத்து புரிந்து கொண்டு, சமூக அளவில் விவாதங்கள் வாயிலாக வெளிப்படுத்தியது. உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் புதுமையான செயல்பாடுகள் பெருமளவு மக்களை விவாதத்திற்கு உட்படுத்தி நீதிக்கான நிலையான கூட்டுப் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டது. மாட்டிறைச்சிக்கு தடை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான நிலங்கள் ஒதுக்குவது போன்ற பால் பெருக்க துறையில் இன்னும் சில பிரச்சாரங்கள் பிரச்சனையோடு சென்றுகொண்டுள்ளன.
இயக்கத்தை கட்டமைத்தல்;:
உணவு இறையாண்மை குறித்த விவாதங்களை கிராமப்புற மற்றும் நகா;புற பின்னணியில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சென்றடையும் வண்ணம் எடுத்துச் செல்வது இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான பணியாகும். இது தொடர்பான விவாதங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், தெலுங்கானவில் உள்ள இயக்கத்தின் குடலி கற்றல் மையத்திலும் அமைந்துள்ளது. அவர்கள் கூட்டு எதிர்காலம் குறித்த சிந்தனை மற்றும் தூண்டல் கேள்விகள் எழுப்ப பல்வேறு வழிமுறைகளில் நடைபெறுகிறது. அவற்றில் வேளாண் உயிர்ச்சூழல் விவசாயிகளை சந்திப்பது, அவர்களின் களங்களை சென்று பார்ப்பது, அவர்கள் நிலங்களில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உண்பது, அந்த பகுதியின் உயிரினப் பன்மயத்தை வரைந்து ஆவணப்படுத்துவது, மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கலாச்சாரத்திற்கும், உணவிற்கும் உள்ள தொடர்புகளை புரிந்துகொள்வது, உணவு இறையாண்மைக்கு தடையாக உள்ள அமைப்புகளை அறிந்து கொள்வதும், அவற்றை கேள்விக்குள்ளாக்குவதும், மண்ணோடு வேலை செய்வதை கற்றுக்கொள்வதும், அவர்களின் எண்ணங்களை பல்வேறு புதிய வழிகளில் கலை, பாட்டு மற்றும் தெரு நாடகங்கள் உள்ளடக்கி வெளிப்படுத்துவது. இந்த அனுபவங்களை அவர்களின் பள்ளிகள் மற்றும் சமூக சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பது (உதாரணத்திற்கு: பள்ளிகளிலும், வீட்டிலும் வேளாண் உயிர்ச்சூழல் முறையில் காய்கறிகள் வளர்ப்பது) குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு மிகவும் சக்திவாய்ந்த நடைமுறையாகவும், அவர்களின் சொந்த உணவு முறைகள் மற்றும் நுகாவு முறைகள் மீது அவர்கள் கட்டுப்பாடு செலுத்தும் முக்கியமான செயல்பாடாகும்.
சுதந்திரமான மற்றும் தனித்துவிடப்பட்ட தலைமுறைகளுக்கிடையேயான மற்றும் கலாச்சாரக்களுக்கு இடையேயான புகழ்மிக்க கல்வி நடைமுறைகள், உணவு இறையாண்மையை ஒருங்கிணைப்பதற்கான கட்டுமான கற்கள். இந்த உறுதிப்பாட்டின் வானவில் வழியாக நாம் உணவு மற்றும் வேளாண் பேரரசுகளின் பிடியில் இருந்து கடந்து, விலகி சென்று, நமது தன்னாட்சியை உறுதிப்படுத்தவும், நமது பல்வகையான உணவு கலாச்சாரத்தின் மீது நமக்கு உள்ள உரிமைகளை பாதுகாக்கவும், ஒருவருக்கு ஒருவர் மற்றும் அன்னை பூமியோடு நல்லிணக்கத்தோடு, சமத்துமான எதிர்காலத்தை நோக்கி செல்வோம்.
The Food Sovereignty Alliance A-21 Sainikpuri, Secunderabad-500094 Telangana, India www.foodsovereigntyalliance.wordpress.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1



