உள்ளூர் விதைகளை பெறுவதற்கான வழிமுறைகளை கட்டமைப்பதன் மூலம் உணவு இறையாண்மையை அடைதல்


பாரம்பாிய ரகங்களை புதுப்பித்தல், பாதுகாத்தல் மற்றும் பிரதியெடுத்தல் போன்றவற்றில் நடைபெறும் பங்கேற்பு முறைகள் மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உணவு இறையாண்மையை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. தற்போது விவசாயிகள் உள்ளூர் விதைகள் மற்றும் அவர்கள் விரும்பும் விதைகளை பெறுவதற்குமான அறிவினை பெற்றுள்ளனர்.


விவசாயிகளின் வாழ்வாதார நிலைத்த தன்மைக்கு, பயிர்களின் மரபியல் பல்வகைமை என்பது குறிப்பாக பெருமளவு பலவீனமான உயிர்ச்சூழல், பருவகால மற்றும் பொருளாதார அழுத்தங்கள் நிறைந்த பகுதிகள் என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். உள்ளூர் வேளாண் பருவகால நிலைகளுக்கு பொருத்தமான பாரம்பாிய பயிர் ரகங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதற்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளின் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், உள்ளூர் பயிர்களான தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காட்டில் கிடைக்கும் உணவுகள் மற்றும் கிழங்கு வகைகள் மற்றும் உள்ளூர் மூலிகைகள் போன்ற பயிர்கள் பழங்குடி மற்றும் கிராமப்புற சமூகங்களின் ஊட்டச்சத்திற்கும், உணவு உத்திரவாதத்திற்கும் சிறந்த ஆதாரமாக விளங்கிய அனைத்தும் தற்போது அழிந்து வருகின்றன. விவசாயிகள் தற்போது மகசூலை அதிகாிக்கும் மேம்படுத்தப்பட்ட ரக விதைகளை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். இது விவசாயிகள் வெளி நிறுவனங்களை தங்களின் விதைகளுக்காக அதிகம் நம்பியிருக்கும் சூழலுக்கு இட்டுச் செல்கிறது. மேலும், அதிகளவு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு, இடுபொருட்களின் செலவினங்களில் செங்குத்தாக உயர்ந்து, சுற்றுச்சூழல் சீர்கேடும் மற்றும் ஒரினச் சாகுபடி அதிகாித்து உயிரினப் பன்மயத்தை பாதித்தது.

நன்துர்பார் மாவட்டம், மகாராஷ்டிராவில் பழங்குடியினர் மிகவும் அதிகம் உள்ள மாவட்டமாகும். குறிப்பாக சட்புடா குன்றுப் பகுதியில் உள்ள தாத்கான் மற்றும் அக்ககுவா வட்டத்தில் பெரும்பாலான மக்கள் பழங்குடியினர் மற்றும் மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்கள். இந்த வட்டத்தில் பில் மற்றும் பவரா என்ற இரண்டும் முக்கியமான பழங்குடியினர் ஆவார். பெரும்பாலான பழங்குடியின சமூகங்கள் சிறு மற்றும் குறு நிலப்பரப்புகளை கொண்டிருக்கும் ஏழ்மையான வேளாண் மக்களாவர். இருப்பினும் வேளாண்மையில் உற்பத்தி குறைவாக கிடைப்பதன் காரணமாக, இந்த பழங்குடியின் சமூகத்தினர் தங்களின் வாழ்வுக்கு தொடர்ந்து காடுகளையே நம்பியுள்ளனர். நன்துர்பார் மாவட்டம் குறிப்பாக பாரம்பாிய பயிர் சாகுபடியான சோளம், மக்காச் சோளம், சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் உண்ணக்கூடிய காட்டு பயிர் வகைமைகளுக்கு பெயர்போன மாவட்டமாகும். இருப்பினும், காலப்போக்கில் இந்தப்பகுதியின் உயிரினப்பன்மயம் விரைவாக அழிந்து கொண்டிருக்கிறது.
உணவு பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வேளாண்மையில் உள்ள அச்சுறுத்தல்களை குறைப்பதில் உயிரினப் பன்மயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து “பயாப்” என்கிற அரசு சாரா நிறுவனம், சமூகங்கள் தலைமையேற்று நடத்தும் விதமாக பழங்குடியினாின் உணவு பழக்கங்களை புதுப்பித்து பாதுகாத்து மேலாண்மை செய்யும் பணிகளை நன்துர்பார் மாவட்டத்தில் உள்ள தாட்கோன் மற்றும அக்கல்குவா வட்டத்தில் 14 மிகவும் பின்தங்கிய கிராமங்களில் துவக்கியது. இந்த முயற்சியானது பயிர்களின் பல்வகைமைகளையும் அது தொடர்பாக அறிவை ஆவணப்படுத்துவதையும், பங்கேற்பு முறையில் விதை உற்பத்தி மற்றும் உள்ளூர் அளவில் பாரம்பாிய ரகங்களை உள்ளூர் சமூகங்களின் துடிப்பான பங்கேற்போடு மேம்படுத்துவதையும், பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.

பாரம்பாிய ரகங்களை ஆவணப்படுத்துவது:
கிராம அளவில் உள்ள வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் முக்கியமான நபர்களிடம் கூட்டங்கள் நடத்தி ஆரம்பக்கட்ட தகவல்கள் பெறப்பட்டது. பின் கிராம அளவில் சேகாிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் சாியானவையா என்பதை உறுதிப்படுத்தவும், மேலும் கூடுதல் தகவல்களை பெறுவதற்கும் தொடதிச்சியாக குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. பணியாளர்களும், பழங்குடி சமூகத்தில் நடைபெறும் பாரம்பாிய திருவிழாக்கள் போன்றவற்றில் துடிப்போடு பங்கெடுத்து அவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதிலும், அவர்களின் விதைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றிய மேலும் கூடுதல் தகவல்களை சேகாிப்பதிலும் ஈடுபட்டனதி. பாரம்பாிய உணவுப் பயிர்களை பாதுகாப்பதில் ஆர்வமுடைய குடும்பங்கள் பட்டியிலிடப்பட்டன.

இந்த கூட்டங்களில், பணியாளர்கள் தற்போதும் சிறிய அளவிலான நிலங்களில் பாரம்பாிய பயிர் ரகங்களை சாகுபடி செய்யும் வேளாண் குடும்பங்களையும் அடையாளம் கண்டனர். பயாப் நிறுவனம் இந்த விவசாயிகளின் பங்கேற்போடு கிராம அளவில் விதை விழாக்களை நடத்தியது. கிட்டத்தட்ட 19 கிராம அளவிலான விதைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு அங்கு பாரம்பாிய பல்வேறு பயிர் வகைகளான சிறுதானியங்கள், சோளம், மக்காச் சோளம் மற்றும் உண்ணக்கூடிய பல்வேறு தாவர இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

விதை பாதுகாப்பதில் ஏற்கனவே அனுபவம் மற்றும் பாிட்சயம் கொண்ட 5 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் விதை பாதுகாப்பு குழுவாக உருவாக்கப்பட்டனர். இந்த குழுவானது மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பாரம்பாிய ரகங்களை சேகாிப்பதில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆரம்பக் கட்டத்தில் 12 வகையான பாரம்பாிய சோளமும், 9 வகையான மக்காச் சோளமும் சேகாிக்கப்பட்டன. அதன் பின் அனைத்து பயிர்களிலும் பாரம்பாிய ரகங்கள் சேகாிக்கப்பட்டன. மொத்தத்தில் 258 பாரம்பாிய ரகங்கள் சேகாிக்கப்பட்டன.

அட்டவணை 1 ல் உள்ளவற்றில் எத்தனை வகையான பாரம்பாிய ரகங்கள், எவ்வளவு பரப்பளவில் பயாிட்டப்படுகின்றன என்பதும், அவற்றின் குணாதியங்களும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

உள்நிலை பாதுகாப்பு:
உள் நிலை பாதுகாப்பின்போது பாரம்பாிய ரகங்கள் குறித்து தொகுக்கப்பட்ட தகவல்கள் மதிப்பீடு செய்வதற்காக காட்சிப்படுத்தப்பட்டன. சமூகங்களோடு ஒவ்வொரு பாரம்பாிய ரகங்கள் குறித்து விவாதித்தப்பின் சோளம், மக்காச் சோளம் என ஒவ்வொன்றிலும் 5 மிகச் சிறந்த பாரம்பாிய ரகங்கள் உள் நிலை பாதுகாப்பிற்காக தேர்வு செய்யப்பட்டன. (அட்டவணை 2) உள் நிலை பாதுகாப்பு திடல்களாக செயல்பட்ட விவசாயிகளின் நிலங்கள். பாரம்பாிய ரகங்களை பயிரிடுவதற்காக 10 உள் நிலை பாதுகாப்பு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பாதுகாப்பு பணிகளில் பங்கேற்ற சமூகங்கள், பாரம்பாிய ரகங்களின் உடல் செயல்திறனின் அடிப்படையில் அவற்றின் ரகங்கள் தேதர்விலும் துடிப்புடன் கலந்து கொண்டனர். விதை பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள், அறிவுகூர்மை கொண்ட விவசாயிகள் மற்றும் பயாப் பணியாளர்கள் உள் நிலை பாதுகாப்பு பகுதிகள் அமைக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் அவற்றின் வளர்ச்சி மற்றும் அறுவடை நிலைகளில் தொடர்ந்து சென்று பார்த்து ஆலோசனைகளை வழங்கினர். அறிவியல் பூர்வமான முறைகளில் உறுப்பினர்கள் தூய வரிசை தேதர்வு முறைகளை தேர்வு செய்வதில் பயிற்றுவிக்கப்பட்டனர். மேலும், விவசாயிகள் தங்களின் வழக்கமான முறைகளில் தூய வரிசை தேர்வுகளை செய்தனர். சில குறிப்பிட்ட குணாதியங்களான தானியங்களின் அளவு, தானியத்தின் நிறம், செடியின் உயரம், சாயும் தன்மைக்கான பாதிப்புகள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை, வறட்சியை தாங்கும் திறன், பூங்கதிர்களின் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் உறுப்பினர்கள் பாரம்பாிய ரகங்களை தேர்வு செய்தனர். வெளிப்புற குணாதியங்களின் அடிப்படையில் ரகங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் டி.யு.எஸ் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பணியாளர்கள் அறிவியல் பூர்வமான தகவல்களை சேகாித்தனர். அவ்வகையில் சோளத்தில் 21 வகையான பாரம்பாிய ரகங்களும், 18 வகையான மக்காச்சோள ரகங்களும் தேர்வு செய்து முடிக்கப்பட்டன.

விதை பாதுகாப்பு குழு:
பல்வேறு கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட விதை பாதுகாவலர்கள் விதை பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். அவர்கள் திட்டமிட்ட வேலைகளை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் துடிப்புடன் பங்கெடுத்து முக்கியமான பங்கை செலுத்தினர். குழு தனது மாதாந்திர கூட்டத்தை களத்திலே நடத்தியது. திட்டமானது களத்தில் விவாதிக்கப்பட்டு உள் நிலை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. குழுவானது விதைகளை சேமித்து வைப்பதற்கும், மற்ற விவசாயிகளிடத்தில் பாிமாற்றம் செய்வதற்கும் பொறுப்பை கொண்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் தனது பிரதிநிதியாக ஒருவரை “யஹமோகி மதா விதை பாதுகாப்பு குழு” எனப்படும் வட்டார அளவிலான குழுவிற்கு நியமித்தது. இந்த வட்டார அளவிலான குழுவனது 10 உறுப்பினர்களை கொண்டிருக்கும். 70 பெண் விவசாயிகளை விதை பாதுகாப்பாளர்களாக உள்ளடக்கிய இந்த விதை பாதுகாப்பு குழுவில் பல்வேறு காய்கறி பயிர்களின் விதைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மூன்று கிராம அளவிலான விதை வங்கிகள் உருவாக்கப்பட்டு, அவைகள் விவசாயிகளினால் மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன. விதை பாதுகாப்பு குழுவினர், ஆர்வமுடைய விவசாயிகளுக்கு விதைகளை கொடுத்து பாிமாற்றிக் கொள்கின்றனர். விதை வங்கியில் இருந்து விதைகளை பெறும் விவசாயி தான் வாங்கிய அளவில் இரண்டு பங்கை திருப்பி செலுத்த வேண்டும். அண்மையில் விதை பாதுகாப்பு குழு 10 விண்ணப்பங்களை (5 சோளம் மற்றும் 5 மக்காச் சோளம் – பாரம்பாிய ரகங்களை) டெல்லியில் உள்ள தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்கான ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

தாக்கம்:
பயிர் பல்வகைமையை பாதுகாப்பதில், பாரம்பாிய அறிவையும் இணைத்து செய்யப்பட்ட இந்த முயற்சி நிறைய சாதகமான விளைவுகளை தந்தது.
தங்கள் சமூகத்திடம் புதைந்து உள்ள அறிவையும், நல்ல தரமுள்ள, சுவைமிக்க, வாசனை கொண்ட, நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ளும் தரமிக்க, மற்றும் அதிகளவு ஊட்டச்சத்து மிக்க பாரம்பாிய ரகங்களை பாதுகாப்பதில் அவர்கள் மற்றவர்களோடு போட்டி போட முடியும் என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இந்த முயற்சி உதவியது. மேலும் பாரம்பாிய ரகங்கள் கடினத்தன்மையாகவும், வறட்சியை தாங்கும் திறன் கொண்டவையாக இருப்பதையும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் பெற்றிருப்பதை அவர்கள் கண்டறிய முடிந்தது. விதைகள் முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும் வேளையில், சாகுபடி செலவும் குறைவாக உள்ளது. பாரம்பாிய ரகங்களின் சிறப்புகளை பார்த்த பிறகு, விவசாயிகள் அதிகளவு பாரம்பாிய ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆரம்பித்துள்ளனர். பாரம்பாிய ரகங்கள் பயிரிடப்படும் பரப்பளவு அதிகாித்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 120 விதை காப்பு விவசாயிகள் 120 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சோளம் மற்றும் மக்காச் சோளத்தை பயிரிட்டனர். இதற்கு முன்பு அவர்கள் 8ல் ஒரு பங்கு நிலத்தில் மட்டுமே பயிரிட்டு வந்தனர். தற்போது அதிகளவு எண்ணிக்கையிலான விவசாயிகள் பாரம்பாிய ரகங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விதை உற்பத்தியில் ஒரு பிடிப்பு வந்தவுடன், விவசாயிகள் தற்போது விதைகளை பெருமளவு பெறுவதற்கான சூழலும், வெளி ஆதாரங்களை நம்பியிருக்கும் நிலையும் குறைந்துள்ளது. அடுத்த காரிப் பருவத்திற்கு 550 கிலோ சோளமும், 500 கிலோ மக்காச் சோள விதைகளும் சாகுபடிக்கு தயாராக உள்ளது. மேலும், விதைக்காக அவர்கள் செய்யும் செலவினங்கள் பெருமளவில் குறைந்துள்ளது.

அட்டவணை 1: விதை பாதுகாப்பு குழு தொகுத்த பயிர்களின் விதைகள் குறித்த விபரங்கள்

 
பயிரின் பெயர்ரகங்களின் எண்ணிக்கைரகங்களின் முக்கியத்துவம்
கேழ்வரகு1தானியங்களின் பொிதான அளவு, சாயாத தன்மை, நிறைய தூர்கள், வறட்சியை தாங்கி வளரக்கூடியவை
கேழ்வரகு3பொட்டல் நிலத்தில்/சாிவான நிலங்களில் எளிதில் வளரக்கூடியது , சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது, அதிக நாட்கள் சேமித்து வைக்கும் தரம் உடையது, மிகவும் ஊட்டச்சத்து மிக்கது.
குதிரைவாலி6பொட்டல் நிலத்தில்/சாிவான நிலங்களில் எளிதில் வளரக்கூடியது , சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது, அதிக நாட்கள் சேமித்து வைக்கும் தரம் உடையது, மிகவும் ஊட்டச்சத்து மிக்கது.
மக்காச்சோளம்23வறட்சியை தாங்கக்கூடியது, சாயதாக தன்மை உடையது, இனிப்பு சுவை கொண்டது, துரு நோய்க்கு தாக்குபிடிக்கக் கூடியது, நல்ல தரமான தீவனத்திற்கு உகந்தது.
சோளம்21அனைத்து பாரம்பாிய ரகங்களும் கருப்பு ஸ்மட் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது, இனிப்பு சுமை கொண்டது, வறட்சியை தாங்கி வளரக்கூடியது, எளிதில் அடித்து எடுக்கக்கூடியது, தீவனம் மிகவும் இனிப்புத் தன்மை கொண்டது.
தட்டைப்பயிறு6நல்ல இனிப்பு சுவை கொண்டது, வறட்சியை தாங்கி வளரக் கூடியது, நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியும், சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் சிறிதளவே பாதிப்படையும்.
அவரை12நீண்ட ஓடு உடையது தானியத்தின் அளவு பொிதாக இருக்கும், இனிப்புச் சுவை கொண்டது, சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் குறைந்த அளவே பாதிப்படும் தன்மை கொண்டது.
உண்ணக்கூடிய காட்டு தாவர வகைகள்63அதிக மருத்துவக் குணம் கொண்டது, சில ஆண்டுத் தாவர வகையை சார்ந்தது, எளிதில் சாகுபடி செய்யக்கூடியது, நோய் எதிர்ப்புச் சக்தியும், வறட்சியை தாங்கும் தன்மையும் கொண்டது.
மொத்தம்135

 

அட்டவணை 2: விதை பெருக்கத்திற்கான தேர்வு செய்யப்பட்ட மக்காச்சோளம் மற்றும் சோள வகைகளின் விபரங்கள்

 
பயிர்உள்ளூர் பெயர்முக்கியமான குணாதிசியங்கள்
மக்காச்சோளம்குக்கட் முகை90-95 நாட்களில் முன்னமே முதிர்ச்சி அடைவது, வறட்சியை தாக்குப்பிடிக்கக்கூடியது, துரு நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. அதிக இனிப்புத் தன்மை இருப்பதால், குறிப்பாக லட்டு செய்வதற்கு உகந்தது.
மக்காச்சோளம்கேஹாி முகை (சிகப்பு வண்ண மக்காச் சோளம்)95-100 நாட்கள் இடைப்பட்ட தாமத முதிர்ச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது, சாயது, வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
மக்காச்சோளம்பிவலா லால் முகை மற்றும் பிவடா லாகன் முகைநீளமான காய்கள், பளபளப்பான மஞ்சள் வண்ண விதை, தாவரத்தின் உயரம் 215 செ.மீ. வரை வளரும், வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
மக்காச்சோளம்பிவலா மகா நீளமன காய்கள் உமி இல்லாதது, துரு நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது, பாக்காி மற்றும் லயா போன்றவை செய்வதற்கு உகந்தது.
சோளம்சிகனி லால் ஜூவர் (செயில் கனிஸ்) மற்றும் சிகனி ஜூவர் (காட் கனிஸ்)கருப்பு ஸ்மட் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது, வறட்சியை தாங்கி வளரக்கூடியது, அப்பளம் செய்வதற்கு உகந்தது.
சோளம் லாகன் மணி ஜூவர் மற்றும் மோதி மணி ஜூவர்105-115 நாட்கள் வரை தாமதமாக முதிர்ச்சி அடைவது, கருப்பு ஸ்மட் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது, வறட்சியை தாங்கி வளரக்கூடியது, சாயாத தன்மை கொண்து, எளிதில் அடித்து எடுக்கக்கூடியது, நல்ல தரமான தீவனமாக பயன்படுத்தக்கூடியது.
சோளம்மோதி சபெட் மணி ஜூவர்220-240 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய தாவரம், அறுவடையின் போது தாவரம் பச்சை நிறமாக இருக்கும். ஆகவே இது தானியத்திற்கும் மற்றும் தீவனத்திற்கும் நன்றாக இருக்கும். மிகவும் மிருதுவாக, இனிப்பு சுவை கொண்ட பொிய தானியங்கள் உடையது. பாக்காி மற்றும் லயா போன்றவை செய்வதற்கு உகந்தது.

 

லினேஷ் என். சவான், ஹாிஸ்வர் பி. முகாரி மற்றும் சுதிர் எம். வாக்லே


Sudhir M Wagle
BAIF MITTRA Bhavan,
Opp Niwas Homes,
Behind Bodhale Nagar,
Nashik-Pune road, Nashik -11
E-mail: mittransk@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...