உணவு இறையாண்மையை நோக்கி தற்சார்பிற்கான பாதை


ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள், உணவு உற்பத்தியில் வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகளை கடைபிடிப்பதன் வாயிலாக தங்களின் நிலங்களிலும், உணவுத் தட்டிலும் உயிரினப்பன்மயத்தை பெருக்கி வருகின்றன. தங்களின் சொந்த உணவு முறைகளை வகுத்ததன் மூலம் அவர்கள் தற்சார்பு பாதையில் பயணிக்கின்றனர்.


ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பஞ்சம், பட்டினி சாவுகள், வறட்சி, கொத்தடிமை கூலி, துன்பம் தரும் இடம் பெயர்வு மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். நில சீர்திருத்த திட்டங்களின் ஒரு பகுதியாக அரசு அளித்த சிறு பகுதி நிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்ததே கிடையாது. இந்த பகுதியில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், இந்த விவசாயிகள் பண்ணைகளில் கூலியாக அல்லது மற்ற வேலைகளுக்காக பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுவார்கள். வேளாண்மைக்கு திரும்பவும், உணவு உத்திரவாதத்தை அடைவதற்காகவும் இந்த சமூகத்திற்கு, அக்ராகாமி என்ற உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் குடும்ப மற்றும் சமூகத்தை அடிப்படையாக கொண்டு வேளாண் உயிர்ச்சூழல் உணவு உற்பத்தி மாதிரிகளை செயல்படுத்தி வருகிறது.

உள்ளூர் உணவு உற்பத்திக்கான மாற்றுமுறை முயற்சிகள்:
ஒடிசாவில் மானாவாரி வேளாண்மையிலும், நுகர்விலும் சிறுதானியங்களும், பயறு வகைகளும் மிக முக்கியமானவை. இந்தியாவில் உள்ள பொது வினியோகத் திட்டம் அரிசி மற்றும் கோதுமையை அடிப்படையாக கொண்டதால், ஒருபோதும் பழங்குடியின விவசாயிகளுக்கு பயனளித்ததில்லை.
அக்ரகாமியின் உதவியுடன் பழங்குடியின பெண் விவசாயிகள் (115 பெண் குழுக்கள்) ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டத்தில் ஒன்றிணைந்து மாற்று உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பு முறையில் பாிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த ஒரு மாற்று முறையும் குறிப்பிடத்தக்க வகையில் வித்தியாசமாகவும், உணவு உத்திரவாதம் மற்றும் இறையாண்மையின் அடிப்படையில் மாற்று கருத்தாக்கத்தோடு, பொது வினியோகதுறை கடைபிடிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர்.

மாற்று உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பு முறையானது, வளமிழந்த சிறு நிலங்களில் வரப்புகள், வரப்பு குழிகள், மேல் மண் சேர்த்தல் போன்ற முயற்சிகள் முதல் படியாக மேற்கொள்ளப்பட்டது. சமூக அளவில் தானிய மற்றும் விதை வங்கிகள் அமைக்க ஒரு கடன் அக்ராகாமி மூலம் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. அதனை விவசாயிகள் தானியங்களாக திருப்பி தர வேண்டும். அடுத்த நிலையாக இந்த நிலங்களில் பாரம்பாிய மற்றும் உயிரினப் பன்மய வேளாண்மையை பாரம்பாிய விதைகளை கொண்டு சாகுபடி செய்வதாகும். பயிர் அறுவடை முடிந்ததும், கடன் தானியமாக திருப்பி செலுத்தப்பட்டு, அவை சமூக தானிய நிதியாக சேமித்து வைக்கப்படும். இது பழங்குடியின சமூகத்தின் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணவு பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் உணவு இறையாண்மையை அடைவதற்கு பாரம்பாிய பல்வகையான வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாகும்.

உண்மையில் மாற்று உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பு முறையின் ஒவ்வொரு பகுதியும் உணவு இறையாண்மைக்கான தூணாகும்: தாிசு நிலங்களை மீட்டெடுப்பது, சாகுபடி நிலங்களில் உற்பத்தி திறனை அதிகாிப்பது, உயிரினப் பன்மய வேளாண்மை, சந்தையை கவனத்தில் கொண்டது, பருவநிலைக்கு ஏற்றாற்போல் பயிரிடுவது, உள்ளூர் பொறுப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பது. இந்த பணிகள் பெண்கள் கூட்டமைப்புகள் வழியாக செய்யப்பட்டு, உற்பத்தி, சேமிப்பு மற்றும் பகிர்ந்தளித்தல் என ஒவ்வொரு நிலையிலும் “உள்ளூர்;” அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பல்வகை உணவு முறைகளை திரும்பப் பெறுவது:
இந்த சில ஆண்டுகளில் மகிளா மண்டல்ஸ் (பெண்கள் குழுக்கள்) பணியானது 65 கிராமங்களில் 2275 ஏக்கர் தாிசு நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் கூடுதல் உணவாக ஒரு மில்லியன் கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2000 வேலை நாட்கள், ஒரு கிராமத்திற்கு 40 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு ஏக்கர் வீதம் உருவாக்கப்பட்டது. அதனோடு கூடுதலாக 6000 கால்நடைகளுக்கான இணையான தீவனமும் உற்பத்தி செய்யப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் தற்போது 1000 கூடுதல் உணவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்து தீவன உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் கூலி வருமானத்தை அதிகாிக்கச் செய்துள்ளது. உணவு இறையாண்மையை உறுதிப்படுத்தும் தங்களின் முயற்சியை மகிளா மண்டல்ஸ் அவர்களின் கிராமங்களில் தொடர்ந்து செய்து வருவதோடு, அதனை அருகாமையில் உள்ள கிராமங்களிலும் செய்வதற்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

சனி மஜ்கி ஒரு முன்னுதாரணமான மாதிரி:
ராயகட்டா மாவட்டத்தின் காசிப்பூர் வட்டத்தில் உள்ள மலிகன் கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய விவசாயியான சனி மஜ்கி, இயற்கையின் முடிவற்ற சவாலை வெற்றிகொள்வதில் தீர்மானமாக இருந்து வாழ்வாதாரத்திற்கான நிலைத்த ஆதாரத்தை பெற்றார். தன்னிச்சையாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அவரது 1.2 ஏக்கா; பண்ணையில் வேலை செய்து, கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பயிர் போன்றவற்றை சாியான வகையில் கலந்து வேளாண்மையில் ஈடுபட்டார்.
2012 ஆம் ஆண்டில் சனி மஜ்கி தனது ஒரு ஏக்கர் குடும்ப பண்ணையில் ஒருங்கிணைந்த வேளாண் முறையில் உயிர்ச்சூழல் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அக்ராகாமியின் நிலைத்த மாதிரி முயற்சியில் ஈடுபட்டார். தனது நிலத்தின் அமைப்பை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டு, அதில் ஒருங்கிணைந்த வேளாண் முறைகளை அமைத்திடும் வகையில் சத்துக்களின் சுழற்சியை உருவாக்கினார். ஒரு நிலைத்த பண்ணையை உருவாக்க அவரது பண்ணையில் உயிரினப்பன்மயத்தை பலப்படுத்துவது தான் சுய சார்புக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்தார்.

அவரின் 25 விழுக்காடு நிலம் தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுவதற்கென ஒதுக்கப்பட்டு, 55 விழுக்காடு நிலம் பழத்தோட்டம் உருவாக்கவும், 15 விழுக்காடு கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் மீதம் உள்ள 5 விழுக்காடு எல்லைகளில் வேம்பு, சுபாபுல், புங்கை, நெல்லி, எலுமிச்சை, பைன் ஆப்பில் மற்றும் பிர் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டுப் பயிர்களான மரங்கள் மண்ணை வளப்படுத்துவதற்கும், தீவனம் மற்றும் விறகு தேவைக்காகவும் பயிரிடப்பட்டது. அவர் கலப்புப்பயிர் சாகுபடி, பயிர்ச்சுழற்சி, பயிர்களின் சேர்க்கை மற்றும் ஊடுபயிர்கள் சாகுபடி என தொடர்ந்து பண்ணையின் பன்மயத்தை அதிகப்படுத்துவதற்காக ஆரம்பித்தார். படிப்படியாக, சனி மஜ்கி உயிர்ச்சூழல் வேளாண்மைக்கு மாறினார். அது அவர் உணவு இறையாண்மைக்கு உதவி செய்தது. மேலும் அவர் பல்வேறு விதைகளின் ரகங்களை (காய்கறிகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், தானியங்கள்) சமூக விதை மற்றும் தானிய வங்கிகளில் சேமித்து வைத்தார். ஒவ்வொரு வருடமும் இந்த விதைகள் கிராமத்தில் உள்ள மக்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
“தற்போது நான் எனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரு உறுப்பினராகி விட்டேன் என “அவர் கூறுகிறார். அவரது வருமானத்தின் ஒரு பகுதியை அவரின் குழந்தைகளின் கல்விக்காக ஒரு சிறு தொகையை சேமித்து வருகிறார். குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலைகளில் அவரும் பங்கெடுக்கிறார். சனி மஜ்னி தனக்கென ஒரு தனி சொந்த அடையாளம் தற்போது பெற்றிருப்பதாக உணா;கிறார்.

முடிவுரை:
ஓடிசாவின் தென்-மேற்கு மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகங்கள் பல்வேறு வகையான பயிர் சாகுபடியாக தானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உள்ளடக்கி தங்களின் வாழ்வாதார முறைகளை உருவாக்கி கொண்டுள்ளனர். அவர்களின் நடைமுறையான பல்வேறு வகையான பயிர்கள், ஒருங்கிணைந்த வேளாண் முறையின் கீழ் ஒரு ஏக்கர் குடும்ப பண்ணையாக, அவர்களின் உணவு உத்திரவாதத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு நிலை அதிகமாக நகர்ந்து உணவு இறையாண்மையை அடைவதற்கும் உதவுகிறது. மேலும், இது அவர்களுக்கு நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மற்றும் உணவு உத்திரவாதத்திற்கான பாதையை, வறட்சியான காலங்களில் கூட கொடுக்கிறது. ஒரு கலத்தில் இடம் மாறி மாறி மேற்கொள்ளும் பயிரிடும் முறையானது, தற்போது சூழலோடு நல்லிணக்கத்தோடு, சாியான கலப்புப் பயிர்களின் தாளங்களோடு இணைந்துள்ளது. கோண்ட், ஜோதியஸ் மற்றும் பரஜாஸ் போன்ற பகுதிகள் தற்சார்பு மற்றும் சுதந்திரமானவைகளாக மாறியுள்ளன.

உணவு உத்திரவாதத்தை அடைவது என்பதை யார் உணவை உற்பத்தி செய்கிறார்கள் என்பதன் முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் உணவு உத்திரவாதத்தை பெற முடியாது என்பதை பழங்குடியின விவசாயிகள் நிரூபித்துள்ளனர். அவர்களை புறந்தள்ளிவிட்டு நடைபெறும் எந்த விவாதங்களும், பட்டினியையும், ஏழ்மையையும் ஒழிக்க முடியாது. உணவு என்பது மனிதனின் உரிமை. இந்த உரிமை உணவு இறையாண்மையை உத்திரவாதப்படுத்தும் ஒரு முறையால் மட்டுமே உணரப்படும்.

பெட்டிச் செய்தி:
கடந்த 3 பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அக்ராகாமியின் இந்த முயற்சியானது, உயிரினப் பன்மயம், இயற்கை வேளாண் பொருட்கள் ஒரு ஏக்காில் கிடைக்கும் உணவு அதிக ஊட்டச்சத்து மிக்கது என்பதை வெளிப்படுத்துகிறது. அதன் அர்த்தம் ஒரு நிலத்தில் கிடைக்கும் அதிகப்படியான ஆரோக்கியத்தின் அளவு என்பதாகும். நமது அண்மைக்கால அடிமட்ட அளவிலான மதிப்பீடுகள், எந்தெந்த சிறு விவசாயிகள் சொந்த விதை வைத்துள்ளார்களோ, இரசாயனங்கள் இல்லாமல் சாகுபடி செய்கின்றார்களோ, உயிர்ச்சூழல் வேளாண்மையில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் , யாரெல்லாம் பெரு நிறுவனங்களின் விதைகள் மற்றும் இரசாயனங்களை மற்றும் அவர்களின் ஏகபோக சந்தைகளை நம்பியுள்ளார்களோ அவர்களைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதல் மற்றும் நியாயமான விலையை சந்தையில் பெறுகின்றனர். இந்த சிறு விவசாயிகள் நேரடியாக நுகர்வோரை அடையும் உள்ளூர் உணவு பொருட்கள் வட்டத்தை உருவாக்கி, உற்பத்தியாளர் தொடர்பை இடைத்தரகர் இன்றி விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த வட்டங்கள் அவர்களின் பண்ணையிலும், உணவுத்தட்டிலும் உயிரினப் பன்மயத்தை, அவை ஊட்டச்சத்துக்கு மட்டும் முக்கியமல்லாமல் உணவு இறையாண்மைக்கும் முக்கியமானதாக மேம்படுத்தியுள்ளனர்.

குலசமி ஜகன்நாத் ஜெனா


Kulaswami Jagannath Jena
Project Coordinator,
Agragamee,
Kashipur,
Rayagada,
Odisha,
India - 765015
E-mail: kulaswami13@gmail.com
http://www.agragamee.org

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...