ராஜஸ்தானில் உள்ள கேர்வவால் விவசாயிகள், கம்பு அடிப்படையாக கொண்ட பயிர் சாகுபடி முறைகளை புதுப்பித்ததனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பருத்தி, வெங்காயம் மற்றும் கோதுமை சாகுபடியிலிருந்து விடுபடலாம் என்பதை கண்டனர். சிறுதானியத்தை புதுப்பித்ததன் மூலம், அதிக உணவு மற்றும் தீவனம் பெறுவது மட்டுமில்லாமல், கம்பு மையமாக உள்ள பண்ணை வீடுகளில், அவர்களின் பாரம்பாிய கலாச்சாரங்களை மீண்டும் இணைத்துள்ளது.
ராஜஸ்தானில் வட கிழக்குப் பகுதியில் இருக்கும் கேர்வவால் பஞ்சாயத்து, கேர்வவால், கேர்வாடி மற்றும் பிலா தாபா என்ற மூன்று கிராமங்களைக் கொண்டது. இந்த பஞ்சாயத்து பகுதி கிழக்கில் மலைகளும், மேற்கில் சக்கிரி நதி என்று அழைக்கப்படும், வடக்கிலிருந்து தெற்கு திசையை நோக்கி பாயும் ஒரு நீரோடையும் உள்ளது. ஆக இந்தப் பகுதியை இயற்கை ஒரு எல்லையாக உருவாக்கியுள்ளது. நிலப்பரப்பு மேலும் கீழுமாக உள்ளதோடு மிக பொிய பள்ளம் உருவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தாழ்வாக உள்ளது. இதன் மத்தியில் அங்கங்கு நிலத்தை சமன்படுத்தி சாகுபடி செய்யப்படுகிறது. மலையடிவாரத்தில் குறிப்பிட்ட அளவு பரப்பளவில் ஒரன்ஸ்/ தேப்பனில் (சமூகம் பாதுகாக்கும் பகுதிகள்) கீழ் காடு ஒன்று உள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை கேர்வவால் பஞ்சாயத்தின் முக்கிய வாழ்வாதார செயல்பாடுகள் அதிகபட்சமாக 30% வருமானம் விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் செயல்பாடிலிருந்து பெறப்படுகிறது.
பஞ்சாயத்தில், கலப்புப் பயிர் சாகுபடி, பொிய அளவில் வேளாண் அமைப்புகளுக்கு வழிவகுத்தது. ஓடையின் ஓரப்பகுதிகளில், மலைகளின் அடிவாரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அது பிழைப்பின் அளவிற்கு குறைவாக உள்ளது. மானாவாரி வேளாண்மை மட்டும் பின்பற்றப்படுகிறது. சராசாி நிலஅளவு ஒரு வீட்டிற்கு 0.4 ஹெக்டர் முதல் 2.5 ஹெக்டர் வரை இருக்கிறது. காரீப் பட்டத்தின்போது கம்பு, மக்காச்சோளம், பருத்தி, செஞ்சோளம், நிகண்டு, பச்சை பயறு, சோளம், கொத்தவரை ஆகிய பயிர்கள் வளர்க்கப்படுகிறது. ரபி பட்டத்தில் வெங்காயம், கோதுமை, கடுகு, பயறு மற்றும் பார்லி ஆகிய பயிர்கள் வளர்க்கப்படுகிறது . சில காய்கறிகளும் வளர்க்கப்பட்டது. ஆனால் இவை பின்புறத்தில் வளர்க்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் சிறிதளவே இருந்தாலும் பயிர்கள் இரட்டிப்பாக்கப்பட்டது. இவை கீழே உள்ள பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கோடை காலத்தில் மூன்றாவது பயிர் சாகுபடி செய்கின்றனர்.
பாரம்பாியத்திலிருந்து அதிக மகசூல் மற்றும் ஒட்டு இரகத்திற்கு பொிய அளவில் மாற இரண்டு காரணிகள் உள்ளன. மழை பற்றாக்குறையினால் குறுகிய காலத்தில் முற்றும் விதைகள் தேவை, மேலும் அதிக மகசூல் பெறவும் விருப்பம். சாகுபடி முறைகள் அதிகமாக, முழுமையாக இல்லையென்றாலும் இயந்திரமயமாக்கப்பட்டது. ஆழமான கிணறு பம்புகள் பயன்படுத்தி அதிக தண்ணீரை எடுத்து வயல்களுக்கு பாய்ச்சப்படுகிறது. மேலும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை குறிப்பாக ரபி பட்டத்தில் வளர்க்கப்பட்டது. சிறிய துண்டுகளாக நிலங்களை வைத்திருக்கும் சில விவசாய குடும்பங்கள் கலப்புப்பயிர் பின்பற்றுகின்றனர்.
சிறுதானியத்தை புதுப்பித்தல்
2011-2012 ஆம் ஆண்டின்போது க்ரிப்பாவிஸ் (krapavis – க்ரிஷி ஆவம் பாிதிதிகா விகாஸ் சன்ஸ்தன்), கேர்வவால் பஞ்சாயத்தில், சிறுதானிய சாகுபடி பரப்பளவு குறைவதற்கான காரணிகளை புரிந்துகொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுதானிய சாகுபடி பரப்பளவு 25 விழுக்காடு குறைந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதற்கு முக்கிய காரணம் பணப்பயிர்களான பருத்தி மற்றும் வெங்காயம் அறிமுகப்படுத்தியது. சிறுதானியங்களுக்கு சாியான விலை கிடைக்காதது, அரசு அளவில் தேவையான சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாதது. கம்பு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யாதது, மேலும் அரசு தீவன வங்கிகளிலும் கம்பு உலர் தீவனமாக இருந்து அங்கம் வகிக்கவில்லை. மேலும் இந்த பயிருக்கு, காப்பீட்டு நிறுவனங்கள், தங்களது சேவையை சேவையை அளிக்க தயங்குகிறது.
க்ரப்பாவிஸ் ஆய்வு கவனித்தது என்னவென்றால், பஞ்சாயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பொது வினியோக அமைப்பு இருந்துள்ளது. வெறும் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை மட்டுமே பொது வினியோக அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இந்த மூன்று பொருட்களும் உள்ளூரில் வளர்க்கப்படவில்லை, மேலும் மற்ற இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட கம்பு- ஐ கொள்முதல் செய்ய யாருமில்லை. இதுவே உணவு பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டு, அதிகளவில் வெளிபொருட்களை நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. (அட்டவணை 1 பார்க்க)
சிறுதானிய சாகுபடி குறைந்து வரும் சவாலை எதிர்கொள்ள க்ரப்பாவிஸ் கேர்வவால் பஞ்சாயத்தில், சிறுதானிய சாகுபடியை புதுப்பிப்பதற்கு விவசாயிகள் முன்னெடுத்து செல்ல கூடிய முயற்சி வழிநடத்தி வருகின்றனர்.
விவசாயிகளோடு பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் கம்பு சாகுபடியின் முக்கியத்துவத்தை குறித்து கலந்துரையாடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கேர்வவாலில் விவசாயிகள் பருத்தி, வெங்காயம் போன்ற பணப்பயிர்கள் கீழே உள்ள மட்ட நிலங்களில் சாகுபடி செய்து வருகின்றனர், அதேநிலத்தில் முன்பு கம்பு வளர்த்தனர். கலந்துரையாடலின்போது, கேர்வவால் கிராமத்தில், தனுராம் ப்ரஜாபத், தாஸ்ரத் சிங், த்ன கோரி தேவி, சான்டோ தேவி, நானாயராம் ஜதாவ், கங்கா ராம் ஜதாவ், ரகுவிர் மற்றும் பிற வயது முதிர்ந்த விவசாயிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கம்பின் பயன்களை விவரித்தனர்- மலை அடிவாரத்தில், பாலைவனம், சமமற்ற நிலத்தில், வளமில்லாத மண்ணில், மிக குறைந்த மற்றும் ஒழுங்கற்ற முறையில் பெய்யும் மழையிலும் கம்பு பயிரை வளர்க்கலாம். ஏனென்றால் இது வறட்சியை தாங்கி வாழும் பயிர். இதற்கு பல இடுபொருட்கள் (இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள், வீரிய ஒட்டு விதைகள் போன்று) தேவைப்படுவதில்லை. மேலும் பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிர்களுடன் கலப்பு பயிர் சாகுபடி முறைகளில் கம்பை வளர்க்கலாம். இது அதிக ஊட்டச்சத்து மற்றும் சுவையையும் கொண்டிருக்கிறது. இது பனிக்காலத்தில் வெப்பம் உடல் உறுதி மற்றும் வலிமையை அளிக்கிறது. கம்பு, கால்நடைக்கு மிகவும் நல்ல தீவனமாக (பசுமை மற்றும் உலர் தீவனம்) இருக்கிறது. விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை தயாரிக்க உதவுகிறது. கம்பு, உள்ளூர் கலாச்சாரத்தின் அங்கமாக இருக்கிறது (பெட்டி 1 ஐ பார்க்க)
கேர்வவால் கிராமத்தில் உள்ள விவசாயிகள், கடந்த காலத்தில் தங்கள் பெற்றோர்கள் பின்பற்றிய கலப்பு பயிர்ச் சாகுபடி முறைகளை ஞாபகபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர் -கம்புடன் பயறுவகை பயிர்கள் (பச்சை பயறு மற்றும் உளுந்து) மற்றும் எண்ணெய் வித்து (எள்ளு) டினஜா (மூன்று தானியங்கள் – பார்லி, கொண்டைக்கடலை, கோதுமை), கௌசானி (பார்லி மற்றும் கோதுமை), பேஜத் (பார்லி மற்றும் கொண்டைக்கடலை), 7 தானியங்கள் (கம்பு, மக்காச்சோளம், கடுகு, கோதுமை, செஞ்சோளம், துவரை மற்றும் பார்லி). ஆகையால் விவசாயிகள் பாரம்பாிய கம்பு மற்றும் சிறுதானிய கலப்பு சாகுபடி அமைப்புகள் இயல்பாகவே உயிர்பல்வகைமையை கொண்டுள்ளது என்று உணர ஆரம்பித்தனர்.
விவசாயிகள் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த உடனே க்ரப்பாவிஸ் கீழக்கண்டவைகளை வழிநடத்தியது: 1) பாரம்பாிய கலப்புப் பயிர் சாகுபடி முறைகளை கண்டுபிடித்தனர். 2) கம்பு கலப்பு சாகுபடி செய்வதற்கு ஒப்புக்கொள்ளும் அல்லது சில பாரம்பாிய சாகுபடி முறையான கலப்பு சிறுதானிய அடிப்படை சாகுபடி அமைப்புகள், மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் போன்றவற்றை பின்பற்றுவதற்கான முயற்சிகளை எடுக்கும் விவசாயிகளை அடையாளம் கண்டனர்.
விவசாயியிடமிருந்து மற்றொரு விவசாயிக்கு, சமூகத்திடமிருந்து மற்றொரு சமூகத்திற்கு பாிமாற்றங்களையும், கல்விச் சுற்றுலாவையும் ஏற்பாடு செய்து வழிநடத்தியது. தண்டா ராமகாில் உள்ள சண்டாராம் வர்மா என்ற ஒரு படித்த விவசாயியை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு பயிர்களின், குறிப்பாக வறட்சி, உறைபனி, பூச்சி மற்றும் நோய்களை எதிர்கொள்ளும் புதிய இரகங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவரை சந்திப்பதற்கு ஒரு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்தனர்.
துவக்கத்தில் க்ரப்பாவிஸ், கம்பின் பாரம்பாிய விதைகள் மற்றும் கம்பு அடிப்படையிலான சாகுபடி முறை மீண்டும் கொண்டு வருவதற்கு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. கிராமவாசிகள் கிட்டதட்ட அனைத்து பாரம்பாிய விதைகளையும் தொலைத்துவிட்டனர். க்ரப்பாவிஸ், கம்பு மற்றும் செஞ்சோளம் விதைகளை சேகாித்து, பாிமாற்றி, சேமிப்பதற்கு வழிநடத்தி வந்தனர்.
பாரம்பாிய கம்பு விதையை கொள்முதல் செயவதுடன் 7 தானியங்களை கொண்டு கலப்புப் பயிர் சாகுபடியை பயிர் செயல்பாட்டு மாதிரியை ஏற்பாடு செய்தனர். (ஏழு தானியங்கள் – கம்பு, மக்காச்சோளம், கடுகு, கோதுமை, செஞ்சோளம், பார்லி, துவரை)
கிராமத்தில் பெண்கள் குழுக்கள், மஹிளா மண்டல் என்ற பெயாில் (சுய உதவிக் குழு) உருவாக்கப்பட்டது. இந்தக் குழு ஒவ்வொரு மாதமும் கூட்டம் போட்டு சேமிப்பும் செய்யப்படுகிறது. இந்தக் குழுவில் உறுப்பினர்கள் கையேடுகளை நன்றாக மேம்படுத்தி வருவதையும், கடன் செயல்பாடுகளையும் செய்து வருவதையும் கவனித்தோம். பெண் உறுப்பினர்களை, பல இரகங்கள் கொண்ட விதைகள் உள்ள இடத்திற்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. பாரம்பாிய விதைகளை கிடைக்கச் செய்வதற்கு, சுய உதவி குழுக்கள் விதை வங்கிகள் உருவாக்கின. மஹிளா மண்டல்ஸ் விதைகளை சேமிக்க ஆரம்பித்தனர். மேலும் இதையே உறுப்பினர்களுக்கும் குழுவில் அல்லாத வெளி நபர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் பதிலுக்கு, கடனாக பெற்ற விதையோடு சேர்த்து கொஞ்சம் அதிக விதையை திரும்ப அளித்து விதை வங்கியின் அளவை அதிகாிக்க செய்தது. குழுக்களுக்கு க்ரப்பாவிஸ் அமைப்பு ஒரு எவர்சில்வர் பாத்திரம் அளித்ததனால் இது விதைகளை சுலபமாக சேமிக்கவும், பல பூச்சிகளின் தாக்கத்திலிருந்து விதைகளை பாதுகாத்து வைக்க உதவுகிறது. விதை வங்கியினால், பெண்கள் பாரம்பாிய விதைகளை பாதுகாக்க முடிகிறது, வீரிய ஒட்டு விதைகளின் மேல் உள்ள சார்புத்தன்மையை குறைப்பதோடு, அதிக விலையுள்ள வீரிய ஒட்டு விதைகளை வாங்குவதற்கான செலவும் குறைகிறது.
தண்ணீர் சேமிப்பதற்கும், பாரம்பாிய தண்ணீர் நிலைகளை புதுப்பிப்பதற்கும் சில செய்முறை விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதியை பாிசோதனை செய்வதோடு, தூர் வாருதல் மற்றும் குளங்களை ஆழப்படுத்துதல் மூலம் நிலத்தடி நீர் உயரவும், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும், வீட்டு உபயோகத்திற்கு தேவையான தண்ணீரும் அதிகாிக்கச் செய்கிறது.
கேர்வவால் கிராமத்தில் உள்ள சிறுதானிய சாகுபடி நிலத்தில் உள்ள இரண்டு தண்ணீர் அறுவடை வடிவமைப்புகள் க்ரப்பாவிஸ் உதவியுடன் சமூகங்கள் இணைந்து புதுப்பித்தனர். மேலும் பல தண்ணீர் தொட்டிகள் அமைத்து அதன் மூலம் செடிக்கு பாசனம் செய்வது தீவனப்பயிர், கால்நடை மற்றும் பறவைகளுக்கும் உதவியாக இருந்தது. பொிய இணைப்பு என்று கூறப்படும் மினி (MINI – Millet Network of India) இந்தியாவின் சிறுதானிய இணைப்பின் உறுப்பினராக இருந்து, சாதகமான சிறுதானிய கொள்கையை உருவாக்க, பரப்புரை மற்றும் ஆலோசனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சிறுதானிய பிரச்சாரம் செய்வதற்கு நாங்கள் பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், விவசாய நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை ஈடுபடுத்தினர். பல குழுக்களின் உதவியுடன் ராஜஸ்தானில் 92 ஒப்புதல் கடிதங்கள் (மந்திரி, மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஊராட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களிடமிருந்து) யாவும் நாங்கள் சிறுதானிய பிரச்சாரக் கடிதத்தை வேளாண் அமைச்சர் மற்றும் முதலைமச்சருக்கு அனுப்பப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
ராஜஸ்தானின் சிறுதானிய இணைப்பு, மைனர்(MINOR) என்ற பெயாில் உருவாகியது. காடு-கால்நடை-வேளாண்மை இணைப்பின் மூலம் கிராம புல்வெளி சமூகத்தின் நிலைத்த வாழ்வாதாரத்தை உயாத்துவதே இதன் நோக்கமாகும். க்ரப்பாவிஸ் நிலைத்த வேளாண்மையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பாரம்பாிய கலப்பு சாகுபடி அமைப்புகள் கடுகு, பயறு, துவரை மற்றும் கம்பு போன்றவற்றின் பாரம்பாிய விதைகள் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் கம்பு மற்றும் இதர பாரம்பாிய பயிர்களை வேளாண் விரிவாக்க சேவைகள் மூலம் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்துவது, அரசு தீவன வங்கிகளின் ஒரு அங்கமாக கம்பை கொள்முதல் செய்வது, அவற்றை பஞ்சம் ஏற்படும் காலத்தின்போது வினியோகிப்பது, ரேஷன் கடைகள், அங்கன்வாடி மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் மூலம் கம்புவை வினியோகிப்பது, மேலும் கிராம அளவில் சமூகம் மேம்படுத்தும் சேமிப்பு கிடங்கை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.
முக்கிய வெளிப்பாடுகள்
கேர்வவால் பஞ்சாயத்தில் மட்டுமில்லாமல், மற்ற சுற்றுவட்டார கிராமங்களில் கூட பாரம்பாிய சிறுதானிய கலப்பு சாகுபடி அமைப்பை சிறப்பாக ஏற்றுகொள்ளப்பட்டு, பின்பற்றவும் செய்தனர். இது கேர்வவாலில் உள்ள பல விவசாயிகளும், சுற்றுவட்டார கிராமங்களும், பாரம்பாிய விதைகள் மற்றும் குறைந்த இடுபொருள் வேளாண்மையை கொண்டு கம்புவை கலப்பு சாகுபடி செய்துவருவது தௌிவாக தொிகிறது. சுமார் 177 விவசாயிகள் பாரம்பாிய இரகங்களுடன் தற்போது நிலைத்த வேளாண்மையை செயல்படுத்தி வருகிறது. நிலைத்த வேளாண்மை செயல்பாடுகளை ஏற்றுக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகாிப்பதோடு, வேளாண்மையின் நிலைத்தத்தன்மையும், மகசூலும் உயர்ந்து வருகிறது.
கேர்வவால் கிராமத்தில், கம்பு-கலப்பு சாகுபடி அமைப்பின் மூலம் 1300 எருமைகள், 7000 ஆடுகள், 50 பசுக்கள், 300 செம்மறி ஆடுகள் மற்றும் 50 குதிரைகளுக்கு தீவன பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
கிராம மக்கள் மத்தியில் உள்ளூர் விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அதிகாித்துள்ளது. அதிகபட்சமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் ‘தேவ்பணி ரீ பாத்” என்ற பெயாில் செய்தி மடல், சிறுதானியம் மற்றும் கலப்பு சாகுபடி முறை பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது. இது உள்ளூர் விதை பாதுகாப்பு குறித்த பயனுள்ள ஆதாரமாகவும் தொடர்புகொள்ளும் பொருளாகவும் கருதப்படுகிறது. பாரம்பாிய விதைகளை சுய உதவி குழுவால் சேமிக்கப்பட்டு, விதை வங்கியில் மேம்படுத்தும் கருத்தை –களித்தோன், பந்தே கா பாஸ், காக்பூர் மற்றும் பக்த்புரா போன்ற மற்ற நான்கு பஞ்சாயத்துகள்/கிராமங்களுக்கும் பரவியது. சுமார் 20 கிராமங்கள் உள்ள விவசாயிகள் மத்தியில் அமைத்த இணைப்பு வளர்த்து, வலிமைப்படுத்தி, மேலும் விதை பாிமாற்றத்தை வழிநடத்தி வருகிறது
ராஜஸ்தானின் சிறுதானிய இணைப்புக்குழு, தானும், பொிய இணைப்புக் குழுவான மினி அமைப்பின் அங்கமாக உள்ளூர் அரசு துறை, அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொள்கையை உருவாக்குபவருடன் தொடா;ந்து பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு இந்த முயற்சிகள் வித்திட்டது. இந்த ஆலோசனை முயற்சிகளால், மாநில அரசு தற்போது, கம்பு விவசாயிகளுக்கு குறைந்த விலையை உறுதிபடுத்த உயரும் அடிகளை எடுத்து வைத்துள்ளனர்.
அட்டவணை 1 – மாற்றமடையும் உணவு பழக்கங்கள்
| கடந்த காலம் (50-30 வருடங்களுக்கு முன்பு) | நிகழ் காலம் (5-8 வருடங்களுக்கு முன்பு) | ||
| தரவரிசை | சமையல் | தரவரிசை | பயிர்கள்/இரகங்கள் |
| 1 | கம்பு சாச் மற்றும் ராப்ரி கம்பு தூத் மற்றும் ராப்ரி | 1 | B |
| 2. | கம்பு – ரோட்டி | 2 | பனி காலத்தில், கம்பு ரொட்டி |
| 3 | பேஜாத் (பயறு மற்றும் பார்லி) ரொட்டி | 3 | தால் சாவல் |
| 4 | டீனாஜி (பயறு, பார்லி மற்றும் கோதுமை) | 4 | தால் சாவல் |
| 5 | பயறு, துவரை மற்றும் பைத்தம் பருப்பு சப்ஜி | 5 | டின்டா, வெங்காயம், கோபி, லோகி போன்ற காய்கறிகள் |
| 6 | பயறு பேசனுடன் காதி | 6 | |
| 7 | துால்-பாட்டி-சா;ம் | 7 | |
| 8 | பிட்டோட் (சாச் மற்றும் பேசன்) | 8 | |
| 9 | சன்னா மங்கோடி, பேசன் கட்டா | 9 | |
| 10 | கம்பு கிச்சடி | 10 | |
| 11 | கம்பு கிச்சடி | 11 | |
பெட்டி செய்தி 1 :
கம்பு: உள்ளூர் கலாச்சாரத்தில் இருக்கும் பல பயன்கள்
ராஜஸ்தானில் கோவர்தன் பண்டிகையை (தீபாவளி பண்டிகையின் இரண்டாவது நாள்) ஒட்டி அன்னாகுட் கொண்டாடப்படுகிறது. மொத்த சமூகம் அனைத்து ஒன்றுகூடி மற்றும் காதி கம்பு என்ற சிறப்பு சமையலை கம்பு விருந்து உள்ளது. மகர ஷங்கராந்தியை முன்னிட்டு கம்பு தானம் செய்யும் நிகழ்வும் இருக்கிறது. இதே நாளில் எள்ளுவுடன் கலந்து சப்பாத்தி செய்வது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிறுதானிய லட்டு தயாரிக்கப்படுகிறது. பாத்புவா – பத்து தானியங்கள் கம்பு, செங்சோளம், மக்காச்சோளம், சன்னா, எள்ளு, அரிசி, கோதுமை, உளுந்து, மோத் ஆகிய அனைத்தும் கலந்து மண்பானையை நிரப்ப வேண்டும். மேலும் தசரா பண்டிகையில் வேண்டுதலின்போது பயன்படுத்தப்படுகிறது. கலாஷ் பு+ஜையின்போது, மண்பானையின் கீழ் கம்பு விதையை பரப்பி மங்களகரமாக சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. திருமணமான மறுநாள் ‘க்னாகா கேல்னா” என்ற சடங்கு அதாவது, கம்பு விதைகளை மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மாற்றி வீசிக் கொள்வர். ‘தன்ட்” என்று கூறப்படும் மற்றொரு சடங்கு செய்யப்படுகிறது. குடும்பத்தில் குழந்தை பிறந்திருந்தால், அந்த வருடம் வரும் ஹோலி பண்டிகையின்போது அண்டை வீடுகளுக்க கம்பு கீர் கொடுக்கப்படுகிறது.
பறவைகளுக்கு சிறந்த இருப்பிடமாக மேம்படுத்துவதற்கு, கோயில் மதில்சுவர்களில் கம்புவோடு செய்யப்படும் சுகா தால்னா என்ற உணவு தினமும் கொடுக்கப்படும் முறை ஒன்று இருக்கிறது. அதேபோல், சிறுதானியத்தை வைத்து எறும்பிற்கு உணவளிப்பது ‘சீத்தாவால்” என்ற சடங்கு ஆகும்.
அமன் சிங் மற்றும் பிரதிபா சிசோதியா
Aman Singh and Pratibha Sisodia Krishi Avam Paristhitiki Vikas Sansthan (KRAPAVIS) KRAPAVIS Training Centre Prachin Bhurasidh, P.O. Kala Kua Alwar – 301001, Rajasthan, India E-mail: krapavis_oran@rediffmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2017, வால்யூம் 19, இதழ் 4



